(Reading time: 20 - 40 minutes)

காதல் நதியில் – 12 - மீரா ராம்

வனைக் கண்டதும் அவளின் கண்கள் சலேரென விரிந்ததுகண்களை கசக்கி பார்த்தாள்ஒருவேளை அவள் காண்பது வெறும் மாயையோ என்றுஏனென்றால் இத்தனை நாட்கள் அவனை கனவில் இவ்வாறு தானே காண்கின்றாள்ஆனால் இன்று அவன் உருவம் மறையவில்லைஎனில்…. இது நனவு தானா?...

விழிகள் நான்கும் அங்கு பேசிக்கொண்டது, தனது துயரை சொல்லியது, தனது காதலை உரைத்தது... தங்களது மௌனக்கண்ணீரையும், தூங்காமல் இருந்த நாட்களையும், உள்ளம் முழுதும் நேசம் மட்டும் நிறைத்து தேடலுன் வாழ்ந்த நிமிடங்களையும் மறக்காமல் தன் துணையிடம் தெரியப்படுத்திக்கொண்டது

நீண்ட நாள் கழித்து விழிகள் ஒன்றோடொன்று இணைந்து பின்னி பிணைந்ததுஅவைகள் பேசாததையா வார்த்தைகள் பேசிவிடப் போகிறது???… இல்லை விழிகள் சொல்லும் காதலுக்கு வார்த்தைகள் தான் வழி விட்டு ஊமையாகி போனதா???

kathal nathiyil

சாகரிக்கு உண்மையில் ஆதர்ஷ் வந்துவிட்டான் என்ற உண்மையே புரியவில்லைஅவன் அசையாமல் கண்ணில் மின்னும் காதலுடன் நிற்பதை உணர்ந்த பின்னரே அவள், தான் காண்பது கனவில்லை என்ற முடிவுக்கு வந்தாள்…. இன்று அதிகாலை எனக்கு கேட்ட அசரீரீபொய்த்துபோகவில்லை

வருவேன் என்றவர் வந்துவிட்டாரா?... உண்மைதானா?...  என்றெண்ணி மகிழ்ந்தவளுக்கு சந்தோஷம் தாளவில்லைஅவளைத் தேடி வந்துவிட்டானே அவளது ராமன்கால்கள் வானத்தில் பறக்காத குறைதான்திக்கு முக்காடி போயிருந்தாள் அவள் அவனை பார்த்துவிட்ட நிறைவுடன்….

அவளின் பரவசம் அவள் விழிகளில் தெரிந்தது

பதிலுக்கு அவன் விழிகள் சொல்லியது,,,

சீதை…. கண்டுவிட்டேன் உன்னை இன்றுஎன் இத்தனை நாள் தவம் இன்று என் கண் சேர்ந்ததே என்னவளேஅன்று நீ துடித்த துடிப்பும் தவிப்பும் நான் பார்க்கவில்லையென்றாலும் என்னால் உணர முடிந்ததுடாஇன்றும் நான் உணர்கிறேன்என்னைக் காணாது நீ…… நீ….. அனுபவிக்கும் இந்த துயரை, நான் இரவெல்லாம் கண் விழித்து கழிக்கின்றேன் என்னுயிரே, உன்னை எண்ணியே

அதை உள்வாங்கிக்கொண்டவளின் மனம் அவனுக்காக ஏங்கியதுஅதை அவள் கண்கள் அழகாக பிரதிபலித்தது

என்னவர் இந்த அபலையைத் தேடி வந்தே விட்டாரா?... எனக்காகவா?....

எனில் என்னை விட்டு சென்றதும் ஏனோ என் ராம்?... 

விட்டு சென்றது நினைவு வர, அவள் கண்கள் துக்க நீரை சிந்தியது இதுவரை சிந்திய ஆனந்த கண்ணீரைப் பொருட்படுத்தாது….

