(Reading time: 25 - 49 minutes)

 

வன் முகத்தில் வந்து பரவிய உணர்வு, தாய்மைக்கும் மேலான தன்னிலை விளக்கமற்ற ஒரு தூய அன்பு இருக்கிறது என்பதை அவளுக்கு புரிய வைத்தது.

இது என்ன? காதல் என்பதா இது?????

அன்பு அடக்கி ஆளாது,

 அடிமைபடுத்தாது.

காலம் காலமாய் காதல் கொண்டிருந்தாலும் அதை தன் காதல் காரணர் மேல் திணிக்க சித்தம் கொள்ளாதது உண்மை அன்பு. இவன் இவள் மேல் இத்தனை அன்பை இதயத்திற்குள் வைத்து கொண்டு இருந்தாலும் இவளை கட்டாயபடுத்தியதில்லை!!!

 அன்பு வதைக்காது,

 வலி நீக்கும்.

 கொண்டவர்க்கும்

 கொடுப்பவர்க்கும்

 இன்பம் சேர்க்கும்.

சிலுவையில் கூட.

இன்ப ஊற்று இவன்தான் என்பது போல்தான் இன்றுவரை இவன் வாழ்க்கை முறை. இவன் சுணங்கி, துடித்து, துவண்டதாய் சரித்திரமில்லை. அவன் கொண்ட அன்பு அவனை கூட அடிமைபடுத்தவில்லை. ஆனால் அவனது அனைத்து இன்பத்திற்கும் ஆதரவாய் இருந்திருக்கிறது.

அன்பு என்பது விடுதலை.

ஆம், அந்த நொடி அவள் உணர்ந்தது அதுதான் விடுதலை. அவன் முன் அவள் அவளாய் இருக்க விடுதலை. இந்த இன்பம் நிலைக்காதோ? என்ன நினைப்பானோ? ஏற்று கொள்வானா என் செயலை அல்லது எள்ளி நகைப்பானா? என பயபட தேவையற்ற விடுதலை. நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை நா சொல்லும் அனைத்தும் இவனால் நிராகரிக்கபடமாட்டாது, நியாய தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படமாட்டாது.

கண் மூடி ஆழ மூச்சிழுத்து சுகித்தாள். இதயத்துள் நறுமணம்.

“என்ன லயு?” புன்னகையுடன் ரசிப்பாய் கேட்டவன், இருக்கையை நோக்கி திரும்பி நடந்தான். அவன் பின்னுருவில் பரவியது பெண்ணவளின் பார்வை. விலகிச்செல்கிறான் அவன்.

அன்பு

அது பிரிவை

விரும்பாது.

ஆனாலும் பிரிவின்கால்

பெருந்துன்பம் கொள்ளாது

நம்பிக்கையில் மகிழ்ந்திருக்கும்.

ஏற்ற நேரத்தில்

ஏந்திழை என்னிடம்

தீவிரமாய் திரும்பி வருவான்.

சேர்த்துக்கொள்வான்.

சரீர தூரங்கள்

ஆன்ம ஐக்கியங்கள்

அடி மனதில்

அசையாத சமாதானம்.

ஆம்! அன்பு சமாதனம்.

அடி ஆழ்ந்த நடுக் கடலில் சுனாமி வந்தாலும் சுவடு தெரியாதே! ஆழ்ந்த அன்பிலும் அப்படித்தான். ஆழம் குறைய கரை தட்டும், அலை ஆடும்.

அவன் பின்னால் நடந்தாள். மேஜையில் இவர்களது நிச்சய நிகழ்வின் பட பதிவு. பத்திரமாய் சட்டமிடபட்டு, சாய்வாக நின்றது. அதை கண்ட அவன் கண்களில் ஒரு மலர்ச்சி, சிறு சீராட்டு.

அனைத்திற்கும் மேலாய்

அன்புகொள்ள இருவர் வேண்டும்

காதலாகிய களங்கமற்ற அன்பில்

அந்த அடுத்தவர்

தன்னவராய் வேண்டும்.

திருமணத்தில் மாத்திரம் சாத்தியமிது.

