(Reading time: 15 - 30 minutes)

 

வனை பார்த்து அவள் பயந்ததின் உண்மையான காரணம் கூட அவளுக்கு புரிந்துவிட்டது. அவனது சாயல். ஏதோ ஒன்று அவனது தாயை நினைவு படுத்துகிறது. அதனால் இவள் பயந்திருக்கிறாள்.

இப்பொழுது தன் கணவன் மீது துளியும் பயமில்லை. இவன் உண்மையின் சொரூபம். அன்பன். இவளுக்கென வந்தவன். இவளது தந்தை விசாரித்தறிந்ததும் இவனைத்தான்.

தன் நிமித்தம் அவன் குழம்பக்கூடாது. தன் அன்பை அவன் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் அவன் அன்னையின் நிமித்தம் அவன் தான் மனம் தேறுதல் அடைய வேண்டும் என நினைத்த தயனி தன் அன்பை, அவன் மீதிருந்த நம்பிக்கையை தன் கையால் வெளிபடுத்தியவள் மௌனமாக மனதில் சுமந்தாள் தன்னவனை.

கடந்தது சில பொழுது. அவன் தூங்கிவிட்டான் என புரிந்தது தயனிக்கு. தூங்கட்டும் விழிக்கும் போது ஆறுதலோடு எழும்புவானாயிருக்கும்.

அப்பொழுதுதான் சூழ்நிலையை கவனித்தாள். அடுத்த இருக்கைகளில் இருப்பவர்கள் இவர்களை குறு குறு என பார்ப்பதும், குசு குசுவென பேசுவதும்......, பிடிக்கவில்லை தயனிக்கு. பார்வையை திருப்பி கொண்டாள்.

பரிமாறிய ஏர் ஹோஸ்டஸின் பார்வையிலும், சிரிப்பிலும் ஏதோ ஒன்று...என்னதிது?

சென்னையை அடைந்தது விமானம். தரையிறங்க போகும் அறிவிப்பை தொடர்ந்து, தன் கணவனை மெல்ல எழுப்பினாள் தயனி. இறங்கிய பின் என்ன செய்யவேண்டுமென அவனுக்குதானே தெரியும்.

மெல்ல எழுந்து அமர்ந்தவனின் கண்களின் சிவப்பு காணாமல் போயிருந்தது. முகத்திலுமே பிரகாசம். ஏதோ ஒருவகை பரவசமும் கூட. அவளது இட கையை தன் வலகையால் பற்றிகொண்டவன் அவளின் புறங்கையில் மென் முத்தம் வார்த்தான்.

“தேங்க்யூடா....தேங்க்யூ சோ மச் ஃபார் லவ்விங் மீ, ட்ரஸ்டிங் மீ, ஃபார் எவ்ரிதிங்க்...”

“லவ்யூ அபிப்பா...” மென்மையாய் மெல்லியதாய் அவன் காதுகள் மட்டும் கேட்கும் வண்ணம் சொன்னாள். தேனாறு பாய்ந்தது இருவருக்குள்ளும்.

தரையிறங்கியதும், விமான நிலையத்திற்கு அவனது காரை அனுப்ப சொன்ன அபிஷேக் தன் பி.ஏவிடம் தன் திருமணத்தை அறிவிக்கும் படியும் சொன்னான்.

நெருங்கிய நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்

சில நிமிடங்களில் அவனது ஃபோன் தொடர்ந்து சிணுங்க வாழ்த்துகளை ஆமோதித்து ஏற்றான். வந்து சொல்றேன் என்பதே விளக்கமாய் இருந்தது. ஆனால் எந்த சூழலிலும் தயனியின் கையை விடவில்லை.

புதுமண தம்பதியர் வீட்டை அடையும்போது வீட்டில் ஒரு சிறு குழு மணமக்களை பூத்தூவி வரவேற்க காத்திருந்தது. வீட்டின் வாசலிலிருந்து உள்ளே வரவேற்பறை மட்டும் ரோஜா இதழ்கள் விரிப்பாக பரப்பபட்டிருந்தது.

வரேவேற்பறையில் ஒரு அழகிய கேக் வெட்டபட இவர்களுக்காக காத்திருந்தது. அதை தம்பதி சகிதமாக வெட்டினர் இருவரும். அனைத்து ஏற்பாட்டிற்காகவும் தன் பி.ஏவிற்கு நன்றி சொன்ன அபிஷேக்

 “ரொம்பவும் டயர்டா இருக்கோம் நைட் டின்னர் வரை எங்களை யாரும் டிஃஸ்டர்ப் செய்யாம பார்த்துகோங்க” என்றுவிட்டு மனைவியுடன் மாடி ஏறினான்.

அபிஷேக்கின் அறையை பார்த்ததும் தயனிக்கு ஆச்சரியம். ஏறத்தாழ 90% தன் வீட்டில் தனக்காக அவள் வடிவமைத்திருந்த அவளது அறை போலவே இருந்தது அது. நொடியில் மனமொட்டி போனது அறையோடும். அவனோடும்.

சில மணி நேரம், முழு பலத்தோடு முதுகு சாய்க்காமல் பயணம் செய்திருந்ததால் மெத்தையில் சென்று குப்புற விழுந்தாள் அவள். முதன்  முறை புழங்கும் தயக்கம் ஏதும் இல்லை. உரிமையுள்ள இடம். அவளது வீடு. அவளது கணவன்.

