அந்த வார்த்தையை கேட்டு பல நாட்கள் ஆகி விட்டிருந்த நிலையிலும், பெற்ற மகனிடம் ஒரு வார்த்தைக்கூட பேச விரும்பாதவராய், முகத்தில் வெறுமை படர, பரத்தை பார்த்து சொன்னார் மைதிலி 'அவனை நகர சொல்லிட்டு நீ காரை எடுடா கண்ணா நாம கிளம்பலாம்.
அம்மா ப்ளீஸ். ஒரு நிமிஷம்..... விஷ்வா ஏதோ சொல்ல விழைய,
அதை கேட்க கூட விரும்பாமல் நாம ஆட்டோலே போயிடுவோம் நீ அப்புறம் வந்து காரை எடுத்துக்கோ, என்று அவர் நகர அவரை பின் தொடர்ந்தான் பரத்.
சட்டென இருவருக்கும் முன்னால் வந்து வழிமறித்தான் விஷ்வா.
பொறுமை இழந்து பரத் பேச ஆரம்பிக்கும் முன் சட்டென சொன்னார் அம்மா.
வி...ஷ்வா ஏன்டா என் நிம்மதியை கெடுக்கறே? இங்கே இருந்து போயிடு. அவர் குரல் உடைந்தது. விஷ்வா அதிர்ந்து போய் நிற்க, மைதிலியின் கண்ணீரில் துடித்து போனான் பரத்.
அத்.....தை ப்ளீஸ் அழாதே. என்றான் பரத். விஷ்வாவின் சொந்த தாய் மாமன் மகன் பரத்.
அவர் தோளை அணைத்து அழைத்து சென்றவன் அவரை காரில் அமரவைத்தான்.
கார் கதவை சாத்திவிட்டு நிமிர்ந்து கண்களில் படர்ந்த தீவிரத்துடன் விஷ்வாவை சில நொடிகள் பார்த்தான் பரத். பின்னர் விறுவிறுவென நடந்து காரில் ஏறி அமர்ந்தான்.
காருக்கு அருகில் வந்தான் விஷ்வா. அவன் மனதில் இருந்த மொத்த கோபமும் பரத்தின் மேலேயே திரும்பியது,
எனக்கு சொந்தமானதை இவன் கொள்ளையடித்து செல்கிறானே!!!!!!! விஷ்வாவின் பார்வை தவிக்க, பரத் அவனை பார்த்தபடியே காரின் கண்ணாடியை ஏற்றினான்.
தவித்து போனவனாய் விஷ்வா நின்றிருக்க, அவனை கடந்து, மண்டபத்தின் கேட்டை தாண்டி வெளியேறியது பரத்தின் கார்.!
தொடரும்...
{kunena_discuss:726}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.