(Reading time: 12 - 24 minutes)

வனுக்கும் அந்த நேரத்தில் மருத்துவ உதவி தேவைப்பட்டது.சம்மதித்தான்.சரியாக 30 நிமிடத்தில் ஒரு குரல் அவன் செவிகளில் ஒளித்தது.அவன் கண்களை மூடி,மெத்தையில் சாய்ந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தான்.

"யாருக்கு...உடம்பு சரியில்லை ரகு?"-என்றது அந்த குரல்.

"வா...காட்றேன்..!"-என்று இவன் சமாளிப்பதும் கேட்டது.பின்பு,கதவை திறந்து ரகு உள்ளே பிரவேசித்தான்,மதுபாலாவுடன்.இதை சரணும் எதிர்ப்பார்க்கவில்லை.மதுவும் எதிர்ப்பார்க்கவில்லை.

"அவருக்கு தான் டாக்டர் மேடம்."-என்றான் நக்கலாக.மது செய்வதறியாமல் திகைத்தாள்.யாரை சந்திக்கக் கூடாது என்று எண்ணினாளோ இன்று அது பொய்த்துப் போனது.இப்படி ஒரு புற மனம் எண்ணியிருக்க மறுபுறமோ,அவனுக்கு என்ன நேர்ந்தது என்று பதறியது.அறியாமலா பாடினார்கள் கவிஞர்கள்,பெண் மனதின் ஆழத்தையும்,ஆண்டவன் உருவத்தையும் கண்டுப்பிடிக்க முடியாது என்று.சரணின் மனநிலையோ!இன்பம்,துன்பம் இரண்டும் கலந்த வேதனையில் இருந்தது.

"மது...நீ பார்த்துட்டே இரு! ஒரு முக்கியமான வேலை முடிச்சிட்டு வந்துடுறேன்."

"ரகு...நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வேற டாக்டரை அனுப்பட்டா?"

"வேற டாக்டரா?சரி தான்....மகேந்திரா ஹாஸ்பிட்டலை பற்றி ஊரே பெருமையாக பேசுது!ஆனா,டீனே பொறுப்பில்லாம இருக்கா! "

"இல்லை..."

"பேசாதே!வேலையை பாரு நான் வந்துடுறேன்."-என்று அவன் சென்றுவிட்டான்.மது தன் மனதுள்,"கடவுளே!இதை சமாளிக்கிற தைரியத்தை நீ தான் தரணும்."-என்று எண்ணிக் கொண்டு,சரண் அருகில் சென்றாள்.அவனோ கண் இமைக்காமல் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.12 வருட பிரிவிற்கு பிறகு,அவன் முகத்தை,அவன் கண்களை நேரே பார்த்தாள்.அவள் கை விரல்கள் அவன் நெற்றியை தொட்டது.அவன் ஒரு நொடி கண்களை மூடிக் கொண்டான்.

"எப்போ இருந்து உடம்பு சரியில்லை?"

"காலையில இருந்து...."

"இன்ஜக்ஷன் போடுறேன்....காலையில சரியாகிவிடும்."

"ம்..."-அவனுக்கு வலி தெரியாதது போல,மெல்ல ஊசி முனையை அவன் கையில் செலுத்தி,மருந்தை இறக்கினாள்.அது அவனுக்கு,அவன் மனதில் ஏற்றப்பட்ட பல ஊசிகளை மிருதுவாக எடுப்பதுப் போல இருந்தது.

"ரெஸ்ட்...எடுங்க நான்....கிளம்புறேன்."-என்று அவள் இரண்டு அடி தான் எடுத்து வைத்தாள்,

"அம்மூ."-என்ற அவள் அழைப்பு அதற்கு மேல் அவளை செல்ல விடாமல் தடுத்தது.அவள் திரும்பினாள்.அவன் அவளருகே வந்தான்.

"நான்....உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்."

"நமக்குள்ள எதுவும் கேட்கவோ,பேசவோ இல்லைன்னு தோணுது."

"எதுவுமே இல்லையா?"

".............."-அவளால் மௌணம் மட்டுமே சாதிக்க முடிந்தது.அவன் அவளருகில் மௌனமாய் நின்றிருந்தான்.பின்,அவன் கைகள் அவளை மெல்ல தம் அணைப்பினுள் சிறை வைத்தன.அவனது,இந்த எதிர்பாராத செயல் அவளுக்கு அதிர்ச்சியை அளித்தது.இருந்தப் போதிலும் அவன் இறுக்கமான பிடியை விட்டு வெளி வர அவள் முனையவில்லை.சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தனர்.பின்,சரண் மெல்ல அவளை விடுவித்தான்.ஆனபோதிலும் அவளைவிட்டு விலகவில்லை.அவள் தலை அவன் இதழ்களுக்கு சரியாய் இருந்தது.12 வருடங்களாக மனதுள்,அடக்கி பூட்டி வைத்த காதல் இதற்கு மேல் அடங்க மாட்டேன் என்று,பீறிட்டு வந்தது.அது அவனை மதுவின் நெற்றியில் அவன் இதழ்களை பதிக்க வைத்தது.அவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.அவன் கண்கள் அவளுக்கு எதையோ சொல்ல துடித்தன.

அவன் உடல் நடுங்கியது.மதுபாலாவிற்கு அவனது இந்த நடவடிக்கைகள் புரியவில்லை.மனம் அவனது நடுக்கத்திற்கு ஆறுதல் அளிக்க விரும்பினாலும்,புத்தியோ பழைய சம்பவங்களை நினைவுப் படுத்தியது.அவள் சட்டென்று அவனிடம் இருந்து விலகினாள்.அவன் புரியாதவனாய் அவளை பார்த்தான்.