காய்ந்திருந்த முதுகு காயத்தில் முடிந்தவரை துணி படுவதை தவிர்க்கவென பின்புறம் சற்று கீழிறங்கிய ஸ்பெகெட்டி டாப்ஃஸ் அணிந்து, மேலாக ஒரு சிவப்பு நிற சிறு ஷ்ரக்கை அணிந்திருந்தாள் தன்னை மணமுடித்திருக்கும் மருத்துவனின் ஆலோசனைபடி. அந்த ஷ்ரக்கை கழற்ற உதவினான் அவன் இப்பொழுது. காய்ந்திருந்தாலும் காயம் திறந்திருப்பது நல்லது என்ற ஒரே நோக்கத்துடன்தான்.

காயம் முழுவதுமாய் காய்ந்திருந்தது போன்ற தோற்றம். தையலிட்ட இடத்தை மெல்ல தொட்டான் பரிசோதிக்க. துவண்டாள் தயனி.

திரும்பி முதுகை மெத்தையில் மறைத்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன. செம்மை பரவியிருந்த அவளது வெண்ணெய் முகம் அப்பொழுதுதான் மலர்ந்து கொண்டிருக்கும் தாமரை பூவை ஞாபகபடுத்தியது. முகமெங்கும் வெளியரங்கமாய் மறைந்திருந்தது நாணம்.

“தயூ!...”

இருவர் ஒருவராகும் வைபோகம் இனிதே தொடங்கியது. தயனியை மனைவியாய் அறிந்தான் அவன்.

ஊணுக்கு உவகை தருவது ஓராயிரம் உண்டு உலகத்திலே. பசித்த வயிற்றிற்கு பசிபொழுது கிடைக்கும் பதமான பதார்த்தம், தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் சுகம், இப்படி நீளும் பட்டியலில் இந்த வைபவத்திற்கு எத்தனையாவது இடமோ? ஊடகங்கள் பெரிது படுத்துவதுபோல் உண்மையில் இதில் பெரிதாக ஏதும் இல்லை.

ஆனால் உயிருக்குள், உறவுக்குள் இது ஆற்றும் செயல் இறைவனுக்கு அடுத்தபடி. தன் ஆவி, ஆத்மாவை தம்பதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் தருணம். அதன் பின்விளைவுகள் ஆனந்தம். ஒருமித்த மனம், உள்ளான மனிதனில் பலம், பாதுகாப்பு, நிறைவு, நிர்சலனம் இப்படி தொடரும் இதன் கனிவகைகள். உயிர்கள் ஒருமிக்கும் ஓர் செயல்.

ஆதாமிற்குள் வைத்து உருவாக்கபட்டாள் ஏவாள். மீண்டுமாய் அந்நிலை ஏகும் இரு உயிர் இக்கணம். இது  இறைவனின் திருமண இலக்கணம்.

 திருமணத்திற்குள் காமம் புனிதம்.

சாத்தானின் சதி திட்டங்கள் திருமணத்திற்குள் வராமல் தடுக்கும் முக்கிய தடைசுவர் இது என்கிறது வேதம்.

வன் கண்விழிக்கும் பொழுது அறைமுழுவதும் இருள். மாலையில் தூங்கி விழிக்கும்போது ஏற்படும் உணர்வு அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால் முடிந்தவரை அதை தவிர்த்துவிடுவான்.

ஆனால் இன்று மனமெல்லாம் இனிமை தளும்பியது. அவனது தயனி அவனது கைகளை அரணாக்கி, அவனது மார்பை தன் முகம் தாங்கும் தலையணையாக்கி தூங்கி கொண்டிருந்தாள்.

அடுத்த உயிராக உணரமுடியவில்லை அவளை. தானேதான் அவளும். அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான். இருளில் ஒளிர்ந்த சுவர்கடிகார மணிகரங்கள் அறிவித்த நேரத்தை பார்த்தவன் தனக்குள் மெல்ல சிறித்துக் கொண்டான்.

“தயூ...தயனிமா....” அவளிடம் அசைவே இல்லை.

“தக்காளி சாதம்...., தம் பிரியாணி...., தந்தூரி சிக்கன்...” மெல்ல எழுந்தவள் ‘பே’ என விழித்தாள். ‘இப்படியும் கொஞ்சுவார்களா என்ன?’

“பசிக்குது குட்டி தக்காளி! சாப்பிட்ட பிறகு விட்டதை தொடரலாம்...”

அந்த மென் வெளிச்சத்திலும் அவள் முகம் சிவப்பதை உணரமுடிந்தது அவனால்.

“தூங்கிறதை சொன்னேன்டா” படுக்கையைவிட்டு எழுந்து வந்தான் அவன். அவனது வாலாக அவனை தொடர்ந்தாள் மனைவி.

இரவு உணவிற்காக சாப்பாட்டு மேஜைக்கு வந்தனர் இருவரும். தன் பி.ஏ ராஜீவை அழைத்தான் அபிஷேக்.

“ஒரு டாக்டர் பி.ஏ வச்சிருப்பது நீங்களாகத்தான் இருக்கும்”

மென் புன்னகையுடன் தயனி கூற அதிர்ந்து விழித்தான் அபிஷேக்.

 எப்படி மறந்தான் இதை? எப்படி சொல்லாமல் விட்டான் இவன்? என்ன நினைப்பாள் இவள்? எப்படி ஏற்பாள்? இவ்வளவு பெரிய விஷயம் சொல்ல மறக்குமா? தனக்கே தன்னை நம்ப முடியாதபோது அவள் எப்படி நம்புவாள்?

இத்தனை காலம் திருமணத்திற்கு தடைகல்லாக நின்றமுக்கிய காரணம் அதுதானே? அதையே தெரிவிக்காமல் இவன் இவளை மணந்திருக்கிறானே? மறைத்து மணந்ததாக அல்லவா தோன்றும்?

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:762}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.