(Reading time: 21 - 41 minutes)

 

திர் சந்துருவை பார்த்ததை சொல்ல,

“அதானே பார்த்தேன். அவரா வந்து மாட்டிக்கிட்டாருன்னு சொல்லு. நீ ட்யூப் லைட் தான் போ. உன்னை வச்சிட்டு என்ன பண்ணப் போறேன்னே தெரியலை”

“போடி வாயாடி”

“என்ன மேன் இது. ஒரு பொம்பளைப் பொண்ணை போடி வாடின்னு பேசுற.”

“ஓ அப்படியா மேடம். அது நீங்க என்னை போடா வாடான்னு பேசும் போது இந்த அறிவு எல்லாம் எங்க போச்சாம்”

“அது எங்கயோ போயிருந்துச்சி. அதை தெரிஞ்சி நீ என்ன பண்ணப் போற. அதை விடு. உனக்கு இது கூட தெரியாதா. பொண்ணுங்க வந்து அவங்க ப்ரண்ட்சை வாடா போடான்னு பேசலாம். ஆனா பாய்ஸ் கேர்ள்ஸ போடி வாடின்னு சொல்லக் கூடாது. தெரியாதா உனக்கு”

“நீ எல்லாம் பேசுவ. அதை விடு. அது ப்ரண்ட்ஸ்க்கு தான். நமக்கென்ன”

“அப்படின்னா நாம ப்ரண்ட்ஸ் இல்லையா. அப்புறம் ஏன் மேன் என் கிட்ட பேசிட்டிருக்க, போனை வச்சிட்டு போ”

“ஏய் அனு என்ன” என்று புரியாமல் விழித்தவனிடம், (நம்ம கதிர் நிஜமாவே ட்யூப் லைட் தாங்க. நீ தானேம்மா அவனவன் அவள் ஆளுக்கு எத்தனை டைம் கால் பண்றான். நீ பண்றதில்லைன்னு கேட்ட இல்ல, அப்ப நான் யாருன்னு மீன் பண்ணி கேட்டன்னு திருப்பி கேட்டிருக்கலாம் இல்ல, பட் புள்ளைக்கு அப்ப மூளை வேலை செய்யலை)

“பின்ன என்னவாம். ப்ரண்டும் இல்லைன்னு சொல்லிட்ட, அப்படின்னா நீ எனக்கு யாரு”

“அனு. இப்ப உனக்கு என்ன வேணும்”

“என்ன வேணுமா? நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட ஒன்னு சொன்னேன்.”

“ஆமா.”

“என்ன சொன்னேன்”

“நீ நான் நம்ம கல்யாணம் இதைப் பத்தி எல்லாம் உன் அத்தை அதாவது என் அம்மா கிட்ட பேசிட்டு வர சொன்ன”

(அதெல்லாம் நான் சொன்ன மாதிரியே சொல்லு, தண்டம்)என்று மனதிற்குள் அர்ச்சித்தவள், “ம்ம்ம். அப்பவும் நான் தான் உன் கிட்ட இதை சொல்லிருக்கேன். பட் நீ எதுவும் சொல்லலை. சோ நமக்குள்ளே என்ன ரிலேஷன்ஷிப்”

“ஓஹோ” என்று குதித்தவன், “அப்படின்னா உன் அத்தை உன் கிட்ட ஏதும் சொல்லலையா அனு”

“என் அத்தை எல்லாம் படு ஷார்ப். பட் அவங்க பெத்த பையன் தான் மக்குப் பையன். அவங்க அப்பவே வந்து என் கிட்ட எல்லாத்துக்கும் சமம்தம் சொல்லிட்டாங்க. பட் நீ எனக்கு இன்னும் ஏதும் சொல்லலையே”

“என்ன சொல்லணும் அனு”

“போ டா” என்றவளுக்கு கடுப்பாக இருந்தது.

“நீ புரிஞ்சி தான் இப்படி பேசுறியா, இல்ல புரியாம இப்படி எல்லாம் பேசுறியான்னு எனக்கு புரியவே மாட்டேங்குது”

“என்ன சொல்ற அனு” என்று அப்பாவியாய் கேட்டு அவளை வெறுப்பேற்றினான் கதிர்.

சிறுது நேரம் சிணுங்கியவள், திடீரென்று,

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா

என்னவென்று சொல்லித் தரவா

என்றுப் பாடினாள்.

