(Reading time: 44 - 88 minutes)

 

ல்லாமே சுமூகமாய் சென்று கொண்டிருக்கையில் புயலில் சிக்கிய சருகாய் சுழன்றது இரு இதயங்கள் ... காதல் , நட்பு இந்த இரு உறவுகளின் அளவுகோல்தான் என்ன ? என்று குழம்பிய இதயங்கள் வெறும் யாருமில்லை நம்ம கார்த்தி நித்தி தான் ...... நித்தியின் அன்பும் அதிதீத அக்கறையும் ஏதோ ஒரு வகையில் கார்த்தியின் மனதை சலனப்படுத்தியது....

" அம்மா, நீங்க  சொன்ன பெண் நித்திதானோ தோணுது .. நித்தியின் ஒவ்வொரு செய்கையும் உங்களை கண்ணு முன்னாடி நிறுத்துற மாதிரி இருக்கு .. ஆனா இது அவள் வெறும் நட்பினால் என்மீது காட்டுற அக்கறையா இருக்கலாம் இல்லையா? நான் என் மனசுல காதலை விதைச்சு அது நித்தியின் மனசில் முள்செடியாய் முளைச்சிட கூடாதே .. இதென்ன சோதனை? எங்களை கேலி செய்த எல்லாருகிட்டயும் நாங்க ப்ரண்ட்ஸ்..கடைசிவரை நல்ல நட்போடு பழகுவோம்னு சொல்லிட்டு இப்போ இப்படி மனம் தடுமாறினால் அது எவ்வளவு பெரிய களங்கம் ? அப்போ கடைசி வரை ஒரு ஆண் பெண் நம்பர்களாக மட்டும் இருக்க முடியாதா ? முடியும் ! அதுக்கு அவள் எனக்கு தோழியா மட்டும் இருக்கணும்.. இப்படி தாயாகவும் இருக்க கூடாதே ...என்னால ஏன் நித்தியை மத்த பெண்கள் மத்தியில் வெச்சு பார்க்க முடியலை ? எந்த நொடியில் அவள் எனக்குள்ளே வந்தாள் ? இதை சொன்ன அவ மனசு கஷ்டப்படும் ..சொல்லலேன்னா அது நட்புக்கு செய்யுற களங்கம் இல்லையா ? உறவை தெளிவா வெளிபடுத்தலன்னா அதை விட பெரிய தப்பு என்ன இருக்கு? நான்  என்ன செய்வேன் ?? "

ஒரு பாடலில் சொல்லி இருப்பாங்க

" வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

சாவுக்கும் பக்கம் நின்றேன்

ஏன் என்றால் காதல் என்பேன் "

அப்படித்தான் இருந்தது கார்த்தியின் நிலையும்....... ( சரி நம்ம கார்த்தியின் நிலைதான் இப்படின்னா நித்தி ??? வாங்க பார்ப்போம் )                                                

ஹே நித்தி"

" டேய் ஆகாஷ் குரங்கு என்னை நித்தின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்றது ? "

" ஐயோ நீ எத்தனை தடவை சொன்னன்னு நான் எண்ணவே இல்லையே ! "

" வாவ் வாட் எ ஜோக் ?  இருடா சிரிச்சுகுறேன் " என்று காட்டமாய் சொன்னாள் நித்யா ....

" ஆமா நீயேன் கார்த்தியை தவிர மற்ற யாரையும் நித்தின்னு கூப்பிட விட மாட்டுற ? " என்று கேட்ட ஆகாஷ் ஆர்வமாய் அவளின் முகத்தை ஆராய்ந்தான் ... தன் தங்கையின் மனம் கார்த்தியின் வசம் இருப்பதை அவன் உணர்ந்துகொண்டாலும் எந்த வயதில் எது அவசியம் என்று பகுத்தறிந்து  நடக்கும் தங்கையின் மீது உள்ள நம்பிக்கை அவன் பெரிதாய் ஏதும் ஆட்சேபிக்க வில்லை .. எனினும் அவ்வப்போது அவளையும் அவனையும் இணைத்து பேசி அவளை அவஸ்தையான நிலையில் நிற்க வைத்து பார்ப்பதில் அவனுக்கொரு ஆனந்தம்.. அன்றும்கூட

" ஹே சொல்லு "

" என்ன சொல்ல ? "

" கார்த்திய பத்தி சொல்லு "

" உனக்கவனை தெரியாதா ? நம்ம வீட்டுக்கே அடிக்கடி வந்துருக்கான் தானே ...."

