(Reading time: 17 - 34 minutes)

 

வின்சியிடம் பேசிக் கொண்டிருந்த அனு ஆருவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆருவும் அவ்வப்போது அவர்களை பார்த்து விட்டு, பார்க்காததை போல திரும்பிக் கொண்டாள்.

நேராக இவளிடம் வந்தவனை வழியிலேயே பிடித்து வைத்துக் கொண்ட அனுவின் மேல் கோபம் தான் என்றாலும், இவனும் அவளுடனே நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறானே என்று அவன் மேல் தான் இன்னும் அதிகமான கோபம்.

இன்னும் அவள் பொருமையை சோதிக்க வேண்டாம் என்றென்னிய அனு அவனை சைகையால் போகும் படி சொன்னாள்.

தன்னருகில் வந்து நின்றவனை பார்க்காதது போல அவள் வேலையை செய்து கொண்டிருந்தாள் ஆரு.

பொருத்து பார்த்தவன் “ஆரு” என்றழைத்தான்.

அப்போது தான் பார்ப்பவள் போல பார்த்தவள் “என்ன” என்றாள்.

என்னவென்று சொல்வது. அவளிடம் ஆசையாக பேசலாம் என்று வந்தவனிடம் என்ன என்று கேட்டால் என்னவென்று சொல்லுவான்.

அனுவிற்கு தான் இதை எல்லாம் பார்ப்பதற்கு காமெடியாக இருந்தது.

உள்ளுக்குள் அவள் மனம் கூறியது ‘இப்படி நீ எல்லோரையும் ஆட்டி வைக்கிறாய் மகளே. அங்கே உன்னையும் ஆட்டி வைக்க ஒருவன் இருக்கிறான்’ என்று.

உண்மை தான் என்று ஒத்துக் கொண்டவள், அங்கு ஆரு என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆரம்பித்தாள்.

அவளருகே ஏதோ ஸ்டூடெண்ட் போல பார்த்துக் கொண்டிருந்த வின்சியை என்ன தான் செய்வது என்று தோன்றியது அனுவிற்கு.

ஆனால் இது அவனின் குணம் அல்ல. அவன் வீட்டில் செய்யும் அட்டூழியங்களை அவள் பார்த்து தானே இருக்கிறாள். ஏன் இதே ஆருவும் தானே எல்லாம் அறிவாள்.

வீட்டில் அவன் செய்யும் விஷயங்களை எல்லாம் லிஸ்ட் போடாத குறையாக அவனின் அம்மா அவர்கள் வீட்டில் வந்து சொல்லுவார்.

அங்கே ஏதோ தனி காட்டு ராஜாவை போல இருந்தவனை, இங்கு மௌன குரலில் அடக்கிக் கொண்டிருந்தாள் ஆரு.

“என்ன படிக்கிற மாதிரியே தெரியலை. ஏன் எல்லாரும் என்னை குறை சொல்லணும்ன்னு என்னமா. அதனால தான் இப்படியா”

அனுவிற்கு புரிந்தது. அவன் தன்னிடம் அவ்வளவு நேரம் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததால் தான் அவனுக்கு இப்படி திட்டு விழுகிறது என்று. ஆனால் அவளால் என்ன செய்ய முடியும். அவளுக்கு ஆருவின் மன நிலைமை புரிந்து விட்டது. ஆனால் அதை நேராக சொன்னால் ஆரு ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆதலால் இப்படி அவளால் முடிந்த எதையாவது செய்து அவளை அவள் மனதை உணர வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

ஆரு அவள் மனதை உணர்ந்தாலோ இல்லையோ வெளியில் எல்லோருக்கும் அவள் மனது புரியும் படியாக இப்படி ஒவ்வொரு செய்கை மூலமாக உணர்த்திக் கொண்டிருந்தாள்.

ஆரு எவ்வளவோ கடுமையாக பேசியும் எதையும் காட்டிக் கொள்ளாமல், அவளிடம் அவன் அம்மா சொல்ல சொன்னது, அவன் அப்பா சொல்ல சொன்னது என சில பொதுவான விஷயங்களை பேசி விட்டு சென்று விட்டான் வின்சி.

அவன் அங்கிருந்து சென்றவுடன், ஆருவின் மனதே அவளை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.

‘என்ன செய்கிறேன் நான். இப்போது எதற்கு நான் அவனை கடிந்து பேசி அனுப்பினேன். அவன் அனுவிடம் பேசிக் கொண்டிருந்ததற்கா, அதனால் நான் ஏன் இப்படி ரியாக்ட் செய்ய வேண்டும். சிறு வயதில் இருந்தே அவன் அனுவிடம் பேசிக் கொண்டு தானே இருக்கிறான். இப்போது மட்டும் என்ன வந்தது எனக்கு. இப்போதெல்லாம் அவன் ஒழுங்காக படிக்கிறான் என்பதும் இத்தனைக்கும் தனக்கு தெரியும். இதெல்லாம் தெரிந்தும் தான் ஏன் இப்படி நடந்து கொண்ட்டேன். என்ன வேண்டும் எனக்கு’

கேள்வி கேட்ட மனதிற்கு விடை அளிக்க தெரியாமல் இருந்தாள் ஆரு.

