(Reading time: 20 - 40 minutes)

 

வன் அந்த வீட்டை விட்டு கிளம்பி வந்த கொஞ்ச நாட்களுக்கு பிறகே அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இவனுடன் பேசுவதை தவிர்த்து விட்டிருந்தனர் இந்துவை தவிர.

மாதத்திற்கு இரு முறையாவது அவனுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தாள் அவள். ஆனால் சாதாரண நல விசாரிப்புகளுடனே அவர்கள் பேச்சு நிறைவடைந்து விடும். வேறெதையும் அவளுடன் பகிர்ந்து கொண்டதில்லை விஷ்வா.

அதன் பிறகு ஜனனியுடன் அவன் பழகும் விதம், ஜனனியின் தோழியான இந்துவுக்கு  தெரிய வர அவனுடன்  இந்து பேசுவது மெல்ல குறைந்தது.. அதையும் விஷ்வா உணரத்தான் செய்தான்.

இப்போது ஜனனி அவனை விட்டு விலகியவுடன் சட்டென நெருங்கி வருகிறாள் என்றால் அவளுக்குள்ளே என்ன இருக்கிறது? பகீரென்றது அவனுக்கு. இந்த பைத்தியக்கார பெண்  அவன் மீது ஆசைகளை வளர்த்து வைத்திருக்கிறாளா என்ன?.

கோபத்தில் அவனிடம் என்னென்னமோ பேசிவிட்டேனே. இப்போது இந்துவின் நிலைமை என்னவாகும்? அவளை திரும்ப அழைக்கவும் முடியாது. மூன்று, நான்கு நாட்களுக்கு அவள்  அலுவலகத்துக்கும் போக மாட்டாள். என்ன செய்வது இப்போது?

யோசித்தபடியே அமர்ந்திருந்தான் விஷ்வா.

தே நேரத்தில் பழைய நினைவுகளில் சஞ்சரித்தபடியேதான் அமர்ந்திருந்தான் பரத்.

விஷ்வா அந்த வீட்டை விட்டு சென்ற தினம் அவன் மனதிலாடியது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அவன் அத்தை வடித்த கண்ணீரை அவனால் மறக்க முடியுமா என்ன?

மனம் பற்றி எரிந்தது பரத்துக்கு .என் அத்தையை அழ வைத்த கிராதகன் இவன்.

விஷ்வா வீட்டை விட்டு  சென்ற ஒரு மாதத்திற்கு பிறகு இந்த மண்ணை விட்டு மறைந்தார்  பரத்தின் தந்தை .

விஷ்வாவின் அப்பா மட்டுமே வந்திருந்தார். விஷ்வாவை அழைத்து வரவில்லை அவர். அங்கே அவன் பெயர் தேவை இல்லாமல் அலசப்படுவதை விரும்பவில்லை அவர்.

கதறினார் அத்தை. இப்படி பண்ணிட்டானேடா விஷ்வா என்றார் அவர்.

சரி விடு அத்தை கண்ணீரினூடே அவரை சமாதான படுத்த முயன்றான் பரத். அப்பாவோட காலம் முடிஞ்சு போச்சு. இதுக்கு யாரையும் குத்தம் சொல்ல முடியாது. தீதும் நன்றும் பிறர் தர வாராது கேள்வி பட்டிருக்கியா.?

அவர் மனம் ஆறவில்லை. அவரால் தனது மகனையும், கணவரையும் மன்னிக்கவே முடியவில்லை.

அப்படி என்னடா கண்ணா நான் தப்பா சொல்லிட்டேன்? அவர் திரும்ப திரும்ப அவனிடம் கேட்டுக்கொண்டேதான் இருந்தார்.

இரண்டு வீட்டுக்கும் நடையாய் நடந்து எல்லாரையும் சேர்த்து வைக்க தாத்தா மேற்கொண்ட முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை.

இதையெல்லாம் கூட மன்னித்து விடுவான் பரத். இப்போது இரண்டு வருடங்களுக்கு முன்னால் விஷ்வா செய்த அந்த காரியம், அதனால். அவனுக்கும் அவன் அத்தைக்கும் நேர்ந்த அவமானம். அவர் வடித்த கண்ணீர்.....

உறங்கிக்கொண்டிருந்த இந்து லேசான இருமலுடன் திரும்பி படுக்க சட்டென பழைய நினைவுகளிருந்து கலைந்தான் பரத்.

ஏதோ யோசித்தவன் அவள் கைப்பேசியை எடுத்து அதில் விஷ்வாவின் அழைப்பு வந்ததற்கான அடையாளத்தை அழித்தான்.

மூன்று நாட்கள் கடந்திருந்தன தாத்தா திருச்சியிலிருந்து வந்துவிட்டிருந்தார்

காய்ச்சல் குறைந்து தெளிந்து விட்டிருந்தாள் இந்துஜா. அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.

