(Reading time: 15 - 29 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 04 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே " காதல் ததும்பும் குரலில் நமது பாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியம் பாட, தனது ரிங்க்டோனை கேட்டு ரசித்தபடி செல்போனை உயிர்பித்தான் அர்ஜுனன் .

" குட் மோர்னிங் சுபி "

" குட் மோர்னிங் அர்ஜுன் ... சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? "

VEVNP

" ஹா ஹா நீ இன்னைக்கு டிஸ்டர்ப் பண்ணுறதை சொல்லுறியா? இல்ல எப்போதுமே டிஸ்டர்ப் பண்ணுறதை சொல்றியா ? "

" ஐயோ என்ன அர்ஜுன் நீங்க ? நான் எவ்வளோ சீரியஸா பேசறேன் ? "

" என்னாச்சுடா ? "

( இப்படி பேசி வெச்சா நான் சொல்ல வந்ததை சொன்ன மாதிரிதான்...... இருந்தாலும் கியூட் தான் ... சார் ப்ரொபோஸ் பண்ண மாட்டாரு ஆனா நல்லா கொஞ்சுவாரு ...எல்லாம் உன் நேரம் சுமி )

" ஹெலோ சுமி இருக்கியா ? "

" அர்ஜுன் நான் என் கலேஜ்கு போய்ட்டு இருக்கேன் .... இன்னும் ஒரு 15 நிமிஷத்துல நீங்க வர முடியுமா? ஜஸ்ட் டென் மினிட்ஸ் .... பேசணும் .... "

" ஓஹோ அப்போ இன்னும் 15 நிமிஷம் நான் இங்க உனக்காக வைட் பண்ணனுமா ? "

" ஹேய் என்ன சொல்றிங்க? "

" மக்கு நான் இங்கதான் இருக்கேன் .... இளவரசியார் சீக்கிரம் வந்து சேருங்க ...... அப்பறம் இன்னொரு விஷயம் ..நான் இளவரசின்னு சொன்னதை வெச்சுகிட்டு நீ பல்லக்குல வந்திடாதே தாயே ...உன் கிளாஸ் ஸ்டார்ட் ஆகுற முன்னாடி நான் பேசி முடிக்கணும் "

" வெவ்வெவ்வெவ்வெவ்வெ............ ஏதோ நீங்க மட்டும் என்ன யுவராஜன்னு சொன்னதும் குதிரையில வந்திங்களோ ? அதான் எனக்கு முன்னாடியே வந்துட்டிங்க போல "

" இல்லடா உன் காலேஜ்ல வாட்ச்மேன் வேலைக்கு ஆளு வேணும்னு சொன்னாங்க.... எப்படியும் உனக்கு நான்தான் காலம்பூரா  காவலன் ஆச்சே ..அதான் இண்டர்வியுவுக்கு வந்தேன் "

( இப்படி ஒரு பதிலை கேட்ட பிறகும் நம்ம சுபிக்கு பாட்டு தோணலேனா அப்பறம் சுபிக்கே இது நாமதானான்னு சந்தேகம் வந்திடுமே .... சோ இதோ நம்ம சுபி மனசுல ஒரு பாட்டு .............)

யாரோ இவன் யாரோ இவன்

என் பூக்களின் வேரோ இவன்

என் பெண்மையை வென்றான் இவன்

அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்

உன் பார்வையில் உறைகின்றவன்

உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்

என் வாடையில் வெயிலானவன்

கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

" அஹெம் அஹெம் ...என்னடா பகல் கனவு காண ஆரம்பிச்சுட்டியா ? சரி நமக்கு அவ்வளோ டைம் இல்ல ...... நீ சமத்தா உன் கார்ல உட்கார்ந்து கனவு கண்டுகிட்டே சீக்கிரம் வருவியாம் நான் எதிர்ல இருக்குற கோவில்ல வைட் பண்ணுவேனாம்...... சரியா ? "

" ம்ம்ம்ம்ம் " என்று ஆமோதித்தவள் ஒரு பெருமூச்சுடன் கிளம்பினாள்..அவளுக்குமே இந்த அமைதியான  நேரம் அவசியம் தான் .... அவனிடம் பேச வேண்டியதை ஒத்திகை  பார்த்திருந்தாலும்கூட எங்கே தவறாக பேசிவிடுவோமோ என்ற பதற்றத்தில் இருந்தாள் சுபத்ரா .... ( இப்போ கூட நம்ம சூழ்நிலை தெரியாமலே நமக்கு வேண்டியதை கரெக்ட்டா செய்யுறானே ? ) என சிலிர்த்துகொண்டவள் தன் காதல் நாயகனை நினைத்து பெருமை கொண்டாள்.

காரில் அமர்ந்த சுபத்ரா, அர்ஜுனனிடம் பேச வேண்டியதை ஒத்திகைபார்த்து கொண்டிருந்தாள்....

( அர்ஜுன், நமக்குள்ள இருக்குற உறவு இன்னும் 3 மாதத்திற்கு இப்போ இருக்குற நிலையிலே இருக்கட்டும் . நான் என் படிப்புல கவனம் செலுத்தனும்... நான் என்ன சொன்னாலும் அதை சந்தேகப்படாமல் அப்படியே நம்புற என் குடும்பத்துக்கு நான் இதைதான் பெரிய சந்தோஷமா தர முடியும் ..அதுக்காக நாம விலகி இருக்கணும்னு சொல்ல வரல .... வார நாட்களில் நாம போன்ல கூட பேசிக்க வேணாம் . மெசேஜ் போதும் அதுவும் லிமிட்டா இருக்கணும் . வெள்ளிகிழமை காலேஜ் முடிஞ்சு போன்ல பேசலாம் ... வீக் எண்ட்ல நான் ஜானுவை பார்க்க வீட்டுக்கு வரேன் .... உங்களுக்கு இதுல சம்மதமா அர்ஜுன் ?

" அய்யயோ ரொம்பே   போர்மலா இருக்கோ ?

சரியாதான் பேசுறோமா?

அவன் மனசு கஷ்டப்படுமா?

ஒரு வேளை நமக்குள்ள என்ன உறவுன்னு அவன் கேட்டுட்டா ? " )  என்று தனக்குள்ளே கேள்வி கேட்டபடி இருந்தாள் சுபத்ரா...

கோவில் .......,

" சுபத்ரா நான் இங்க இருக்கேன் "

" லேட் ஆச்சா அர்ஜுன் ? "

" இல்லடா ...நீ போய் சாமி கும்பிடுட்டு வா ..டைம் இருக்கு "

சில நிமிடங்களுக்குப்பின் ,

" தேங்க்ஸ் அர்ஜுன் "

" ஹா ஹா எதுக்குடா? "

" இல்ல கோவில் வரைக்கும் வந்துட்டு சாமி கும்பிடாம பேச போறோமோன்னு நெனச்சு பீல் பண்ணேன் ...பட் நான் சொல்லாமலே நீங்க புரிஞ்சுக்கிட்டிங்க "

" ஒரு பாட்டு இருக்கு பாடவா ?" என்றபடி அவள் கண்களைப் பார்த்தான் அர்ஜுன் .

" ம்ம்ம்ம் "

நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும்

உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள்

நீ காண வேண்டும்

நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும்

நானாக வேண்டும்

நானாக வேண்டும்

சொல்லென்றும் மொழியென்றும்

பொருளென்றும் இல்லை

பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு

விலையேதும் இல்லை

விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக

உயிர் சேர்ந்த பின்னே

உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி

வேறேதும் இல்லை

வேறேதும் இல்லை

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.