ஆக இவனுக்கு நான் அவனுடையவளாக மட்டுமே தெரிகின்றேன். அத்தனை நிச்சயம். இவள் இதயம் அவனதுதான் என்பதாய். எங்கிருந்து கண்டு கொண்டான்,  இவள் இப்படி இந்நாளில் இவனிடம் இதயப்படுவாள் என்பதாய். ஆனால் அவன் அறிந்திருந்ததும் இவள் அறியாதிருந்ததும் நடந்துவிட்டதே!

ஒ இது தான் காதலா?

இவளுக்கும்

இவன்தான்

தானே ஆகிவிட்ட

தன்னவன் என

புரிந்து விட்டதே!

டி வயிற்றில் அடித்து பறக்கும் பட்டாம் பூச்சி இல்லை, உள்மனதில் ஓட்ட பந்தயம் இல்லை. சடுகுடு, சதிராட்டம், பயம், படபடப்பு, கிளர்ச்சி, கவர்ச்சி, கிலேசம், உல்லாசம் இவை எதுவும் கொஞ்சமும் இல்லை.

இருந்ததெல்லாம் அமைதி, பயமின்மை, பாதுகாப்பு, சமாதானம், நாளை குறித்த நன்நம்பிக்கை, நிர்சலனம், நிறைவு, விடுதலை. இதுதான் திருமணம் எனும் காதல்.

இவளை திரும்பி பார்த்தான். அவன் கண்களில் தன் பார்வையை கரைத்தாள். இவன் அழகனா, அறிவானவனவனா, சாதுர்யத்தில் சதுரங்க சக்கரவர்த்தியா, திறைமைகளின் சிகரமா, விளையாட்டில் வெற்றிகொடி கட்டுபவனா? எதுவும் தெரியாது அவளுக்கு.

ஆனால் தெரிந்தது ஒன்று. இவரகள் இருவரும் இணைக்க பட்டிருப்பது இறை தரும் இனிய இல்லறத்திற்காக. பிணைக்கப்பட்டிருப்பதோ அன்பாகிய கடவுளின் கை செய் காதலால். வெண் வெளிச்சமாய் மலர்ந்தது ஒரு ஒளி உள்மனதினுள். ‘ம் இது தான் என் சித்தம்’ இறைவனின் சத்தம் மெல்லியதாய் கேட்டது மென் மனதின் அடிவாரத்தில்.  

இதுவரை ஒரு தலையாய் இவள் கொண்டிருந்ததென்ன? ஆரணியின் ஜெபம் ஞாபகம் வந்தது. தேவையற்ற ஒரு உணர்ச்சி பிடிப்பு, எமோஷனல் பாண்ட். ‘இது வரை’ என எண்ணம் வந்ததிலிருந்தே அது இப்பொழுது இல்லை என அர்த்தபடுகிறதே. கட்டியிருந்த உணர்வு சங்கிலி அறுந்து விட்டதால் அதிலும் விடுதலை வகையறியபடுகிறதே.

இத்தனை நேரம் இவள் அன்புக்கு கண்ட அத்தனை இலக்கணத்திற்கும் பொருந்தாமல், இவளை அடிமையாக்கி வதைத்த, பிரிவாக்கி பெருந்துன்பம் தந்து தனியறையில் தனியாய் தள்ளிய அடிப்படை அஸ்திவாரமற்ற அது அன்பா?

“லயூ?” கேள்வியாய் அழைத்தான்.

கண்ட உண்மையை காதலுடன் சொல்ல ஒரு மனம் முந்த அடுத்த மனம் அறிவுறித்தியது.

அன்பு பொறுமையானது.

அவன் பொறுத்திருந்திருக்கிறான் இரு வருடமாய். உயரத்திலிருக்கும் உன்னதமானவரிடமிருந்து வந்த உண்மை அன்பு அவனை வதைக்கவில்லை. இவளும் பொறுத்திருப்பாள் இரு மாதங்களாவது. தந்தை குறித்த திருமணநாள் வரட்டும். அப்போது சொல்லிக்கொள்ளலாம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.