(Reading time: 20 - 40 minutes)

 

ராம்….”

அந்த ஒரு வார்த்தை அவன் இதயம் தொட்டது சட்டென்று உள்சென்று….

சீதை….” என்றான் அவனும் தடுமாறியபடியே

மன்னிச்சிடுங்க ராம்நான் உங்களை ரொம்ப நேரம் காக்க வைச்சுட்டேன்….”

இல்லடாநான் தான் உன்னைரொம்ப….” என்றவனுக்கு வார்த்தை வரவில்லை இப்போது

வேண்டாம் ராம்விடுங்கநான் உங்களைப் பிரிந்து காயம் கொண்டேனென்றால் என்னை விட அதிக காயம் நீங்கள் தான் கொண்டிருப்பீர்கள்எனக்கு அது புரிகிறது ராம்பெண் நான் அழுது தீர்த்துவிடலாம் எனது காயம் தந்த வலியைஆனால், ஆண் நீங்கள் உள்ளத்தில் அதை மறைத்து வைத்திருப்பதை என்னால் உணர முடிகிறது ராம்கொட்டிடுங்கஎன்னிடம்

என் ராம் கஷ்டப்படக்கூடாதுஅதை என்னால தாங்கிக்க முடியாதுமனதின் வலியை வெளியே சொல்லிடுங்க ராம்அது கண்ணீரின் மூலமாகவோ, இல்லை வார்த்தை மூலமாகவோஎதுவோ ஒரு வழியில்சொல்லிடுங்க ராம்ப்ளீஸ்….” என்று கெஞ்சினாள் அவனிடம் பலமுறை

“…………………….”

பேசுங்கராம்… ….”

“………………………”

ப்ளீஸ்ங்க…. பேசுங்க….” என்றவளுக்கு தன்னை மீறி கண்ணீர் வர,

சட்டென்று அவளின் கண்ணீரை கைகளில் தாங்கியவன்,

இனி நீ அழவே கூடாதுஅதும் நான் உன்னுடன் உன்னருகில் இருக்கும்போது நீ அழவே கூடாதுஇந்த நாள் நீ அழுததை நான் மறக்கவே மாட்டேன் சீதைஎப்படி அழுதாய் நீ?...” என்றவனின் நெஞ்சில் சற்று முன் அவள் அழுதது நினைவு வர, வலியுடன் இமை மூடிக்கொண்டவன், பின், எல்லாம் என்னால் தானே…. சாரிடாகுட்டிமா…” என்றான் வருத்தத்தோடு….

என்னங்கநீங்கமன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டுஇப்படி எல்லாம் இனி பேசாதீங்கப்ளீஸ்அதான் நீங்க வந்துட்டீங்கல்ல, இனி நான் அழவே மாட்டேன்ஆனா நீங்க வருத்தப்படாதீங்க…. நீங்க கஷ்டப்படுறத பார்க்க என்னால முடியலைங்கவருத்தமா இருந்தா என்னிடம் சொல்லிடுங்க ப்ளீஸ்…. உங்களுக்குள்ளே தவிக்காதீங்க...” என்றாள் அவள் கலங்கிய குரலுடன்….

உன்னிடம் நான் சொல்ல ஒரு வழியும் உண்டுஅன்று நான் சொல்லுவேன்அப்போது புரியும் உன்னை நான் காணாது எந்த அளவு தவித்தேன், உன்னிடம் பேசும் வார்த்தைக்காக எந்த அளவு ஏங்கினேனென்று….. அன்று நீ புரிந்து கொள்வாய் உன் மேல் நான் கொண்ட கரையில்லாத காதல் நதியின் ஆழத்தை...” என்றான் தீர்க்கமாக….

அவனின் வார்த்தைகள் அவளின் மனதை தொட்டு இனம் புரியாத ஒன்றை தோற்றுவித்தது…. பாரதியின் கவிதை அந்த நேரம் அவளுக்கு நினைவு வந்தது….

இனம் விளங்கவில்லை…. எவனோ

என் அகந் தொட்டுவிட்டான்….”

ஆம்…. அவளின் அகம் தொட்டுவிட்டவனைப் பார்த்து, வெட்கத்துடன் புன்னகை பூத்தவளை பார்வையை விலக்காமல் பார்த்திருந்தான் ஆதர்ஷ்….

அவனின் பார்வையை கண்டு கொண்டவளுக்கு இன்னும் அதிகமாய் வெட்கம் மலர

இது இது இதை தானே நானும் யாசித்தது…” என்றவன் இன்னும் அவளை நாண செய்ய…..

போதுங்கப்ளீஸ்…. இது கோவில்…” என்றாள் நிறைந்த காதலுடன்….

நீ ரொம்ப அழகு சீதைஅதும்…. இப்படி வெட்கப்படும்போது உன்னை விட்டு பார்வையை அகற்றவே முடியலைடா….”

ஹ்ம்ம்…” என்றவள் சிரித்துக்கொண்டே திரும்பி நடந்தாள்….

சீதைநீ….. கிள…..ம்…..பு….றீ…….யா?....” என்றான் திக்கி….

அவனின் ஏக்கமும், பரிதவிப்பும் அவன் விழி சொல்ல, அதை உணர்ந்தவளுக்கு அவனை மடி மீது சாய்த்துஉங்களை விட்டு நான் எங்கே ராம் போக போறேன்உங்க மனசுல தான நான் இருக்கேன்…” என்று சொல்லி அவன் நெஞ்சம் சாய்ந்திட இவள் உள்ளம் துடித்ததுபிரம்மப்பிரயத்தனம் பட்டு அதனை ஒதுக்கியவள், அவனிடம்,

அப்படி உட்கார்ந்து பேசலாம்ங்க…. நீங்க முட்டி போட்டு இருந்தீங்களே ரொம்ப நேரம்இப்போ கூட நிக்குறீங்கஅதான்……..”

