(Reading time: 19 - 38 minutes)

 

வனை பார்க்க ஆவலோடு ஓடி வந்த போதும், உடனே எல்லாம் பேசி விடக் கூடாது என்றெல்லாம் எண்ணி வந்தவள், அவன் நிலையை பார்த்து எல்லாம் மறந்தாள்.

வருத்தத்துடன் அவன் முகத்தையே பார்த்தாள்.

“என்னாச்சி” என்றாள்.

அதற்கு அவன் ஏதும் பதில் கூறாமல், “வெளியே போய் பேசலாம்” என்றான்.

“ம்ம்ம். போலாம்” என்றாள் அனு உடனே.

அவளை விசித்திரமாக பார்த்தவன், அவள் உடையை மேலும் கீழும் பார்த்தான்.

ட்ராக் சூட்டோடு, ஷர்ட் அணிந்துக் கொண்டிருந்தவள் அப்படியே கிளம்பலாம் என்று சொல்லவும் அப்படி பார்த்தான் அவன்.

அவன் பார்வையை கண்டவள் பின்பு தான், தான் அணிந்திருந்த உடையை பார்த்தாள்.

“சாரி. ரெண்டு நிமிஷம். இதோ ட்ரெஸ் சேன்ஜ் செஞ்சிட்டு வந்திடறேன்” என்று ஓடிப் போனாள்.

அதே ஓட்டத்தோடு திரும்பி வந்தாள்.

அவளை ரெஸ்டாரண்ட்டிற்கு அழைத்து சென்றான் கதிர்.

அங்கு சென்ற பிறகு, அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அனுவும் அதை கண்டு கொள்ளாத மாதிரி வேறேங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் பிறகும் அவன் பார்வை மாறாது போகவே, அவனை பார்த்து என்னவென்று தலை அசைத்தாள்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டு “நீ தான் சொல்லணும். என்ன” என்றான்.

“என்ன என்ன”

“ஏன் அனு இப்படி செஞ்ச”

“ “

“எனக்கு பதில் சொல்லு”

நான் என்ன செஞ்சேன்”

“என் போன் ஏன் ரெண்டு நாளா அட்டென்ட் செய்யலை”

“நீ ஏன் என்னை வீக் டேஸ்ல எல்லாம் பேச கூடாதுன்னு சொன்ன”

அனு ஒன்றும் பக்குவப்படாத பெண்ணில்லை என்பது அவனுக்கு தெரியும். அப்படி இருந்தும், அவன் செய்த செய்கைக்கு அர்த்தம் கேட்பவளை என்ன செய்வது.

அவளை தீர்க்கமாக பார்த்தவன், “என் அனு என் செய்கை எல்லாத்தையும் புரிஞ்சிப்பான்னு நினைச்சேன்” என்றான்.

அனு தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

“அனு. வீக் என்ட்ல பேசலாம். நான் அல்மோஸ்ட் என் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டேன். எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. பட் நீ படிச்சிட்டு இருக்க. நம்ம லவ் பண்றோங்கரதுக்காக உன்னோட ஸ்டடீஸ் ஸ்பாய்ல் ஆகறதை நான் விரும்பலை. அதான் அப்படி சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு”

எந்த தவறும் இல்லை தான். இதெல்லாம் அவளுக்கும் தெரியும் தான். ஆனால் அவள் இதை எல்லாம் யோசிக்க கூட விரும்பவில்லை. அவன் அவளிடம் பேச வேண்டாம் என்று சொன்னான் என்பதை மட்டுமே அவள் நினைவுப் படுத்திக் கொண்டிருந்தாள். பின்பு கோபம் வராமல் என்ன செய்யும்.

ஒருத்தருக்கு ஒரு விஷயம் புரியாதது வேறு. புரிந்ததை ஏற்றுக் கொள்ள மறுப்பது வேறல்லவா.

“அனு என்னை பார்” என்ற கதிரின் குரலில் கட்டளை தெரிந்தது.

அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“நம்மளை பத்தி உன் அப்பாவுக்கும் தெரியும், என் அம்மாவுக்கும் தெரியும். நமக்கு எந்த பிரச்சனையும் வர போறதில்லை. உன் அப்பா, என் அம்மா ரெண்டு பேரும் இதை ஏத்துக்கிட்டது நம்ம மேல இருக்கற நம்பிக்கை தான் காரணம். அதை நாம காப்பாத்த வேண்டாமா. நம்ம காதல் உன் படிப்பை பாதிக்கரதை உங்க அப்பாவால இல்லை என்னாலையே ஏத்துக்க முடியாது. லைப்ல எப்ப எதுக்கு பர்ஸ்ட் ப்ரிபரன்ஸ் கொடுக்கணுமோ அப்ப அதுக்கு கொடுக்கணும். இப்போதைக்கு உன்னோட பர்ஸ்ட் ப்ரிபரன்ஸ் உன்னோட ஸ்டடீஸ் தான். புரிஞ்சிதா” என்றான்.

அவளுக்கு அது புரியாமல் இல்லை. புரிந்து தான் இருந்தது. ஆனால் அவனுடன் பேசாமல் இருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள தான் இயலவில்லை.

கண்ணீர் சிந்தியவளை “அனு இது ரெஸ்டாரண்ட். பப்ளிக் பிளேஸ். இப்படி நீ அழுதா யார் என்ன நினைப்பாங்க” அதட்டியவன், “கண்ணை தொடை, எந்திரி” என்று அவளை அதட்டி ஒரு பார்க்கிற்கு அழைத்து வந்தான்.

அங்கு அவள் அழுது முடிக்கும் வரை அவளை தன் மேல் சாய்த்து அழ விட்டு அமைதி காத்தவன், பொறுமையாக “என் மேல நம்பிக்கை இல்லையா அனு” என்றான்.

அந்த வார்த்தையை கேட்டவள் விதிர்விதிர்த்து தான் போனாள்.

“என்ன வார்த்தை சொல்லிட்ட”

“இல்ல. உன் கிட்ட பேசாம எனக்கு கூட கஷ்டமா தான் இருக்கு. ஆனா அது வேற, பட் ஏன் இந்த அழுகை.”

“கதிர். என்னால உன் கூட பேசாம இருக்க முடியலை. நீ ஒரு நாள் பேசலைன்னா கூட எனக்கு ரொம்ப ஒரு மாதிரி ஆகிடும்”

அவள் மனதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இருந்தாலும்,

“சொல்லு கதிர். இது தப்பா. இது நேச்சர் தானே”

இதற்கு என்ன பதில் சொல்வான் அவன். இது நேச்சர் தானே.. யார் அப்படி கூறியது? யார் இப்படி எல்லாம் வளர்த்து விட்டது? இது தான் காதல் என்று யார் விளக்கம் கொடுத்தது? இது ஒரு மாயை அல்லவா?

“அப்படி யார் சொன்னது அனு”

“என்ன சொல்ற”

“இல்ல. இது நேச்சர்ன்னு சொல்றியே, அப்படி யார் சொன்னது”

“இல்ல, இப்படி தானே எல்லாருக்கும் இருக்கும்”

“அனு. நீ என்ன மிஸ் பண்றேன்னு சொல்லு. நான் அதை ஒத்துக்கறேன்.  நான் லீவ்ல ஊர்ல இருந்த போது கூட உன்னை பத்தி நினைச்சிட்டே இருந்தேன். பட் அது வேற, பட் உன் கூட ஒரு நாள் பேசலைன்னா கூட ஒரு மாதிரி ஆகிடுவேன்னு சொல்றது என்ன அனு. அப்ப நம்ம காதலே உனக்கு வீக்னஸ் ஆகிடுச்சா?”

அவன் பேச்சுக்களை சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவளால் உள் வாங்க முடிந்தது.

இவ்வளவு நேரம் அவன், அவளின் படிப்பு கெட்டு விடும் என்று சொன்னதை எல்லாம் அவளும் சிந்தித்து தான் இருக்கிறாள். ஆனால் அதெல்லாம் தெரிந்தாலும், அவளால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இப்போது இவன் சொல்வது அதை தானா? தனக்கு இது தவறு என்று புரிந்தும், அதையே செய்வது அவளின் வீக்னஸ் தானே? அவன் சொல்வதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் அனு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.