(Reading time: 34 - 68 minutes)

 

வள் பதில் சொல்வதற்குள் " அப்போ நானும் அத்தைன்னு கூப்பிடவா அத்தை ? " என கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுதிகொண்டான் அர்ஜுன் .... எப்படி பால்  வீசினாலும் சிக்சர் அடிக்குரானே என ரகுராம் ஆச்சர்ப்பட்டான்....

" அப்படியே கூப்பிடுங்க தம்பி ...ஜானு ச்வீட் ஏதும் கொஞ்சம் சாப்பிடுடா " என வாஞ்சையுடன் அவர் சொன்னதோடு இல்லாமல் ஊட்டியும் விட  கண் கலங்கிய  தலை அசைத்தாள் ஜானகி. நடந்தவற்றை ரகுவும் கிருஷ்ணாவும் நெகிழ்ந்து பார்த்து கொண்டிருந்தனர்... அந்த  சந்திப்பு அனைவருக்குமே நிறைவான சந்திப்பானது... மனது விட்டு பேசி சிரித்து   எதிர்பார்ப்புகளும் மகிழ்ச்சியும் உள்ளமெங்கும்  வியாபிக்க இந்த வருடம் கோகுலஷ்டமியை அனைவரும் சேர்ந்தே கொண்டாடுவதாய் முடிவெடுத்தனர்.

ந்த பிரமாண்டமான கார் வீட்டினுள்  நுழைவதை பார்த்ததுமே தோட்டத்தில் படித்துக் கொண்டிருந்த சுபத்ரா துள்ளலுடன் அங்கு வந்தாள்.....

" அப்பா .....பெரியப்பா ....." என்று துள்ளலுடன் வந்தவள்  அவர்களின் முகத்தை பார்த்தே அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு..,

" வாங்க பெரியப்பா... அப்பா .... பாட்டி எப்படி இருக்காங்க ? நாங்க அவங்களை  பார்க்க வரலேன்னு ரொம்ப பீல் பண்ணிருப்பாங்களே .... எங்களுக்கும் கஷ்டமா ஆச்சுப்பா .... அதான் என் படிப்பு முடிஞ்சதுமே நானு , அண்ணா, ரகு மூணு பேரும் பாட்டிகூடவே தங்கபோறதா பிளான் போட்டுட்டோம்" என்றாள்...அவள் எதிர்பார்த்தது போலவே தந்தை இருவரும் அவள் பேசினில் சமாதானம் ஆகி விட

" அதுகென்னடா உன் படிப்பு முடிஞ்சதும் ..நாம எல்லாரும் ஒண்ணாகவே போலாம் " என்று பெரியதாய் புன்னகைத்தார் அவளின் பெரியப்பா சூர்யா பிரகாஷ் ..... சூர்யா பிரகாஷும் சரி சந்திர பிரகாஷும் சரி அடிப்படையில் கண்டிப்பானவர்கள் இல்லை என்றாலும் தங்கள் வீட்டு வாரனங்களை சமாளிக்க அவ்வப்போது கடுமையாக நடந்துகொள்வது வாடிக்கைதான்.... இதை சுபத்ரா உட்பட அனைவரும் அறிந்த ஒன்று தான் ..( மொத்ததுல முழுசா நனைஞ்சும் முக்காடு போட்டு இருக்காங்களாம்) ... தங்கை சரியான நேரத்தில் அவர்களை சமாதனபடுத்த அதற்கு காத்திருந்தது போல அங்கே வந்தனர் ரகுவும் கிருஷ்ணனும்...

" அப்பா பெக் ஐ என்கிட்ட கொடுங்க "

" சித்தப்பா நீங்களும்தான் " என்று உரிமையுடன் பேக் வாங்கி கொண்டவர்கள் பெரியவர்களுக்கு வழிவிட்டு விட்டு மெதுவாக நடந்து ரகசிய குரலில் சுபத்ராவிடம்

" தேங்க்ஸ் சுபா .. எங்கே எரிமலை  வந்ததுமே வெடிக்க போகுதோன்னு பயந்துட்டேன் " என்றான் கிருஷ்ணன்  ...

" அண்ணனை காப்பாத்தினது சரி ... இந்த தடவை உன் கூட்டணியில் என்னையும் சேத்துகிட்டியே சுபா ...நீ நல்லவளா ? கெட்டவளா ? " என தோரணையுடன் ரகுராம் வினவ

" அய்யே அர்ஜுன் மேட்டர் பத்தி ரெண்டு பேரும்மூச்சு விட கூடாது அதுக்குதான் இந்த உதவியை லஞ்சமாக செஞ்சேன் " என்றவள் துள்ளலுடன் ஓடிவிட்டாள்.

மகளின் குரலை கேட்டே கணவனின் வரவை அறிந்த அபிராமியும் சிவகாமியும்  குடிப்பதற்கு மோர் எடுத்து  வந்தனர்...

