(Reading time: 12 - 24 minutes)

ன்று முழு மதி நாள்.வான வெளியில் பூரண நிலவானது,ஆதவனிடம் இரவல் வாங்கிய ஒளியினை கருணை கூர்ந்து மண்ணுலக ஜீவன்களுக்காக வழங்கிக் கொண்டிருந்தது.ரம்யமான பொழுதினில்,மதுவுடன் விளையாடிக் கொண்டிருந்தான் சரண்.அப்போது அவனுக்கு 14 வயது.

"ஹே...அம்மூ...!உன்கிட்ட ஒன்று கேட்கட்டா?"

"என்ன?"

"அந்த நிலா எப்படி இவ்வளவு அழகா இருக்குடி?"

"தெரியலையே!"-அப்போது சரணின் அம்மா சாரதா அங்கே வந்தார்.அவருடன் ரகுவும்,நிரஞ்சனும்.

"ஆதி...!கிரிக்கெட் விளையாடலாம் வரியா?"

"இருடா முக்கியமான சந்தேகம்...அம்மா...!அந்த நிலா எப்படிம்மா இவ்வளவு அழகா இருக்கு?"

"ஏன் கண்ணா?"

"சொல்லும்மா...அம்மூக்கு தெரியணும்மாம்."

"என்னது?எனக்கா?"-அவன் கண் ஜாடை காட்ட,

"ஆமாம்...ஆன்ட்டி!"-அவர் சிரித்துக் கொண்டே,

"அது...இந்த நிலா பாரப்பட்சம் பார்க்காம எல்லாருக்கும் ஒளி தந்து சந்தோஷமா வச்சிக்குதுல்ல அதான்...மத்தவங்க நம்மால் சந்தோஷமா இருந்தால்,நமக்கு தானா அழகு வந்துவிடும் மது."

"சரிம்மா...நிலா சூரியன் கிட்ட தானே ஒளி வாங்குது?அப்போ சூரியன் தானே அழகா இருக்கணும்?"

"சூரியன் ரொம்ப கோபப்படுவாரு,அவரை கண்டால் எல்லாரும் பயப்படுவாங்க,நிலா அவரோட மனைவி காயத்ரி தேவியோட சாயல்,அவங்களுக்கு கருணை அதிகம்.சூரியனுக்கு தன் மனைவி மேல அதிக அன்பு.அவங்க ஒரு நாள்,இந்த உலக மக்கள் எல்லாம் இரவு நேரத்துல பயப்படாம,சந்தோஷமா இருக்க ராத்திரியும் ஒளி தேவைன்னு கேட்டாங்க,அதற்கு அவர்,பகல்ல தான் நான் இருக்கேன் ராத்திரில நீ என்னோட பாதியாக உன் விருப்படியே நிலா என்ற பேர்ல ஒளி தான்னு சொல்லிட்டாரு,போதுமா கண்ணா?"-சரணை தவிர மற்ற மூவரும் தலையசைதகதனர்.

"என்னப்பா?உனக்கு போதாதா?"

"அது இல்லைம்மா...நான் 2 மார்க் போடுறா மாதிரி பதில் கேட்டா நீ 10 மார்க்குக்கு பதில் தருகிறீயே!"

"ஏ...வாலு.அடி வாங்க போற!"

"எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் இதான் சொல்ற,ஆனா,அடிக்க மாட்ற."

"உன்னை எப்படி கண்ணா அடிப்பேன்.நீ தான் எனக்கு எல்லாம்."-என்று அவனை அணைத்துக்கொண்டார்.

"அம்மா...அப்போ நாங்க?"-என்றனர் ரகுவும்,நிரஞ்சனும்.

"நீங்களும் தான் செல்லங்களா!"-என்று அவர்களையும் அணைத்துக் கொண்டார்.பிறகு,

"போய்...சாப்பிடுங்க போங்க."

"சரிம்மா..."-என்று மூவரும் சென்று விட்டனர்.அங்கே மதுவும்,சாரதாவும் மட்டும் தனித்து இருந்தனர்.

"மது.."

"சொல்லுங்க ஆன்ட்டி..."

"சரண் பொய் சொல்லும் போது நீ ஏன்டா மறுக்கலை?"

"தெரியலை..ஆன்ட்டி"

"ம்...நீ அவனுக்கு உண்மையாக இருக்க,அவன் உண்மையாக இருக்கணும்ல,நீன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.அப்போ நீ தானே அவனை நல்ல வழியில கூட்டிட்டுப் போகணும்?இதோப் பாருடா! உண்மைங்கிறது சிங்கம் மாதிரி அதை எதிர்க்கிற தைரியத்தை நீ தான் அவனுக்கு கொடுக்கணும்.அவன் முன்னாடி இதை சொன்னா,அவன் பயங்கரமா கோபப்படுவான்,அது உன்னை தான் பாதிக்கும்.அதான்,தனியா சொல்றேன் புரியுதாடா??"

