(Reading time: 13 - 25 minutes)

 

ரவு உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் யுதீஷ்ட்ரன்.கண்களின் முன்னே முழுநிலவாய் ஷைரந்தரியின் முகம் பளிச்சிட்டது.சுவாச காற்றை பறித்து விடுவதைப் போல அவள் பார்வை!!!!அன்று அவன் பார்வதியிடம் கூறியதை எண்ணினான். தவறு இழைத்துவிட்டோமோ?என்ற எண்ணம் வந்தது.

பின்,தானா ஒரு பெண்ணை பற்றி இப்படி எல்லாம் யோசிப்பது?என்று எண்ணினான்.

"அடி ராட்ஸஸி!!!என்னடி செய்தாய் என்னை??ஒரு பார்வை தானே பார்த்தாய்?உன் பார்வைக்கு இவ்வளவு பலமா??அசாத்தியமான என்னை அடிமையாக்கியது உன் பார்வையா?"-என்றெல்லாம் சிந்தித்தான்.(லவ் பண்ண ஆரம்பித்தாலே,கண் தெரியாதவன் கூட கலைஞன் தானே!)

யுதீஷ்ட்ரனின் உறக்கத்தை கெடுத்துவிட்டு நிம்மதியாக உறங்கினாள் ஷைரந்தரி.

ஆனால்,இந்த உறக்கம் நிரந்தரமானதா???

அமைதியான அவள் உறக்கத்தை கெடுப்பதற்காக அதிகாரமாய் வந்தது அந்த கனவு.

என்ன அது????

'வானுயர்ந்த தீ ஜீவாலைகள்,கண் முன் ஒருவனின் மரணம்.பழி வாங்குவேன் என்று உரைக்கும் சப்தம்.வேத மந்திர கோஷம்.இறுதியாக ஷைரந்தரி என்ற பெயர் உச்சரிப்பு!பதறி எழுந்தாள் ஷைரந்தரி.அவள்,நெற்றியில் வியர்வை துளிர்த்திருந்தது. சுற்றும்,முற்றும் பார்த்தாள்.ஒருவரும் இல்லை.மெத்தையை விட்டு எழுந்து ஜன்னல் திரைச்சீலையை விலக்கினாள்.இதமான, மனதிற்கு அமைதியை தரும் சில்லென்ற காற்று,அவள் கன்னத்தை வருடியது. இருப்பினும்,மனதில் இனம் புரியாத பயம் இருந்தது. அவள்,அறையில் வைக்கப்பட்டிருந்த அழகிய சிறு,சிவ லிங்கத்தின் அருகில் சென்று....

"என்னாச்சு எனக்கு?ஏன் இந்த ஊருக்கு வந்ததில் இருந்து எல்லாம் தப்பாகவே நடக்குது?எந்த பிரச்சனையாக இருந்தாலும்,அதை சமாளிக்கிற தைரியத்தை கொடு!"என்று வேண்டினாள். அவ்வேண்டுதல்,அவள் சென்று வந்த கோவிலில் உள்ள மகேஷ்வரனின் கர்ப்பகிரகத்தின் முன்னே தொங்கி கொண்டிருந்த மணியை அடித்தது.

மீண்டும்,ஜன்னல் அருகே வந்து நின்றாள் ஷைரந்தரி.இம்முறை, அவளை யாரோ உற்று கவனிப்பதை போன்ற உணர்வு அவளுக்கு எழுந்தது.ஜன்னலின் வெளியே பார்த்தாள்.யாரோ ஒருவர்,நின்று அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.அவள் தலை முதல் கால் வரை கறுப்பு நிற போர்வை போர்த்தி இருந்தார்.அதனால்,அவர் முகம் தெரியவில்லை அவருக்கு!!!!ஷைரந்தரியின் பார்வையில் சற்று பயம் தெரிந்தது.அவள்,ஜன்னல் கதவை சாத்திவிட்டு, திரைச்சீலையை மூடிவிட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டாள்.உறக்கம் வர மறுத்தது.பலத்த போராட்டத்திற்கு பின்,உறங்க தொடங்கினாள்.

றுநாள் காலை...

"என்னண்ணா?ராத்திரி சரியா தூங்கலையா?"-பார்வதி.

"ஆமாம் பாரு!"

"ஏன்?"

"ஷை...தலைவலி!"

"தலைவலியா?"

