(Reading time: 13 - 25 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 01 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" மிது .......ப்ளீஸ் டீ... போனை எடு " என்று வாய்விட்டு மன்றாடிகொண்டே மீண்டும் மீண்டும்  அந்த 'மிது' வை அழைத்தான் ஷக்தி ...

" ச்ச .... எங்க போனாளோ தெரிலையே " என்றவன் கோபத்தில் பைக்கை உதைக்க, அவனின் பொறுமையை சோதிக்காமல் உடனே பைக் ஸ்டார்ட் ஆனது ... திசைகளின்றி பார்வையை நாலாப்பக்கமும் துலாவிய படியே அவளை தேடிக்கொண்டிருந்தான் ஷக்தி ....

நம்ம ஷக்தியை பத்தி சொல்லனும்னா, அவன்தான் நம்ம கதையின் கதாநாயகன். ஹீரோன்னா அரவிந்த் சாமி கலர்ல, வெளிநாட்டுல படிச்சிட்டு வந்து கெத்தாக தலைகோதி , மூச்சு விடாம வசனம் பேசணும்  என்ற இலக்கணத்தையே மாற்றுகின்ற ஒரு கதாப்பாத்திரம்தான் நம்ம ஷக்தி.

Ithanai naalai engirunthai

ஆறடி  உயரத்தில், கார்மேக வண்ணனாய், அழுத்தமான பார்வையுடன் இருப்பவன்,  பார்த்த மாத்திரத்திலேயே பரிட்ச்சைய உணர்வை தருபவன் போல் தோற்றமளிப்பதே நம் கதாநாயகனின் சிறப்பு .

 ( அதைவிட ' இதுதான் ஷக்தி ' அப்படின்னு சொல்ற மாதிரி இன்னொரு குணம் அவனுக்கு இருக்கு .. அது என்னனு நம்ம ஹீரோயின் மிது சொல்வாங்க .. சரி மிது எங்க ? வாங்க பார்ப்போம் )

" என்னாச்சு மிது ? எங்க இருக்க ? எல்லாம் அவளால் தானே ? உனக்குத்தான் அவளை பத்தி தெரியுமே , தெரிஞ்சுமா கோபமா இருக்க ? " இப்படியாய் தனக்குள்ளே பேசிகொண்ட ஷக்திக்கு அப்போதுதான் தேன்நிலாவின் நினைவு வந்தது ... உடனே அவளை செல்போனில் அழைத்தான் ...

" ஹெலோ நிலா மேடம் ? "

" சொல்லுங்க ஷக்தி சார் ..என்ன இந்த நேரத்துல  போன் ? "

" மிது...மிது....."

" ஹேய் சங்குவுக்கு என்னாச்சு ...? "

" அவளை காணோம் .. தேடிகிட்டு இருக்கேன் ..அங்க வந்தாளா ? " .... ஷக்தியின் பதட்டமான குரலுக்கும் அவன் சொன்ன செய்திக்கும் எதிர்மாறாய் அழகாய் புன்னகைத்துகொண்டாள் தேன்நிலா....

" ஹ்ம்ம் மனசுக்குள்ள இவ்வளோ பாசம் ஹீரோ சாருக்கு .... ஆனா காட்டிக்க மாட்டாரு .. இப்போதான் எல்லாம் சரியாச்சுல .. அப்பறம் இந்த பிசாசுகுட்டி எங்க ஓடி போனாள் ? " என்று தனக்குள்ளே வினவியவளை ஷக்தியின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது ..

