(Reading time: 44 - 88 minutes)

 

" கே இதுல என் நம்பர் செவ் பண்ணிட்டேன் .. ரொம்ப ரேக் பண்ணா நீ எனக்கு மெசேஜ் பண்ணு ..நான் உடனே யாரவது ப்ரொபசர் கிட்ட பேசுற மாதிரி அங்க அவரை கூட்டிட்டு  வந்திடுறேன் ... "

அவள் அப்படி சொல்லவும் அவளை உற்று  நோக்கினான் கார்த்திக் .. " ஜகஜால கில்லாடியா இருப்பா போல! ஆகாஷ் நீ ரொம்ப பாவம் .. உன் தங்கச்சி ஒரு ராங்கி ரங்கம்மானு தெரியுது " என்று ஆகஷுகாக பரிதபபட்டான் ..

" சரி ஓகே ... நான் பார்த்துக்குறேன் நீ கெளம்பு " என்றவன் அவள் கண்ணில் மறையும்வரை பவ்யமாய் முகத்தை வைத்துகொண்டு அஸ்வத்தை நோக்கி நடந்தான்...

ஸ்டைல்லாக அஸ்வத்தை நோக்கி நடந்து வந்தவன், நித்யா கண்களை விட்டு மறையும்வரை நம்ம போக்கிரி விஜய் முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருப்பாரே அந்த மாதிரி முகத்தை வைத்துகொண்டு நின்றான் ... அவள் சென்றத்தும் அச்வத்திடம் திரும்பி,

" டேய் மச்சான் இன்னுமாடா  இந்த உலகம் நம்மள  நம்புது ? " என்று வினவி அவன் தோளில் கை போட்டான் ..

" உலகம் நம்பட்டும் டா.. மகனே நான் உன்னை நம்பினேன் பாரு அதான் என் தப்பு "

" மச்சான் எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாக இருக்கணும் .. இப்படி திடீர்னு அதிரடியாக இறங்க கூடாது ..உள்ளகுள்ள பீதியாகுதா இல்லையா ? "

" மவனே .,.. பீதியாகுதா ? இரு உனக்கு பேதி மருந்து தரேன்" என்று அவனை துரத்தி துரத்தி அடித்தான் அஸ்வத் .. ஒரு கட்டத்தில் இருவருக்குமே மூச்சு வாங்க

" அதான் முடியலையே அப்பறம் எதுக்குடா வன்முறையை கையில் எடுக்குற ? " என்றான் கார்த்திக்

" டேய் ....!!!"

" ஐயோ உன்னை சொல்லல மச்சான் .. என்னால முடியலைன்னு சொல்ல வந்தேன் ..ஹீ ...ஹீ "

"  அதிருக்கட்டும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வந்தியே .. யாருடா அந்த ஏஞ்சல் ? "

" தங்கச்சிடா "

" உனக்கு ஏதுடா தங்கச்சி "

" ஹீ ஹீ மச்சி அவ உனக்கு தங்கச்சி மாதிரின்னு சொன்னேன் டா "

" எவ்வளவு அடிச்சாலும் தெளிவா பேசுடா .. நான் சிங்களா இருக்கணும்னு எவ்வளவு ஆர்வமா இருக்க நீ ? " என்று நொந்து கொண்டான் அஸ்வத் ...

" என்னடா மச்சான் இப்படி சொல்லுற ? நீ எனக்கு மச்சான்னா  உன் வருங்கால ஆளு என் தங்கச்சி முறைதானே? என் தங்கச்சியை நான் காப்பாத்தாமல் வேற யாரு காப்பாத்துவா சொல்லு ?"

" வேண்டாம் கொலைவெறி ஆகிடுவேன் டா "

" டேய் கார்த்திக், அஸ்வத் "

" சொல்லுடா கதிர் ..."

" அங்க நின்னு என்னடா பண்ணுறிங்க ? ஆடிட்டோரியம்ல ப்ரோக்ராம் ஆரம்பிக்க போறாங்க .. சார் கூப்பிட்டாரு .. "

" இதோ வந்துகிட்டே இருக்கோம்னு சொல்லு .. "

" கார்த்திக் இந்தாடா நேம் லிஸ்ட் .. "

" ஹே உன் தங்கச்சி பேரை எழுதுனியா ? அவளும் நல்லா பாடுவாளாம் ! "

" அவ பேரு எனக்கு எப்படிடா தெரியும் ? "

" என்னடா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்க ? தங்கச்சி பேரை தெரியாதா? நான் இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்தேனே அவளோடு??? "

" டேய் ஏண்டா என்னை கிறுக்கனாக்குற நீ ? நீ அவளோடு பேசினா எனக்கு எப்படி டா தெரியும்? " என்று அழும்குரலில் கேட்டான் அஸ்வத் ...

" ஹா ஹா ரிலாக்ஸ் மச்சான் .. கொடு நானே எழுதுறேன் ...வா போலாம் "

டிட்டோரியம் ...

மேடையில் சில லெக்சரர்கள் தயாராக நிற்க, மாணவர்கள் அனைவரும் சலப்புடன் அமர்ந்தனர் .. சுற்றும் முற்றும் பார்வையிட்டாள் நித்யா .. அதுவரை பிடித்து வைத்திருந்த தைரியம் லேசாய் கரைகிறதோ ? என்று தோன்றியது அவளுக்கு .. சிலர் ஏற்கனவே ஒரு நட்புகூட்டனி அமைத்து ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. சிலர் நித்யாவை போல் தனியாய் அமர்ந்து இங்கும் அங்கும் பார்த்து கொண்டிருந்தனர் .. அந்த காலேஜின் பிரின்சிபால் வரவேற்புரையாற்ற , கார்த்தியை தேடியது அவளின் கண்கள் ...

