(Reading time: 17 - 33 minutes)

 

ருவிற்கு அவர்களோடு வெளியில் செல்லும் மனநிலை இல்லாததால், வேண்டாம் என்று மறுத்து விட்டாள். அவர்களும் சென்று விட்டார்கள்.

(அனுவோட வயிறு கத்தறது உங்களுக்கு கேட்குதா. எனக்கும் கேட்குது. அடிப்பாவி. உனக்கு வேண்டாம்ன்னா எனக்கும் சேர்த்து ஏண்டி நீயே பதில் சொன்ன, ஒரு வேளையாச்சும் இந்த ஹாஸ்டல் சாப்பாட்டுல இருந்து தப்பிக்கலாம்ன்னா விடறியா என்று அனு எண்ணும் போதே ஹாஸ்டல் வார்டன் அந்தப் புறம் செல்ல, ஒரு வேளை நம்ம மனசுல நினைச்சது இவங்களுக்கு கேட்டு இருக்குமோ என்ற எண்ணம் தோன்ற அவர்களை பார்த்து அசடு வழிய சிரித்து வைத்தாள் அனு.)

அனுவை பற்றி அவருக்கு நன்றாக தெரியுமாதலால் அனுவிடம் வந்த வார்டன் அவளை உற்று நோக்க, அனு திரும்ப அசடு வழிய சிரித்தாள்.

அனுவின் காதைப் பிடித்து திருகிய வார்டன் “ஹேய் வாலு. என்ன பண்ண ஒழுங்கா சொல்லு” என்றார்.

“ஐயய்யோ மேம். நான் ஒண்ணுமே செய்யலை” என்றாள்.

“அப்புறம் ஏன் அப்படி சிரிச்ச”

“ஒருத்தவங்களை பார்த்தா சிரிக்கணும்ன்னு எங்க வீட்டுல சொல்லுவாங்க. இப்ப வேற வீட்டுல இருந்து வந்தாங்களா அதான் அந்த நியாபகம் வந்து சிரிச்சிட்டேன்” என்று ஏதேதோ சொல்லி சமாளித்து அறைக்கு விரைந்தாள் அனு. (ஐயோ அனு உனக்கு இது தேவையா, எப்பவுமே கிரேட் எஸ்கேப் ஆகறவ. இன்னைக்கு இப்படி மாட்டிக்கிட்டியே செல்லம். ஐயோ பாவம்)

அறைக்கு சென்றால் ஆரு அங்கு யோசித்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரையும் அனுப்பி விட்டு இருவரும் தான் ஒன்றாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் தான் அனு வார்டனிடம் சிரித்து மாட்டிக் கொண்டாள். வார்டன் வந்து அனுவை வழி மறித்தது, பேசியது, இது எதுவுமே தெரியாமல் ஆரு அறைக்கு சென்று விட்டிருந்தாள். (அதை தான் நம்ம அனுவால ஏத்துக்க முடியலை)

அறைக்கு வந்து சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் ஆருவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லாததால் வேண்டுமென்றே ஒரு புத்தகத்தை சத்தம் வருமாறு இடம் மாற்றி வைத்தாள்.

அந்த சத்தத்தில் சிந்தனையில் இருந்து தெளிந்த ஆரு இப்போது அனுவையே பார்த்தாள். அனுவோ ஏதும் தெரியாததை போல அமைதியாக அவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் நந்துவும் வந்து விட அனு நந்துவிடம் “என்ன உன் அத்தையை பார்த்தியா. என்ன ஆச்சி. என்ன சொன்னாங்க. ஓகே தானே” என்று கேட்டாள்.

ஆருவும் அருகில் வந்து நந்து சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

நந்துவின் முகமே அவர்களுக்கு நல்ல செய்தி என்பதை உணர்த்தியது.

நந்து அனைத்தையும் சொல்லி முடிக்க அனு “ஹேய். ஜாலி ஜாலி. பார்த்தியா. நான் சொன்னேன் இல்ல. எல்லாம் நல்ல படியா நடக்கும்ன்னு. பார்த்தியா. பர்ஸ்ட் ட்ரீட் குடு” என்றாள்.

ஆருவும் கங்கிராட்ஸ் சொல்ல நந்து சிரித்துக் கொண்டே அனுவிற்கு பதில் சொன்னாள்.

“என்ன அனு. நீ எப்ப இப்படி எல்லாம் சொன்ன. என் கூட வர சொன்னா, கூட வராம நைசா கிழண்டுட்ட இல்ல” என்று வாரினாள். (அட நம்ம நந்து கூட பேசுதே. எல்லாம் சந்துரு அத்தை பையன் தெரிஞ்ச சந்தோஷம் தான்.)

அனுவால் தான் நந்து பேசியதை நம்பவே முடியலை.

“ஆரு. என்னை கொஞ்சம் கிள்ளேன்” என்றாள்.

