(Reading time: 18 - 36 minutes)

 

ம்மாவை கோபமாக பார்த்தவாறு தள்ளி போய் விட்டாள்.

அம்மா, பெண்ணின் கார சார விவாதங்களை எல்லாம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராமின் தந்தை அவரிடம் வந்து “என்ன விசா, நம்ம பொண்ணு கிட்ட ஏன் இந்த அளவுக்கு கோபம்.” என்று கேட்டார்.

தந்தை தாயிடம் சென்று பேசுவதை கண்ட சுபஸ்ரீக்கு தெரியும், தந்தை தனக்கு பரிந்துக் கொண்டு தான் அம்மாவிடம் பேசுவார் என்று. ஆனால் அதை தன் முன்னாலேயே அம்மாவிடம் வந்து சண்டை போட்டாள் தான் என்னவாம் என்று தான் அவளுக்கு கோபம் வரும். அவள் அதை கேட்டால் அவர் ஏதாவது சொல்லி அழகாக சமாளித்து விடுவார்.

மூர்த்தி அப்படி தான். அவருக்கு சரி என்று பட்டாலும், பிள்ளைகளுக்கு பரிந்துக் கொண்டு அந்த நேரத்திலேயே போய் அதை கேட்க மாட்டார். அவருக்கு மனைவியின் மேல் இருக்கும் நம்பிக்கை ஒரு காரணம், மற்றொன்று, ஒரு வேளை தவறு மனைவியின் மீதே இருந்தால், தான் எடுத்து சொல்லும் பட்சத்தில், மனைவி பிள்ளைகளின் முன் தலை குனிய நேரிடலாம். அவருக்கு அதில் விருப்பம் கிடையாது. அவரின் மனைவி பிள்ளைகளே ஆனாலும், அவர்களின் முன் கூட தலை குனிய கூடாது.

அந்த பாலிஸியின் படி தான் இப்போதும் மகள் போனதுக்கு பின்பு வந்து இதை கேட்கிறார்.

“இல்லைங்க அவ நம்ம வீட்டுக்கு ராஜ குமாரியாவே இருக்கட்டும். ஆனா அதுக்காக எல்லாருக்கும் ராஜ குமாரியா இருக்க முடியுமா. இவ நாத்தனார் யார் கூடவும் ஒத்து போக மாட்டறா. அவங்க ரெண்டு பேரும் வெளிநாட்டுல இருக்காங்க. அதனால எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா, அவங்க இங்க வரும் போதாவது கொஞ்சம் அனுசரணையா இருக்க வேண்டாமா. இவ சரியில்லைங்க. சரி. நாளைக்கு இதையே நம்ம வீட்டுலையும் மருமக வந்த பிறகு செஞ்சா எப்படி, அவளுக்கு உரிமையை குடுக்கற அதே நேரத்துல, அவளோட லிமிட்ஸையும் சொல்லி வைக்கறது தான் நல்லது. என் வளர்ப்பு தான் சரியில்லையோன்னு இப்ப எல்லாம் எனக்கே சந்தேகம் வருது”

அவர் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்ததாலும், மனைவி வெகுவாக வருத்தப் படுவது புரிந்ததாலும், “எல்லாம் சரி ஆகிடும். அவளுக்கே பொண்ணு இவ்வளவு பெரிசா வந்துட்டா. ஆனா, அவ இன்னும் குழந்தையாவே இருக்கா. என்ன செய்யறது. நீயே இப்படி பீல் செஞசா எப்படி. விடு எல்லாம் சரி ஆகிடும்.” என்று சமாதானம் செய்தார்.

இருந்தும் மனைவியின் முகம் சரியாகாததை கண்டவருக்கு ‘ஒரு வேளை பிரச்சனை நாம் நினைப்பதை விட பெரிதோ, இவள் இப்படி சீக்கிரம் பீல் செய்யும் ஆளில்லையே’ என்று எண்ணினார்.

“எல்லாரும் வர நேரம் ஆச்சி பாரும்மா. போ போய் எல்லாத்தையும் கவனி. அப்படியே எனக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லிட்டு போ” என்று அவரின் கவலையை அப்போதைக்கு ஒத்தி போட்டார்.

“உங்களுக்கு வேலை தானே. உங்க பொண்ணு ஏதும் செய்யாம பாத்துக்கோங்க. அவ பொண்ணையே இன்னும் நாலஞசு வருஷத்துல கட்டி கொடுத்துடுவோம் போல. ஆனா இன்னும் இது புத்தி மட்டா இல்ல இருக்கு” என்று புலம்பிக் கொண்டே சென்று விட்டார் அவர்.

முனாவும், தௌலத்தும் மலரை கட்டாயம் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று தேன்மொழிக்கு ஆர்டர் போட்டு விட்டதால், அவளும் ஏற்கனவே மலரிடம் சொல்லி பர்மிஷன் போட சொல்லி விட்டாள்.

தேன்மொழிக்கு வழி தெரியாததால் தேன்மொழி வழியில் ஜமுனாவுடன் இணைந்துக் கொண்டாள். 