" பரவாயில்லை நிலா .. நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்க நெனைக்கிறேன் .. நான் போலிஸ் கம்ப்ளைன்ட் தந்துட்டு பேசறேன் "

" ஹெலோ ஹெலோ ஷக்தி சார் ..  உங்க  வைப் பத்தி உங்களுக்கு தெரியாததா ? இந்த நேரத்துல அவ எங்க போக போறா ? வீட்டுல தேடி பார்த்திங்களா ? "

" ம்ம்ம்ம் "

" உங்களுக்குள்ள ஏதும் சண்டையா ? "

".... "

" சாரி உங்க பெர்சனல் விஷயத்துல தலையிட நினைக்கல... பட் உங்க சைலெண்ட் எனக்கு ஆமான்னு சொல்லுதே ... அப்போ கவலையே படாதிங்க , உங்க ஹீரோயின் இங்கதான் வந்துகிட்டு இருப்பா " என்று நிலா நம்பிக்கையாய் பேச அவனோ

" ம்ம் " என்றான் ... நிலா  அவனிடம் ஏதோ சொல்ல எத்தனிக்க புயலென அந்த அறையில் நுழைந்தாள், ஷக்தி 'மிது ' என்றும் நிலா ' சங்கு ' என்றும் பாசமாய் அழைத்த நம் கதாநாயகி சங்கமித்ரா..!

" நான் தான் சொன்னேனே சார் .. உங்க ஆளு இங்க வந்துட்டா "

" ஓ தேங்க்ஸ் ... " என்று அழைப்பை துண்டித்து விட்டான்..... அவ்வளவு நேரம் தவித்து கொண்டிருந்த அவன் மனம் அமைதியானது .. " ராட்சசி, உனக்கு சொல்லிட்டு போறதுக்குத்தான் என்னவாம் ? " என்று வாய்விட்டே கேட்டவன், அதே ஆதங்கத்தில் கோபத்திலும் அவளை அழைத்து வர செல்லாமல் நேராய் தங்கள் வீட்டிற்கு திரும்பினான் ... " எல்லாம் அவளால்தான் .. அவ நம்ம வீட்டுக்கு வரும்போதே நெனச்சேன் .. இப்போ என்ன சொல்லி தொலைச்சாளோ...கண்டுபிடிக்கிறேன்  ? " என்று பொருமியவன் அதே சிந்தனையில் உழன்று சிறிது நேரத்தில்  உறங்கியும் போனான் ...

ஹாஸ்பிட்டலில்,

" ஹாய் தேனு " என்று ஓடி வந்து தேன்நிலாவை கட்டிகொண்டாள் அவளின் ஆருயிர் தோழி சங்கமித்ரா ...

வட்டமுகம், லேசாய் பூசினாற்போல் உடல்வாகு, புன்னகையில் மின்னிடும் விழிகள், அதற்கு போட்டியாய் சிரிக்கும் இதழ்கள், இவை அனைத்தையும் மீறி தாய்மைக்கே உரிய முக லட்சணத்தில் அழகாய் மிளிர்ந்தாள் சங்கமித்ரா....

என்னத்தான் அவள் தன் தோழியை பார்த்தவுடன் ஆசையில் கட்டிக்கொள்ள முயன்றாலும், அவளின் மேடிட்ட வயிறு அணைக்க முடியாமல்   தடுக்க, அவளின் செல்ல " தேனு " வை கட்டிக்கொள்ள தெரியாமல் விழித்தாள் மித்ரா ....

" ஹா ஹா ...சூப்பர் குட்டி சார்ம் ... ஆயிரம் பேரு வந்தாலும் அசராமல் கலாய்க்கும் உங்க அம்மாவையே ஒரு செகண்ட் திருதிருன்னு விழிக்க வெச்சிட்டிங்களே! ஐ எம் சோ ப்ரவுட் ஒப் யு..அப்படியே உங்க அடங்காத அம்மாவுக்கு ரெண்டு கிக் கொடுங்க .. ஒன்னு என் சார்பாக .. இன்னொன்னு உங்க டாடி சார்பாக  " என்ற தேன்நிலா சங்கமித்ராவின் வயிற்றில் கை வைத்து பேச, அவளின் காதை திருகினாள் மித்ரா ...

