(Reading time: 21 - 41 minutes)

 

டுத்த நாள் கதிர் கல்லூரிக்கு வருவான் என்பதால், அனுவோ நந்து ஆருவை தொல்லை செய்து சீக்கிரமாக இல்லையில்லை வெகு சீக்கிரமாக அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

“நீ வேணும்னா சீக்கிரம் போயேன் அனு, நாங்க இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி வறோம்.” என்றாள் நந்து.

“இல்லல்ல என் கூடவே வாங்க”

“நாங்க ஏன் இவ்வளவு சீக்கிரம் வரணும் அனு. கதிர் சார் வந்தாலும் நீ அவரை எங்க கூட பேச விட மாட்ட. சோ நாங்க ஏன் சீக்கிரம் வரணும்” என்றாள் ஆரு.

அப்போது அவர்களிடம் ஏதும் சொல்லாமல் அவர்களையும் கிளப்பி விட்டாள் அனு. அங்கு சென்றவுடன் தான் அவள் ஏன் அவர்களையும் கிளப்பினாள் என்று அவர்களுக்கு புரிந்தது.

அவர்கள் கல்லூரிக்கு வந்த போது அங்கு யாருமே இல்லை. செக்யூரிட்டி கூட இவர்களை விசித்திரமாக பார்த்து விட்டு விசாரித்து விட்டு போனான்.

நந்துவும், ஆருவும் கோபமாக இவளை திரும்பி முறைக்க, அனுவோ “ஹிஹிஹி இதெல்லாம் சகஜமப்பா” என்றாள்.

நேரமோ நத்ததையாய் நகர்வதை போல இருந்தது.

எப்படியோ சிறிது நேரமாகி கல்லூரிக்கு ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தனர்.

தூரத்தில் யார் வந்தாலும் அனு ஆர்வமாக பார்க்கத் தொடங்கினாள்.

“அனு கதிர் அண்ணா. பிரபு கூட தான் வருவார். எனக்கு அவரோட பைக் சவுண்ட் நல்லா தெரியும். அவங்க வரும் போது நானே சொல்றேன்” என்று நந்து சொல்லவும்,

ஆருவும், அனுவும் அவளை கேலியாக நோக்கினர்.

நந்துவிற்கு அப்போது தான், தான் வாய் விட்டது தெரிந்தது. அசட்டுத் தனமாக ஒரு புன்னகை புரிந்தாள்.

பைக்ல தான் வருவாங்க என்று தெரிந்திருந்தும், தூரத்தில் நடந்து வருபவர்களை கூட உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொருவர் வரும் போதும் எதிர்பார்த்து அது கதிரில்லை என்பது தெரிய இவர்களிடம் ஒவ்வொரு முறையும் “ஏன் இன்னும் வரலை” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். (அனு ஏன் ரெண்டு பேரையும் கூட கூட்டிட்டு வந்தான்னு இப்ப தெரியுதா, ஏன் இன்னும் வரலைன்னு அவ யாரு கிட்ட டவுட் கேட்பா. )

இதே பேச்சைக் கேட்ட நந்து நொந்து போனது சாதாரணம் தான் என்றாலும், ஆரு கூட நொந்து தான் போய் விட்டாள்.

அதற்குள் நம்ம கவின் அண்ட் கோ-வும் வந்து சேர்ந்து விட்டார்கள்.

சோகமே உறவாக நம்ம ஆருவும், நந்துவும் அமர்ந்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கவின் என்னவென்று கேட்க ஆரு தான் விஷயத்தை சொன்னாள்.

கவின், அருண், செல்வா எல்லோரும் சிரித்தனர். ஆனால் அனுவோ எதையும் கவனிக்காமல் அவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதன் பின்பும் அனு “ஏன் இன்னும் வரலை” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.

இது போல பல பல முறைகள் நடந்த பிறகு “ஏன் இன்னும் வரலை” என்று நந்து அனுவிற்கு பதில் கூற ஆருவோ சிரிக்க, அனுவோ முறைத்தாள்.

“என் கிட்ட பனிஷ்மெண்ட் வாங்கியும் உனக்கு புத்தி வரலை இல்லை” என்று அனு மிரட்டவும், நந்து பயந்து போனாள்.

“சாரி சாரி அனு. தெரியாம பண்ணிட்டேன் சாரி” என்று பல முறை கெஞ்சியும்,

“இதோட விடு. இப்ப உன் பனிஷ்மெண்ட் பத்தி எனக்கு யோசிக்க கூட டைம் இல்ல, இன்னும் சாரி சொல்லியே வெறுப்பேத்தினா பனிஷ்மெண்ட் ஹெவி ஆகிடும். சோ நவ் கீப் கொய்ட்” எனவும் நந்து ஏன் அதற்கு மேல் வாய் திறக்கப் போகிறாள்.

