(Reading time: 15 - 29 minutes)

 

" ர்ஜுன் நீங்க பழைய பாட்டு கூட விரும்பி கேட்பிங்களா " என அவள் கேட்க,

" பாட்டுல ஏதுடா பழசு புதுசு ? லிரிக்ஸ் நல்ல இருந்த எப்போ உள்ள பாட்டாக இருந்தாலும் கேட்பேன் ..... இதே பீல் கொடுக்குற புது சாங் பாடவா ? "

" ம்ம்ம்ம்ம் "

கண்ணீர் கனியே உன்னை கரம் விட மாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலை கதிரவன் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே 

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம் புனிதமானது

" அர்ஜுன்....................... "

" சுபி நான் ஒரு விஷயம் உன் கிட்ட பேசனும்டா ...பட் நீ அதை எப்படி எடுத்துக்க போற தெரில .... உனக்கு ஏதும் கேள்வி இருந்தா இல்ல கோபம் வந்தா அதை இப்பவே சொல்லணும் சரியா ? மனசுல போட்டுகிட்டு வருத்தப்பட கூடாது ...நீ என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுற கடமை எனக்கு இருக்கு டா ...சரியா ? "

ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல் அவள் சரியென தலை அசைத்தாள்....

" எனக்கு உன்மேல பிரியம் இருக்குன்னு உனக்கே தெரிஞ்சிருக்கும்..... டீனேஜ் பசங்க மாதிரி ஒரு லவ் லெட்டெர், ரோஸ், ரிங் இதெல்லாம் கொடுத்து உனக்கு நான் ப்ரொபோஸ் பண்ண விரும்பல....

நீ வேணும்னு சொல்லி எனக்கு உன் மேல காதல் வரல...

உன்னை காதலிக்கிறேன் அதுனாலேதான் நீ எனக்கு வேணும்னு சொல்றேன் ............

இதை வெறும் காதல்ன்னு கூட சொல்ல முடியாது... ஒரு இனம் புரியாத உறவு.... எதுக்காகவும் எப்பவும் உன்னை விட்டுகொடுக்காம காலம் பூரா உனக்கு துணைவனாக இருக்கணும்னு ஆசை படுறேன்.... அந்த மூணு வார்த்தைய கூட நான் அர்டிபிசியலா இல்லாம ரொம்ப இயல்பான சூழ்நிலையில சொல்லனும்னு இருக்கேன் ............ஆனா "

அதுவரை  ஏதோ கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தவள், இப்பொழுது கலவரத்துடன் அவனைப்பார்த்தாள்........ அவளின் முகபாவனையை பார்த்த அர்ஜுனனுக்கு காதலுடன் சேர்த்து குறும்பும் மேலிட ... ஆதரவாக அவள் கரங்களை பிடித்து,

" ஹேய் லூசு என்ன கண்ணெல்லாம் கலங்குது ... பட் நு சொன்னதும் ஜாடையா உன்னை விட்ருவேன்னு நெனைசியாக்கும் ? லைப் லாங் என் தொல்லை உனக்கு உண்டு இளவரசியாரே " என்று கண் சிமிட்டினான் ......

அவள் அப்போதும் அமைதியாகவே இருக்க,

" என்னடா ? " என்றான் ...

" இல்ல அர்ஜுன் கொஞ்சம் இமோஷனல் ஆகிட்டேன் ...சொல்லுங்க அர்ஜுன் "

" ஹ்ம்ம்ம்ம் ..... பட் சுபி உனக்கு படிப்பு முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு..அதுவரை நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்....  அத்தை, மாமா , பெரியத்தை, பெரிய மாமா , கிருஷ்ணா, ரகு எல்லாரும் உன்மேல எவ்வளோ பாசம் வெச்சிருக்காங்கனு நீ சொல்லும்போதே புரியுது..கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தா நம்ம சந்தோஷத்துக்காக இப்படி அவங்களுக்கு தெரியாம மீட் பண்றது தப்புன்னு தோணுது .... ஜானு எனக்கு அத்தை பெண்ணா இருந்தாலும் அவளை நான் என் சகோதரியா பார்க்குறேன்...நாளைக்கே அவ என்கிட்ட எதையும் மறைச்சா  எனக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும் ..அதே மாதிரி தானே உன் வீட்டுலேயும் பீல் பண்ணுவாங்க ? "

".............................."

