(Reading time: 18 - 35 minutes)

 

ரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே

….

மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே

…..

சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே

அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே

….

நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

உணர்வுகளுக்கு  உயிர் தந்த அந்த நொடிகள் வார்த்தைகளை நிராகரித்து விட்டன.. அவர்களுக்குள் மன்னிப்பு இல்லை, தயக்கம் இல்லை, விளக்கமும் இல்லை .. அவர்களின் மௌன பாஷை உணர்த்திய ஒரே வாசகம் ,

" வேறென்ன வேணும் நீ போதுமே "

குராம் - ஜானகி இருவரும் இணைந்த கதையை கேட்ட அனைவரின் பார்வையுமே அர்ஜுனனின் மேல்தான் இருந்தது .. சுபத்ராவோ பெருமையுடன் அவனை பார்த்து புன்னகைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்... ஏனோ அவளுக்குள் சொல்ல முடியாத உணர்வுகள் பொங்கி எழுந்தன .. அவன் செய்வது அனைத்துமே அவளுக்காகவே, என்று அவளுக்கு தோன்றியது. கண்களில் நன்றியும் காதலையும் தேக்கி வைத்து அவள் பார்த்த பார்வையை மனதிற்குள் பொத்தி வைத்தான் அர்ஜுனன் ..

" ம்ம்ம்கும்ம்ம் " என்று தொண்டையை செருமினாள் நித்யா ...

" உனக்கென்னடி பிசாசே " என்றாள் சுபத்ரா

" ஹே சுப்பு வர வர நீ ஓவரா பேசுற "

" ஹே என் சுபி செல்லத்தை ஏனடி வம்பிளுக்குற ?" என்று சண்டைக்கு வந்தாள் மீரா...  

கிருஷ்ணனோ " ஓகே மச்சான் ... இவங்க அடிச்சுக்கட்டும் ..நாம போயி தூங்கலாம் " எனவும் அவனின் காதை செல்லமாய் திருகினாள் மீரா...

" ஹே நீலாம்பரி... வலிக்கிறது விடுடீ"

" ஷாபா ... போதும் போதும் ,.... சண்டை போட்டது .. கார்த்தி - நித்தி  நீங்கதான் இசையால் இணைஞ்ச பாடகர்கள் ஆச்சே ... எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க ... அடடே கேட்டு  ரொம்ப நாளாச்சே நு தோணனும் " என்ற அர்ஜுனன் மற்றவர்களின்  சண்டைக்கும் ஒரு முற்றுபுள்ளி வைத்தான் ..

"  ம்ம்ம்ம் என்ன பாடலாம் நித்தி ? "

" நீ எது சொன்னாலும் ஓகே டா "

அவளை மார்க்கமாய் பார்த்தவன் ரகசிய குரலில் " நேத்து ராத்திரி யம்ம்மா " பாடலாமா என்று கேட்டு இரண்டடி வாங்கி கொண்டான் .. அவள் மீண்டும் அடிக்க கை ஒங்க, அவள் கையை பிடித்து எழுந்தவன் அவர்களுக்கு எதிரில் இருந்த சுவரோரம் சாய்ந்து நின்றான் ..

" மைக் இல்ல .. அட்ஜஸ்ட் பண்ணிகொங்க " என்றவன் நித்தியிடம் " பாடலாமா? " என்று பார்வையினாலே வினவினான்..

" ம்ம்ம் " என்று அவளும் தலை அசைத்தாள் ...

 ஆனா கார்த்தி சொன்னதை அப்படியே செய்தால்athu நம்ம நித்தி ஸ்டைல் இல்லையே ..அதனால் அவன் பாட எத்தனிக்குமுன்னெ அவள் பாட தொடங்கினாள்....

நித்தி  : எங்கெங்கே எங்கெங்கே எங்கே

இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே

தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்

பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே

நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று

தொடாதே நீ தொடாதே

அவளின் குறும்புத்தனமும்,  கண்களில் தெரிந்த சவால் பார்வையும் அவன் இதழில் புன்னகை பூக்க வைத்தது

கார்த்தி  : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்

செல்லாதே தள்ளிச் செல்லாதே

என்னம்மா என்னம்மா உந்தன்

நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

அவர்களின் இதழ்கள் பாடலை பாட கண்களோ அந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தது .,.. அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கி கொண்டு இருந்தனர் ..

கார்த்தி : என் தூக்கத்தில் என் உதடுகள்

         உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்

நித்தி : என் கால்களில் பொன் கொலுசுகள்

உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்

கார்த்தி  : பூப்போல இருந்த மனம் இன்று

மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே

இதயம் துடிக்கும் உடலின் வெளியே

நித்தி : என் வீதியில் உன் காலடி

என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்

கார்த்தி  : உன் ஆடையின் பொன்னூலிலே

என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்

நித்தி  : நான் உன்னை துரத்தியடிப்பதும்

நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா

காதல் பிறந்தால் இதுதான் கதியா

நித்தி : எங்கெங்கே எங்கெங்கே எங்கே

இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே

தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்

பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே

நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று

தொடாதே நீ தொடாதே

கார்த்தி : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்

செல்லாதே தள்ளிச் செல்லாதே

என்னம்மா என்னம்மா உந்தன்

நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

" ஹே சூப்பர் " என்று அனைவருமே கைதட்ட,

மீரா " கார்த்திக் அண்ணா, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அப்பவே கல்யாணம் பண்ணிடுங்க ரெண்டு பேரும் " என்றாள் மர்ம சிரிப்போடு ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.