(Reading time: 21 - 41 minutes)

 

ந்துருவின் வீட்டில்...

நந்துவை அவள் அத்தை கொஞ்சி விட்டு போன பிறகு, சந்துரு அவளுடன் பேச ஆரம்பித்தான்.

“என்ன நந்து. ஏன் ஒரு மாதிரி பேசின”

“எனக்கு தெரியலை. ஆனா ஒரு மாதிரி இருக்கு”

“சரி விடு. எல்லாருக்கும் சில நேரம் அப்படி தான் இருக்கும்” என்று சொல்லி விட்டு ஏதேதோ பேசி அவள் மூடை மாற்றினான்.

“என் செல்ல நந்துவுக்கு ஒன்னு காமிக்கப் போறேன்”

“என்னது”

“வெயிட்” என்று சொல்லி விட்டு, அவன் மொபைலை எடுத்து, அந்த போட்டோக்களை காண்பிக்க ஆரம்பித்தான்.

அன்று கதிரை பார்க்க எல்லோரும் வந்திருந்த போது நந்து அவள் அத்தை கொடுத்திருந்த புடவையை கட்டிக் கொண்டு வந்திருந்தாள்.

அவள் அத்தை கூட அவளை அன்று அழகாக இருக்கிறாய் என்றெல்லாம் சொல்ல, சந்துருவோ அன்று புடவை கட்டிக் கொண்டு வந்திருப்பதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதில் நந்துவுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

ஆனால் அன்று அவளுக்கே தெரியாமல் அவளை போட்டோ எடுத்திருந்தான் போலும், அத்தனை போட்டோக்கள். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த போது கூட எடுக்கப் பட்டிருந்தது.

அவள் அதைப் பார்த்து கேள்வியாக நோக்க, அதுக்கு தான் ஒரு பட்டாளமே வச்சிருக்கோமே என்று சிரித்தான்.

மோஸ்ட்லி அவர்களிருவரும் இருந்த போட்டோக்களில் அவன் பேசிக் கொண்டிருக்க அவள் குனிந்துக் கொண்டே இருந்தாள்.

ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து அவன் அதற்கு கமன்ட் செய்துக் கொண்டே இருந்தான்.

அதில் ஒரு போட்டோவில் மட்டும் சந்துரு வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருக்க, நந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நந்து அதைப் பார்த்து விட்டு அவன் புறம் திரும்பி விக்கித்துப் போய் அமர்ந்துக் கொண்டிருக்க,

அவனும் அவளையே பார்த்துக் கொண்டு “என்னது இது மேடம். நான் பார்க்கும் போது எல்லாம் நீங்க என்னை பார்க்க மாட்டீங்க. நான் பார்க்காதப்ப மட்டும் உன் முட்டை கண்ணை வச்சி என்னை பார்ப்பியா” என்றான்.

வெட்கத்தோடு அமர்ந்திருந்தாள் நந்து.

கொஞ்ச நேரத்திற்கு அவன் அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, நந்து தலை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.

“இப்படியே பண்ணிட்டிருந்தா நான் அத்தை கிட்ட போய்டுவேன்”

“உன்னை போக விட்டா தானே”

“இருங்க நான் அத்தையை கூப்பிடறேன்”

“நீ கூப்பிட்டா கூட உன் அத்தை வர மாட்டாங்க. லாஸ்ட்டா உன் அத்தை போகும் போது அவங்க கூட போய் என்ன சொன்னேன்னு நினைக்கற, என் செல்லத்து கூட பேசி நீங்களே டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்க. சோ நான் கூப்பிடற வரைக்கும் இங்க வரக் கூடாதுன்னு மிரட்டி வச்சிருக்கேன்” என்று வில்லச் சிரிப்பு சிரித்தான் சந்துரு.

நந்து அதற்குப் பிறகு அவனை ஒரு வித பயத்தோடு பார்க்க,

“ஏய் நீயே இப்படி எல்லாம் பார்த்து எனக்கு ஏதாவது தோண வைக்காத”

அப்புறம் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள் நந்து.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவள் அத்தையிடம் போன பிறகு, அவரிடம் “அத்தை என்னென்னவோ சொல்லி என்னை பயமுறுத்தினாங்க அத்தை” என்று அப்பாவியாய் அவள் பார்க்க,

அவரோ சந்துருவின் காதைப் பிடித்து திருகினார். (நந்து உனக்குள்ளவும் ஒரு கொலை வெறி இருந்திருக்கு. பாரேன்)

அப்புறம் சந்துரு முறைக்க, நந்து கெஞ்ச என்று அங்கு பொழுது போனது.

கிளாஸ் முடிந்து எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்க, அருண் மட்டும் கவினை காணவில்லை என்று கூற, அனுவும் ஜெனியையும் காணவில்லை என்றாள்.

பின்பு எல்லோரும் சிரித்துக் கொண்டே அவர்களை தேட அங்கே ஒரு மரத்தடியில் அவர்களிருவரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

எல்லோரும் அவர்களருகில் செல்ல “இனி நீ என் கிட்ட பேசாத ஜெனி. நானும் உன் கிட்ட பேசலை” என்று கவின் சொல்லிக் கொண்டிருக்க, ஜெனியோ கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 15

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 17

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.