ந்து ஊரில் இருந்து வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது. இந்த இரண்டு நாட்களாக தீப்தி வலிய வந்து இவர்களிடம் பேசிக் கொண்டே தான் இருக்கிறாள்.

இதற்கு என்ன செய்யலாம் என்று எல்லோரும் கலந்து பேசுவதற்காக அன்று எல்லோரும் கவனமாக கவினையும், தீப்தியையும் கிழட்டி விட்டு விட்டு, ஒரு சீக்ரெட் ஆபரேஷனுக்கு தயாராவதை போல் ஒன்று கூடினார்கள்.

அனு தான் மண்டையை உடைத்துக் கொண்டாள். என்னவாக இருக்கும்? எதற்கு இந்த பேய் நம்மோட ஒட்டிட்டு திரிஞ்சிட்டிருக்கு என்று.

அவளுக்கு அதற்கு விடை தெரியாததால் எல்லோரிடமும் அதையே கேட்டாள்.

யாருக்கும் அதற்கு பதில் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தனர்.

எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்க, அருண் ஜெனியிடம், “அன்னைக்கு கடைசியா கவின் உன் கிட்ட பேசும் போது என்ன சொன்னான்” என்று கேட்டான்.

எல்லோரும் அவனை கேள்வியாக நோக்க, அவன் முதலில் ஜெனி இதற்கு பதில் சொல்லட்டும் என்றான்.

ஜெனியும் கவின் சொன்னது எல்லாவற்றையும் கூறினாள்.

“நாம இத்தனை வருஷத்துக்கு அப்புறம் மேரேஜ் செஞசிக்கலாம் அப்படின்னு ஏதாவது அவன் சொன்னானா” என்று கேட்டான்.

“இல்லை. நம்மளை நாமே முதல்ல ப்ருவ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னான்” என்றாள் ஜெனி.

அருணுக்கு இதை எப்படி எடுத்து கொள்வது என்று புரியவில்லை. கவின் அவனின் உயிர் நண்பன். அவனை போய் எப்படி தவறாக நினைக்க முடியும். இருந்தும் அவன் பேசியதை கேட்டதால் குழப்பம் தான் மிச்சம்.

இதை மற்றவர்களிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இந்த சில நாட்களாக சொல்லவில்லை. ஆனால் இப்போது தீப்தி இப்படி வந்து வந்து பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு சரியாக படவில்லை.

யோசனையில் இருந்த அவனை உலுக்கி, நினைவிற்கு கொண்டு வந்த அனு என்னவென்று கேட்க, இப்போதும் அவனுக்கு சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் தான் மிஞ்சியது.

“நீ ஏதோ போட்டு உன்னையே குழப்பிக்கறேன்னு மட்டும் எனக்கு தெரியுது. நீ குழம்பாத. அதை எங்க கிட்ட சொல்லு” என்றாள் அனு.

அவள் அப்படி கேட்டவுடன், தான் மட்டும் இதில் யோசித்து என்ன செய்வது என்று எண்ணியவன் சொல்ல ஆரம்பித்தான்.

“அன்னைக்கு அனு கோபமா கவின் கிட்ட பேசின உடனே அவனும் எழுந்து போயிட்டான் இல்ல, எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருந்தது. இத்தனை நாள் ஒன்னா இருந்த நம்ம எல்லாரும் ஏதோ பிரியற மாதிரி, இங்க நாம எல்லாரும் இருக்க, கவின் மட்டும் போனது எனக்கு கஷ்டமா இருந்துச்சி, நான் அவனை சமாதானம் செய்யலாம்ன்னு அவனை பார்க்க போனேன்.

அங்க கொஞ்சம் தள்ளி அந்த தீப்தி நின்னுட்டிருந்தா. கவின் அவன் கூட சேர்ந்து போனான். சரி க்ளாஸ்க்கு தானே போறாங்க. அப்புறம் பேசிக்கலாம்ன்னு போனா, அவங்க நேரா க்ளாஸ்க்கு போகாம, லைப்ர்ரி பில்டிங் பக்கமா போனாங்க, அங்க போய் தீப்தி ஏதோ கத்த ஆரம்பிச்சா, பார்த்தியா, உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி பேசறாங்க, அப்படி இப்படின்னு.

கவின் அவ பேசறதை எல்லாம் கேட்டுட்டு பொறுமையா, நீ தான் ஜெனி அவங்க அப்பாவுக்கு யாரையோ போன் பண்ண வைச்சி எங்களை பத்தி பேசி இருக்க, அது உன் வேலை தான்னு எனக்கு இது நல்லா தெரியும். இது தெரிஞ்சும் கூட நான் ஏதும் உன்னை கேட்கலை. சரின்னு விட்டுட்டேன். பட் இப்ப என் ப்ரெண்ட்ஸையும் என் கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னு பார்க்கற. இது சரியில்ல. நான் என்ன நினைக்கிறேன்னா, நீ என் ப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் பழகணும்ன்னு. பட் நீ என்னை அவங்க கூட இருந்து பிரிக்கணும்ன்னு பார்க்கறன்னு சொன்னான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.