(Reading time: 18 - 35 minutes)

 

" ஹா ஹா ஹா .... ஆமா  நீ நான் ஏன் இந்த புடவை வாங்கினேன்னு  கேட்ப.. என்னால எதையும் மறைக்கவும் முடியாது ..அதான் செல்லம் .. "

" ஓஹோ நான் இப்போ மட்டும் கேள்வி கேட்க மாட்டேனா ? "

" செல்லம் எனக்கு யாரு கால் பண்றாங்க போல நான் அப்பறமா பேசுறேன் டா "

" ராம் எஸ்கேப் ஆகாதிங்க "

" ஹா ஹா "

" உங்களை நாளைக்கு கவனிச்சுக்குறேன் "

றுநாள்,

காலையில் இருந்தே  மகிழ்ச்சியும் பதட்டுமுமாய்  இருந்தான் ரகுராம் ... அன்று அவனுடன் ஆபீசில் சந்திர பிரகாஷும் சூர்யா பிராகாஷ் காத்திருந்தனர் ..

ஜானகியோ, " ஏன் ரகுராம் தன்னை அழைத்து செல்ல வரவில்லை ? " என்று குழப்பத்தோடு ஆபீசிற்குள் நுழைந்தாள்...வாசலில் விஷ்ணுப்ரியா  கையில் பூங்குத்துடன் நின்று வர வேற்றாள்... மற்றவர்களும் மிகமரியதையாக அவளை பார்ப்பதும் வணக்கம் சொல்வதுமாய் இருந்தனர் .. ஜானகிக்கு எதுவுமே புரியவில்லை .  அனைவரிடமும் ஒரு புன்னகையை பதிலாய் தந்தவள் ரகுராமின் அறையில் நுழைய, அங்கு இருந்த சூர்யா, சந்துருவை பார்த்து அதிசயித்து போனாள் ஜானகி...

" வாமா "

" நீங்க எப்போ வந்திங்க மாமா ? ராம் எதுவும் சொல்லலையே "

" ஹா ஹா சர்ப்ரைஸ் ... " என்ற ரகு, அவளை பார்வையால் அளந்தான் .. அவன் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த அந்த புடவை, அவளுக்கு மிக பொருத்தமாய் இருந்தது ..

" அப்பா ரெடியா ? "

" எஸ் டா  ! "

 அடுத்த நிமிடமே மதுவிடம் இண்டர்காமில் பேசியவன், அரைமணி நேரத்தில் கம்பனியில் பணிபுரியும் அனைவரையும் பிரத்தியேகமாக அலங்கரிக்கபட்ட அந்த அறைக்கு அழைத்திருந்தான் .. ஜானகி எதுவும் புரியாமல் நின்றிருந்தாள்.. ஏனோ அவள் கைகள் சில்லிட்டன....

" இது என்ன புதுசா  இருக்கே ? " என்று எண்ணினாள்..அவளின் உணர்வுகளை படித்தவன், ஆதரவாய் அவளின் கரம் பற்றினான்..

நண்பர்களே, மன்னிச்சிடுங்க ..இந்த எபிசொட் என்னால நீளமா தர முடியலை .. இதற்கும் சேர்த்து அடுத்த எபிசொட் அட்டகாசமா இருக்கும்னு ப்ராமிஸ் பண்ணுறேன் .. இந்த சீன்   என்ன நடந்தது ? ,  நம்ம சுபி அர்ஜுனனின் ஆபீசில் என்ன பண்ணுறா ? கிருஷ்ணன் - மீரா எங்க ? கார்த்தி நித்தி அடுத்து என்ன பண்ண போறாங்க ? இதை அடுத்த எபிசோட்ல சொல்லுறேன் ... இப்போ அடுத்த எபிசொட் நான் ரொம்ப ரசிச்சு எழுத போகிற ஒரு சீன் கு குட்டி டீசர் போடுறேன் .. :)

கிராமத்து மண் வாசம் அவர்களை கட்டி போட்டது .. இயற்கை காற்றை  சுவாசித்து கொண்டே பொறுமையாய் நடந்து  கொண்டு இருந்தனர் அனைவரும் .. சூர்யா பிரகாஷ் அபிராமியை முதன் முதலில் பார்த்த நிகழ்வுகளை எண்ணி பார்த்து அவ்வப்போது அதை பற்றி ரகசியமாய் பேசி அவரை முகம் சிவக்க வைத்தார் .. சந்துருவோ  சிவகாமியிடமும் பானுவிடமும்  சிறுவயதில் தான் செய்த சேஷ்டைகளை சொல்லி கொண்டு இருந்தார் ..

நம்ம மீரா- கிருஷ்ணா, ரகுராம் - ஜானகி, அர்ஜுன் - சுபத்ரா மூவரும் வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளையும் ரசித்து பார்த்து பேசிக்கொண்டு இருந்தனர் ..

அங்கே மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த சிலர் சூர்யாவையும் சந்துருவையும் பார்த்துவிட்டு இறங்கி வந்தனர் ...

