(Reading time: 9 - 18 minutes)

06. ஷைரந்தரி - சகி

காலங்கள் மனிதனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும்.ஆம்...முகம் பார்க்கும் கண்ணாடி தான்.

மனிதனின் வயது வரம்பிற்கு ஏற்றது போல எப்படி கண்ணாடி முகத்தை பிரதிப்பலிக்கின்றதோ!!!காலமும் அவனது பாவ,புண்ணியங்களை அழகாய் பிரதிப்பலிக்கின்றது

அதுவும்,பொய் உரைப்பது இல்லை அல்லவா?ஆனால்,இக்கண்ணாடியில் முகம் பார்ப்பவர்,நிச்சயம் தன்னை கடந்தவர் ஆவார்.ஏனெனில்,அவருக்குமட்டுமே அது வழி காட்டும் விழியாகவும் தெரிகிறது.

பாஞ்சாலபுரத்தில் திருவிழா தொடங்க இன்னும் ஒன்றரை மாத காலமே மீதம் உள்ளது. அந்நிலையில்...

shairanthari

"முடியாதுடா!இப்போ எப்படி வர முடியும்?"-சிவா.

".................."

"ட்ரை டூ அன்டர்ஸ்டான்ட் மேன்."

".............."-அவன்,முகத்தில் ஒரு வித வெறுப்பு தெரிந்தது.அதை கவனித்த ஷைரந்தரி,

"என்னாச்சு?"என்றாள்.

"ராம் போன் பண்ணான். மீட்டிங்காம் கிளம்பி வர சொல்றான்."

"போயிட்டு வா!"

"போனா, ஒரு மாசத்துக்கு வர முடியாது.அந்த டீம் லீடர் சரியானவன்.புராஜெக்ட்டை ஆரம்பிச்சிட்டு போக சொல்வான்."

"பண்ணு!"

"டேய்!உன்னைவிட்டு எப்படிடா போகறது?"

"ஏன் இருக்க முடியாதோ?"

"சத்தியமா முடியாது...."

"அப்படி இருக்க முடியாது சிவா!"

"ஏன்?"

"யோசித்துப் பார்...ஒரு வேளை எனக்கு எதாவது ஆயிடுச்சின்னா?"-அவன்,அவள் வாயை பொத்தினான்.

"நீ உன் அண்ணனோட கோபத்தை        பார்த்ததில்லையே! இனி...இப்படி பேசுன,நானே கொன்னுடுவேன்."

"நான் சும்மா     விளையாட்டுக்கு தான் சொன்னேன்."

"நான் சீரியஸா தான் எடுத்துப்பேன்."

"போ!"-அவள்,எழுந்து போய் பால்கனியில் நின்றாள்.

சிறிது நொடி கடந்தப்பின், சிவா அவளருகே வந்து,

"கோபமாடா?"-என்று அவள் தலையை வருடி தந்தான்.

"இங்கே யாரும் சமாதானம் பண்ண வான்னு கூப்பிடலை."

"நீ அப்படி பேசவே தானே நான் கோபப்பட்டேன்."

"............."

"நான் வேணும்னா தோப்புக்கரணம் போடட்டா?"-அவள்,மேலும் கீழும் அவனை பார்த்தாள்.

"வேணாம்...உன் மானம் போயிடும்.போனா, போகட்டும் நான் உன்னை மன்னிச்சிட்டேன்."

"நன்றி இளவரசி!"

அன்று மாலை...

சிவா ஊருக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தான்.

"சிவா!"

"சொல்லுங்க அத்தை."

"அவசியம் நீ போய் தான் ஆகணுமா?"

"ஆமாம்...வேற வழியே இல்லை."

"போடா...வந்த உடனே கிளம்புற?"

"என்ன பண்றது அத்தை?திருவிழாக்கு பத்து நாள் முன்னாடியே வந்துடுறேன்."

"என்னமோ பண்ணு!"

"கோவிச்சிக்காதீங்க."

"போடா!இரு.... அண்ணாவுக்கு லட்டு பிடிக்கும்னு பண்ணி இருக்கேன்.எடுத்துட்டு போய் கொடுத்துடு!"

"கடைசியில என்னை பார்சல் சர்வீஸ் ஆக்கிட்டீங்களா?"

"சும்மா இருடா!"-என்று அவர் பலகாரத்தை எடுத்து வர சென்றார்.ஆனால்,அதை எடுத்து வந்து தந்தது பார்வதி.

வனிக்காமல்,முதலில் அதை வாங்க முனைந்தவன்.பின், அவள் கொடுக்கும் போது ஏற்பட்ட வளையல்களின் சலசலப்பை வைத்து அவள் கரத்தை பார்த்தான்.பின், மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்.அவள்,முகத்தில் ஒரு வித சோகம் தெரிந்தது.

அவன் முகத்தை பார்க்காமல்,பார்வையை மண்ணில் பதித்தவாறு,

"அம்மா...கொடுக்க சொன்னாங்க."என்றாள். என்றும் இல்லாமல் அவள் யாரிடமோ பேசுவது போல பேசியது அவனுக்கு சற்று திகைப்பை அளித்தது!!!

அவன்,அதை வாங்காமல் அவளை பார்த்தப்படி மௌனமாய் நின்றான்.

அவள்,சற்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

"என் மேல எதாவது கோபமா?"

"இல்லைங்க....அதெல்லாம் இல்லை."

"பொய் சொல்லாதே!"-அவன்,முதன் முறையாக அவளை உரிமையோடு அழைத்தான்.

"இல்லை.."-என்றாள் தலை குனிந்தவாறு!அவன்,அவள் முகத்தை தன் இரு கைகளால் உயர்த்தினான்.

முதன் முதலில் பட்ட வேற்று ஆண்மகனின் ஸ்பரிசம் அவளை சிலிர்க்க வைத்தது.இருப்பினும், அவனது செய்கை அவளுக்கு அதிர்ச்சியை தந்தது.

"உண்மையை சொல்லு!"-அவள்,சற்று மௌனம் சாதித்துவிட்டு,

"நீங்க மறுபடியும் அமெரிக்கா போக போறீங்களா?"-புரிந்துவிட்டது அவனுக்கு!அவளுக்கு அவன் செல்வதில் விருப்பமில்லை.

ஒரு இள நகையை வெளியிட்டான் அவன்.

"கொஞ்சம் வேலை இருக்கு!போயிட்டு வந்திடுறேன். சீக்கிரமே!"

"நிஜமா?"

"நிஜமா!"

"ம்...."

"இதுக்கு தான் கோபமா?"

"இல்லைன்னு சொன்னா, அவங்களை விட்டுவிடவா போற?"-என்றப்படி உள்ளே நுழைந்தாள் ஷைரந்தரி.

வளது,திடீர் விஜயத்தை எதிர்ப்பார்க்காதவர்கள் சட்டென விலகினர்.

"டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?"

"அம்மூ...நீ எப்போ வந்த?"

"அவங்க ஸ்வீட் பாக்ஸ் தரும் போதே வந்துட்டேன்."-அவன்,ஒரு மாதிரி அசடு வழிந்தான்.

"ஆங்...சார் மனசுல இருக்கிறதை,வெளியே சொல்ல மாட்டாராம்?ஆனா,ரொமன்ஸ் மட்டும் பண்ணுவாராம்!"-பார்வதி,புரியாமல் விழித்தாள்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.