(Reading time: 19 - 38 minutes)

 

ன். ஜெனி தானே தந்துச்சி”

“டேய். நீ இவ்வளவு ட்யுப் லைட்டா”

அப்போதும் புரியாமல் விழித்தவனை, திரும்ப தலையில் தட்டி விட்டு,

“இன்னொரு சாக்லேட் உனக்கில்லை, உன் பக்கத்துல இருக்கறவங்களுக்கு” என்றாள்.

அருணின் இன்னொரு புறம் அனு தான் இருந்தாள்.

“உனக்கா” என்று கேட்டவன், அவளின் கண்டன பார்வையில் மறுபுறம் இருந்த கவினை பார்த்து பின்பு புரிந்து கொண்டு அவனிடம் கொடுத்தான்.

“உன்னை எல்லாம்” என்று அனு எரிந்து விழுந்தாள்.

“ஏய் யானைக்கும் அடி சரக்கும்மா”

கவின் சிரித்துக் கொண்டான்.

அங்கிருந்த தீப்திக்கும் ஜெனி சாக்லேட் தர, அவளோ “நோ தேங்க்ஸ். எனக்கு சாக்லேட் பிடிக்காது” என்றாள்.

“கொல்லி வாய் பிசாசுக்கு வேற என்ன தான் பிடிக்குமாம்” என்று முணுமுணுத்தாள் அனு.

அவள் அடித்த கமென்ட்டில் அருண் சிரிக்க, தீப்தி எழுந்து சென்று விட்டாள். சென்றவள் இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே நின்று கொண்டாள்.

“ஏன் அனு. அவளை போய் வம்பிழுக்கற” என்றாள் ஆரு.

“ஆரு. ப்ளீஸ் ஸ்டாப் இட். நாம ஏன் அவளை சகிச்சிக்கணும்.”

“எனக்காக” என்றான் கவின்.

“வொய்” காட்டமாக கேட்டாள் அனு.

வார்த்தைகள் பலமாக வருவதை கேட்ட எல்லோரும் சிறிது பயந்து தான் போயினர்.

“அனு. ப்ளீஸ் காம் டவுன் டா.”

“ஏன் ஆரு. நீ சொல்லு. நாம எல்லாரும் ஒரே ஹாஸ்டல்ல தான் இருக்கோம். அதுக்கும் அவ நம்ம நந்துவோட ரூம் மேட். பட் அவ கிட்ட கூட அவ ஒழுங்கா பேச மாட்டா. பட் இங்க காலேஜ் வந்த பிறகு மட்டும், இதோ இந்த ஐயா வந்த பின்னாடி, நம்ம கூட வந்து சேர்ந்துப்பா, நாமளும் வெட்கமே இல்லாம அவ கிட்ட பேசணுமா”

ஆரு பிரச்சனை ஆகாமல் தடுப்பதற்காக ஏதோ பேச போக, இடையிட்ட நந்து “அனு சொல்றது கரெக்ட் தானே ஆரு” என்று அனுவிற்கு சப்போர்ட் செய்தாள்.

எல்லோருமே அவளையே ஒரு கணம் பார்த்தனர்.

பொதுவாக நந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் போவதற்காக தான் பேசுவாள். இப்படி ஆரு சமாதானம் செய்யும் போது அனுவிற்கு அவள் சப்போர்ட் செய்தது யாரும் எதிர்பாராதது.

ஆரு திரும்ப ஏதோ பேச போனவளை கை அமர்த்தி தடுத்து “விடு ஆரு. அவங்க சொல்றதும் சரி தான்” என்றவாறு எழுந்து சென்று விட்டான் கவின்.

வினுடன் சேர்ந்து கொண்டு தீப்தியும் கிளாஸ்ஸிற்கு சென்றாள்.

ஆரு எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.

அவளின் கோபம் புரிந்து, அவளை பின் தொடர்ந்து “என்ன ஆரு. நான் என்ன செஞ்சேன்” என்று பாவமாக கேட்டாள் அனு. (நம்ம அனுவால மட்டும் தான் உடனே கேரக்டர் சேன்ஜ் செய்ய முடியும்)

“இவ்வளவு நேரம் அங்க கத்திட்டு இப்ப ஏன் என் கிட்ட இப்படி பேசற” என்று காட்டமாக கேட்டாள் ஆரு.

“ஆரு அவன் தப்பு செய்யறான். அதை நான் அவனுக்கு சொல்ல கூடாதா. அது தப்பா. இப்ப அதால என்ன ஆச்சி”

“என்ன ஆச்சா. அங்க பார். காலைல வந்ததுல இருந்து சந்தோசமா இருந்தவ முகம் இப்ப எப்படி இருக்கு பார்” என்று ஜெனியை சுட்டி காட்டினாள் அனு.

