"நிச்சயமா முடியாது...நான் வந்ததில இருந்து உங்களைப் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்.நிறைய விஷயத்தை கவனிச்சியிருக்கேன்.நீங்க பார்வதி சந்தோஷம் தான் உங்க சந்தோஷம்னு நினைக்கிறீங்க.ஒரு வேளை முடியாதுன்னா உங்க இஷ்டம்."
"நான் பார்வதிக்கிட்ட பேசணும்."
"கண்டிப்பா...ஆனா,நல்ல முடிவை சொல்வீங்கன்னு எதிர்ப்பார்க்கிறேன்."-கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.அவளது, இந்த செய்கையும் அவனது மனதில் அவளை ஆழமாக பதிய வைத்தது.
சிறிது நேரம் கழித்து...
"அண்ணா...அம்மா கூப்பிடுறாங்க!"
"பாரு..."
"என்னண்ணா?"
"இப்படி உட்கார்...உன்கிட்ட கொஞ்சம் பேசணும்."-அவள் அமர்ந்தாள்.
"என்கிட்ட எதாவது மறைச்சிருக்கியாடா?"
".............."-அவள்,மௌனம் சாதித்தாள்.
"சொல்லுடா..."
".............."
"உன் வாழ்க்கையில நான் என்ன முடிவு எடுத்தாலும் ஏத்துப்பியா?"
"ம்...."
"உனக்குன்னு எந்த ஆசையும் இல்லை?"
"உன்னை மீறி இல்லைன்னா."
"அப்பறம் ஏன் சிவா ஊருக்கு கிளம்புனதும்,நீ அழுத?"
"அண்ணா?"
"நான் உன் அண்ணன். எப்பேர்பட்ட உண்மையை மறைச்சிட்ட?"
"..............."
"சிவாவை வேணாம்னு சொன்னா?"
"............"-அவள்,கண்களில் கண்ணீர் திரண்டுவிட்டிருந்தது.யுதீஷ் அவள் கண்களை துடைத்தான்.
"அவனுக்காக அழுகிற அளவுக்கு அவனை பிடிக்குமா?"
"............"
"எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்.உன் மனசை திருட்டுப்பய திருடி எடுத்துட்டான்.இனி,அவனை பிடிச்சா என்ன??பிடிக்கலைன்னா என்ன??"-பார்வதி அதிர்ச்சியாக பார்த்தாள்.
"போடா!அப்பாக்கிட்ட சீக்கிரமே பேசுறேன்."
"அண்ணா?"
"நிஜமாக தான் சொல்றேன்.போ!"-இம்முறை அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
"அழக்கூடாது...போ!ஷைரந்தரிக்கிட்ட ஒரு தேங்க்ஸ் சொல்லிடு!"
"............"
"அவ இல்லைன்னா எனக்கு விஷயம் தெரிந்திருக்காது. உனக்கும் சம்மதம் கிடைத்திருக்காது."-நடந்தவைக்கு காரணம் ஷைரந்தரி என்று புரிந்தது அவளுக்கு..
"சரிண்ணா!"
தனது அறையில் அமர்ந்துக் கொண்டு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் ஷைரந்தரி.திடீரென்று அவள் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
"வாங்க!"-குரல் கொடுத்தாள்.பார்வதி தான் வேறு யாரும் அல்ல!!!
"அண்ணி?வாங்க அண்ணி."
"தேங்க்ஸ் ஷைரு..."
"எதுக்கு?"
"அண்ணாக்கிட்ட பேசி...சம்மதம் வாங்கினதுக்கு!"
"சம்மதித்துவிட்டாரா?என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்... அப்பாடி..."
"ரொம்ப தேங்க்ஸ்..."
"என்ன அண்ணி நீங்க?இதுக்கு போய்?சிவாக்கு ஒரு நல்ல பொண்ணு துணையா கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன்.இதுவும்,என் சுயநலம் தான்."
".............."
"அண்ணி...உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லட்டா?"
"சொல்லுங்க..."
"சிவா சின்ன வயசில இருந்தே எனக்காக தான் வாழ்ந்தான்.அவனுக்குன்னு எதுவும் செய்தது இல்லை.சரியா சொல்லணும்னா...அவனுக்கு அம்மா பாசம் கிடைக்காததுக்கு நான் தான் காரணம்...நீங்க அவன் வாழ்க்கையில ஒரு மனைவியா மட்டுமில்லாம, ஒரு அம்மாவாவும் இருக்கணும்."
"என்னங்க நீங்க...நீங்க என்ன தப்பு பண்ணீங்க?கண்டிப்பா இருக்கேன். கவலைப்படாதீங்க!"
"தேங்க்ஸ் அண்ணி!"
"தேங்க்ஸ்லாம் சொல்லாதீங்க...சொல்ல மறந்துட்டேன்.இன்னும் 2 நாள்ல ஏதோ பெரிய பூஜை நடக்க போகுது.தாத்தா சொல்ல சொன்னார்."
"சரிங்க அண்ணி!"
பூஜையா??இல்லை... பஞ்சாக்சர வேள்வி அது!!!ஷைரந்தரியின் ஜென்ம ரகசியம் உடைப்பட இருக்கும் தேதி அது!!!
பாஞ்சாலபுரமே அதிசயித்து போகும் அதிசயம் நடக்கவிருக்கும் நாள் அது!!!!ஷைரந்தரியின் சுயரூபம் விஸ்வரூபம் எடுக்கும் வேளை அது!!!!
தொடரும்
{kunena_discuss:751}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.