(Reading time: 34 - 68 minutes)

 

பிராமியின் அறையை விட்டு வந்த இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர். அதே நேரம் அபிராமியும்  இதை பற்றி மற்ற மூவரிடமும் பேச வேண்டும் என்று முடிவெடுத்தார்.

" சரி குட் நைட் அண்ணா "

" ரகு ஒன்னு கேக்கவா ? "

" சொல்லுங்க அண்ணா "

"  நீ ஏன் ஸ்ரீ ராம் ஜானுவுக்கு அத்தை பையன் ...நிச்சயம் பண்ணாங்க நு மட்டும் சொன்ன ? அவங்க காதலை பத்தி சொல்லலியே ? "

" ஹ்ம்ம் அண்ணா ... ஒரு அம்மா எவ்வளோ நல்லவங்களா இருந்தாலும் அது அவங்க பிள்ளைங்களுக்கு மட்டும்தான் மத்தவங்களுக்கு இல்ல் "

" புரியல "

" நம்ம அம்மா ஜானகியை சொந்த பொண்ணு மாதிரி பார்க்குறாங்க ... பட் மாதிரிதான் ... இப்போ அவ மனசு மாறலேன்னா அதுக்கு காரணம்  அவளுடைய நிச்சயம் முடிஞ்சதுமே மாப்பிள்ளை இறந்ததும் அவங்க அப்பாவின் மரணமும் தான் காரணம்னு இருக்கும் ... இதுவே அவ ஸ்ரீராமை உயிருக்குயிரா காதலிச்சான்னு தெரிஞ்சா ஒரு நாள் இல்ல ஒரு நாள் என்னை நெனச்சு கவலை படுற அம்மா அவ மேல கோபபடலாம் ... ஏதோ வேகத்துல அவளை தப்பா பேசிடலாம் .... அவ ஆல்ரெடி ரொம்ப நொந்து போயிட்டா அண்ணா ..இது போதும் ...இனி அவ பீல் பண்ற மாதிரி நான் நடக்க விட மாட்டேன் "

பதில் ஏதும் பேசாமல் அவனை அணைத்துகொண்டான் கிருஷ்ணன் ...

" பெருமையா இருக்குடா உன்னை நெனைச்சா "

" அண்ணா நீங்களும் அண்ணி கிட்ட பேசுங்க ப்ளீஸ் "

" ம்ம்ம்ம் சரி டா "

றுநாள்,

" கிருஷ்ணா "

" சொல்லுங்க சித்தி "

" இல்ல நாளைக்கு கோகுலஷ்டமி நிறைய வேலை இருக்கு ... ரகு அக்கம் பக்கத்துல உள்ளவங்களை இன்வைட் பண்ண போறான் நீ நம்ம வசு கிட்ட பேசி அவளையும் கூப்டுரியா ? "

" நானா? சுபா எங்க ? "

" அவ பானு வீட்டுக்கு போயிருக்கா ..."

" ம்ம் சரி சித்தி "

இதயம் படபடக்க அவளை தேடி சென்றான் கிருஷ்ணன் ... எவ்வளவு நாள் ஆச்சு இவளை பக்கத்துல பார்த்து என்று பெருமூச்சு விட்டவன் , அப்போதான் அவளின் அலறல் சத்தம் கேட்டான் .... அவன் எதிர்பார்த்தது போலவே , கீழே விழுந்திருந்தால் வசந்தர மீரா ...

" மீரா என்னாச்சு ? "

" நீ ....நீங்க இங்க எப்படி ? "

" உனக்கு அடி எதுவும் படலையே  ? "

" இப்போ என்ன விஷயமா வந்திங்க? "

" எப்பவும் உனக்கு பதில் சொல்ல வராதா மீரா ? நான் என்ன வேண்டாதவனா? ஏன் எப்போ பார்த்தாலும் இப்படி ஒதுக்கம் காட்டுற ? ஒரு மூணாவது மனுஷி மேல காட்டுற கர்டசி கூட எனக்கு இருக்க கூடாதா ? " கிட்ட தட்ட கோபத்தில் அவன் உறுமினான் என்றுதான் சொல்ல வேணும் ... அப்போதுதான் போன் ஸ்பீக்கர் ஆன் ஆனதை கவனித்தாள் மீரா ... கிருஷ்ணனிடம் பதில் ஏதும் சொல்லாமல் போனை எடுத்தவள் , (போனில் பேசிய அந்த "ஷக்தி " யின் உரையாடலை இங்கு சொல்லவில்லை  )

" ஹெலோ ஷக்தி "

"......................"