ஸ்ரீராம் மட்டும் முன்னமே கிளம்பி வந்து விட, க்ளாஸ் முடிந்து கௌசிக், பிரதாப், சுந்தர், கிருஷ்ணா எல்லோரும் வந்தனர்.

ஸ்ரீராம் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டே தேன்மொழி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

தௌலத் அவரின் மகள் பர்கத்துடன் வந்தார்.

அவர் வந்த உடனே விசாலாட்சியும், சுபாவும் வந்து அவரை வரவேற்றார்.

“அம்மா நாங்களும் தான் வந்திருக்கோம். எங்களை எல்லாம் என்னன்னு கூட கேட்க மாற்றீங்க. பாருங்க. இதுவே தௌலத் அக்கா வந்த உடனே மட்டும் ஓடி வறீங்க” என்றான் கௌசிக்.

அவரும் சிரித்துக் கொண்டே “ஆமா டா. உங்களை எல்லாம் மதிக்க முடியாது. நீங்க எல்லாம் எப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியோட வறீங்களோ அப்ப தான் உங்களுக்கு மரியாதை” என்றார்.

“என்னம்மா இப்படி சொல்றீங்க”

“பின்ன என்னவாம். உங்களுக்கு எல்லாம் என்ன வருஷாவருஷம் வயசு குறைஞ்சிக்கிட்டே போறதா நினைப்பா. இன்னும் கல்யாணம் பண்ணிக்க மாற்றீங்க”

இது எதுவுமே காதில் விழாதவனை போல் நின்று கொண்டிருந்த ஸ்ரீராமை பார்த்தவாறே, “அம்மா நேரா உங்க பையனை பார்த்தே இதை சொல்லலாம் இல்ல. அதுக்கு எதுக்கும்மா இப்படி எங்க எல்லாரையும் கால வாறறீங்க” என்றான் பிரதாப்.

இப்போது அவனை எல்லோரும் பார்க்க, ஸ்ரீராமோ இப்போதும் இதை கண்டு கொள்ளாதவாறு நின்று கொண்டிருந்தான்.

அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட விசாலாட்சி தலையில் அடித்துக் கொண்டு “அவன் கதை இருக்கட்டும். அவன் கேட்காத மாதிரியே நடிப்பான். அவனுக்கும் தான். ஆனா நான் உங்க எல்லாரையும் தான் சொல்றேன். உங்க எல்லாருக்கும் ஒரு வயசு தானே. ஏன் நீங்க எல்லாம் இன்னும் இப்படி கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க”

அவரிடம் எதை சொன்னாலும் அவர் ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தவர்களாக ‘என்ன செய்வது’ என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர் எல்லோரும்.

அதற்குள் யாரோ வர அவர்களை வரவேற்க விசாலாட்சி சென்று விட்டார்.

‘அப்பாடா தப்பித்தோம்’ என்று ஒவ்வொருவரும் மனதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அதைக் கண்ட ஸ்ரீராம் சிரித்துக் கொண்டிருந்தான். எல்லோரும் ஒன்றாக வந்து அவன் கழுத்தைப் பிடிக்காத குறையாக அவனிடம் சண்டையிட்டனர்.

“வெயிட் வெயிட். இப்ப ஏன் என் மேல பாயறீங்க. என்னை எவ்வளவு தாக்கனாங்க. நான் எப்படி கண்டுக்காம தப்பிச்சேன். நீங்க எல்லாம் அப்படி இல்லாம சிங்கத்தோட குகை உள்ள நேரா போய் மாட்டினா, நான் என்ன செய்வேன். நான் வந்து என்ன உங்களை காப்பாத்தவா முடியும். நானும் உள்ள வந்து மாட்டிக்க தான் செய்யனும்” என்று சிரித்தவனை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

எல்லோரும் பேசிக் கொண்டே வெளியில் வந்து நின்றுக் கொண்டிருந்தனர்.

ல்லோரும் பேசியதற்கு ஸ்ரீராம் தலையாட்டிக் கொண்டிருந்தானே தவிர, அவன் நினைவு அங்கில்லை.

‘எங்கே அவள்’

‘ஏன் இன்னும் வரவில்லை’

திரும்ப ஒரு முறை அவள் ஆடையை எண்ணிப் பார்த்தவன் திருப்தி அடைந்தான்.

தேன்மொழி எப்போதும் வளையல் அணிய மாட்டாள். இடது கையில் வாட்ச் மட்டும் தான் கட்டியிருப்பாள்.

திடீரென்று ஸ்ரீராமிற்கு அது நினைவு வந்து விட, அவள் இன்று வளையல் அணிந்து வந்தாளா என்று எண்ணிப் பார்த்தான்.

அவள் என்றுமே வளையல் அணிந்து வந்ததில்லை. இன்று அணிந்து வந்தாளா என்று யோசிப்பதே வீண் என்று எண்ணிக் கொண்டான். இருந்தும் இங்கு வரும் போதாவது வளையல் அணிந்து வர வேண்டும் என்று மானசீகமாக வேண்டிக் கொண்டான்.

அவன் தாயிடம் வளையல் அணியாததற்கு அவன் அக்கா எப்படி திட்டு வாங்கியிருக்கிறாள் என்பதெல்லாம் அவனுக்கு நினைவு வந்த்து.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.