(Reading time: 12 - 23 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 03 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ந்த பௌர்ணமி இரவு அனைவருக்கும் ரம்யமான உணர்வுகளை பொழிந்து கொண்டிருந்தது.. எல்லோரும் அவரவர் உணர்வகளுக்கேர்ப்ப சிந்தித்துக்கொண்டிருக்க வானில் சிரித்துக்கொண்டிருந்தது பால் நிலா....

தன் கணவனின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த பானு (அர்ஜுனனின் தாயார் ) மானசீகமாக அவருடன் பேசினார்.

VEVNP

" என்னங்க, அர்ஜுன் பார்க்குறதுக்கு மட்டும் இல்ல குணத்திலும் உங்களை மாதிரிதான்.. சொக்க தங்கம் நம்ம பையன்.... இன்னைய வரைக்கும் ஜானுவை கூட பொறந்தவ மாதிரி பார்த்துக்குறான்.... எனக்கு இருக்குற ஒரே கடமை ஜானுவுக்கும் அர்ஜுனனுக்கும் நல்ல வாழ்க்கைய அமைச்சு தர்றது தான் ... சுபி ரொம்ப நல்ல பொண்ணு.. அவ  நமக்கு மருமகளா வந்துட்டா நம்ம வீடு பழைய மாதிரி கலகலன்னு இருக்கும்னு தோணுது .... நீங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்.... " என்றவர் நிம்மதியாக உறங்கினார். அவர் நிம்மதியா உறங்கி கொண்டிருக்க அவரது புதல்வனோ

" ராட்சசி ........ வீட்டுக்கு போனாலே ஒரு மெசேஜ் பண்ணாளா ? அட்லீஸ்ட் ஒரு மிஸ்ட் கால் தந்தாளா ? சுபீ என்னடி பண்ணுற? மக்கு மக்கு இங்க ஒருத்தன் தவியா தவிக்குறேன்... ஹ்ம்ம்ம்ம் அங்க மகாராணி என்னை நெனச்சு பார்ப்பாளா கூட தெரிலையே  " என்றபடி நடந்துகொண்டிருந்தவன் தோட்டத்தில் அமர்ந்து தனியாக சிரித்து கொண்டிருந்த ஜானகியை பார்த்து அலறினான் என்று தான் சொல்ல வேண்டும் ....

 ( அய்யயோ ...பௌர்ணமி ராத்திரில தோட்டத்துல உட்கார்ந்துகிட்டு கலகலன்னு  சிரிக்கிறாளே ) என்று மனதிற்குள் புலம்பியவன் மெல்ல அவளருகே சென்றான்..

" என்ன மாமா தூங்காம பேய் மாதிரி உலா வந்து கிட்டு இருக்கிங்களே ...என்ன கதை ? "

" தூங்காம ? பேய் மாதிரி ? நான் ? ............. "

" ஆமா "

" அடியே ...  இந்த நேரத்துல அதுலயும் தோட்டத்துல நின்னுகிட்டு பிசாசு மாதிரி சிரிச்சு பயமுறுத்திட்டு நீ என்னை சொல்றியா ? உன் அலும்பல் தாங்கல ஜானு "

" ஹா ஹா அதுவா நம்ம சுபிகிட்டே இருந்துதான் மெசேஜ் ... என்னமா வாயடிக்கிரா தெரியுமா ? உங்களுக்கு அவதான் மாமா சரியான ஜோடி "

( ஜோடியா ? கேடி ! ஓஹோ மேடம் அவ்வளோ பிசியா ) என்று பொருமியவனுக்கு உண்மையில கொஞ்சம் ஏமாற்றமும் எரிச்சலாகத்தான் இருந்தது ( ஹ்ம்ம் காதல் முத்திட்டா இப்படிதானோ??? )

" சரி சரி நைட் இவ்ளோ நேரம் ஆச்சு...நாளைக்கு அவளுக்கு காலேஜ் இருக்குல ... போய் தூங்க சொல்லு "

அவனின் அகத்தை முகம் காட்டி விட ,

" இருந்தாலும் மாமா உங்களுக்கு இவ்வளோ பொசசிவ்னஸ் இருக்க கூடாது ..அதுவும் ஒரு பொண்ணு உங்க லவர் கிட்ட பேசுறதுக்கே இப்படியா ? ...விட்டா இனி சுபியை ஆண்களே பார்க்க கூடாதுன்னு சட்டம் போடுவிங்க போலிருக்கு "

வள் சொன்னதை கேட்ட அர்ஜுனனுக்குமே இது வேடிக்கையாகத்தான்  இருந்தது ... மனதில் ஒரு பாடல் தோன்ற உல்லாசமாய் வாய் விட்டு பாடினான் அர்ஜுன் ( வைட் வைட்  இது எப்பவும் நம்ம சுபத்ரா பண்ற வேலை ஆச்சே ? நு தானே யோசிக்கிறிங்க ? காதல்ல இதெல்லாம் ஜுஜுபி )

உன்  பேரை  யாரும்  சொல்லவும்  விடமாட்டேன்

  அந்த  சுகத்தைத்  தரமாட்டேன்

    உன்  கூந்தல்  பூக்கள்  விழவே  விட  மாட்டேன் 

அதை  வெய்யிலில்  விட  மாட்டேன்

உன்  பேரைச்  சொன்னால்

  சுவாசம்  முழுதும்   சுக  வாசம்  வீசுதடி  

 உன்னைப்  பிரிந்தாலே   வீசும்  காற்றில்  வேலை  நிறுத்தமடி

நீ  போகும்  தெருவில்  ஆண்களை  விடமாட்டேன்

 சில  பெண்களை  விடமாட்டேன் 

( ஜானுவை பார்த்துக்கொண்டே பாடினான் ..பின் குறிப்பு : இந்த லைன் மட்டும்தான் )