வின்சியின் பெற்றோர் வந்து சென்ற இத்தனை கலவரத்திற்கும் அனு வாயே திறக்காததால் கோபமாக இருந்த ஆரு சற்று பலமாக கிள்ள “அடிப்பாவி. ஒரு பேச்சுக்கு சொன்னா, கால் கிலோ சதையை இப்படியா பிச்சி எடுப்ப” என்றாள்.

ஆரு இன்னும் முறைத்துக் கொண்டே இருக்க, “பிடிக்கலையா விடு. ப்ரன்ட்ஸாவே இருப்போம்” என்றாள்.

நந்து சிரிக்க, அனு கோபமாக நந்துவிடம் திரும்பி “எல்லாம் உன்னால தான். உன்னை அந்த பிரேம் கிட்ட மாட்டி விடறேன். வா” என்று பயமுறுத்த ஒரு நிமிடம் அரண்ட நந்து, பின்பு சுதாரித்து,

“ஹிஹிஹி. பிரேமை என் பிரபு பார்த்துப்பாரு” என்றாள்.

“பாருடா. பாப்பா வாயை திறந்து பேசுது. எல்லாம் நேரம். போங்க. நீங்க ரெண்டு பேரும் என் மூட் அவுட் பண்ணிட்டீங்க. நான் போய் என் செல்லத்துக்கிட்ட பேச போறேன்”

“ஆமா அனு. கதிர் சார் தான் நீ எவ்வளவு மொக்கையை போட்டாலும் தாங்கிக்கிட்டு பதில் பேச மாட்டாரு. அதனால நீ அவர் கிட்டையே பேசு” என்றாள் நந்து.

“யூ டூ ப்ரூடஸ்” என அனு கதற,

ஆருவும் நந்துவும் ஹை பை கொடுத்துக் கொண்டார்கள்.

‘அனு உனக்கு கட்டம் சரியில்லை டா. நைஸா கிழண்டுக்க’ என்று எண்ணிக் கொண்டு படிப்பதைப் போல புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டாள்.

பின்பு ஆரு மெதுவாக வின்சியின் பெற்றோர் வந்தது, அவர்கள் பேசியது என எல்லாம் சொல்ல நந்து ஏதோ கூறப் போனாள்.

பின்னால் இருந்து அனு ‘ஏதும் கூறாதே’ என்பதைப் போல சைகை காண்பித்தாள்.

நந்துவும் உடனே ஆப் ஆகி விட, ஆரு தான் “என்ன நந்து ஏதோ சொல்ல வந்த” என்று கேட்கவும், நந்து என்ன கூறுவதென்று தெரியாமல் விழித்தாள்.

‘நம்மளை வாரர்துக்கு மட்டும் இவ நல்லா யோசிச்சி கிண்டல் பண்றா. இப்ப மட்டும் பார்த்தியா’ என்று எண்ணிக் கொண்டு அவள் விழிப்பதைக் கண்டு மௌன சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாள் அனு.

அனு சிரிப்பதை பார்த்த நந்து பாவமாக ‘காப்பாத்து’ என்பதை போல முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

அப்போதும் அனு மனம் இறங்காததால் நந்துவே எப்படியோ சமாளித்து “இதுல நீ தான் ஆரு முடிவு பண்ணணும்” என்று கூறினாள். (ஐயோ ட்யூப் லைட் எரிஞ்சிடுச்சே என்று அனு பார்த்துக் கொண்டிருந்தாள்.)

அனு மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல நந்துவும் மெதுவாக வெளியே வந்தாள்.

“ஏன் அனு என்னை எதுவும் பேசாதன்னு சைகை செஞ்ச”

“அதுக்கில்லை நந்து. இப்ப ஆரு கொஞ்சம் குழப்பத்துல இருக்கா. அது ஒரு வகையில நல்லது தான். இப்ப நாம போய் வின்சி பக்கம் பேசினோம்ன்னு வச்சிக்க அவ திரும்ப வேதாளம் முருங்கை மரத்துல ஏறின மாதிரி நம்மளை எதிர்த்து வின்சியை திட்டி தான் பேசுவா. சோ எதுக்கு தேவை இல்லாம. சோ அவளே யோசிக்கட்டும்”

நந்துவும் சிறிது யோசித்து விட்டு “அது சரி தான். ஆனா ஏன் எனக்கு ஹெல்ப் பண்ணுன்னு கேட்டப்ப நீ ஏதும் ஹெல்ப் பண்ணலை” என்றாள்.

அனு வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டே “அதுவா செல்லம் நீ அதுக்கு முன்னாடி தானே என்னை வாரு வாருன்னு வாறின. அதான். அதுக்கு ரிவன்ஜ். இதுக்கே இப்படின்னா எப்படி. இது சும்மா ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனி தான் வர போகுது. வெயிட் அண்ட் சீ” என்று சொல்லி விட்டு கதிரிடம் போனில் பேச போய் விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.