" அது தெரியும் பட் உன் சம்திங் சம்திங் " என்று அவன் ஆரம்பிக்கும்போது அங்கு வந்தார் ராதாமோகன்

" உனக்கு எத்தனை தடவை சொல்றது ஆகாஷ் .,. நித்தியையும் கார்த்தியையும் இணைச்சு பேசாதே .. "

" அப்பா ... "

" என்ன அப்பா? ஒரு பையனும் பொன்னும் நண்பர்களாக இருக்கவே முடியாதா ? ஒரு அண்ணனா நீ அவங்க நட்புக்கு சப்போர்ட் பணன்னும் அதை விட்டுட்டு  அவங்க மனசை கலைக்கலாமா? "

" அதில்லப்பா .... அப்படி அந்த நட்பு காதலாக மாறினால் தப்பு இல்லை தானே பா "

ஆகாஷ் கேட்ட கேள்வியில், நித்யாவிற்கான பதிலும் இருந்தது .. தன் தந்தையின் எண்ணம் என்ன ? என்று தெரிந்து கொள்ள எண்ணி அவர் முகத்தை கண் இமைக்காமல் பார்த்தாள் நித்யா ....

" தப்புத்தான் "

" அப்பா ? "

" என்ன ? தப்புதான் டா ... இது வரை அவன் என் நண்பன்னு சொல்லி பழகி, நம்ம கிட்டயும் நண்பன்னு அறிமுகபடுத்தி, அவனை குடும்பத்தில் ஒரு பையனாக பார்க்கும்போது, திடீர்னு நாங்க லவ் பண்றோம்னு எப்படி சொல்லலாம்?  அது முதுகுல குத்துறதுக்கு சமம் !அது எப்படி திடீர்னு வானத்துல இருந்து காதல் குதிச்சு வருதா ? "

அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனாள் நித்யா .. ஆகாஷின் பார்வை தன் மீது பரிதாபமாய் படுவதை அவளும் உணர்ந்தாள். கார்த்தி மீது தன் காதலையும் உணர்ந்தாள். ஆனால் தன் தந்தைக்கு இப்படி ஒரு எண்ணம் உள்ளது என்பதை அவள் உணரவில்லை .. அதுவும் " அது முதுகுல குத்துறதுக்கு சமம்" என்ற வார்த்தைகள் அவள் காதல் மனதை கொன்று கூருபோட்டன..... அவள் காதலுக்கு அன்று கருச்சிதைவு ! காதலை தன்னவனிடம்  சொல்லி காதலை பிரசவித்து நெஞ்சத்தில் வளர்க்கும் முன்னே அவள் தந்தையின் வார்த்தைகள் அதை கருச்சிதைவு செய்து விட்டன... வெளிறிய முகத்துடன் நின்றிருந்த மகளை பார்த்தார் ராதாமோகன் ..

" நித்து என்னடா ? "

" ஒன்னுமில்லப்பா "

" அப்பா சொன்னது சரிதானே ? "

"..."

" உன்னை நம்பி உங்க நட்பை நாங்க ஆதரிக்கும்போது அதை காதல்னு சொன்னா அது நீங்க பண்ணுற நம்பிக்கை துரோகம் இல்லையா? "

அவளுக்கு கண்ணீர் விழவா என காத்திருந்தது .. ஆகாஷுக்குமே அவள் அப்படி நிற்பதை பார்க்க பிடிக்காமல் அவனின் செல்போனில் இருந்து அவளுக்கு மிஸ் கால் தந்தது " நித்யா உன் போன் அடிக்கிது ரூம்ல.. போயி பாரு " என்று அவளை அனுப்பி வைத்தான் .. நன்றியுடன் அவனை பார்த்தவள் தனதறைக்கு சென்று கட்டிலில் விழுந்து அழுதாள்.

" கார்த்தி .. ஐ லவ் யு கார்த்தி .. என்னால இதை கடைசிவரை சொல்ல முடியாம போய்டும்னு நான் நினைக்கவே இல்லடா... இனி எப்பவும் என்னால என் காதலை சொல்ல முடியாதே டா .. நான் அப்பாவுக்கு துரோகம் பண்றேனா? எவ்வளவு பெரிய வார்த்தை இது ல்.. எப்பவுமே  ஒரு நண்பனாக பழகுற என் அப்பாவே இந்த விஷயத்துல எதிரியா நிற்கிறாரே ? நான் என்ன பண்ணுவேன் கார்த்தி ? ஐ லவ் யு டா  பட் அதை நான் இனி சொல்ல முடியாது " என்று அன்று முழுதும் இப்படியே கூறி அழுதாள் நித்யா ...

தன்பிறகு வந்த நாட்கள் மிக கசப்பாய் கடந்தது இருவருக்குமே .. காரணமே இல்லாமல் நித்யா விலகி போவது கார்த்திக்கிற்கு பேரதிர்ச்சியையும் கோபத்தையும் தந்தது .. அவனிடம் சேரவும் முடியாமல் ஒதுங்கி இருக்கவும் முடியாமல் திண்டாடினாள் நித்யா ... காதலை சொல்லாமலே காதலுக்காக துடித்த அந்த இதயங்கள் பிரியும் நாளும் வந்தது ...

" கார்த்தி "

" ம்ம்ம் சொல்லு "

" உன்கிட்ட பேசணும் "

" பேசு .... "

" என் முகத்தை பார்க்க மாட்டியா ? "

"... "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.