அவளின் விழி நீர் அவனை காயப்படுத்தியது

மனதில் வலியுடன் வெளியே சிரித்து அவள் விளையாட்டு பிள்ளையாக காட்சியளித்ததை அவளைத் தவிர அறிந்தோரும் உண்டோ????....

அவன் விழிகள் மன்னிப்பை யாசகம் வாங்கியது அவளிடம் மிக...

அவனது மன்னிப்பு அவளை எதுவோ செய்ய, அவன் பக்கம் சாய இருந்த அவள் மனதை அன்று அவன் கூறிய வார்த்தை பின்னே இழுத்தது அவனிடம் செல்ல விடாது

ஏன் என்னவளே வர மறுக்கிறாய்?.... என்ன காரணம்என்று அவன் கண்கள் அவளிடத்தில் அதிர்ச்சியுடன் வினவ,

அவள் கண்கள் அதை அவனுக்கு தெரியப்படுத்தியது….

மனைவியாக அவளை அவன் வீட்டிற்கு அழைத்து செல்ல விருப்பம் கொள்கிறேன் இன்றே என்று அவன் அன்று கூறிய வார்த்தை காற்றில் தானே கலந்து விட்டதுஅதன் பிறகு இத்தனை நாள் பிரிவு துயர் அனுபவித்தது அவள் அல்லவா?... ஒரு வார்த்தை, ஒரு சைகை சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் அல்லவா?.. அவன் அவ்வாறு செய்யவில்லையே…. இது இந்த செயல் நியாயம் தானா?....

அவனைப் பற்றி அவளுக்கு தெரியாமல் இருக்கலாம்ஆனால் அவனுக்கு அவளைப் பற்றி ஓரளவேனும் தெரியுமேஎனில் ஏன் தேடி வரவில்லைஅவள் அவனுக்காக காத்துக்கொண்டிருந்ததும், முதல் நாள் அவன் தந்த காதல் இன்பமும் அதன் பின் அவை மாயமாய் மறைந்து போனதில் மெத்தை என்ன பாய் என்ன எதில் படுத்தாலும் உறக்கம் தான் அவளை வரவேற்குமா?...

வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா?...

பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?....”

அவள் விழிகள் கேட்டு விட்டது தனது துணையின் விழிகளிடத்தில்விடை கூறும் முறை இப்போது அவனது விழிகளுக்கானது….

உன்னிடம் சொல்லாமல் சென்றது என் தவறு தான்…. ஆனால் நான் உன்னைப் பற்றி கேட்ட விவரங்கள் என்னை இன்று வரை அடையவில்லையே…. பின் நான் என்ன செய்ய என் சீதை?... எங்கு சென்ற போதிலும் என்னுள் உன் நியாபகம் குறையவில்லையே…. நீ தானேடி நிறைந்திருக்கின்றாய்இவ்வளவு ஏன், அன்று வாள் பிடித்து சண்டை நான் போட்ட நொடியிலும், எனது இந்த உடல், உயிர் உன்னை சேர்ந்தது என என் நெஞ்சில் தோன்றி உரைத்தாயேஅது அந்த நிமிடம் கோடி ஆபத்துகள் என்னை சூழ்ந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தாயேஅது நம் காதலினால் தானே சீதைஅது உனக்குப் புரியவில்லையா என் கண்ணே…?...

நீ கொடுத்த தைரியம் ஒரு புறம் இருந்த போதிலும் எனது கரம் இரத்தம் சிந்திய வேளைஎன்னை அவர்கள் சாய்த்து நான் இறக்க நேரிட்டாலும், உயிர் உன்னை சேர்ந்திட நான் அதற்கு ஆணையிட்டேனே…. அதையும் மீறி நான் உனக்கானவன், நான் உன்னுடன் வாழ வேண்டும் என்ற தவிப்பே அவர்களை அந்த நிலையிலும் நான் பலங்கொண்டு தாக்க வேகம் அளித்ததுஇது காதல் இல்லையா சீதை?... சரிபோகட்டும்அன்று நீரில் என் முன் வந்து, உன் உயிர் என்னோடு இருக்கும்போது நீ மண்ணோடு போவது நடவாது, உன் உயிர் நானென்று உரைத்தாயேஅது காதல் இல்லாமலா என்னவளே…?... சொல்லு..

வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்….

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்….”

காதலினால் தான் அத்தனையும்.... ஒப்புக்கொள்கிறேன்.... எனினும், செங்குருதி வழிய உங்களை நான் கண்ட தோற்றம் இன்றும் என் மனதை பிளக்கும் சத்தம் கேட்கிறதே…. நான் அந்த நிலையிலா தங்களை காண வேண்டும்எதற்காக இந்த காயம் உங்களுக்குவலித்திருக்குமேநிறைய இரத்தம் சிந்தியதேவலித்ததா ராம்?.. அப்போது நான் உங்கள் அருகில் இல்லாமல் போனேனேஅய்யோ….

தங்களை சந்தித்த நாள் என் வாழ்வில் பொன்னாள்அந்த நாள் போன்ற தேன் நாட்கள் என் வாழ்வில் அதன் பின் வரவே இல்லையேஅன்று இரவு அந்த நிலவோடு நான் கதை பேசி தூது அனுப்பினேனேசிரித்து பேசி மகிழ்ந்தேனேஅந்த நிலவும் அன்று சென்றது தான்…. அதன் பின் திரும்பவில்லையே என்னிடம்…  அந்த தேனிலவு நாள் நிதமும் வாடியதே தங்களை நினைத்து அணுஅணுவாய்எதற்காக இந்த சோதனை எனக்கு?....

தேனிலவு நாள் வாட ஏனிந்த சோதனை?....”

அன்று நான் அவசரத்தில் உன்னைக் காண நேரம் கழித்து வந்தேன்நீ சென்றுவிட்டாய்…. ஹ்ம்ம்என் துரதிர்ஷ்டம் அதுவேறு என்ன சொல்ல நான்?... ஆனால் அன்றும் நீ வந்த சேதியை எனக்கு பூக்களினால் தெரியப்படுத்தினாய்…. ஆனால் என்னால் உனக்கு நான் வந்த சேதியை தெரிவிக்கமுடியாது போன நிலையை நான் யாரிடம் சென்று முறையிட?... அந்த நேரம் நான் கொண்ட துயர் யார் அறிவார் என்னவளே?...

தினம் காலையில் உன்னை வான மகளாக தரிசித்து உனக்காக ஏங்கி நீதான் இந்த ஆதவனை தேடி வந்தது போல் உணர்கின்றேனேஇரவெல்லாம் கண் விழித்து நிலாவிடம் எனது பாரத்தை இறக்கி வைக்கின்றேனேஅதனிடம் கேள் சீதைஅது உனக்கு சொல்லும் நான் அனுபவிக்கும் வேதனையை….

வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை….”

என்று இமைகள் மூடிக்கொண்டன அவன் விழிகள்அவளின் விழிகள் அவனது விழிகளை தாக்காத வண்ணம் இமை கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டது அவனது அழகிய விழிகள்

அதை தாங்கிக் கொள்ள இயலாத அவளின் வேல் விழிகள் சோர்ந்து அவள் உடலை தூணில் சாய்க்க வைத்ததுகால்கள் நிற்க முடியாது தூணிடம் தன்னிலை விளக்கம் அளித்ததுஅவனின் வேதனை அவளை ஒரு புறம் கொல்லாமல் கொல்ல, அவன் விழிகளின் செயல் அவளை அவன் மறந்து விட்டானோ என்றெண்ண வைத்ததுஅதை அவள் விழியும் அவனிடம் கேட்டுவிட்டு அசையாமல் பார்த்திருந்தது அவன் கண்களின் தரிசனம் வேண்டி

எனைத்தான் அன்பே மறந்தாயோ….”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.