" பேபி ஆ எந்த பேபி சொல்றிங்க??..."
" உங்க பேபி தான் ஸ்ரீ.. "
" மை பேபி?? எப்போ பாத்திங்க??"
"தூக்கி வச்சு இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி முத்தம் கொடுத்திங்கள... அது உங்க பேபி தான.??? " ஸ்ரீ சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.. அப்பொழுது அஸ்வினும் மீராவும் அவளை முழுதாக பார்த்தார்கள்.. கழுத்தில் மெல்லிய செயின் அடக்கமாக.. காலில் மெட்டி இல்லை.. அஸ்வின் மனம் துள்ளியது...
"இட்ஸ் நாட் மை பேபி... என்ன பார்த்த கல்யாணம் ஆன பொண்ணு மாதரி இருக்கா?? " என்று கேட்டாள் ஸ்ரீ..
"நீங்க தூக்கி வச்சு கொஞ்சிட்டு இருந்திங்கள இவ்ளோ நேரம்??? அது உங்க பாப்பா இல்லையா???""
"ஹா ஹா... நோ... அவுங்க பேபி" என்று குழந்தை இருந்த இடம் நோக்கி கை காட்டினாள்.. மீரா அசடு வழிய சிரித்தாள்....
" ஹிஹி..." மீரா அஸ்வினை பார்த்து கண் அடித்தாள்..மனதில் நினைத்து கொண்டாள்... " ஹையோ அண்ணா உன் ரூட் க்ளியர்.. சூப்பர்"
"ஓகே நான் கிளம்புறேன்.. பாய்" என்று தலை அசைப்புடன் சென்றாள்...
அவள் சென்ற பின்னால் அஸ்வின் அவள் போவதையே பார்த்து கொண்டு நின்றான்...
துளி துளி துளி மழையை வந்தாலே..
சுட சுட சுட மறைந்தே போனாலே...
பார்த்தாள் பார்க்க தோன்றும்,பெயரை கேற்க தோன்றும் ,
பூபோல் சிரிக்கும்போது காற்றை பறந்திட தோன்றும்...
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா..
அழகாய் மனதை பறித்து விட்டாளே,,,
அஸ்வினின் மனது இந்த பாட்டை பாடி கொண்டு இருந்தது,.. மீரா அதை கலைக்கும் விதமாக
" ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்.... அதுக்குள்ள ட்ரீம்ஸ் போயாச்சு போல??"
"அப்படிலாம் ஒன்னும் இல்ல மீரா"
" அப்படியா அசடு வழியுது... அந்த பொண்ண முழுங்குற மாதரி பார்த்திட்டு இல்லன்னு சொல்றியா??"
"பொய் சொல்லாத... நான் சும்மா பார்த்தேன்.. கை பிடிச்சு தண்ணி ஊத்த கையை பிடிச்ச வெடுக்குனு பிடிங்கிட்ட... அதான் கோபமா பார்த்தேன்..."
"யாரு நீ அவுங்கள கோவமா பார்த்த... எனக்கு காது குத்தி பல வருஷம் ஆச்சு... சொல்லு அண்ணா பிடிச்சு இருக்கா அந்த பொண்ண??"
"ஹே லூசு சும்மா பார்த்தேன்.. அதுக்கு ஏன் இப்படிலாம் கேட்குற... வா போகலாம்..." என்று சைக்கிள் எடுத்து கிளம்பி விட்டான் அஸ்வின்.. மீரா நின்று அண்ணனை பார்த்து கொண்டு இருந்தாள்..
இவுங்க அண்ணியா வந்தா எப்படி இருக்கும்... பார்க்கலாம் கடவுள் விட்ட வழி... என்று கிளம்பி விட்டாள்...
எல்லாரும் போட்டிங், சைக்கிள் முடித்து விடுதி திரும்பினர்.. அஸ்வின் வீட்டினரும் எஸ்டேட் திரும்பி மதிய உணவை உண்டு ரெஸ்ட் எடுத்தனர்..
அஸ்வின் அவனுடைய அறைக்கு வந்து உறங்க முடியாம்மல் தவித்தான்.. காலைல பார்த்த பொண்ணு இப்படி என் மனச கொல்றாளே... அழகா வேற இருந்தா.. குண்டு கன்னம்.. கண்ணு பெருசு... ஒரு எடத்துல நிக்குதா அவ கண்ணு.. அவ சிரிப்பு... கழுத்து எலும்பு.... ஐயோ இவ்ளோ இம்சை பண்றாளே... என்று அஸ்வின் அவஸ்தை பட்டான்... ஸ்ரீயும் அதே நிலைமையில் இருந்தாள்...
அவன் என்ன இப்படி பண்ணிட்டான்... கையை பிடிச்சு இழுக்குறான்.. மத்த நேரம் இருந்தா அரஞ்சு வச்சிருபேன்... இவன பார்க்க கூட முடியல.. அப்படியா ஒரு பொண்ண முழுங்குற மாதரி பார்பாங்க... லூசு பைய... அறிவு கெட்டவன்... சரியான நெடு மரம் மாதரி இருந்தான்.. வளந்து கெட்டவன்.. ஹாஹா.. அவன் பட்ட பேரு இனிமே வளந்து கெட்டவன்..
ஹே ஸ்ரீ அவன நீ இன்னும் பார்க்க போறது கிடையாது.. அப்பறம் என்ன இப்படி பேரு வச்சுகிட்டு... என்று மனதை அடக்க முயன்றாள்...
அன்று மாலை அவளை தன் வீட்டின் முன் பார்போம் என்று அவன் எதிர் பார்க்க வில்லை....
( ஸ்ரீ எதுக்கு அவனோட வீட்டுக்கு வந்தாள்னு நெக்ஸ்ட் எபிசோடுல பாப்போம்....)
தொடரும்...
{kunena_discuss:740}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.