(இந்த இடத்துல இவங்க கல்யாண பிளாஷ் பேக் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்... தன் அத்தை மகள் அபிராமி மீது சிறு பிராயத்திலிருந்தே அன்பும் காதலும் வைத்திருந்த சூர்யாவிற்கு தன் காதலை சொல்ல தகுந்த சூழ்நிலை அமையவில்லை. அவரின் காதலை உணர்ந்த அபிராமியும் என்றாவது அவர்கள் சேர்ந்து  விடுவார்கள் என்று மனகோட்டையை கட்டி வைத்திருந்தார் .... எல்லா ஹீரோவும் ஹீரோ ஆகுறதுக்கு பின்னாடி ஒரு ஹீரோயின் அல்லது வில்லன் இருக்கணும் . நம்ம சூர்யா பிரகாஷ் கதையும் அதேதான் . அபிராமிக்கு அவரது தூரத்து சொந்தமான இன்னொருத்தரை வரன் பேச அப்போதுதான் சூர்யா பிரகாஷின் காதல் தீவிரம் அடைந்தது. அதுவரை சந்தர்பத்திற்கு காத்திருந்தவர் அதற்கு மேல் பொறுக்காமல் அபிராமியின் நிச்சயதன்று தன் காதலை அனைவர் முன்னிலையிலும் கூறினார். இன்னொரு மாப்பிளை பார்த்து நிச்சயம் பண்ணும்போது இவர் இப்படி சொன்னதும் உடனே மாப்பிளை மாற்றி கல்யாணத்திற்கு  பச்சை கோடி காட்ட இது சினிமா இல்லையே  ! தற்காலிகமாக அந்த நிச்சயம் நின்றுவிட்டாலும் இவர்களின் காதலுக்கு அவ்வளவு சீக்கிரம் பச்சை  கோடி காட்டப்படவில்லை ..இந்த போராட்டகாலங்களில் நம்ம அபிராமி - சூர்ய பிரகாஷுக்கு  தூதுவனாக இருந்தது சந்திர பிரகாஷ் தான் ...  தங்கள் திருமணம் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தோள்கொடுத்த சந்திரப்ரகாஷ் அபிராமி - சுர்யப்ரகாஷ் இருவரின்  அன்பிற்குரியவரானர். அவர்களின் திருமணத்தில் சிவகாமியை பார்த்த சந்திரப்ரகாஷ் தன மனதை பறிகொடுக்க அவரின் காதலில் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடத்தி வைத்தனர் அவரின் தமையனும் அண்ணியும் ....)

நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டதிநாளோ என்னவோ, தம்பதியர் இருவரும் பார்வையால் பேசிகொண்டிருக்க, தங்களது பெற்றோரின் காதலை பார்த்து ரசித்துகொண்டிருந்தனர் அவர்கள். அந்த மௌனராகத்தை தனது பாடலால் ஆனந்த ராகமாக்கினாள் சுபா .

முதல் நாள் காணும் திருமண பெண் போல் முகத்தை

மறைத்தல் வேண்டுமா ?

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா ?

பிரிந்திவர் மீண்டும் சேர்ந்திடும்போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச  மறந்து சிலையாய்  இருந்தால்

பேச மறந்து  சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சந்நிதி

அதுதான் காதல் சந்நிதி

அவளின் பாடலில்  இயல்பு நிலைக்கு வந்த இருவரும் செல்லமாய் அவள் காதலி பிடித்து திருகி

" வாலு வாலு .. இருடி உனக்கு கல்யாணம் ஆகும்ல அப்போ வெச்சுகிறோம்"

" ஸ்ஸ்ஸ்ஸ் ஆ  அம்மா வலிக்கிறது .... பெரியம்மா யு டூ ? "

" ஹா ஹா ஆமா எங்களை கிண்டல் பண்ணலே..அதான் "

" சரி சரி போதும் விடு சிவகாமி "

" அதான் உங்க பொண்ணை நீங்க விட்டு கொடுப்பிங்களா ? ஏங்க இப்படி இளைச்சு போய்ட்டிங்க ? "

" ஆமாங்க நீங்களும் தான் "

 இருவரின் முகத்தையும் பார்த்து அண்ணன் தம்பி  இருவரும் ஒரே பதிலை தந்தனர்

" எங்களோட பாதி உயிர் நீங்க இங்க இருக்கும்போது நாங்க ஆள் பாதியா தானே இருப்போம் ? "

" ப்பா போதும் ..கல்யாண வயசுல பசங்களை வெச்சுகிட்டு இப்படி எங்க முன்னாடி நீங்க ரொமான்ஸ் பண்றது எல்லாம் அநியாயம் "

" அட போங்கடா எங்க பொண்டாட்டி நாங்க கொஞ்சுறோம் ... நாங்களா உங்களை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொன்னோம் " என்றபடி தன் காதல்  மனைவியை பார்த்து சந்திரப்ரகாஷ்  கண்ணாடிக்க  முக சிவந்தார் சிவகாமி ...

" வாவ் அண்ணா இங்க பாரேன் அம்மாவுக்கு கூட வெட்கம் வருதே "

" சி போடி எல்லாம் உனக்கு கல்யாணம் ஆகும்ல அப்போ புரியும் "

" ஆஹா என்னடா இது சுத்தி சுத்தி பேச்சு கல்யானத்துலேயே நிக்குதே ? நாங்க இல்லாத நேரம் பார்த்து ஆளுக்கொரு ஜோடிகிளியை புடிசிட்டிங்களா? " என்றார் சூர்யா பிரகாஷ் ...

" அண்ணா கிருஷ்ணாவை பார்த்தா அப்படி தெரியல ... இந்த ரகு மேலதான் எனக்கு டவுட்டு .... நம்ம சுபாவோட டிரெஸ்ஸிங் சென்ஸ் கூட ரொம்ப மாற்றிட்ட மாதிரி இருக்கே "

" ம்ம்ம்கும்ம் யாரு கிருஷ்ணனை பார்த்தா லவ் பண்ணாத மாதிரியா தெரியுது ? சரியான அழுத்தம் பிடிச்சவன் " என்று ஒரு துளைக்கும் பார்வையை அபிராமி பார்க்க

" ஐயோ மம்மி என்னை ஆளை விடுங்க ... " தன்னறைக்கு  ஓடினான் கிருஷ்ணன் .

" சரி நீங்க ரெண்டு பேரும் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க ...நிறைய பேசணும் " என்றபடி சமையலறைக்கு சென்றனர் இருவரும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.