சிறிது அமைதி காத்தவன்,

“அனு”

“ம்ம்ம்”

“அந்த மூணு வார்த்தைல எனக்குள்ளே இருக்கற அத்தனை உணர்வுகளையும் சொல்லிட முடியுமா அனு”

“ “

“நீ சொன்ன மாதிரி உனக்கு எப்படி என்னை பிடிச்சதுன்னு கூட எனக்கு தெரியலை அனு. யோசிச்சி பார்த்தா எனக்கு அதிசயமா இருக்கு அனு. காலேஜ் சேர்ந்ததுல இருந்து பசங்க எல்லாரும் பொண்ணுங்க, லவ்ன்னு பேசிட்டு இருக்கும் போது எனக்கு மட்டும் அதுல எல்லாம் இண்டரெஸ்ட்டே இருந்தது இல்லை. இதை நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கறதுக்காக உன் கிட்ட சொல்லலை. பட் எனக்கு அப்படி ஒரு எண்ணம் தோனுனதே இல்லை. திடீர்ன்னு பார்த்தா நீ என் லைப்ல இருக்க. யோசிச்சி பார்த்தா இப்படி ஒரு பொண்ணு என் லைப்ல வரர்துக்காக தான் அப்படி எதுவுமே நடக்கலை போல.”

“நீ என் மேல வச்சிருக்கிற அபெக்ஷனைப் பார்த்தா நான் தான் இந்த உலகத்துலையே சந்தோசமான ஆள்ன்னு தோணுது அனு. எந்த நேரமும் மனசுக்குள்ளே அனு அனுன்னு சொல்லிக்கிட்டு இருக்கு. அந்த ஆக்ஸிடென்ட் ஆனப்ப கடைசியா எனக்கு உன் முகம் தான் நியாபகம் இருந்துச்சி. ரொம்ப வலி. மயக்கமா வந்துச்சி. கண்ணையே திறக்க முடியலை. வெளியில யார் யாரோ ஏதேதோ பேசுற சத்தம் எல்லாம் கலவையா தெளிவில்லாம கேட்குது. அப்பவும் உன் நியாபகம் தான். கடவுளே என் அனு கூட என் லைப் புல்லா வாழனும்ன்னு ஆசையா இருக்கு. என் உயிரை காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டேன். உன் கூட லைப் முழுக்க வாழறதுக்காக தான் பிழைச்சி வந்திருக்கேன் அனு.”

“அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல அழுத அழுகை எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. அப்ப எனக்கு என் மேலையே குற்ற உணர்வா இருந்துச்சி தெரியுமா. ஒரு நிமிஷம் ஒழுங்கா கவனிச்சி இருந்திருந்தா இந்த அளவுக்கு ஆகி இருக்குமா, இப்படி எல்லாரையும் கஷ்டப் படுத்திட்டோமேன்னு, அதுவும் உன்னை அழ வச்சிட்டோமேன்னு ஒரே கஷ்டமா போச்சி. அன்னைக்கு முடிவு பண்ணிட்டேன், என்ன ஆனாலும் என் அனுவை லைப்ல நான் அழ விட மாட்டேன்னு”

அவன் பேசிவிட்டு மௌனம் காக்க, அனுவால் ஒரு வார்த்தையும் பேச இயலவில்லை.

சிறிது நேரம் அவள் பேசாமலே இருக்க, கதிர் “அனு” என்றான்.

அவள் உணர்ச்சி வசப்பட்டு இருந்தாள்.

“அப்புறம் கூப்படறேன் கதிர்” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

வள் நார்மலாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகியது.

அவள் திரும்ப அழைப்பாளா என்று மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

அதற்குள் நம்ம சீக்ரெட் ஏஜென்ட்(அதாங்க சந்துரு) கதிர் வெகு நேரமாக மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு அனுவிற்கு செய்தி அனுப்பினான்.

அவளால் அவனுடன் அப்போது பேச இயலும் என்று தோன்றவில்லை.

“தேங்க் யூ கதிர். தேங்க்ஸ் எ லாட்” என்று மெசேஜ் மட்டும் அனுப்பினாள்.

“இது எப்போத்துல இருந்து ஹஸ்பண்ட்க்கு வொய்ப் தேங்க்ஸ் சொல்லலாம்ன்றது எல்லாம்” என்று கதிர் ரிப்ளை செய்தான்.

அனுவிற்கு பரவசமாக இருந்தது.

“போடா” என்று ரிப்ளை அனுப்பினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.