(Reading time: 12 - 23 minutes)

 

( நான் என்ன அவ்வளோ அழகா ? ) என்று கண்ணாடி முன் இடதும் வலதும் பார்த்து கொண்டிருந்தவள் அவன் மெசேஜ்க்கு பதில் அனுப்பவில்லை.... மீண்டும் அர்ஜுனிடம் மெசேஜ் ...

" வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா?

என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா ? "

" ஹலோ யாருக்கு இப்போ வெட்கம் ? "

" அதான் சொன்னேனே ..வெண்ணிலவு மா .....உனக்கு வேற சாங் இருக்கு "

" என்ன சாங் "

" உனக்கு முன்னாலேதான் நிலவே டல்லா இருக்கு

எனக்கு கிட்ட தட்ட இதயம் புல்லா இருக்கு ..........

போதும் இளவரசி ....நாளைக்கு காலேஜ் போகணும்ல ...

போய் தூங்குவியாம் .... இரவு வணக்கம்.... இனிய கனவுகள் மலரட்டும் "

"ம்ம்ம்ம் குட் நைட் :) "

புன்னகையுடன் நிம்மதியாய் உறங்க சென்றனர் நம் காதல் குயில்கள்.

( வைட் வைட் வைட்.... போன எபிசொட் சஸ்பென்ஸ்  வெச்சுகிட்டு இப்போ முருகர் மாதிரி உலகத்தையே இவ்ளோ நேரம் சுத்தி வந்தா எப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது .... இதுக்கு மேல வைட் பண்ண வைக்கல .... அங்கே அர்ஜுன் அம்மா அவங்க கணவர் கிட்டே பேசிகிட்டு இருக்கும்போது , இங்க காதல் குயில்கள்  பாடிகொண்டிருக்கும்போது நம்ம கிருஷ்ணா ரகுராம் ரூம்ல என்ன பேசினாங்கன்னு இப்போ சொல்றேன் வாங்க )

அர்ஜுனனா? ஐயோ இந்த அண்ணா உண்மையிலே நம்மளை டெல்லிக்கு போக சொல்லி அவன் காலுல விழ வெச்சுருவாரோ? இதை வாய் விட்டு கேட்டா டென்ஷன் ஆகிடுவாரே ? என ரகுராம் சிந்திக்கும்போதே ,

" ரகு "

" அண்ணா "

" என்னடா பேயறைஞ்ச மாதிரி நிற்குற ? "

( ம்ம்ம்கும்ம் இதுக்கு பேயே அறைஞ்சிருக்கலாம் )

" ரகு "

" இல்ல அண்ணா ..நீங்க அர்ஜுனன்னு சொன்னிங்களே அதான் நீங்களே முழுசா சொல்லி முடிக்கிற வரை அமைதியா இருக்கலாம் நெனச்சேன் "

ஒரு பெருமூச்சு விட்டவன்

" ரகு, சுபா பொய் சொல்லுறா ! அர்ஜுனன்னு சொன்னது அந்த டிவி நடிகன் இல்ல "

(அப்பாடா தப்பிச்சோம் ... இனி அவன் காலுல விழ வேணாம் "

" இன்னைக்கு சுபா அர்ஜுனன் வீட்டுக்குத்தான் போயிருக்கா ? "

" அர்ஜுனன் யாரு அண்ணா ? "

" தெரியாதுடா .... ஆனா சுபா நம்ம கிட்ட பேசினதை வெச்சுபார்த்தா அவளுக்கு அவன் மீது விருப்பம் இருக்குன்னு புரியுது "

" உங்களுக்கு எப்படி தெரியும் அண்ணா ? "

" சுபா புக்ஸ் வாங்கும்போதே என்னை டிராப் பண்ண சொன்னா ...நான்தான் மீட்டிங்க்னு போகல .... சரி சர்ப்ரைஸ் கொடுக்கலாம் நு நான் புக் ஷாப் வெளில வைட் பண்ணும்போதுதான் அவ அந்த பையன் கூட கார் லே போனா ..... நானும் பின்னாடி போனேன் ... ஏதோ ஒரு வீடுக்கு போனாங்க . அங்கே ரெண்டு லேடீஸ் ரொம்ப பாசமா சுபியை அழைச்சுகிட்டு உள்ள போனாங்க .... நான் கேஸ் பண்றது சரின்னா அது அந்த அர்ஜுன் வீடாத்தான் இருக்கும் ? "

" அண்ணா இவ்வளோ தெரிஞ்சும் அவ அந்த வீடுக்கு போகும்போது நீங்க அவளை கூட்டிடு வந்திருக்கலாமே ? இப்போ கூட அவ பொய் சொல்லும்போது நீங்க ஏன் அண்ணா ஏதும் பேசல ? "

