(Reading time: 21 - 41 minutes)

 

ன்று எல்லோரும் கான்டீனில் அமர்ந்துக் கொண்டிருக்க, கவின் மட்டும் அங்கில்லை.

ஜெனியின் கண்கள் அவன் எங்கே என்று அலைப் பாய்ந்துக் கொண்டிருந்தது.

சிறுது நேரத்திற்கு பின் வந்த கவின் தனியாக வரவில்லை. அவனுடன் தீப்தியும் இருந்தாள். எல்லோருக்குமே அது பிடிக்கவில்லை என்றாலும் யாரும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அனு மட்டும் கவினை முறைத்துக் கொண்டிருந்தாள்.

தீப்திக்காக சேரை இழுத்துப் போட்ட கவின், எல்லோரிடமும் “உங்க எல்லாருக்கும் தீப்தியை தெரியும். இத்தனை நாளா யார் கிட்டயும் பேசாம இருந்தா, நீங்க எல்லாரும் அவளை தப்பா கூட நினைச்சிருப்பீங்க. பட் அவ அப்படி எல்லாம் இல்லை. அவ ரொம்ப லோன்லியா பீல் பண்றா. நான் அவ கிட்ட, என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் இனி உனக்கும் ப்ரண்ட்ஸ். உன்னை நாங்க பாத்துக்கறோம்ன்னு சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றான்.

‘எல்லோரும் இவன் என்ன லூசா’ என்ற ரேஞ்சுக்கு எண்ணிக் கொண்டு அமைதியாக இருக்க, அனு மட்டும் கோபத்தில் ஏதோ பேச போக ஆரு அவள் கையை அமுக்கி ஏதும் பேசாதே என்றாள்.

ஜெனி கூட கொஞ்சம் அமைதியாக தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அனு கோபத்தில் எழுந்து சேரை தள்ளிய வேகத்தில் அவளின் கோபம் எல்லோருக்கும் புரிந்தது.

“ஓகே கவின், நாங்க எல்லோருமே தீப்தி கிட்ட ப்ரண்ட்டா இருக்க தான் நினைச்சோம். அவ தான் அப்ப அனுவை இன்சல்ட் பண்ற மாதிரி பேசினா. அதனால தான் நாங்க யாரும் அவ கிட்ட பேசறதில்லை. இப்பவும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றாள் ஆரு.

மற்றவர்கள் எல்லோரும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் நந்துவிற்கு அதெல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை.

அவளும் “எக்ஸ்கியூஸ் மீ” என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

பிறகு தீப்தி எல்லோரிடமும் கை குலுக்கி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அருண் தான் எல்லோரையும் விட அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தீப்தி சென்றவுடன் என்னவென்று எல்லோரும் கேட்க, நான் தான் சொன்னேன்ல, அவ லோன்லியா பீல் பண்றா என்று அதையே தான் கூறினான் கவின்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றது.

“என்னால தாங்க முடியலை” என்று கத்திக் கொண்டிருந்தாள் அனு.

யாராலும் அவளை சமாதானம் செய்ய இயலவில்லை. எல்லோரிடமும் கவின் சொன்னதையே சொல்லி சமாளித்து விட அனுவை மட்டும் அவனால் சமாளிக்க இயலவில்லை.

இந்த இரண்டு நாட்களும் இவர்கள் எங்கிருந்தாலும் தீப்தியும் வந்து ஓட்டிக் கொண்டாள். ஜெனிக்கு வருத்தமாக இருந்த போதிலும் அவள் அதை அவ்வளவாக காட்டிக் கொள்ளவில்லை.

தீப்தியோ எல்லாவற்றையும் அவர்களை வெறுப்பேற்ற செய்வது போல செய்து கொண்டிருந்தாள்.

அன்றும் அது போல தான்.

தீப்தி கவினை காதல் பார்வை பார்த்தாள்.

எல்லோரும் கவினை பார்க்க அவன் அமைதியாக இருந்தான். கொஞ்சம் சிரித்துக் கூட வைத்தான்.