ஒருவாறு எல்லோரும் எதிர்ப்பார்த்த மாதிரி நம்ம கதிரும் காலேஜ்க்கு என்ட்ரி கொடுத்திட்டாரு.

நந்து சொன்ன மாதிரியே பைக் சவுன்ட் தொலைவில் கேட்கும் போதே “அவங்க வராங்க” என்று கூறினாள்.

அவள் சொல்வதைக் கேட்டு அனு ஆர்வமாக எதிர்ப்பார்க்க சில நொடிகளில் அவ்வாறே சந்துரு கதிரை அழைத்துக் கொண்டு வந்தான்.

“நந்து செல்லம். இப்ப நீ சரியா சொன்னதுக்காக முன்னாடி நீ செஞ்ச தப்பை நான் மன்னிச்சிட்டேன். போ” என்றாள் அனு. (நந்து கிரேட் எஸ்கேப் டா. இல்லைன்னா நீ எல்லாம் அனுவோட பனிஷ்மெண்ட்டை இன்னொரு முறை தாங்குவியா)

அனு கதிரையே பார்த்துக் கொண்டிருக்க, கதிர் அனு எங்கே என்று பார்வையை சுழற்றி அனுவை கண்டு விட்டான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்க்க, அனுவிற்கு அவன் முந்தைய நாள் பேசியது நினைவில் வர திடீரென்று அவளுக்கு வெட்கம் சூழ்ந்துக் கொள்ள தலை குனிந்துக் கொண்டாள்.

‘என்னடா இவ, இவ்வளவு நேரம் ஏன் வரலை ஏன் வரலைன்னு கேட்டுட்டு இருந்தா, இப்ப என்னடான்ன தலையை குநிஞ்சிக்கறா’ என்று ஆருவும், நந்துவும் யோசித்துக் கொண்டிருக்க,

கவினோ “அட. பாருடா நம்ம அனுவுக்கு கூட வெட்கம் வருது” என்று சொல்ல, அனு நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“ஐயய்யோ இந்த நந்து தப்பிச்சிருச்சி, நான் மாட்டிக்கிட்டேன் போலவே” என்று மனதில் நினைப்பதாக நினைத்துக் கொண்டு வாய் விட்டு சொன்னான் கவின்.

“ஆமாடா மாட்டிக்கிட்ட தான்” என்று பதில் தந்தாள் அனு.

“மறுபடியும் முதல்ல இருந்தாஆஆஆஆஆ”

அதற்குள் கதிரும், சந்துருவும் இவர்கள் அருகில் வந்தனர்.

அனு திரும்ப தலை குனிந்துக் கொண்டாள்.

கவின் “எங்கடா அவ” என்று கேட்கவும்,

“யாரு சார்” என்றான் கவின்.

“நேத்து வரைக்கும் ஒரு பொண்ணு இருந்தா. அவ பேரு கூட ஏதோ, என்னன்னு சரியா நியாபகம் வரலையே, ஒரு நிமிஷம், அவ பேரு அனுன்னு நினைக்கறேன். எங்க அவ” என்றான்.

“ஐயய்யோ என்னையே கட்டம் கட்டறாங்களே” என்று அருண் தோளில் சாய்ந்து கதறினான் கவின்.

“இவன் என்னடா இப்படி அழறான்” என்று சந்துரு அவன் தோளில் கைப் போட்டு கேட்க, அருண் தான் நடந்ததை கூறினான்.

அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிர் அனுவை பார்க்க, அவள் திரும்ப குனிந்துக் கொண்டாள்.

நம்ம அனு ஓவரா வெட்கப் பட்டுட்டு இருக்க, எவ்வளவு நேரம் தான் டைம் வெயிட் பண்ணும், அது சரியா அதோட வேலைய பார்க்க, கிளாஸ்க்கு டைம் ஆகிடுச்சி.

ஒரு வழியாக மனதே இல்லாமல் அனு திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

(அனுவுக்கு ஒரு டவுட், அதெப்படி அவன் வரலையேன்னு வெயிட் பண்ணும் போது நகர மாட்டேன்னு அடம் பிடிச்ச இந்த டைம், அவன் வந்த உடனே ஒரே வேகமெடுத்து பறந்துச்சின்னு.. முடிஞ்சா நீங்களே அனுவுக்கு இதுக்கு பதில் சொல்லுங்கப்பா)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.