(Reading time: 44 - 88 minutes)

 

ன்றிரவு,

" அப்பா"

" நித்து செல்லம் "

" இன்னைக்கு காலேஜ்ல என்ன நடந்தது தெரியுமா ? " என்ற நித்யா கார்த்திக்கை சந்தித்தது அனைத்தையுமே சொல்லி முடித்தாள்,. இந்த நேரத்தில் அவர்கள் இருவரின் பிணைப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும் .. நித்யா தன் தாயிடம் கூட சொல்லாத ரகசியங்களை தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்வாள் ... அதற்க்கு காரணமே அவளின் தந்தையின் குணம்.. எதையும் இயல்பாய் எடுத்து கொள்ளும் ராதாமோகன் ஆகாஷ், நித்யா இருவருக்குமே நல்ல தோழர்.. அவர்களின் எந்த பிரச்சனையையும் அவர்களின்  நிலையில் இருந்து சிந்தித்து நல்வழிபடுத்துவார்.. அதேபோல  " நீங்க சின்ன பிள்ளைங்க உங்களுக்கு எதுவும் தெரியாது " என்று சில நேரம் முக்கியமான முடிவெடுக்கும்போது பிள்ளைகளை ஒதுக்கி வைக்கும் பெற்றோருக்கு நேர்மாறானவர் இவர்.,. அப்படி ஒரு நண்பனாக  பழகும் அவரிடம் இருவருமே எதையும் மறைப்பதில்லை .. இப்போது கூட கார்த்திக்கை பற்றி அவரிடம் சொன்னாள் நித்யா...

" ஹா ஹா ஹா .. வெர்ரி இண்டரெஸ்டிங் யாங் மேன்... ! "

" போங்கப்பா நீங்களுமா? "

" ஈசி டா .... கார்த்திக்கா உன்கிட்ட வந்து நான் ஜுனியர்னு சொன்னான் ? நீதானே தப்பாக புரிஞ்சுகிட்ட ? "

" பட் அவன் இல்லன்னு சொல்லிருக்கலாமே பா "

" ஒருவேளை உண்மையை சொல்லி உன்னை வந்த முதல் நாளே பீல் பண்ண வைக்க வேணாம்னு நெனச்சிருக்கலாம் டா ... காலேஜ் லைப் ல இதெலாம் சகஜம்..எனக்கென்னவோ நீங்க ரெண்டு பெரும் நல்ல பிரண்ட்ஸ் ஆ இருப்பிங்கன்னு தோணுது "

" போதும் போதும் உங்க பொண்ணை கொஞ்சினது "

" அப்போ உன்னை கொஞ்சனுமா லக்ஷ்மி  ? "

" அய்யே போதுமே ? எப்போ பார்த்தாலும் குதர்க்கமா பேசிகிட்டு "

" அதுக்கு நீயேண்டி முகம் சிவக்குற ? கோபத்துல சிவக்குரியா இல்ல வெட்கமா ? "

" பெண்ணை பக்கத்துல வெச்சுகிட்டு பேசுற பேச்சை பாரு"

" பேச வேணாம்னா சொல்லு பாடுறேன்  "

" ஐயோ என்னங்க "

" ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ?

உண்மை காதல் மாறிபோகுமா?

என்னாவியே கண்ணே உன் போலவே

மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா ? "

லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்த பாடல் அது .. அவர்கள் திருமணம் ஆன  புதிதில் இருவரும் இணைந்து பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று .. அந்த நினைவுகளில் முகம் கனிந்தவர் தன் கணவருடன் இணைந்து பாடினார்..

" இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே

என்னாசை கண்ணா நீ என் தெய்வமே "

இருவருமே இணைத்து தொடர்ந்து பாடினர்

" அறியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்

பண்போடு நாம் இன்பம்  காணுவோம்

நாளுமே ...பாரிலே

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ?

உண்மை காதல் மாறி போகுமா ?  "

லக்ஷ்மியின் கண்களில் வழிந்த காதலும், மோகனின் புன்னகையில் இருந்த கர்வமும் நித்யாவின் கருத்தை கவர்ந்தது ... அவர்களை ரசித்து கொண்டிருந்தவளின் கண்களுக்கு தன் தாயின் இடத்தில் தானும் தந்தையின் இடத்தில் கார்த்தியும் இருப்பது போல தோன்ற திகைத்து விட்டாள்...