அதை பார்த்த ஜெனியின் கண்களிலோ கண்ணீர்.

ஜெனி அரை நாளிலேயே “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டிருந்தாள்.

“எல்லாரும் எதுக்காக அவளை சகிச்சிட்டு இருக்கீங்க. அவன் சொன்னா நாம செஞ்சே ஆகணுமா? ஜெனியோட நிலைமையை நீங்க யாரும் நினைச்சி கூட பார்க்கலை இல்ல. இத்தனை நாளா ஏதும் சொல்லாதவ கண்ணுல இன்னைக்கு தண்ணி வந்துடுச்சி. இதுக்கு எல்லாம் கவின் மட்டும் இல்ல, நாம கூட தான் ரீசன்”

இதற்கு ஆரு பதில் கூற அனு சிறிது அமைதியானாள்.

ஆரு என்ன சொன்னா? யோசிச்சிட்டே இருங்க. அதை நெக்ஸ்ட் எபிசொட்ல சொல்றேன். (என்னை திட்டக் கூடாது, ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்)

ஹாஸ்டல் மாடியில் அமர்ந்துக் கொண்டு வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் நந்து. அவள் மனதில் ஏதோ இனம் தெரியாத உணர்வு. அந்த உணர்வுகள் ஏனோ அவளை கலவரப் படுத்திக் கொண்டிருந்தது.

என்ன யோசித்தும், தான் எதற்கு பயப்படுகிறோம் என்றே அவளுக்கு தெரியவில்லை.

மொபைலை எடுத்து சந்துருவிற்கு போன் செய்தாள்.

“சொல்லு டா” பாசத்துடன் பேசினான்.

“பிரபு”

“என்னம்மா”

“எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்கு”

“என்னாச்சி டா”

“என்னன்னு எல்லாம் தெரியலை. ஒரு மாதிரி இருக்கு.”

“என்னடா இப்படி சொல்ற. இரு. நான் வந்து உன்னை இங்க கூட்டிட்டு வரேன்”

“இல்ல. ஹாஸ்டல்ல அலோவ் பண்ண மாட்டாங்க.”

“அப்ப ஹாஸ்டல்ல அலோவ் பண்ணா, உனக்கு ஓகே தானே”

பதில் சொல்லவில்லை நந்து.

“நீ போன் வை. நான் திரும்ப கூப்பிடறேன்”

சிறிது நேரத்தில் அவன் அழைத்து “வார்டன் ஓகே சொல்லியாச்சி. நீ கிளம்பு. நான் வரேன்” என்றான்.

“எப்படி பிரபு. அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். நீ கிளம்பு” என்று கட் செய்து விட்டான்.

அதற்குள் அனு அங்கு வந்து “வாங்க மேடம், கிளம்புங்க. வார்டன் ஓகே சொல்லியாச்சி.” என்றாள்.

“எப்படி அனு” என்று கேட்டதற்கு,

“அனு இருக்க பயமேன்” என்று இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

நந்து வந்து கிளம்பி விட்டு அனுவின் அறைக்கு சென்று அனு, ஆரு இருவரிடமும் சொல்லிக் கொள்ள வந்தாள்.

“என்னடா சந்துரு சார் வந்துட்டாரா” என்றாள் ஆரு.

“இல்ல. கிட்ட வந்துட்டாராம். ரெடியான்னு கேட்டாரு. ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்துடுவாரு”

“ம்ம்ம். எங்க அண்ணன் எப்படி கலக்கறாரு. உன் அண்ணனும் இருக்கானே ஒரு தண்டம்” எனவும்,

“ஏய் என்ன நீ என் அண்ணனை ஏன் இப்படி சொல்ற, கொன்னுடுவேன்” என்றாள் நந்து.

நம்ம அனு கூட கொஞ்சம் அலறி தான் விட்டாள்.

ஆரு கலகலத்து சிரிக்க, அனு பேந்த பேந்த முழிக்க,

“எங்க அண்ணனை ஏதும் சொல்லக் கூடாது புரியுதா” என்று சொல்லி விட்டு கிளம்பினாள் நந்து.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.