அவள் அருகில் ஏதோ யோசனையுடன் வந்து நின்ற பரத் மெல்லக்கேட்டான் ‘ஏன்டா செல்லம் ஆபீஸ் கிளம்பறியா? இன்னும் ரெண்டு நாள் லீவ் எடுக்க வேண்டியது தானே.

இல்லண்ணா வேலை இருக்கு என்றாள் அவள்

அப்படியா..... என்றவன் 'உன் கிட்டே ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன் நம்ம அத்தை பையன் விஷ்வா ஞாபகம் இருக்காமா உனக்கு.?'

விஷ்வாவின் பெயரை கேட்டதுமே சட்டென மலர்ந்து போன அவள் முகம் அவனுக்கு பல செய்திகளை சொல்லுவதை போலே இருந்தது..

'அவங்க அப்பா போனதுக்கு அப்புறம் எங்கேயோ வெளிநாடு போயிட்டான்னு கேள்விப்பட்டேன். திரும்ப வந்திட்டானாமா அவன்'?'. மிக சாதரணாமாக கேட்டான் பரத்.

வந்திட்டானே. வந்து ஒரு வாரத்துக்கு மேலே ஆச்சு. அவளையும் அறியாமல் உற்சாகமாக சொன்னாள் இந்து.

உ....னக்கு எப்படி... தெ......ரியும்.? கொஞ்சம் மாற்றத்துடன் ஒலித்த அவன் குரல் அவளை கொஞ்சம் உலுக்கியது.

சட்டென சுதாரித்து சொன்னாள்  ‘பேஸ் புக்லே’ பார்த்தேன். அதிலே பத்து நாளைக்கு  முன்னாடி 'பேக் இன் இந்தியான்னு'  ஸ்டேடஸ் போட்டிருந்தான்.

உண்மையும் அதுதானே. அதை பார்த்து தானே அவன் இந்தியா வந்ததை தெரிந்துக்கொண்டு அவனை அழைத்தாள் அவள்.

ஸோ! ‘பேஸ் புக்லே’ அவன் உனக்கு friendஆ இருக்கான் இல்லையா.? அவன் கண்கள் அவளை துருவ அவள் கண்களில் லேசான பயம் படர்ந்தது

அதை பார்த்ததும் கொஞ்சம் தணிந்து போனது அவன் மனம். எல்லா அண்ணன்கள் நினைப்பது போலவே தான் அவன் மனமும் சொன்னது, ‘என் தங்கைக்கு என்ன தெரியும் பாவம். அவள் ஒரு குழந்தை. எல்லாம் அந்த கடங்காரன் செய்யும் வேலை.

தணிந்த குரலில் கேட்டான் ‘எதிலேடா ஆபீஸ் போறே?

ஸ்கூட்டியிலே....

வேண்டாம்டா என்றான் இனிமே தினமும் நானே உன்னை டிராப் பண்ணிட்டு நானே உன்னை கூட்டிட்டு வரேன். சரியா?

ஏன்ணா திடீர்னு... கொஞ்சம் திகைத்துப்போனவளாய் கேட்டாள். எனக்கு ஈவினிங் வர லேட் ஆகுமே.

ஆகட்டுமே. எனக்கு எந்த அவசரமும் இல்லை நான் வெயிட் பண்ணி கூட்டிட்டு வரேன் சரியா? அவள் கன்னத்தில் தட்டிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்தான் பரத்.

ன்று மாலை ஐந்து  மணிக்கு கல்லூரி முடிந்ததும் தனது வண்டி நிற்கும் இடம் நோக்கி பரத் நடந்தான் பரத்.

அன்று நடந்த அந்த நிகழ்வுக்கு பிறகு அபர்ணாவை  நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்த்துதான் வருகிறான் பரத்.

அப்படியே அவள் எதிரே வந்தாலும் அவள் பார்வையை சந்திக்காமல் வெகு இயல்பாய் விலகி.....

அவன் தன் வண்டிக்கு அருகே வர, அங்கே தனது ஸ்கூட்டியின் அருகே நின்றிருந்தாள் அபர்ணா. அவள் நகர்ந்தால்தான்  இவன் வண்டியை நகர்த்த முடியும் என்ற நிலை.

போச்சுடா!!!!!!!!! என்று நினைத்தவன் கொஞ்சம் தள்ளிகறீங்களா நான் வண்டி எடுக்கணும். என்றான்.

ம்.? என்று நிமிர்ந்தவள் , நகர்ந்து புன்னைகையுடன் அவன் முகத்தை சில நொடிகள் பார்த்தாள்.

உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும் உங்க வீட்டிலே யூஸ் பண்ணாத சிம் கார்ட் நிறைய ஸ்டாக் இருக்கா?

திடுக்கிட்டு நிமிர்ந்தான் பரத்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.