" லூசு தேனு .. உன்னை போயி கட்டிபிடிக்கனும்னு ஆசைபட்டேன் பாரு .. என்னை சொல்லணும்....... ஆ ...நிஜம்மாவே உதைக்கிறான் டீ ... வெளில வர்றதுக்கு முன்னாடி கூட்டணி சேர்த்து நம்பியார் வேலை பார்க்குறியா நீ ?  "

" நானடி லூசு சங்கு ? நம்பியார் வேலையா ? எல்லாம் என் நேரம் டீ ...  ஆமா யாரை கேட்டு நீ இந்த நேரத்துல ஹாஸ்பிட்டலுக்கு வந்த ? இதென்ன உன் மாமியார் வீடா? "

" வீடா ச்ச ச்ச இது என் செல்ல தேனுவின் கோவிலாச்சே  ! "

" கோவிலா .... ? "

" ஆமா செய்யும் தொழில் தெய்வம்னா உன் ஹாஸ்பிட்டல்தானே கோவில் ? "

" போடி ..மொக்க போடாதே .. நீ என்ன சின்ன குழந்தையா சங்கு ? இன்னும் 2-3 டேஸ்ல உனக்கு வலி வந்திடும் ...நிறைமாத கர்ப்பிணி பெண் மாதிரியா நடந்துக்குற நீ ? ஏதாச்சும் ஆச்சுனா ? பாவம் ஷக்தி இப்போதான் போன் பண்ணாரு தெரியுமா ? "

" நான் வீட்டுல இருந்து கெளம்பி 30 நிமிஷம் ஆகபோகுது .. இப்போதான் ஹீரோ சார் என்னை தேடினாரோ ? " என்று கேலியாய் கேட்டவளை பார்த்து முறைத்தாள் தேன்நிலா...

" எனக்கு கெட்ட கோவம் வந்துடும் சங்கு "

" கோவத்துல நல்ல கோவம் கெட்ட கோவம் இருக்கா தேனு ? "

" அடியே ... உன்னை என்னதான்டி பண்ணுறது ? நான் எவ்வளவு சீரியசா பேசறேன் ? "

" அச்சோடா ... பொதுவா சீரியஸ்னா டாக்டரை பார்க்க வருவாங்க .. இப்போ டாக்டருக்கே சீரியஸ்னா என்ன செய்றது ? " என்று சோகமாய் சங்கமித்ரா கேட்க, அவளுக்கு பதில் சொல்லாமல் கோபமாய் நகர எத்தனித்தாள் தேன்நிலா....

" ஹே தேனு நில்லுடி .... ஒரு புள்ளதாச்சி பொண்ணுகிட்ட இப்படியா கோபப்படுறது?  நீ எனக்கு பிரண்ட் ஆ இல்ல அந்த மணிரத்னம் படம் ஹீரோவுக்கு ப்ரண்டா? " என்று தலை சாய்த்து தோரணையாக தன் தோழியின் கை பிடித்து நிறுத்தி கேட்டாள் மித்ரா ...

நம்ம ஹீரோ ஷக்திக்கு இன்னொரு ட்ரேட்மார்க்  இருக்குன்னு சொன்னேனே.. அது இப்போ நம்ம மித்ரா சொன்னதுதான் ..  இந்த " மணிரத்னம் படம் ஹீரோ " என்று டைட்டல் பெற வெச்ச குணம் ...... சினிமாவாக இருந்தாலும் சரி, நம்ம இயல்பான வாழ்க்கையாக  இருந்தாலும் சரி, பெண்களை கவருகின்ற பெரும்பாலான பசங்க எப்படி இருப்பாங்க ? நல்ல சிரிப்பாங்க, கலகலன்னு பேசுவாங்க, ரசிக்கிற மாதிரி ரீல் விடுவாங்க, செண்டிமெண்ட், காதல், கோபம், ஜொள்ளு, லொள்ளு நு நவரசங்களையும் பொழிவாங்க .... ஆனால், நம்ம ஷக்தி இது அனைத்துக்குமே நேர்மாறானவன் ... இந்த மணிரத்னம் சார் படத்தில் எல்லாம் " ஏன் " , " எதுக்கு " , " எப்படி? " அந்த மாதிரி ஒரு வார்த்தையில் பேசுவாங்களே அந்த மாதிரி ஒரு அமைதியின் சிகரம்தான் ஷக்தி .. அதுக்காக நம்ம ஷக்தி ஒரு சிட்டி ரோபோ நு  சொல்ல கூடாது ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.