(Reading time: 25 - 49 minutes)

 

மௌனமொழி, மலை காற்று, மருத சாரல் எல்லம் சூப்பர்! ஆனால் அப்படியே முதல்ல வீசுன புயல் காத்துக்கும் பெரு வெள்ளத்துக்கும் காரணம் சொல்லிடீங்கன்னா, ஏதோ எங்களால முடிஞ்ச நிவாரணம் செய்வோம்ல.....” அவன் கேள்வியில்

தரை தொட்டாள் நிரல்யா. அவன் அருகில் சென்று நின்று தலை உயர்த்தி, அவன் கண்களை பார்த்தபடி கேட்டாள்.

“ஏன்னு கேட்க்காம எனக்கு நீங்க ஒரு உதவி செய்யனும்......”

“சொல்லுடா”

அந்த ஜெஷுரனோட உள்ள எல்லா காண்டாக்ஸையும் கட் பண்ணனும்........நம்ம வீட்டுக்கு இனி அவன் வரகூடாது.......

இவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அனுமதியின்றி அவசரமாக கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அந்த ஜெஷுரன்.

மூவரும் ஸ்தம்பிக்க, “எ..என் லஅப்டாப் இங்க....... நீங்க இங்க...... சாரி , உங்க பெர்சனல் டைமில் தெரியாம வந்துட்டேன்.....” அவன் திரும்ப எத்தனித்தான்.

‘பெர்சனல் டைம்’ கொதித்துப்போனாள் நிரல்யா.  அவளையும் ரக்க்ஷத்தையும் ஆபாசமாய் அவன் இணைத்து பேசுகிறானே!  

“உன் தப்ப எங்க மேல போடுறியா நீ...........” கொந்தளித்தாள்.

“நி...மேம்....நான் எதையும் தப்பா....”

அவனை பேசவிடவில்லை பெண். “ரக்க்ஷத் இவனை இப்படியே வெளிய போக சொல்லுங்க......” இரைந்தாள்.

“நிரல் ப்ளீஸ் ........ உனக்கு ஜெஷுர்ட்ட என்ன ப்ரச்சனை......அவன்ட்ட பேசு.......அவன் சொல்ற பதில் உனக்கு திருப்தியா இல்லைனா நீ சொல்றதை நான் செய்றேன்டா.....” என்றபடி அறை வாசலை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான் ரக்க்ஷத்.

இருகரத்தாலும் அவனை தோளோடு பிடித்துக்கொண்டால் நிரல்யா, “இவனோட .....ரூம்ல....தனியாவா.....” நடுங்கினாள்.

அவ்வளவுதான். நொடியில் முகம் மாறினான் அவளது அவன். கடினம் கண்டது முகம். பற்றியிருந்த இவள் கரம் பற்றியது மறு கரம். ஆறுதலையும், உனக்கு நான் உடன் பங்காளன் உன் கொடுஞ்ச் சூழல்களில் என்ற அறிவிப்பையும் அது தந்தது.

அவன் பார்வை ஜெஷுரன் மேல் நிலைத்திருக்க நிரல் என விளித்து இவளிடம் பேசினான். “நிரல்... அடிப்படை காரணமில்லாம இப்படி ஒரு குற்றசாட்டை நீ அடுத்தவங்க மேல அதுவும் ஜெஷுர் மேல கொண்டு வரமாட்டேன்னு எனக்கு தெரியும், ஜெஷுர் கூட உள்ள நட்ப்பை இந்த நிமிஷம் முறிக்கிறேன், பிஸினஸ் பிரேக் அப் முறைப்படி நடக்கும்” இருவருக்குமாய் அறிவித்தான்.

“ரக்க்ஷத் நீ அநியாயத்துக்கு அவசரபடுற....” எச்சரிக்கை, மிரட்டல் எல்லாமுமாய் தெரிந்தது ஜெஷுரனின் வார்த்தைகள்.

“உன் ஒய்ஃப் யாரையாவது உன்ட்ட இப்படி சொன்னா நீ என்ன செய்வ?.........”

அருகிலிருந்த தன் லஅப்டாப்பை எடுத்துக்கொண்டு திரும்பி பாராமல் போய்விட்டான் அந்த அகன் ஜெஷுரன்.

அதன் பின்புதான் மூச்சு வந்தது நிரல்யாவிற்கு. நிமிர்ந்து ரக்க்ஷத்தை பார்த்தாள். இரு உள்ளங்கைகளாலும் அழுந்த முகத்தை மூடியபடி நின்றிருந்தான் அவன். இவள் பார்வை உணர்ந்தோ என்னவோ கைகள் விலக்கி இவளை பார்த்தான் “எப்படி இப்படி ஏமாந்தேன்னு எனக்கு புரியலயே லயாமா...”

அவன் உள்ளே குற்ற உணர்ச்சியோடும், குறை சொல்லும் மனதோடும் குமுறுவது புரிந்தது.

“இவன போய் நம்ம ஆருவுக்குன்னு.......சே! நெஞ்சில ஆணி அடிச்ச மாதிரி வலிக்குது.” அவன் கண்களில் ரத்த ஓட்டம் தாறுமாறாயிருப்பது அதன் நிற மாற்றத்தில் புரிந்தது.

‘இதுக்கே இப்படின்னா....உண்மை தெரிந்தால்??????’ அறுவை சிகிச்சை அறைக்குள் செல்லும் தன் மகவை பார்க்கும் தாயின் தவித்த பார்வை வந்தமர்ந்தது நிரல்யாவின் கண்களில்.

“முடிஞ்சதை நினைச்சு வருத்தபட்டு என்ன பிரயோஜனம்பா?” என்றவளை அரை நொடி தீவிரமாக பார்த்தவன்,

“கரெக்ட்” என்றதோடு அந்த பேச்சை முடித்துவிட்டான்.

அன்று அவளை அவள் வீட்டில் ரக்க்ஷத்தான் கொண்டு வந்துவிட்டான்.

 அவனை வழி அனுப்பி விட்டு தன் அறைக்கு செல்ல மாடியேறினாள் நிரல்யா. இவள் அறைக்குள் நுழைந்து லைட் ஸ்விட்சை ஆன் செய்தவள் நெற்றியின் வலப்புறம் வந்தமர்ந்தது சைலன்ஸர் பொருத்திய பிஸ்டல். மீண்டுமாய் அணைந்தது மின்விளக்கு.

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.