அப்போது தான் ஜெனியின் முகத்தில் இருந்த வருத்தத்தை கண்டாள் அனு.

“சாரி ஆரு”

இப்போது நந்துவை முறைத்த ஆரு “இதுல நீ வேற, இவ கூட சேர்ந்துக்கிட்டு பேசற. உனக்கு என்ன ஆச்சி. நீ நல்லா தானே இருந்த” என்றாள்.

“நீ சொல்றது சரி தான் ஆரு. கவினை ஏதும் சொல்ல கூடாதுன்றதுக்காக நாம தீப்தியை என்கரேஜ் செய்ய கூடாது இல்ல, அப்படி செஞ்சா அவளை நாமளே ஏத்தி விடற மாதிரி ஆகிடும். அனு சொன்ன மாதிரி அவ ஹாஸ்டல்ல நம்ம கிட்ட பேசறதில்லை. அப்புறம் இங்க மட்டும் என்ன”

எல்லோருக்குமே அது சரியாக தான் பட்டது. யோசித்து ஒரு முடிவு செய்யலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு கிளாஸ்ஸிற்கு சென்றனர். (இப்பவாச்சும் கிளாஸ்க்கு போங்கப்பா)

ல்லோரும் வகுப்பிற்குள் செல்ல, ஜெனியின் முகம் வாடி இருந்ததை கண்ட கவின், அவள் பார்க்கும் படி அவள் கொடுத்த சாக்லேட்டை பிரித்து சாப்பிட்டான்.

ஜெனியின் கண்கள் பிராகாசிக்க, தீப்தியின் கண்களோ அதை கண்டு பொறாமைப் பட்டது.

இருந்தும் கவினுக்கும், அனுவிற்கும் ஏற்பட்ட பிளவு அவளுக்கு மகிச்சியை தான் தந்தது.

இப்படியே ஒவ்வொருத்தரா பிரிக்கறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

இப்போதெல்லாம் அனுவால் கதிரை அவ்வளவாக கல்லூரியில் சந்தித்து பேச முடியவில்லை.

கதிரின் பேட்ச்சிற்கு அவ்வளவு வேலை இருப்பதால் அவனால் கல்லூரியில் அவளிடம் ஏதும் பேச இயலுவதில்லை. எப்போதாவது பார்த்து ஒரு ஹாய் சொல்லுவதோடு சரி. (நம்ம சந்துருவும் அவன் பேட்ச் தானேன்னு நீங்க கேட்கலாம். பட் அவர் சூப்பர் மேன். எந்த வொர்க் இருந்தாலும், அதுக்கு இடைல நம்ம நந்துவை மீட் பண்றது தான் அவரோட பர்ஸ்ட் வொர்க்கா வச்சிருக்கார். சோ அதெல்லாம் நீங்க கேட்க கூடாது.)

அனுவால் இதை எல்லாம் நம்பவே முடியவில்லை. அவள் ஒருவனை இப்படி விழுந்து விழுந்து காதலிப்பால் என்று. எப்படி எப்படி இது நடந்தது என்று ஒரு நாளைக்கு ஒரு முறையாவது யோசிப்பாள்? ஆனால் அதற்கு விடை தான் கிடைக்காது.

அவனை அணுஅணுவாய் காதலித்தாள் அவள்.

நேரில் பார்த்து பேச முடியாத எல்லாவற்றையும் போனில் தான் பேசி தீர்ப்பாள் அவள். அதுவும், கதிர் வார இறுதியில் மட்டும் தான் போனில் பேச வேண்டும் என்று தடை விதித்து விட்டான்.

முதலில் அவன் அப்படி சொன்ன போது அனு ருத்ர தாண்டவம் தான் ஆடினாள்.

“‘உனக்கு என் மேல அவ்வளவு தான் பாசம்” என்று அவனிடம் சண்டையிட்டாள்.

இரண்டு நாட்கள் சண்டையிலே போனது. அவன் சொல்ல வருவதை கேட்காமலேயே ‘எப்படி நீ அப்படி சொல்லலாம்’ என்று அவள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவன் போன் செய்தால் எடுக்காமல் அலச்சாட்டியம் செய்தாள்.

ரண்டு நாட்கள் கழித்து அவன் அவளின் ஹாஸ்டலுக்கு வெளியே வந்து விட்டு, நந்துவிற்கு போன் செய்து அனுவை வெளியே வர சொல்லுமாறு சொல்ல சொன்னான்.

இரண்டு நாட்கள் வீம்பாக பேசாமல் இருந்தவளுக்கும் வருத்தம் தான் அவனோடு பேசாமல். அவன் வெளியே தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்ற ஆவலோடு வெளியே ஓடி வந்தவள் அவனின் முகத்தை பார்த்து திகைத்தாள்.

தூங்காமல் சிவந்த விழிகளோடு கலைத்து போய் இருந்தவனை பார்க்க வருத்தமாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.