" தம்பி……….. சூர்யா தம்பி "

" அட மாரி அண்ணே , எப்படி இருக்கீங்க ? "

" எனக்கென்ன ராசா ? நம்ம பெரியய்யா புண்ணியத்துல ராசா மாதிரி இருக்கேன் .. இதான் நம்ம புள்ளைங்களா ? எம்புட்டு வளர்ந்துட்டுங்க... இவங்க ?? " என்று ஜானகி மீராவை பார்த்து அவர் கேட்க

" நம்ம வீட்டு  மஹா லட்சுமிங்க " என்றார் ...

" அடடே ... ரொம்ப சந்தோசம் ... ஏன் எல்லாரும் நடத்து வர்ரிங்க ... மாட்டு வண்டியில போலாம் "

" ஆமா ஆமா போலாம் பெரியப்பா " என்று ஆசையாய் குதித்தாள் சுபத்ரா...  அர்ஜுனன் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தான் .. பின்ன முதல் தடவை நம்ம அம்மணி பாவாடை தாவணியில் இருக்காங்களே ...

" சரி வாங்க " என்றதும் கிருஷ்ணன், ரகு, அர்ஜுன் மூவரும் பெரியவர்கள் வண்டியில் ஏற உதவினர் ... அந்த நேரம் தூரத்தில் இருந்து  வந்த ஒரு மாட்டு வண்டியில் இருந்த யாரோ மின்னல் வேகத்தில்  சுபத்ராவை கடத்தி சென்றனர் ..

" அஜ்ஜு " என்று அவள் கத்தும் சத்தம் அந்த இடத்தையே உலுக்க, ஒரு கணம் நடுங்கியவன், பக்கத்தில் இருந்த மாட்டு  வண்டியில் ஏறினான் ..

" தம்பி .. நான் ஓட்டுறேன் வாங்க ..."

" இல்ல நான் போறேன் "

" என் மேல நம்பிக்கை இல்லையா? "

" அய்யா...உங்களுக்கு இருக்குறது உங்க பெரியய்யா வின்  வீட்டு பெண்ணை காப்பாத்தனும்னு வேகம் .. ஆனா எனக்கு என் உயிரை காபத்தனும்னு வெறி .. நானே பார்த்துக்குறேன் "

" டேய்  அர்ஜுன் , உனக்கு மாட்டு வண்டி எப்டிடா ? " என்று கிருஷ்ணன் ஆரம்பிக்குமுன்னே அவன் கையில் இருந்த சவுக்கை அடித்து வேகமாய் வண்டியை செலுத்தினான்...

" அர்ஜுன் கு மாட்டு வண்டி ஓட்ட தெரியும் கிருஷ்ணா " என்றார் பானு

" எப்படி அத்தை? "

" அவனுக்கு கிராமத்து வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் .. காலேஜ் படிக்கும்போது மெனெஜ்மண்ட் ல பேசி அவங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் கிராமத்துக்கு டூர் போனாங்க... அதுவும் இல்லாம அவன்  சின்ன வயசுல, எல்லாரும் கிராமத்துல தானே இருந்தோம் "என்றார் நிம்மதியாய் .. என்னதான் அவர் அபப்டி சொன்னாலும் மற்றவர்களின் பதட்டம் குறையவே இல்லை .. சூர்யா அவரின் தந்தை வேலுச்சாமியை போனில் அழைக்க, அவரு போன் எடுக்கவில்லை ..

தன் முன்னே சென்று கொண்டிருந்த வண்டிக்கு ஈடுகொடுத்து வேகமாய் வந்தான் அர்ஜுனன் .. முன்னால் சென்ற வண்டி  அரைவட்டமாய் சுற்றி அவன் எதிரில் நிற்க, கையில் சவுக்குடன் ரௌதிரமாய் நின்றான் அர்ஜுனன் ..

கண்களில் அனல் பறக்க, கலைந்த கேசமும், கையில் சாட்டை வைத்து கொண்டு  நின்றவனை பார்த்து சுபியே கொஞ்சம் நடுங்கித்தான் போனாள் .. " அவசரபட்டு இவன்கிட்ட மீசை அழகா இருக்குன்னு சொன்னோம் .. இப்போ  பாரு சிங்கம் சூர்யா ரேஞ்சுக்கு மீசைய வளர்த்துகிட்டு இப்படி முறைச்சு நம்மளையும் மிரட்டுரானே " என்று மனதிற்குள் பேசி  கொண்டாள் சுபத்ரா.. இந்த ரணகலத்துளையும் ஒரு கிளுகிளுப்பா சுபி ??? 

அப்போதுதான் அவள் கவனித்தாள்... அவளை கடத்திய ( ??) இருவருமே அவளை நெருங்க கூட இல்ல .. அவளது கைகளை கூட பிடிக்கவில்லை .. " யாரு டா நீங்கலாம் ? " என்பதுபோல அவள் பார்த்தாள்.....

 " வந்துட்டான்யா ...எங்க சிங்கக்குட்டி " என்று அவர்களின் குரல் கேட்க , குரல் கேட்ட திசையில் அவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்தாள் சுபத்ரா ... அர்ஜுனனோ இன்னும் கோபமாய் விழி விரிய நிற்க

" பார்த்தியாடி என் பேரனின் வீரத்தை? நம்மூரு அய்யனாரு  மாதிரி நிற்கிறான் பாரு " என்று மீசையை முறுக்கி கொண்டு நின்றார் வேலுச்சாமி அய்யா .. !

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.