(Reading time: 13 - 25 minutes)

 

"து வந்துங்க... ஷைரந்தரிக்கிட்ட எதாவது சொன்னா,அவ அந்த இடத்துக்கு போய் தான் தீரணும்னு அடம் பிடிப்பா!"

"அவ அங்கே போய் தானே ஆகணும்."

"என்ன சொல்றீங்க!"

"நான் உன்கிட்ட தனியா பேசணும்!"

"சரிங்க..."-அவர் கண் ஜாடை காட்ட அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

"ஷைரந்தரி பிறப்பு சாதாரணமானது இல்லை....அவ ராசி,நட்சத்திரம் சாதாரணமானதா இருந்தாலும்,அவ ஜென்மம் எடுத்த நேரம் திதி பஞ்சாஷார திதி!ஆயிரத்துல இல்லை...லட்சத்துல இல்லை...கோடியில இல்லை...எப்பேர்ப்பட்ட தவம் பண்ணாலும் அந்த திதியில பிறக்க முடியவே முடியாது!"-கேட்டு கொண்டிருந்தவரின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"ஷைரந்தரி எப்படி பிறந்தா???ஞாபகமிருக்கா?"

".............."-ஞாபகம் இல்லாமல் இல்லை... ஷைரந்தரி அவள் தாய் இறந்து 3 மணி நேரம் கழித்தே பிறந்தாள்.சிசுவாய் இருந்த அவள் இரு கரங்கள் ஏதோ ஒன்றை வணங்குவதைப் போல ஒட்டியே இருந்தன.அவள், முகம் அழுகையையும் வெளிப்படுத்தவில்லை, சிரிப்பையும்       வெளியிடவில்லை.

"அவள் கருவில் இருந்த போது அவள் பிறப்பின் இரகசியத்தை அருள்மொழி கூற அதை நீங்கள் சாபமென்று கூறி இருந்தீங்களே!ஞாபகம் இருக்கிறதா?"

'இந்த மண்ணில் பிறக்க இருக்கும் குழந்தை மனதுயரில் வாட வேண்டிய நிலை வரும்!யாரும் இல்லாத வேளையில் நரக வேதனையை அவள் அனுபவிப்பாள்.இருப்பினும்,வேதனைகள் சூழ்ந்தாலும் தன்னிலை மாறாமல் சத்தியத்தை விதைத்திடும் பவித்ரமாய் இருப்பாள்.'-சிந்தித்து பார்த்தாள் கதி கலங்குகிறது.

"அவன் சொன்னது????"

"முழுக்க நடக்க போகுது!"-மனதில் இடி இடித்தது அவருக்கு.

"ஷைரந்தரி...பிறப்போட ரகசியம் சீக்கிரமே வெளிவரப் போகுது!"-என்ன ரகசியம் அது????அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே,

"நான் வர மாட்டேன் போடா!"-என்றவாறு உள்ளே நுழைந்தாள் ஷைரந்தரி. வந்தவர்களுக்கு தங்களது தாத்தாவும்,மற்றொருவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்து சற்று திகைப்பாக இருந்தது.

"டிஸ்டர்ப் பண்ணிட்டேனா தாத்தா?"

"இல்லைம்மா...என்னாச்சு?"

"சிவா...ஊருக்கு வெளியே போயிட்டு வரலாமான்னு கூப்பிட்டான்."-அவள்,கூறும் போதே,

"வேண்டாம்மா!"-என்று பதறினார்           நீலக்கண்டச்சாரியார். அங்கிருந்த மூவருக்கு அது அதிர்ச்சியே!

"அது...காப்பு கட்டி இருக்குல அதான்."

"ஓ...சரிங்க.நீங்க?"

"என் பேரு நீலக்கண்டன்.உன் தாத்தாக்கு தெரிந்தவன்."

"ஓ...நான் ஷைரந்தரி... இவரோட பேத்தி!"

"தெரியும்மா..."

"எப்படி?"

"உன் தாத்தா தான் சொன்னாரு!"

