(Reading time: 9 - 18 minutes)

 

"ம்மூ...சும்மா இரு!"

"உண்மைகள் சில நேரம் கசக்க தான் செய்யும் பிரதர்."-என்று கூறிவிட்டு பார்வதியிடம்,

"அது...என்னன்னா?"-அவள் சொல்ல வருவதற்குள் அவள் வாயை பொத்தினான் சிவா.

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை...நீ கிளம்பு!"-அதற்குள் ஷைரந்தரி அவன் கைகளை தட்டிவிட்டு,

"சிவா....உங்களை!"-மறுபடியும் வாயை பொத்தினான்.

"விடுடா!"-சிறிது நேரம் மூச்சு வாங்கிக் கொண்டு,

"சிவா...உங்களை லவ் பண்றான் அண்ணி!"-என்று உடைத்துவிட்டாள்.சொல்ல மாட்டாள் என்று நம்பி கையை எடுத்தவனுக்கு அதிர்ச்சி தான்.

"நீங்க என்ன சொல்றீங்க?"-பார்வதிக்கு ஒரு புறம் மகிழ்ச்சி,மற்றொரு புறம் திகைப்பு.

"பதில் சொன்னீங்கன்னா... பயபுள்ள நிம்மதியா அமெரிக்கா போயிட்டு வருவான்."-அவள், நாணத்தால் தலை சாய்ந்தவாறு,அவனை பார்த்தாள்.அதில்,ஏதோ பிடிப்பட்டது போல அவன்,தன் நெஞ்சில் கை வைத்தான்.ஷைரந்தரி, கன்னத்தில் கை வைத்து இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

"அட!ஒரு முடிவுக்கு வாங்கப்பா!"-பார்வதி ஷைரந்தரியை பார்த்து,

"நான் எதுவாக இருந்தாலும்,என் அண்ணன் பேச்சை தான் கேட்பேன் ஷைரு..."என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.

"ன்னய்யா!இப்படி ஆயிடுச்சி?"-சிவாவிற்கு அவள் பதில் அதிர்ச்சி தான்.

"நீ தப்பு பண்ணிட்ட சிவா,நீ அவங்க அண்ணன் பின்னாடி போயிருக்கணும்."

"எது?"

"இல்லை...சம்மதம் வாங்கி இருக்கலாமே!அதான்..."

"ஒண்ணும்  தேவையில்லை...போகட்டும்,அவளா தேடி வருவா!"

"ஹே...பாவம்டா!நீ வேற கோபப்படதே!விடு... அவர்கிட்டயும் அப்ளிக்கேஷன் போட்டு விடுவோம்!"

"தேவையில்லை அம்மூ...அவன் சொல்லி தான் எனக்கு அவ வேணும்னு இல்லை."

"சிவா..."

"நான் கிளம்புறேன்!"-பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.பார்வதி எடுத்து வந்து தந்த ஸ்வீட் பாக்ஸை அப்படியே விட்டுவிட்டு போனான்.

அனைவரிடமும் விடை பெற்றவன்.(யுதீஷ்ட்ரனை தவிர)பார்வதியை கண்டுக் கொள்வதாய் இல்லை.

"சிவா!"-ஷைரந்தரி.

"ம்..."-அவள்,பார்வதியை பார்க்கும் படி சைகை செய்தாள்.

"ப்ச்...விடு!அம்மூ...நான் கிளம்புறேன்!"-அவன்,காரில் ஏறி சென்றுவிட்டான். செல்லும் முன் ஒரு முறையேனும் தன்னை கவனிப்பான் என்று எண்ணிய பார்வதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால்,அவன் கவனம் முழுக்க பார்வதியிடமே இருந்தது.

அனைவரும் உள்ளே சென்ற பின்னர்,பார்வதி மட்டும் வாசலையே பார்த்து கொண்டு நின்றிருந்தார்.

"அண்ணி!"

"............."

"ஸாரி...அண்ணி!என்னால தான் எல்லாம்."

"இல்லைங்க...அதுல்லாம்... ஒண்ணுமில்லை."

"சிவா!சீக்கிரமே சரியாயிடுவான்."

"பார்க்கலாம்...."

"அண்ணி!"

"இல்லைங்க...அப்படி கூப்பிட வேணாம்."

"ஏன்?"

"எந்த முடிவும் தெரியாம கற்பனையை வளர்த்துக்க வேணாம்."

"........."

"நான் என் ரூம்க்கு போறேன்."-பார்வதி அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

அவள்,வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள்,இந்த பிரச்சனைக்கு விரைவிலேயே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

பார்வதி நேராக தன் அறைக்கு சென்று,  மெத்தையில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

மனம் முழுதிலும்,சிவாவே நிறைந்திருந்தான்.

அவனது,செய்கை அவளை வெகுவாக பாதித்து விட்டிருந்தது.

காரில் பயணம் செய்து கொண்டிருந்தவனின் கவனம் முழுவதும் பார்வதியிடமே இருந்தது.

அவளிடத்தில் சற்று கடினமாகவே நடந்து கொண்டோமோ?என்று தோன்றியது...

இருப்பினும்...அவன்,அவன் வழியில் செல்ல தொடங்கினாள்.

தோட்டத்தில் எதையோ சிந்தித்தப்படி     அமர்ந்திருந்தான் யுதீஷ்ட்ரன்.

"யுதீஷ்..."-ஷைரந்தரி.

அவளது,குரலைக் கேட்டு திரும்பினான் யுதீஷ்ட்ரன்.

இவளா?தன்னை அழைப்பது?என்று திகைத்தவன்,என்ன?என்பது போல பார்த்தான்.

"நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்."

"சொல்லு..."

"எப்படி சொல்றதுன்னு தெரியலை.தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க..."

"..........."

"நான் உங்க.."

"என்?"

"உங்க தங்கச்சியை பற்றி பேசணும்!"-அவனுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது.

"என்ன?"

"சிவாவை பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"................"-புரியாததைப் போல விழித்தான்.

"நான் நேரடியாகவே சொல்லிடுறேன்.சிவாவும்,பார்வதியும் காதலிக்கிறாங்க..."

"என்ன?"

"கோபப்படாதீங்க...நான் சொல்றதை கேளுங்க... பார்வதி உங்க முடிவுல தான்,அவங்க சம்மதம் இருக்குன்னு     சொல்லியிருக்காங்க."

"................."

"சிவாவுக்கும்,உங்களுக்கும் என்ன பிரச்சனையோ எனக்கு தெரியாது.ஆனா, உங்க தங்கச்சியோட வாழ்க்கைக்கும்,அவங்க ஆசைக்கும் நீங்க முக்கியத்துவம் தருவீங்கன்னு நினைக்கிறேன்."

"ஏன் முதல்லையே அவ என்கிட்ட சொல்லலை?"

"ஒரு பொண்ணு தன் அண்ணன்கிட்ட  எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இருக்க முடியாதுங்க..."

"ஒரு வேளை எனக்கு இதில் விருப்பம் இல்லைன்னா?"

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.