"சரி...ஆன்ட்டி...ஆனா,அந்த பொய்யை நான் ஏற்றுக்கலைன்னா இன்னும் கோபப்படுவானே!"

"நீ உன் கோபத்தை அவனுக்கு காட்டு!எனக்கு தெரியாது,ஆதி பொய் பேசக்கூடாது,அது உன் பொறுப்பு புரியுதா?"

"சரிங்க ஆன்ட்டி...சரணை நான் பார்த்துக்கிறேன்!"

"சரிடா..."-சிந்தனையில் வருடி சென்ற அந்த பசுமையான நினைவினை,மனதில் அசைப் போட்டான்.அப்படியே உறங்கியும் போனான்.

"குரு.."

"........"

"டேய் குரு..."-தங்கையின் குரல் கேட்டு மெல்ல கண் விழித்தான்,குரு மஹாதேவன்.

"என்னடி?காலங்காத்தால தூக்கத்தை கெடுக்கிற?"

"காலங்காத்தலையா? மணி 12:30 ஆகுதுடா."

"இப்போ!என்ன வேணும்?"

"டேய்..சரண் அண்ணா டெல்லியில இருந்து வந்திருக்கானாம்."

"வரட்டும்..."

"என்னடா இப்படி சொல்ற?"

"பின்ன என்ன அபி! சின்ன வயசில இருந்த அண்ணன் மாதிரியா இருக்கான்?அம்மாக்கிட்டயே பேச மாட்றான்.நாமலாம் என்ன?நான் காத்திருந்து வெறுத்துட்டேன்."

"இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாமே!"

"இத்தனை வருஷத்துல நடக்காததா இப்போ நடக்க போகுது?சின்ன வயசில கிளாஸ்ல டீச்சர் நீங்க யார் செல்லம்ன்னு கேட்கும் போது,எல்லாரும் அப்பா செல்லம்,அம்மா செல்லம்னு சொன்னாங்க நான் மட்டும் தான் அண்ணனோட செல்லம்னு சொன்னேன்.இப்போ அதே அண்ணன் எப்போ பேசுவான்னு தவம் கிடக்கிறேன்."-அவன் பேச்சில் ஒரு ஏக்கம் தெரிந்தது.

"சரிண்ணா...குளிச்சிட்டு வா! நேரமாகுது."

"வரேன் போ...!"

"சரிண்ணா..."-என்று அவள் சென்றுவிட்டாள்.குரு அவன் மேசை டிராவை திறந்தான்.அதிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தான்.அதில்,குருவின் தோளில் ஆதித்யா சரண் கைப்போட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

"தி..."-குரல் கேட்டவுடன் சரண் எதையோ மறைத்து வைத்தான்.

"என்னடா அது?"-ரகு.

"எது?"

எதை ஒளிச்சு வைத்த?"

"எ...எதையுமில்லையே!"

"சரி விலகு."

"எதுக்கு?"

"விலகு."-என்று டிராவை திறந்தான் ரகு.அதில் முன் கூறியப்படி குரு பார்த்த அதே புகைப்படம்.

"அப்போ...!இதுப் பேர் என்ன?"

"................"

"நான் எதுவும் பேச தயாராக இல்லை.வெளியே போகலாம் வா!"

"நான் வரலை..."

"வாடா! வீட்டிலையே எவ்வளவு நேரம் தான் இருப்ப?வா..."

"இல்லடா...!நான் வரலை."

"அட!வாடா!"-என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றான் ரகு.இருவரும் எங்கெங்கோ சுற்றி விட்டு இரவு தான் வீடு வந்தனர்.சரண் சோகமாகவே காணப்பட்டான்.

"ஆதி...என்னாச்சுடா?"

"தலைவலி..."

"தலைவலியா?மாத்திரை போடுறீயா?"

"வேணாம்..."

"டாக்டர்கிட்ட போகலாம் வா!"

"இல்லை.வேணாம்."

"இரு டாக்டரை வர சொல்றேன்."

"வேணாம்..."

"என்ன வேணாம்?எனக்கு தெரியும் உனக்கு எப்போ ஜீரம் வரும்,வராதுன்னு,ரூம்க்கு போ...டாக்டர் வருவாங்க."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.