(Reading time: 17 - 33 minutes)

டுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனு, ஆரு, நந்து எல்லோரும் சந்துருவின் வீட்டிற்கு கதிரை பார்க்க சென்றனர்.

நந்துவிற்கு சொல்ல முடியாத பரவசமாக இருந்தாலும் ஏனோ பயமாகவும் இருந்தது.

ஆருவும் அவள் நிலையை புரிந்துக் கொண்டு அவள் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு வந்தாள்.

அனு தான் வழி நெடுக கிண்டல் செய்து கொண்டே வந்தாள்.

நந்து எவ்வளவு கெஞ்சியும் அவள் விடவே இல்லை. (பாவம் நந்து, இதெல்லாம் ஜுஜூபின்னு அதுக்கு தெரியலை.)

சந்துருவின் வீட்டிற்குள் அவர்கள் நுழையும் போதே அவர்களுக்கு கவினின் கெக்க பெக்க என்ற சிரிப்பு தான் கேட்டது.

இவர்கள் சரியாக வீட்டிற்குள் நுழையவும், நளினி வந்து அவர்களை வரவேற்றார்.

நளினி நந்துவை அணைத்தவாறு அழைத்து வர சந்துருவின் கண்கள் அவளுக்கு ரகசிய செய்தி சொன்னது.

அவள் முகத்தை பார்த்து நந்துவை “என்ன நந்து வரும் போதே ஒரு மாஆஆஆதிரி வர என்று ராகம் இழுக்க”

சந்துரு அவன் தோள் மேல் கை போட்டு “என்ன சொன்ன கவின் என்று கேட்க”

“எஸ் சார். நோ சார், சாரி சார்” என்றான்.

அருணோ கவினை பார்த்து நகைக்க, “எலிக்குட்டிக்கு ஒரு காலம் வந்தா புலிக்குட்டிக்கும் ஒரு காலம் வரும்” என்றான் கவின்.

“இதுல யாரு எலி, யாரு புலி” என்று திரும்ப அருண் சந்தேகம் கேட்டான். (அந்த டவுட்டை நாம ஆடியன்ஸ் கிட்டயே விட்டுடுவோம்)

“மங்குனி மந்திரி” என்று கர்ஜித்தான் கவின்.

உள்ளே சென்று விட்ட சந்துரு “என்னடா அங்க சத்தம்” என்று கேட்க,

“ஒன்னும் இல்லை மாமா” என்று சத்தமே வராமல் சத்தம் கொடுத்தான் கவின்.

எல்லோரும் ஒரு வழியாக கதிர் இருந்தா அறைக்குள் செல்ல, அதற்குள் ஞானப் பிரகாஷ் வந்து எல்லோரையும் வரவேற்று விட்டு சாப்பிடும் படி கூறி விட்டு அவர் கிளம்ப எத்தனிக்க,

அனு நந்துவிடம் “அங்கிள் கிட்ட கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்ன்னு சொன்னியே நந்து. மறந்துட்டியா” எனவும் நந்துவிற்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது.

என்ன சொல்வது என்று புரியாமல் அனுவை பார்த்தால் அவள் வெற்றி சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாள்.

சந்துருவிற்கு கூட என்ன செய்வது என்று தெரியவில்லை. (எல்லாரும் ஏதோ பயங்கரமான சீன் பார்க்கற மாதிரி நந்துவையே பார்த்திட்டு இருந்தாங்க. இது போதாதா நம்ப நந்துக்கு, மயக்கம் போடாத குறையா ரொம்ப பீலிங்கா அனுவை பார்த்தா)

அதற்குள் சந்துருவின் தந்தையே “என் கால்ல ஏன் மா விழனும்” என்று கேட்கவும்,

நந்து ஏதாவது கூறுகிறாளா என்று பார்த்த அனு, அவள் பயத்துடன் நிற்பதை பார்த்து ‘இது தேறாத கேஸ். இதை இவ்வளவு அழ விட்டதே போதும் என்று எண்ணி’,

“அது ஒன்னும் இல்லை அங்கிள். நம்ம நந்து கதிரை எப்பவும் அண்ணன்னு சொல்லிட்டு இருப்பா. அவரை நீங்க காப்பாத்திட்டீங்க இல்ல, அதுக்கு நன்றி சொல்றதுக்கு தான்” என்றாள்.