"சரிங்க...நான் வெளியே இருக்கேன்."-என்று சிவாவை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.அவன்,மனதில் ஏதோ சரியாக படவில்லை.திரும்பி ஒரு முறை நீலக்கண்டரின் மீது ஒரு பார்வையை வீசிவிட்டு தான் சென்றான்.

ருவரும் தோட்டத்திற்கு வந்தனர்....

"போர் அடிக்குது அம்மூ!"

"இது என் டையலாக்..."

"பரவாயில்லை..."

"வேணும்னா அண்ணியை கூப்பிடுறேன்.கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியா?"

"யாரு அவளா?சுத்தம்..."

"அடப்பாவி...அப்போ அந்த ஐடியாவுல தான் இருந்தியா?"

"அது...வந்து...இல்லையே!"

"சமாளிக்காதே!"

"இல்லை...தங்கச்சி மாதிரியா நீ பேசுற?"

"நீ அண்ணன் மாதிரியா நடந்துக்கிற?"

"அம்மா...தாயே!ஆள விடும்மா!"

"நீ சரியில்லை...சீக்கிரமே உன் விஷயத்தை அப்பாக்கிட்ட உடைக்கிறேன்.இரு!"

"சொல்லிக்கோ!"

"ம்....அப்போ அண்ணிக்கிட்ட உடைக்கிறேன்."

"சொல்லி...என்னது?அவக்கிட்டயா?"

"இப்போவே பயமா?நீயா சொல்லலை...நான் சொல்லிடுவேன்!"

"இப்படி எல்லாம் பயமுறுத்த கூடாது!முதல்ல உன் கல்யாணத்தை முடிக்கிறேன் அப்பறம் இதுப்பற்றி பேசிக்கிறேன்!"

"மிஸ்டர்.சிவா...அதுக்கு நீங்க இன்னும் 7 ஜென்மம் காத்திருக்கணும்.நீ காத்திட்டு இருந்தாலும்,அண்ணி இருக்க மாட்டாங்க.... ஏற்கனவே,அவங்களுக்கு வரன் பார்க்கிறதா ஒரு புரளி..."

"நான் பிரம்மச்சாரியாகவே போனாலும் பரவாயில்லை.."

"நீ எப்படியோ போ!ஆனா,நான் யாரையாவது அண்ணின்னு கூப்பிட வேண்டாமா?என்னை யாராவது அத்தைன்னு கூப்பிட வேண்டாமா?"

"ஏ...சின்ன பொண்ணா இருந்துட்டு என்ன கற்பனை இது?அப்படி பார்த்தா... இதையே நான் மாற்றி சொல்வேன்."

"நீ ஏமாத்துற!"

"நீயும் தான்!"-அப்போது, அங்கே அர்ஜீனும், ரேணுகாவும் வந்தனர்.

"என்னண்ணா பிரச்சனை?"-ரேணுகா.

"அம்மூ...நல்லா ஏமாத்துறா!"

"அண்ணா...என் தங்கச்சி அப்படி எல்லாம் பண்ண மாட்டா!"-அர்ஜீன்.

"அப்போ என் அண்ணன் பொய் சொல்றான்னு சொல்றீயா?"-ரேணுகா.

"எனக்கு தெரியாது...என் கட்சி,என் தங்கச்சி தான்!"

"நான் என் அண்ணன் கட்சி!"-இருவருக்கும் சண்டை பிடித்துக் கொண்டது. ஷைரந்தரியும்,சிவாவும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ரகளையில் அங்கே வந்து சேர்ந்தார் மஹாலட்சுமி.

"ஏ...என்னாச்சு?"-மஹாலட்சுமி.-அவர்கள் நடந்தவற்றை கூறினர்.

"சண்டை போட்டீங்களா?"-என்றார் ஷைரந்தரி,சிவாவை பார்த்து.

"ஐயயோ....இல்லையே அத்தை!"-என்று இருவரும் கோரஸாக கூறினார்.

அதைப் பார்த்தவர்களுக்கு,

"அடப்பாவிகளா!" என்றானது.

"அடிப்பாவி...உன்னால தானே!நான் சண்டை போட்டேன்?"-அர்ஜீன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.