"இல்லடா விழுந்துட்டேன் "

"........................"

" இல்ல நானே எழுந்துக்குறேன் "  என்றவளை சட்டை செய்யாமல் அலேக்காக தூக்கினான் கிருஷ்ணன் ...

" கிருஷ்ணா ? என்ன இது ... கொஞ்சம் கூட மேன்னர்ஸ் இல்லாம ? விடுங்க என்னை இறக்கி விடுங்க "

" அக்கறையா கேள்வி கேட்ட பதில் சொல்லாம இருக்குறது மட்டும் மேன்னர்ஸ்  ஆ? " என்றவன் அவளின் அறையில் கட்டிலில் அவளை அமர வைக்க

" கேக்க யாரும்மில்லைன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவிங்களா ? "

" ஆமாடி அப்படிதான் பண்ணுவேன் ..ஏன்னா நான் உன் புருஷன் "

" வெட்கமா இல்லையா உங்களுக்கு ? கல்யாணம் ஆகாத பொண்ணை இப்படி சொல்ல?   உங்களை விரும்புறேன்னு நான் சொன்னேனா? "

" நான் எதுக்கு வெட்கப்படனும்? நீ சொன்னாலும் சொல்லலே நாளும்  அதான் நிஜம் " என்றவன் அவள் எதிர்பாரா நேரம் அவளின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பத்தித்து விட்டு ,

" பேசு ...சக்தியோ ..... பக்தியோ ? யாருகிட்டே வேணும்னாலும் பேசு ...ஆனா உன் கழுத்துல தாலி என் கையாலே தான் ஏறும் ... சொல்லு அவன்கிட்டேயும் "

அவனின் ஆவேசத்தின் காரணம் அறிந்தவளுக்கு அப்போதும் சிரிப்பு வர அதை மறைத்தவள் ( இந்த  ஐடியா நல்ல இருக்கே ) என்று நினைத்தாள்...

" நான் பேசுவேன் ...என் ஷக்தி கிட்ட நான் பேசுறேன் உங்களுக்கு என்ன? "

அவளின் அலட்சியத்தில் மீண்டும் அவளருகில் வந்தவன் சட்டென திரும்பி அந்த அறையில் இருந்து வெளியேறினான் ... லைனில்,

" ஷக்தி "

" ஏன் இப்படிலாம் பண்ணுற மீரா? "

" விடுடா"

" என்ன விடுறது ? ஒரு பையன் இறங்கி போறான் அதுக்காக அவனை இப்படி வாட்டுவியா ..எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரே குணம்தான் போல  ?"

" ஹேய் கேப் ல நீ உன் அத்தை பொண்ணை திட்டுறேன்னு புரியுது ... " என சிரித்தாள்..

" உன்னாலே எப்படி சிரிக்க முடியுது ? கிருஷ்ணன் நல்லவர் மீரா "

" நல்லவர்தான் ...அதுனாலேதான் அவைக்கு நல்ல பொண்ணு கிடைக்கணும் சொல்றேன்"

" உனக்கென்ன குறைச்சல் ? "

" குறை உள்ளவளை பார்த்து கேட்குற கேள்வியாடா இது ?"

" அதான் உண்மை தெரிஞ்சு அவரே ஏத்துக்கிட்டார் ல ? "

" ஆனா என் மனசு கேக்கலே ஷக்தி ..ப்ளீஸ் டா எனக்காக இந்த நாடகத்தை கொஞ்சம் செயல் படுத்தலாம் .... நீ என்னை விரும்புற மாதிரி நடி ..ஜஸ்ட் போன் ல தானே ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.