(Reading time: 44 - 88 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 19 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ன் எதிரில் புன்னகை மாறாமல் நின்றிருந்த நித்யாவை பார்த்து வியந்துதான் போனான் கார்த்திக் ..

" யாருடா இந்த பொண்ணு ? அவ பாட்டுக்கு வந்தா குடிக்க தண்ணீர் கொடுத்தா ...நீயும் என்னை மாதிரி ப்ரெஷரா நு கேக்குறாளே? " என்று சிந்தித்தவன், அவளை கூர்ந்தது கவனித்தான் .. சிரிக்கும் கண்கள், காற்றில் களைந்து போக்கு காட்டும் கூந்தல், அந்த இள மஞ்சள் நிற சுடிதார் அவளின் மாநிறத்தை இன்னும் அழகாய் எடுத்துக்காட்டியது .. இவை அனைத்தையும் விட அவனை வெகுவாய் கவர்ந்தது அவளின் சிநேகமான பார்வைத்தான் ..

கார்த்திக் அந்த காலேஜில் அனைவராலும் விரும்பப்படுபவன் என்பதாலோ என்னவோ பொதுவாகவே அவனிடம் பேசும்  பெண்கள் அவனை ரசனையோடு பார்ப்பதாய் அவனுக்கு தோன்றும்.. சில நேரம் அவனுக்கே " நாம்தான் ஓவரா கற்பனை பண்ணிக்கிரோமோ? " என்று தோன்றும் .. ஆனால் அப்படி இல்லவே இல்லை என்பது போல அவனை தங்கள் அன்பினால் கவர பல பெண்களும் முயன்றுகொண்டுதான் இருந்தனர் ...

VEVNP

" ஒரு பொண்ணு உன்னை  உண்மையா விரும்பினா அதை அவள் சொல்லனும்னு அவசியமே இல்லை கார்த்திக் .. அவளுடைய செய்கையே அவளின் காதலுக்காக பேசும் .. அன்னைக்கு உனக்கு அவள் ரூபத்தில் என்னை பார்க்குற மாதிரி இருக்கும் " இந்த வார்த்தைகள் கார்த்திக்கின் தாயார் அவனுக்காக எழுதிய ஒரு கடிதத்தில்  சொன்னது .. அதை இன்றுவரை ஞாபகம் வைத்து இருப்பவன் தான் கடந்து வந்த இந்த 3 வருட கல்லூரி வாழ்க்கையில் அப்படிபட்ட பெண்ணை சந்திக்கவே இல்லை .. அவனும் அந்த காதலை தேடி செல்லவில்லை என்றாலும் கூட அவனுடன் பழகும் சக பெண்கள் விளையாட்டுத்தனமாக  " ஐ லவ் யு " என்பதும், அவனின் செயல்களை ரசித்து பாராட்டுவதும் அவனுக்கு சங்கோஜமாக இருக்கும் .. அப்படி பட்ட பெண்களையே பார்த்தவனுக்கு நித்யாவின் கண்களில் இருந்த சிநேகம் புதிதாய் தெரிந்தது ..பிடித்திருந்தது ...

" ஹெலோ ... கார்த்தி எவ்வளவு நேரம் கை நீட்டுறது ? கை  கொடுக்க மாட்டியா நீ ? " என்று கேட்டவளை பார்த்து பெரிதாய் சிரித்து கை குலுக்கினான் கார்த்தி ..

" சிவகார்த்திகேயன் " அவளுக்கு " கார்த்தி " ஆனதையும் அவன் கவனிக்க தவறவில்லை .. " போடி அப்போ நானும் நிக் நேம் வைப்பேனே " என்று மனதிற்குள் நினைத்தவன் ... சட்டென உதிர்ந்த யோசனையில்

" நைஸ் டூ மீட் யு நித்தி " என்றான் .....

" வாவ் ... ஹேய் நல்ல இருக்குலே.. கார்த்த்த்த்த்த்தி  நித்த்த்த்த்த்தி" என்று அவள் ஆர்பரிக்க அதே மகிழ்ச்சி அவனையும் ஒட்டிகொண்டதிற்கு சாயலாய்

" ம்ம் எஸ் நித்த்த்த்த்த்த்த்த்தி " என்றான் ....

" சரி உங்க உட்கார்ந்தது போதும் ... ஆடிட்டோரியம் போகணும்ல, வா நடந்துகிட்டே பேசலாம் "

ஏனோ அவளின் துள்ளான பேச்சு அவனுக்கு பிடித்திருந்தது .,.. நிச்சயம் அதில் போலித்தன்மை இல்லை .. அதுவே அவனை கவரும் ஆயுதமாய் இருக்க மறுப்பேதும் சொல்லாமல் அவளுடன் நடந்தான் கார்த்திக்.. அவர்களை இருவரையும் பொறாமையாய் பார்த்துகொண்டிருந்தன பல கண்கள் ! அதை உணரவே இல்லாமல் தன் பேச்சை தொடர்ந்தாள் நித்யா... கார்த்திக் தன் கல்லூரி நண்பர்களின் பார்வை தங்கள் மீது மொய்ப்பது தெரிந்தாலும் " ஒரு ஆணும் பெண்ணும் நட்பை பேசி பழகுவதில் என்ன தப்பு ? இவங்களுக்கு எல்லாம் பயந்து ஒதுங்கி போனால் லைப் லாங் இப்படியேதான் இருந்தாகணும் .. நாம நாமளாகவே இருப்போமே" என்று எண்ணிக்கொண்டே அவளுடன் நடந்தான்...