" தேடி புடிச்சேன் பாரு நல்ல ப்ரண்டை..எங்கடா போனே நீ ? ச்ச என் நம்பரை உனக்கு கொடுத்தது பதில உன் போன் ல  இருந்து எனக்கு மிஸ் கால் கொடுத்திருக்கலாம் ... கார்த்தீ" என்று அவள் மனதிற்குள் அழைக்க,

கலைந்திருந்த  கேசத்தை ஒற்றை கையால் கோதி, வாசீகர புன்னகையுடன் அங்கே நுழைந்தான் கார்த்தி... அவனுடையை ஹீரோயிக் என்ட்ரி அனைவரையும் ஒரு நொடி அவன் பக்கம் திரும்ப வைத்தது ..

" பரவாயில்ல  கார்த்தி நீயும் ஸ்மார்ட் தான் " என்று முதல்முறை அவனின் தோற்றத்தை பார்வையால் அளந்தாள் நித்யா ... அத்தனை பேரின் பார்வையும் அவனை மொய்த்தாலும் கார்த்திக்கின்  கண்கள் கண்டுகொண்டதென்னவொ அவளைத்தான் ..

" இங்க வா" என்று செய்கை காட்டிய  நித்யாவிடம் பதிலாக புன்னகையைத் தந்தான் அவன் ...

"ஓகே ஸ்டுடண்ட்ஸ் .. ஒன்ஸ் அகின் ஐ எம் வெல்கமிங் ஆல் ஒப் யு டு அவர் காலேஜ் .. உங்களை வெல்கம்  பண்றதுக்காக உங்க சீனியர்ஸ் நம்ம மியுசிக் பேண்ட் ஒரு பெர்பார்மன்ஸ் தர போறாங்க .... லெட்ஸ் இன்வைட் கார்த்திக் அண்ட் டீம் " என்று அவர் சொன்னதும் மயக்கம் போடாத குறைதான் நித்யாவிற்கு ..

விழிகளை சுருக்கி " சீ நி ...யா.....ரா......." என்று அவள் முணுமுணுத்ததை கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை மறைத்துக்கொண்டு  கண் சிமிட்டினான் ..

" யு ... யு .......... " என்ற வார்த்தைகள் கிடைக்காமல் பற்களை கடித்தாள் நித்யா ....

" ஹாய் ப்ரண்ட்ஸ் " என்று சிரித்தவன் , தன் குரலால் அனைவரையும் வசீகரிக்க ஆயுத்தமானான் ..

" அப்படி என்னதான் பாடுறான் பார்ப்போம் " என்று கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தவளை பார்த்ததும் கார்த்திக்கு ஒரு யோசனை தோன்ற அருகில் இருந்த ப்ரொபெசரிடம் ஏதோ சொன்னான்... அவர் சரியென தலை அசைக்கவும் ,கார்த்திக்

" ஹாய் ப்ரண்ட்ஸ் ..நான் உங்க சீனியர்னு சொல்றதை விட எல்லாருக்கும் நண்பன்னு சொல்லிகத்தான்  விருப்பபடுறேன் .. பொதுவாகவே இந்த சீனியர் ஜூனியர் டிஸ்டன்ஸ் எல்லாம் ஒரு 3 , 4 நாளுதான் .. அதான் பிறகு எல்லாரும் க்ளோஸ் ஆகிடுவோம் .. அதுக்கு ஆரம்ப புள்ளி  நான் வைக்க விரும்புறேன் .. சோ என்னோடு இணைந்து உங்க சார்பா , ஜூனியர்ஸ் சார்பாக நித்யா ராதாமோகன் பாடுவாங்க " என்று அவளை கை காட்டினான் .. அவன் சொன்னது நித்யாவிற்கு மிகுந்த அதிர்ச்சியை தந்தது அவளின் முகத்தில் தெரிந்தாலும் " உனக்கு நான் சளைத்தவள் இல்லை " என்று எண்ணியவள் மேடைக்கு வந்தாள்....

" என்ன சாங் சீனியர் சார் ? " என்று அவள் மெல்லிய குரலில் கேட்க

" சாரா ? ஓஹோ இப்போ நான் உனக்கு சீனியர் லே .. அப்போ சரி .. இதான் .. கேம் .. நான் என்ன பாடு வேணும்னாலும் பாடுவேன்.. முடிஞ்சா தொடர்ந்து பாடு " என்றான்

" ஐ எம் ரெடி "

பொதுவா நம்ம தமிழ் சினிமா பாடல்களில் ரொம்ப நல்லா இருக்குற சில பாடல்கள் அவ்வளவு புகழ் பெற்றிருக்காது .. அந்த மாதிரி ஒரு பாடலை பாடலாம் என்று எண்ணியவன் .. " ஆனந்த பூங்காற்றே " படத்தில்  இருந்து பாடினான் .. 

 கார்த்தி : சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு ?

                  பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா

                  இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா ?

                  அதை உள்ளே கேளு நீயும் பாடு

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.