" ரகு ...அவ நம்ம தங்கச்சிடா ... இன்னொருதவங்க வீட்டு முன்னாடி சண்டை போட்டு கூட்டி வர சொல்றியா ? அதுவும் ஒரு வேளை அவங்களுக்குள்ள ஒன்னும் இல்லன்னா, தங்கச்சியை திட்டனது எல்லாம் தப்பா போயிடும் .... அவ நம்ம வீட்டு பொண்ணு .. அவ மனசை நாமதான் கஷ்டபடாம பார்த்துக்கணும் .... "

" ஆனா அதே அக்கறை அவளுக்கும் இருக்கணும் " என்றவனின் குரலில் கோபத்தை உணர்ந்த கிருஷ்ணனுக்கு ஆச்சர்யமாக இருந்தது ..

" ரகு.... நீ காதலுக்கு எதிரியா ? "

" அப்படி எல்லாம் இல்ல அண்ணா ? "

" அப்பறம் என்னடா ?

" இல்ல அவ மறைக்கிறதுதான் எனக்கு நெருடலா இருக்கு அண்ணா... "

" ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ ரகு "

" சொல்லுங்கண்ணா "

" ஒரு பொண்ணுக்கு அவ வாழ்கையை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு .... ஒரு அண்ணான்னா அவ ஆசைபட்ட வாழ்கை அவளுக்கு பொருத்தமானதான்னு முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மக்கு இருக்கு ... உறவுகள் விஷயத்துல மட்டும் எடுத்தோம் கவிழ்தோம்னு இருக்க முடியாது.. உனக்கு சுதாகர் ஞாபகம் இருக்கா ? "

" மறக்க முடியுமா அண்ணா ? "

" ம்ம்ம்ம் நம்ம மாமா பையன்தான் ..எல்லாரும் அவன்தான் சுபாவுக்குன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க ..அவன் குணம் நமக்கு தெரிஞ்சும் பெரியவங்களை எதிர்த்து பேசல ..ஆனா சுபா யாரோட உதவியும் நாடாமலே அவனை நிராகரிச்சா ..இன்னைய வரைக்கும்  அவங்க கிட்ட இருந்து இது விஷயமா எந்த பேசும் வரல "

" உண்மைதான் அண்ணா.... சுபாவுக்கு அப்போ 18 வயசுதானே ... இருந்தாலும் அவ அந்த சூழ்நிலையை கையாண்ட விதம் கண்டிப்பா பாராட்டனும் "

" ஹ்ம்ம்ம்ம் அப்படிப்பட்ட நம்ம தங்கச்சி தப்பா முடிவெடுப்பான்னு நீ நெனைக்கிறியா? "

" கண்டிப்பா இல்ல அண்ணா ..... ஆனா அர்ஜுன் ? இப்போ நம்ம அடுத்தக்கட்ட பிளான் என்ன அண்ணா ? "

கண்களை உருட்டி ரகு கேட்ட விதத்தில் கிருஷ்ணனுக்கு சிரிப்புதான் வந்தது..... அவனும் ,

" எனக்கு ரங்கானு ஒரு ரௌடி தெரியும் ..அவனை வெச்சு கதைய முடிச்சுடலாம் " என்றான் .....

" ஐயோ அண்ணா "

" ஹா ஹா ஹா .... பின்ன நீதானே திட்டம் என்னன்னு கேட்ட? சரிடா ரிலாக்ஸ் .... என் நண்பன் விஜய் ஒரு டிடெக்டிவ் அஜென்ஷி வெச்சுருக்கான் ...அது மூலமா அர்ஜுனன் பத்தி விசாரிக்கலாம் .... அதுவரை நீ இத பத்தி அவ கிட்ட பேசாதே"

" ஐயோ என்ன அண்ணா நீங்க ? நான் இப்போதான் எப்படி டிசைன் டிசைனா நம்ம சுபாவை கலாய்க்கலாம் நு யோசிச்சேன் "

" இல்ல ரகு ... ஒரு வேளை இது சரி வரலேனா, நாம தேவ இல்லாம சுபா மனசுல ஆசையை வளர்த்த மாதிரி இருக்கும் "

( ம்ம்ம்கும்ம் நாம வளர்க்குரதுக்கு முன்னாடி அவளோட ஹீரோ சும்மா இருக்கணுமே )

" சரி அண்ணா ..... மீட்டிங் பத்தி ...................? "

" மீட்டிங் ஓவர் ...குட் நைட் " என்று சிரித்தவனை அன்புடன் பார்த்தான் ரகு ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.