" என் வீடு இங்க பக்கத்தில்தான் இருக்கு கார்த்திக் .. அப்பா பிசினஸ் பண்றாரு .. ரொம்ப ப்ரண்ட்லி..நான் எதுவா இருந்தாலும் என் அப்பா கிட்டத்தான் ஷேர் பண்ணிப்பேன் .. அம்மா, லக்ஷ்மி  பெயருக்கு ஏற்ற மாதிரி செம்ம பியூட்டி .. அப்பா வீட்டுல அம்மாவை சைட் அடிப்பாங்க பாரு கௌதம் மேனன் சார் லவ் ஸ்டோரி கூட தோத்து போய்டும் .. அப்படி அவங்க சீன் போடும்போதெல்லாம் நான்தான் பாட்டு பாடுவேன்.. சின்ன வயசிலேயே பாட்டு கத்துகிட்டேன் .....  அப்பறம் என்னை மாதிரி அமைதியான தங்கச்சிக்கு ஒரு அடங்காத அண்ணன் ஆகாஷ் ...! "

"... "

" ஹேய் என்ன நின்னுட்ட? "

" அமைதியான பொண்ணு ???? நீ???? "

" பின்ன இல்லையா ? உன் லெவலுக்கு இல்லனாலும் நானும் அமைதி தான் பா .. பட் நீதான் ரொம்ப சைலண்டா இருக்கியே .. எப்பவும் இப்டிதானா ? இல்ல சீனியர்சை நெனச்சு பயப்படுறியா ? "

" பொதுவா பாட்டு பாடுற முன்னாடி நான் ரொம்ப பேச மாட்டேன் நித்தி " என்று உளறி தொலைத்தான் கார்த்தி...

" பாட்டா ?  என்ன உளறுற ? "

" ஹான் ..... அது ..... சும்மா ஜோக் பண்ணேன் "

" ஜோக்கா ??? இதுவா ? அய்யே நீ என்ன எல் கே ஜி பசங்களை விட மோசமா ஜோக் சொல்லுற ? நீ தேறமாட்ட கார்த்தி "

" அதான் இப்போ உனக்கு பிரண்ட் ஆகிட்டேனே ..  இனி கலக்கிடலாம் "

" பாருடா !! நாட் பேட்.....  "

" ஆமா நான் ப்ரஷர் நு எப்படி கண்டுபிடிச்ச நித்தி ?? "

" ரொம்ப ஈசி .. அந்த உச்சி வெயில்ல நீதான்  ஜாகிங் போற மாதிரி ஓடிகிட்டு இருந்தியா சோ உன்னை சீனியர்ஸ் யாரோ ரெக் பண்ணிருபாங்கன்னு புரிஞ்சுகிட்டேன் .. எப்புடி நம்ம ஏழாம் அறிவு ? " இல்லாத கொலரை  தூக்கிவிட்டு கொண்டு அவள் சொன்ன விதத்தில் குபீர் சிரிப்பு வந்தாலும் அதை மறைத்து கொண்டு

" ஹ்ம்ம் பின்னி பெடல் எடுக்குற நித்தி " என்றான்.

தே நேரம்

" டேய் துரோகி " என்று அஸ்வத் கூச்சலிடும் குரல் கேட்டு இருவரும் திரும்பினர் ..

அஸ்வத்தை பார்த்ததுமே " ஆஹா வந்துட்டான்யா அபாய சங்கு "என்று முணுமுணுத்தான் கார்த்தி .. ( கொஞ்ச நேரம் முன்னாடி என் ப்ரண்ட போல யாரு மச்சான்னு பாடிட்டு ஒப்போ இப்படி சொல்றிங்களே கார்த்திக் ),...

 அதை கவனிக்காத நித்யா " கார்த்தி இவர்தான் உன்னை ரேக் பண்ண சீனியரா ? " என்றாள்..அவளிடம் என்ன சொல்லி  சமாளிப்பது என்று யோசித்தவனிடம் அவளே வார்த்தைகளை எடுத்துகொடுக்க " நீ ரொம்ப நல்லவ நித்தி " என்று மனதிற்குள் சொன்னவன்

" ம்ம்ம்ம் ஆமா நித்தி .... நீ போ நான் அங்க போறேன் "என்றான்

"உன்னை எப்படி தனியா விடுவேன் " என்று கேட்டவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான் கார்த்தி ( அந்த பார்வையின் அர்த்தத்தை நான் அப்பறம் சொல்லுறேன் )

" என்ன பார்க்குற கார்த்தி ? "

" இல்ல நீ ரொம்ப நல்லவளா இருக்கியே ? "

" இப்போ அதுவா முக்கியம் ... அவங்க கூப்பிடுறாங்க வா போலாம் .."

" நீ எங்க வர்ற ? நீ வந்தா உன்னையும் ரேக் பண்ணுவாங்க .. நீ ஆடிட்டோரியம் போ ..நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன் "

" ம்ம்ம்ஹ்ம்ம் முடியாது "

" நித்தி ...உள்ளே போ "

" த்து ...இவரு பெரிய பாஷா .. சரி உன் செல்போன் கொடு "

" எதுக்கு "

" கொடுடா "

" டா வா ? "

" ஆமாடா .. என் ப்ரண்டு தானே நீ ? அப்பறம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு .. சீக்கிரம் கொடு "

" என் நேரம்... இந்தா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.