(Reading time: 12 - 23 minutes)

 

" ன்னடா இப்படி பார்க்குறே ? "

" எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டு இருங்க அண்ணா "

" இனி எப்பவும் இப்படித்தான் இருப்பேன் டா ...கவலைபடாதே"

" ஆமா அண்ணா? அப்பாவும் சித்தப்பாவும் பாட்டி வீடுக்கு போயிருக்காங்களே... அவங்களை கேட்காம இதுல்லாம் இப்போ செய்யணுமா ? "

" டேய் தம்பி, இனி வர போற சீன் ல  நமக்குத்தான் நிறைய டைலோக்ஸ் இருக்கு ..சோ இப்போதைக்கு அவங்க அங்கயே இருக்கட்டும் .... " என கண் சிமிட்டினான் கிருஷ்ணன் ... தமையனை பார்த்து புன்னகையுடன் தலை அசைத்த ரகுராம் தூங்க சென்றுவிட ...... அங்கு உறங்காமல் இருந்தது நான்கு கண்கள் ...( அதுல ரெண்டு கண்ணு யாரோடதுன்னு இப்போ சொல்ல மாட்டேனே )

ள்ளிரவு நேரம்,

" தூரத்து மரங்கள் பார்க்குதடி

தேவதை இவளா கேட்குதடி

தன்னிலை மறந்தே பூக்குதடி

காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு

உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும்  வாழவில்லை  என்று தோணுதடி "

( இந்த நேரத்துல யாரு பாடுறா ? ) என்று ஜன்னல் வழியாக பார்த்த சுபத்ரா , தோட்டத்தில் கிருஷ்ணனை கண்டாள்..விரைந்து அங்கு சென்றவள்..

" அண்ணா"

" சொல்லுடா ...நீ தூங்கலையா ? "

" ம்ம்ம்ம் நீங்க ஏன் பனி கொட்டுற நேரத்துல இங்க உட்கார்ந்து பாடிட்டு இருக்கீங்க ? அம்மா பார்த்திருந்தா என்ன ஆகும் அண்ணா ...முதல்ல உள்ள வாங்க "

" ஹ்ம்ம்ம்ம் இப்போ சொல்லுங்க அண்ணா..... ஏன் தூங்கல ? "

" தூக்கம் வரலடா "

" அதான் ஏன் ?"

" தெரில மா .... ஹே சுபா அண்ணா ஹால்லே அப்படி சொன்னதுல உனக்கு வருத்தம் இல்லையேடா ?

" ஹால்லேயா ? ஏன்னா?........................ஓ ...என் படிப்பு விஷயமா ? அட போங்க அண்ணா...அதுக்கு போயி கோவப்படுவானேன்...அது  என் நல்லதுக்குத்தானே சொன்னிங்க ? அதுவும் இந்த நேரத்தில் எனக்கு அந்த அறிவுரை அவசியமானதுதான் ......................... அண்ணா"

" ம்ம்ம்ம் ...என்னடா ? "

" மன்னிசிருங்கண்ணா .... நான் உங்க கிட்ட ஒரு விஷயம் மறைக்கிறேன் ... ஆனா அதை சரியான நேரத்துல கண்டிப்பா உங்க கிட்டதான் சொல்வேன் அண்ணா "

" எனக்கு தெரியும் சுபா...நீ என்கிட்ட எதுவும் மறைக்க மாட்டேன்னு  .... நீ மனசை போட்டு குழப்பிகாதேடா ..... நல்லா படி .... உனக்கு அண்ணா எப்பவும் சப்போர்ட் பண்ணுவேன் "

"ஆனா அண்ணா .....நான் உண்மைய சொல்லுற நாள் அன்னைக்கு நீங்களும் உண்மைய சொல்லணும் ....நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல ... ஏதோ ஒரு விஷயம்  உங்களை மாத்திடுச்சு ..அது என்னனு நீங்களே சொல்லணும் அண்ணா...நான் உங்களுக்கு மூணு மாசம் டைம் தர்றேன் ...என்னோடு படிப்பு முடிஞ்சதும் நாம பேசணும் ...."

" உத்தரவு இளவரசியே " என்று கிருஷ்ணன் சிரிக்கவும் சுபத்ரவிற்கு அர்ஜுனனின் நினைவு வந்தது ....

" அண்ணா அந்த பாட்டு மறுபடி பாடுங்க அண்ணா .... நான் உங்க மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா? "

" கேக்கணுமாடா ? " என்றவன் தன் தங்கைக்காக பாடத்தொடங்கினான் ...

" உன் முகம் பார்த்தால் தோணுதடி

வானத்து நிலவு சின்னதடி

மேகத்தில் மறைந்தே பார்க்குதடி

உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி

அதை கையில் பிடித்து ஆறுதல் அளித்து

வீட்டுக்கு அனுப்பு நல்ல படி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும்  வாழவில்லை  என்று தோணுதடி "

நெகிழ்ந்த மனங்களுக்கு பாலுட்டும் வெண்ணிலவு வானிலிருந்து சிரிக்க  , இனி வருங்காலம் வசந்தகாலம் ஆகுமா ?? என எதிர்பாத்து காத்திருங்கள்!

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.