"ஆமாம்.."

"ஷை...ன்னு ஆரம்பிச்ச?"

"அப்படியா ஆரம்பிச்சேன்?"

"ம்...."

"ஜலதோஷம் பிடிச்சிருக்கு!அதான்...உன் காதுல அப்படி விழுந்திருக்கும்!"

"விழும்...விழும்...இனி உனக்கு ஜலதோஷம் மட்டுமில்லை...எல்லாம் தோஷமும் வரும்!"

"சொல்லிட்டியா?போய் எனக்கு காப்பி கொண்டு வா!"

"நானா?இல்லை வேற யார்கிட்டயாவது கொடுத்து அனுப்பட்டா?"

"போறீயா?"

"ம்..."-ஆனால்,அவள் கூறியப்படியே வேறு ஒருவரிடம் தான் காப்பியை கொடுத்தனுப்பினாள்.அது யார் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

"ஆ...என்னங்க...காப்பி!"-எடுத்து வந்து தந்த ஷைரந்தரியை சிலையை ரசிப்பதைப் போல ஒரு நொடி ரசித்தான் யுதீஷ்ட்ரன்.

"தேங்கஸ்...பாரு...எங்கே?"

"அவங்க அத்தை கூப்பிட்டாங்கன்னு போயிருக்காங்க."-இவள்,கண்களுக்கு நான் தெரிகிறேனா?இப்போதாவது பேச வேண்டும் என்று தோன்றியதே!!!என்று எண்ணிக் கொண்டான் யுதீஷ்ட்ரன்.

"சரி..."-ஷைரந்தரி, அங்கிருந்து சென்றுவிட்டாள்.அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் யுதீஷ்ட்ரன்.

பல விதமான உணர்ச்சி அவன் மனதில் பொங்கியது.இவள் துணை வாழ்க்கை முழுதும் கிடைத்தால்???என்று எண்ணியவன்...பின்,ச்சே... இது என்ன முட்டாள் தனம்??என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

"யா...மூடியிருக்க அந்த இடத்தை திறந்து சுத்தப்படுத்தணும்."-ஷைரந்தரி தாத்தாவிடம் கூறி கொண்டு வந்தார் கோவில் நிர்வாகி.

"என்னங்க சொல்றீங்க???அந்த இடத்தையா?எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியும் தானே!!!அப்பறம் எப்படிங்க சொல்றீங்க?"

"இல்லை ஐயா..."

"வேணாம்...அதைப் பற்றி பேச்சு எடுக்க வேண்டாம்!"

"சரிங்க...அப்போ நான் கிளம்புறேன்.எதுக்கும் கொஞ்சம் யோசிங்க..."

"பார்க்கலாம்..."-அந்த நிர்வாகி சென்றதும், ஷைரந்தரி அவரிடம்,

"தாத்தா....எந்த இடத்தைப் பற்றி பேசிட்டு இருந்த?"

"அது....வந்தும்மா... அப்பறமா சொல்றேன்."

"இப்போவே சொல்லு!"

"இல்லைம்மா..."

"சொல்லு!"

"அன்னிக்கு....சிவகாமி உன்னை போக வேண்டாம்னு சொன்னால, அந்த இடம் தான்!"

"ஏன்?அந்த இடத்தை மட்டும் விட்டுவிட சொல்ற?"-அவருக்கு,இவளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.ஓர கண்ணால் சிவாவை பார்த்தார்.அவன்,ஏதோ புரிந்தவனாய்....

"அ...அம்மூ..கொஞ்சம் வெளியே போகணும் கூட வா!"

"இல்லை..."

"நீ அப்பறமா கதை கேட்டுக்கோ,இப்போ என் கூட வா!"-என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

அனைவருக்கும்'அப்பாடா!' என்றிருந்தது.

"அதை ஏன் அவகிட்ட மறைச்சீங்க?"-கேட்டப்படி உள்ளே நுழைத்தார் நீலக்கண்டச்சாரியார்.

"நீங்களா?"

"ஏன் நான் வர கூடாதா?"

"ஐயோ!அப்படி சொல்லலைங்க....வாங்க உட்காருங்க!"-அவர் வந்தமர்ந்தார்.

"சிவகாமி இவருக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வா!"

"வேண்டாம்...நான் யார் வீட்டுலையும் தண்ணிக் கூட குடிக்க மாட்டேன்.நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.