‘ஞானப் பிரகாஷும் “ஓ. அப்படியா சரி” என்று சொல்லி விட்டு “அதுக்கு தேங்க்ஸ் சொன்னாலே போதுமே, எதுக்கு கால்ல எல்லாம் விழுந்துக்கிட்டு” என்றுக் கேட்டார்.

“அட என்னங்க அங்கிள். நீங்க இந்த சினிமா எல்லாம் பார்க்க மாட்டீங்களா. ஒரு பேஷன்ட்டை காப்பாத்தின உடனே அவங்க ரிலேட்டிவ் வந்து டாக்டர் கால்ல எல்லாம் விழுந்து டாக்டர் நீங்க தெய்வம் மாதிரின்னு எல்லாம் சொல்லுவாங்களே” என்று பெரிய ஆக்ஷன் செய்தாள் அனு.

எல்லோரும் அவள் நடிப்பை பார்த்து வியந்து நிற்க (கவின் உட்பட), நந்துவோ இன்னும் பயம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்படின்னா நீ தானம்மா என் கால்ல விழுந்து நீ சொன்னதெல்லாம் செய்யணும்” என்று அவளையே வாரினார் ஞானப் பிரகாஷ்.

அனு இப்போது விழிக்க, எல்லோரும் சிரித்தனர்.

சிரித்தவாறே அவரும் கிளம்பி விட்டார்.

எல்லோரும் சேர்ந்து ஓன், டூ, த்ரீ என்று சொல்ல, அங்கு என்ன நடக்க போகிறது என்று உணர்ந்த அனு ஓடி சென்று கதிரின் கட்டிலுக்கு பின்பு நின்று கொண்டாள்.

எல்லோரும் போனால் போகிறது என்று அவளை விட்டு விட, கவின் மட்டும் ஓடி அவளை பிடிக்க முயற்சித்தான்.

அதற்குள் கதிர் “என்னடா” என்று கேட்டான். (கொஞ்சம் வயலன்ட்டா கேட்கற மாதிரி நீங்களே நினைச்சிக்கோங்க)

அவன் கேட்கும் மாடுலேஷனை பார்த்த கவின் “நத்திங் பாஸ்” என்றவாறு அமைதியின் சிகரமானான்.

பின்பு கதிரின் பக்கத்தில் வந்து அமர்ந்த அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

நந்து அங்கிருந்த சோபாவில் சென்று அமர, அவளருகில் சந்துரு சென்று அமர்ந்தான்.

ஆரு ஆன்ட்டிக்கு ஹெல்ப் செய்கிறேன் என்று சென்று விட்டாள்.

அருண் ‘ஆளை விடுங்கடா’ என்று ஒரு மேகசின் எடுத்து படிக்க ஆரம்பித்தான். (சரி. சும்மா பொம்மை பார்க்கறான்னே வச்சுக்கோங்க)

கவின் இரண்டு புறமும் மாறி மாறிப் பார்த்தான். யாருமே ஏதும் பேசாமல் கண்ணாலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ஜோடிகளின் ரொமான்ஸும் அவனால் தாங்க இயலவில்லை.

“நாங்க இங்க தான் இருக்கோம்” என்று குரல் கொடுத்தான்.

“உன்னை யாரு இங்க இருக்க சொன்னா” என்று ஒன்றாக சந்துருவும், கதிரும் குரல் கொடுத்தனர்.

‘அடப்பாவிங்களா’ என்று எண்ணிக் கொண்டே “டேய் வாடா. வந்து தொலை டா. உனக்கு இதெல்லாம் தேவையா” என்று புலம்பியவாறே அருணை வெளியில் இழுத்து சென்றான்.

திய உணவின் போது உணவை கதிர் இருக்கும் அறைக்கே எடுத்து வந்து எல்லோரும் உண்டனர்.

ஞானப் பிரகாஷ் உணவு உண்ண வந்து விடவே நளினி அவரை கவனித்துக் கொண்டிருந்தார்.

இங்கே இவர்கள் எல்லோரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அனு கதிருக்கு ஊட்டி விட, சந்துருவோ நந்துவை பார்த்தான்.

அவள் “ம்ஹூம்” என்று தலை ஆட்டி விட்டு அவள் பிளேட்டை பார்த்துக் கொண்டிருக்க, அவன் சிரித்துக் கொண்டே அடிக்கடி அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான்.

அனு யாரையும் கவனிக்காமல் அவள் பாட்டுக்கு கதிருக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கதிரை தவிர யாருமே தெரியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.