   நீ சிந்தும்  சிரிப்பைக்  காற்றில் விடமாட்டேன்

அதை கவர்வேன் தர மாட்டேன்

  வெள்ளை  நதியே  உன்னுள்  என்னை  தினம்  மூழ்கி  ஆட  விடு   

வெட்கம்  வந்தால்  கூந்தல்  கொண்டு  உனைக்  கொஞ்சம்  மூடி விடு 

" ஐயோ ஜானு ஏன் கண்ணு கலங்கி இருக்கு ? "

" போங்க மாமா .... ஒரு லோடு வெங்காயத்தை உரிக்க கொடுத்திருந்தா கூட பரவால.... இப்படி பாட்டு பாடுறேன்னு சொல்லி காதுல இரத்தம் வர வைக்கிறிங்களே "

" ஹேய் வாலு.... இவ்வளோ நாளா எங்கடி சுருட்டி வெச்சுருந்த உன் வாலுத்தனத்தை ?  "

" ஹ்ம்ம் அதெல்லாம் உங்க ஆளு கிட்ட கேட்டுகோங்க " என்றபடி தனதறைக்கு ஓடினாள் ஜானகி.

( ஹ்ம்ம்ம்ம் எவ்வளோ நாள் ஆச்சு ஜானுவை இப்படிப் பார்த்து ? சுபி எல்லாம் உன்னாலேதான் கண்மணி ) என்று நினைத்தவன் அவளுக்கு குறுந்தகவல் அனுப்பினான் .

தே நேரம் ஜானுவிற்கு  இரவு வணக்கம் சொல்லிய சுபத்ராவும் ஜானகியை தான் நினைத்துகொண்டிருந்தாள்...

( ஜானு ? எவ்வளோ இனிமையான பொண்ணு இவ ? அப்படி என் கிட்ட என்ன இருக்குன்னு இப்படி என் மேல அன்பா இருக்கா  தெரில ... ஆனா கண்டிப்பா அவ லைப் ல ஏதோ சோகம் இருக்கு .. அவ தோற்றமே விசித்திரம் தான் ... நெற்றி வகிட்டில் சுமங்கலி பெண் போல் குங்குமம், கழுத்துல சின்னதா ஒரு செயின் ..கண்டிப்பா அது தாலி இல்ல ....உதட்டுல சிரிக்கிற சிரிப்புக்கும் அவ கண்கள்ல தெரியுற வலிக்கும் சம்மந்தமே இல்ல ... இத நான் எப்படி சரி பண்ண போறேன் ? என்னால முடியுமா ? ஆனா கண்டிப்பா ஜானகியை நான் இப்படி விட மாட்டேன் ... அவ கண்ணுல இருக்குற சோகத்துக்கு நான் முற்றுப்புள்ளி வைப்பேன் .... அர்ஜுன்காக இது கூட செய்யலேனா எப்படி ? ஆனா அதுக்கு அர்ஜுன் தான் காரணமா ? இல்லையே...இயல்பாகவே ஜானு மேல எனக்கு அன்பு இருக்கு .... ஜானு மட்டும் இல்ல , அர்ஜுன் , பானு அத்தை ....... அத்தையா? சுபி நீ ஓவர் ஸ்பீட் ல போறே நெனைக்கிறேன் ? ) அவள் தனக்குள்ள கேள்விகேட்டு கொண்டிருக்க  அழகாய் சிணுங்கியது அவள் செல்போன்.

" இளவரசியாரே தூக்கம் வரவில்லையா? தூங்காமல் விழித்திருக்கும் காரணமென்ன ? "

இதழில் புன்னகை தவழ அவனின் மெசேஜ் படித்தவள் அதே பாணியில் பதில் அனுப்பினாள்..

" யுவராஜரே , எமக்கு தூக்கம் வரவில்லை என்பதை எப்படி அறிந்துகொண்டீர் ? "

" வெண்ணிலவின் ஒளி கண்டு அறிந்தேன் "

" ஓஹோ ...என்ன ஆச்சர்யம் ..வெண்ணிலவின் ஒளிக்கும் எமக்கும் என்ன சம்மந்தம் கண்டீரோ ? "

" இன்று பௌர்ணமி அல்லவா ? முழுமதி வானிலிருந்து தங்களின் கண்ணொளியை கண்டுவிட்டு , பொறாமையில் போட்டியிட துவங்கிவிட்டது... தங்கள் கண்ணொளிக்கு ஈடாக தன்னொளியை அதிகரித்து ஜொலிக்கிறது...எனினும் தங்களின் கண்ணொளியுடன் போட்டியிட்டு தோற்று போய் வெண்ணிலவும் வெட்கமடைய, வெண்ணிலவின் காதலனான கருமேகங்கள்  அவ்வப்போது வெண்ணிலவை தழுவி ஆறுதல் சொல்கிறது "

உண்மையிலே அவன் மெசேஜ் படித்து வெட்கப்பட்டது நிலவு . வானிலவு அல்ல  அவனின் காதல் நிலவு ....

( என்ன இப்படி வர்ணிக்கிறான் ? ) என்று முகம் சிவந்தவள் உடனே கண்ணாடி முன் நின்று தன்னை முதல் முறை பார்ப்பதுபோல் பார்த்தாள்.... நேற்று வரை எவனோ ஒருவன் இப்படி வர்ணித்திருந்தால் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் சண்டை போட்டிருப்பாள் சுபத்ரா ..ஆனால் இன்று சொன்னது அவளின் அர்ஜுனன் அல்லவா ?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.