" என்னடா நான் ஏதும் தப்பா சொல்லிடேனா ? "

"ம்ம்ம்ஹ்ம்ம்ம் இல்ல ..மேல சொல்லுங்க "

" ம்ம்ம்ம் அதுனால இன்னும் 3 மாசம் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் .... நல்லா படிப்புல டைம் ஸ்பென்ட் பண்ணு ...படிப்பு முடிஞ்சதும்  சரியான நேரத்துல நீ உங்க வீட்டுல நம்ம விஷயம் சொல்லு ..உனக்கு தயக்கமா இருந்தா நானே அம்மாவோடு வந்து பேசுறேன் ..... பட் அதையெல்லாம் இப்போ யோசிக்காதே .... இப்போதைக்கு உன் மைண்ட்ல படிப்புதான் இருக்கணும் சரியா? அதுக்காக ஒரு மெசேஜ் கூட பண்ணாம இருந்திடாதே தாயே ... மெசேஜ் பண்ணு ...முடிஞ்சா ஃப்ரைடே போன்ல பேசலாம் ..அப்பப்போ ஜானகியை  பார்க்கிறேன்னு சொல்லி வீட்டுக்கு வந்து தரிசனம் தந்தா நான் தன்னியனாவேன் தேவி..........

 நானும் அதுக்குள்ள ஜானகி மனசை மாத்துற வழியை பார்க்கணும் ..... திடீர்னு எனக்கு கூட பொறுப்பு வந்திருச்சு பாரேன் " என்று கண்ணடித்தான்.....

அதற்குமேல் கட்டுபடுத்த முடியாமல் அவனது கரங்களில் முகம் புதைத்து அழுதே விட்டாள் நம் சுபத்ரா.......

" ஹே சுபி என்னடா? "

""அர்ஜுன் நானும் இதை சொல்லதான் மீட் பண்ணலாம்னு சொன்னேன் ..ஆனா நீங்க எனக்கு முன்னாடியே ......எப்படி அர்ஜுன் ? ...... ஒரு வாரம் இருக்குமா  என்னோடு பழகி ? எப்படி அர்ஜுன் இப்படி நான் நினைக்கிறதை அப்படியே செய்றிங்க ? கடவுளுக்குதான் நன்றி சொல்லணும் அர்ஜுன் ...நான் காதலே வேணாம் ..கல்யாணமே வேணாம்னு இருந்தேன்..என் குடும்பத்தை மாதிரி யாரு என்னை நல்லா பார்த்துக்கபோராங்கனு ஒரு இன்செகியோர் பீல் .....ஆனா இப்போ எல்லாம் தவிடுபோடியாகிடுச்சு அர்ஜுன்.... தேங்க்ஸ் அர்ஜுன் "

" ஹே மக்கு மக்கு ..வெறும் ட்ரேலருக்கே இப்படி விழுந்துட்டா அப்பறம் மெயின் பிக்சர் பார்த்து என்ன பண்ண போறியோ ?  அழுமூஞ்சி இளவரசி ...முதல்ல கண்ணை துடை... உன் சேனாதிபதி யாராச்சும் பார்த்துட்டு என்னை சிறைபிடிச்சிட போறாங்க " என்று பயந்தவன் போல அவன் நடிக்க

" யுவராஜன் அர்ஜுனரை சிறைபிடிக்க முடியுமா? " என குறும்புடன் வினவினாள்....

" சாத்தியமில்லைதான் ..அதுவும் சுபத்ரா தேவியின் விழிகளுக்குள் கைதானவனை எப்படி சிறைபிடிக்க முடியும் ?"

" அர்ஜுன் "

" ம்ம்ம்ம் "

" இதுதான் நீங்க டிஸ்டர்ப் பண்ணாம இருக்குற  லட்சணமா ? "

" ஹீ ஹீ ........ (அசடு வழியுறார் ) ஆமாலே .....சரி நீ கிளம்பு ............. "

"அப்போ நீங்க ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.