" நித்து என்னாச்சுடா ?? "

" அப்பா... ம்ம்ம்ம் .. ஒண்ணுமில்ல நான் போயி படுக்குறேன் "

" சரி டா குட் நைட் "

" குட் நைட் அப்பா "

படுக்கையில் விழுந்தவள் தன் கற்பனையை எண்ணி தன்னையே கடிந்து கொண்டாள்..சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்...

" துதான் நாங்கள் சந்தித்த முதல் தினம் " என்று அவர்களிடம் சொல்லினர் கார்த்தியும் நித்தியும் .,. அதற்குள் அர்ஜுன் ரகுவிடம் சமிக்ஞை காட்ட , இருவரும் ஒரே நேரம்

"ஜானு நகரு பக்கத்துல பல்லி " என்றனர் .,.. ஜானு தைரியமான பொண்ணுதான் .. பட் பல்லி மட்டும் ஜானகிக்கு  வில்லி .. அதனால் அலறி  ஜானகி எழ, அவளின் செய்த களேபரத்தில் மற்ற நால்வருமே அலறிக்கொண்டு எழுந்தனர்...  இதுதான் சமயம் என்று அர்ஜுனன் சுபத்ரா அருகிலும் , ரகுராம் ஜானகி அருகிலும் நின்று கண்சிமிட்டி  ஏதோ சொல்ல , அவர்களின் பார்வையிலேயே இருவரும் சொன்னது பொய்யென புரிய பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர் ... நித்யா வேண்டுமென்றே

" ராம் அண்ணா எங்க பல்லி ? " என கேட்க

" அதோ உன் பக்கத்தில் " என்று ரகுராம் கண்களை உருட்ட, அதை நம்பி  துள்ளிய நித்யா  கார்த்தியின் பக்கம் நகர்ந்து அமர்ந்தாள்..

" சக்சஸ் ...சக்சஸ்...சக்சஸ் " என்று கத்திய அர்ஜுனனும் ரகுராமும் அவரவரின் ஜோடியுடன் இப்போது அமர்ந்தனர் ...

" ஹா ஹா இதுக்கு நீங்க ரெண்டு பெரும் நேரடியாகவே சொல்லிட்டு உட்கார்ந்து இருக்கலாமே அர்ஜுன் " என்றான் கிருஷ்ணன்..

" எல்லாரும் உன்னை மாதிரி முன்னாடி ப்ளான் பண்ணி உட்காருவாங்களா மச்சான் " என்று பதிலடி கொடுத்து மீராவை வெட்கப்பட வைத்தான் அர்ஜூனன ... கார்த்தி - நித்தியின் கதையில் மூழ்கி போன சுப்ரியாவோ

" ஓகே போதும் போதும்..நித்தி நீங்க சொல்லுங்க... இந்த நட்பு எப்படி காதலானது? " என்று கேட்டாள்...

சுப்ரியாவின் கேள்வியினால் கண்களில் மின்னல் கீற்றுகளை தேக்கி வைத்து கார்த்தியை பார்த்தாள் நித்யா ... கார்த்தியின் உதட்டில் பூத்த அந்த புன்னகையே  அவளுக்கு  ஆயிரம் கதைகள் சொல்ல, அன்றைய நினைவுகளில் மீண்டும் மூழ்கினாள் நித்யா...

தன் பிறகு நாட்கள் இறக்கை கட்டி பறந்தது நம் கார்த்தி- நித்திக்கு .... காலேஜ் கல்ச்சுரல் , பாட்டு போட்டி, ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ் இப்படி கார்த்தி - நித்தி இணைந்து பாடுவதற்கு எக்கச்சக்க வாய்ப்புகள் கொட்டி குவிந்தன .. பெரும்பாலான பெண்களின் பொறாமையை பரிசாய் பெற்றுக்கொண்ட நித்யா, கார்த்தியின் உயிர் தோழியாய் காலேஜை வளம் வந்தாள்..அவனின் நட்பினால் அவளுக்கு கிடைத்த இன்னொரு சாதகமான விஷயம் சீனியர்களுடன் உண்டான நட்பு .. கார்த்தியே நித்திகிட்ட  சரணாகதி அடைந்த பிறகு நமக்கு மட்டும் என்ன ? என்று நினைத்த சீனியர் மறந்தும்  அவளுக்கு பிரச்சனையை எதுவும் தரவில்லை .. மாறாக " அண்ணா..அண்ணா ", " தங்கச்சி , தங்கச்சி " என்று தென்பாண்டி தமிழே பாடல் பாடும் அளவிற்கு அனைவரும் அவளுக்கு சகோதரர் ஆகினர் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.