"அம்மூ..."

"என்னை அந்த பேர் சொல்லி கூப்பிடாதீங்க.."-அவள் யாரிடமோ பேசியதைப் போல பேசியதே அவனுக்கு அவள் மனநிலையை புரிய வைத்தது.

"ஏன்?"

"அதை சொல்லணும் என்று எனக்கு அவசியமில்லை."

"நீ இப்படி பேசுறது...நல்லா இல்லை."

"அன்னிக்கு நீங்க பேசினது மட்டும் நல்லா இருந்ததா?நான் பொம்மை இல்லை.நீங்க இஷ்டப்பட்டா கையில வச்சிக்கறதுக்கும்,பிடிக்கலைன்னா தூக்கி போடுறதுக்கும்."

"..............."

"நான் கிளம்புறேன்."

"...................."

வனது பதிலுக்காக காத்திருக்கவும் இல்லை.மீண்டும் திரும்பி அவன் முகத்தை திரும்பி பார்க்கவும் இல்லை.நேரே தன் அறைக்கு சென்று மெத்தையில் விழுந்தாள்.அவள் கண்களில் உள்ளே அடங்கி இருந்த கண்ணீர் இப்போதாவது வெளியே விடேன் என்று கெஞ்சியது.அவளும் அதன் மேல் இரக்கம் காட்டி மொத்த வேதனையும் கொட்டியே விட்டாள்.காதலின் கால் தடம் எங்கே பட்டாலும் அது நெருப்பாய் எரிகிறதே! அதுவும் இது இன்று எரிமலையாகவா குமுறுகிறது.கண்ணீரில் மூழ்கி இருந்தவள்,கதவு தட்டப்படும் ஓசையை கேட்டு நினைவிற்கு வந்தாள்.யாராக இருக்கும் என்ற எண்ணத்தோடு கண்களை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள்.பவித்ரா நின்றிருந்தாள்.

"உள்ளே வாக்கா!"

"மது...என்னடா என்னாச்சு?திடீரென்று வந்து கதவை சாத்திக்கிட்ட?"

"இல்லக்கா...தலைவலியாக இருந்தது."

"நான் உன் அக்காடா!நீ எந்த மனநிலையில இருக்கன்னு கண்டுப்பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா?"

"...................."

"இப்போ...நீ சொல்லலை.நான் அப்பாவையும்,அம்மாவையும் வர வைத்துவிடுவேன்."-மதுவால் அதற்கு மேல் முடியவில்லை.பவித்ராவை கட்டி அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.அன்றுவரை அவள் அழுது பவித்ரா பார்த்ததில்லை.அவளுக்கு நிலை  தடுமாறி போனது.

"மது...என்னம்மா ?"

"அக்கா...!"-என்று ஆரம்பித்து அங்கே நடந்தவற்றை விழுங்கியும் விழுங்காமலும் கொட்டி விட்டாள்.பவித்ராவிற்கு அவளை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை.

"மது...அழாதடா!"-அவள் பேச்சு அங்கே எடுப்படவில்லை.அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் அழுதுவிட்டாள்.

"மது ...தூங்குடா காலையில பேசிக்கலாம்."

"ம்...."

"என்ன?"

"அக்கா...!நான் உன் மடியில படுத்துக்கவா?"

"என்ன கேள்வி இது?படுத்துக்கோ...!"-அன்பான அரவணைப் போடு கிடைத்த தமக்கை மடி தாயின் மடி போல இருந்தது மதுவிற்கு.அப்படியே உறங்கியும் போனாள்.இரவு நேர அமைதி சிலருக்கு அழகு,சிலருக்கு அமானுஷ்யம்,ஆனால் சிலருக்கே போராட்டம்.சிறிது நேரத்திற்கு முன்பு அழகிய காதல் கவிதைப் படைத்த மனங்களுக்கு அது போராட்டமாய் அமைந்தது.இங்கே இவள் நிலை,இப்படி இருக்க அங்கே அவன் நிலையோ!

"தி...என்னடா இது?"

"..............."

"ஏன்டா இப்படி குடிக்கிற?"

".............."

"நிறுத்துடா!"-என்று அவன் கையில் இருந்த மது பாட்டிலை வாங்கினான் ரகு.

"என்னாச்சு உனக்கு?ஏன் இப்படி பண்ணுற?"

"தப்புப் பண்ணிட்டேன் ரகு...."

"என்னாச்சு?"

"மதுகிட்ட......அன்னிக்கு நான் பேசினது,இன்னிக்கு அவளை என்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சி!"

"என்ன?"-அவன் அறையில் நடந்தவற்றை சுருக்கமாக கூறினான்.

"ஆதி...டென்ஷன் ஆகாதே!மது உன்னை விட்டு போக மாட்டா!"

".............."

"நீ தூங்கு காலையில பேசிக்கலாம்."-என்று நண்பனை தூங்க வைத்தான்.ரகுவின் மனம் பல சிந்தனைகளை செய்தது.எப்படியோ ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந்தான்.சரணுக்கு அவன் வாழ்க்கை கிடைக்க போகிறது என்பதில்.இனி என்ன கதையை தொடங்க வேண்டியது தான். 

தொடரும்...

Go to EUU # 02

Go to EUU # 04

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.