அவளின் தவிப்பையும் துடிப்பையும் பார்த்து கொண்டிருந்தவனுக்கு, அவளின் மனதில் உதித்த எண்ணம் புரிந்ததோ என்னவோ, சின்ன சிரிப்புடன் சரி என்று தலையசைத்தான்….

அவனுக்கும் அவளுக்கும் இடையே நீண்ட இடைவெளி விட்டு அமர்ந்தாள் சாகரிஅதை கவனித்தவன், ஒன்றும் அவளிடத்தில் சொல்லவில்லை…. கேட்கவும் இல்லை

நான் ஊட்டியில் பிறந்தேன்அம்மா, அப்பா, அக்கா, மாமா, என்னோட குட்டிமா, இரண்டு தம்பிங்கஅப்பறம் என் நல்ல ஃப்ரெண்ட்இது தான்உன்னை சந்திக்கும் வரை உள்ள நிலவரம்இனி நீயும் ஒருத்தி நம்ம குடும்பத்தில்….”

நம்ம குடும்பம் என்ற அந்த எண்ணமே அவளுக்கு இனிப்பாக இருந்ததுஎப்போது அவனுடன் அவன் சொன்ன உறவுகளுடன் அந்த வீட்டில் வாழ போகிறோம் என்ற கனவு கண்டாள் அவள்

அப்பாவோட தொழில் எல்லாம் ஊட்டியில் இருக்குநானும் என் தம்பியும் இங்கே சென்னையில் பிசினெஸ் பண்ணுறோம்பட் இப்போ வர இங்கே உள்ள யாருக்கும் தெரியாது நாங்க தான் இதனுடைய ஓனர்ஸ் என்றுஹ்ம்ம்அப்புறம்நீ கூட நம்ம கம்பெனியில் தான் வேலை பார்க்குற…”

என்னது?!!!!!!!!!!!!!!!!!” என்றவள் நிஜமாகவே ஆச்சரிய கடலில் மூழ்கினாள்

உண்மைதாண்டாஅதுவும் நம்ம கிளைகளில் ஒன்றுதான்அதான் உன்னை அடிக்கடி பார்க்கலாம் என்று அன்று உன்னிடம் சொன்னேன்ஹ்ம்ம்உன்னைப் பற்றிய தகவல்கள் என் நண்பனிடம் கேட்டிருந்தேன்அவனும் நம்ம ஜி.எம் தான்அவன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று லீவ் எடுத்துட்டு போயிட்டான்நானும் மறுநாளே லண்டன் போக வேண்டியிருந்ததுஅவனிடமிருந்து இன்னும் தகவல்கள் வரவில்லைநானும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்க முடியாதுடா வேறொருவரிடமிருந்துஅது போக, லண்டன் போன நானும் இன்று தான் வந்தேன்இடையில் ஒரு நாள் இங்கே வந்தேன்ஆனால் நான் வருவதற்குள் நீ சென்றுவிட்டாய்…”

வந்தீங்களா?... என்னை தேடியா?... என்று வியப்புடன் பார்த்தவளை

குட்டிமா நிஜம்தாண்டாஅன்று நான் வந்தேன்நீ கூட மல்லிகைப்பூவை விட்டுட்டு போயிருந்தீயே ராம் என்று அதன் மேலேஅன்றைக்கு போனவன் அதன் பிறகு இன்று தான் திரும்பி வந்தேன் இங்கேமுகில் கிட்ட கூட சொல்லலை இன்னும்சண்டைக்கு வருவான் என்னிடம்ஹ்ம்ம்.. நான் என் தங்கச்சி பெயரை சொல்லி அவனை சமாளித்துவிடுவேன்…”

முகிலன் என்றதும் அவளுக்கு மயூரி-முகிலன் நியாபகம் வர, சே, என்ன சாகரி நீ?... முகிலன் என்று ஊரில் ஒருத்தர் தான் இருப்பாரா என்ன?... பேசாமல் அவர் சொல்லுறதை கவனிடி ஒழுங்காஎன்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்

என்ன யோசனைடா…” என்று கேட்டவனிடம்ஒன்றுமில்லைங்கஅக்கா தானே சொன்னீங்கதங்கை எப்படின்னு தான்யோசிக்கிறேன்….” என்றாள்

…. அதை சொல்லாம விட்டுட்டேனா நான்ஹ்ம்ம்என் தம்பியும் லக்ஷ்மியும் விரும்புறாங்கஅவள் அவனின் ஆபீஸில் தான் வேலை செய்யுறாஅப்போ அந்த பொண்ணும் எனக்கு தங்கச்சி தானேஅதான் சொன்னேண்டா தங்கச்சின்னுஅந்த பெண்ணை என் தம்பிக்கு கல்யாணம் செய்து வைக்குற விஷயமா வீட்டில் பேசிட்டேன் நான்ஆனால் அது அவனுக்கு தெரியாதுசர்ப்ரைஸா இருக்கட்டுமென்று சொல்லவில்லை அவனிடம்

அம்மாவிடம் உன்னைப் பற்றியும் சொல்லிட்டேன்என் சீதாவ நான் பார்த்துட்டேன்னுஇன்னைக்கு மறுபடியும் உன்னை பல நாள் கழித்து பார்த்தேனென்று சொல்லணும் அம்மாகிட்ட…” என்று சொல்லி திரும்பியவன் அவள் அமைதியாக இருக்கவே

சீதைஎன்னாச்சும்மா…?... சீதை…” என்று அழைக்க

…………….. சொல்லுங்க…” என்றாள்

எல்லாம் சொன்னேனே மாநீ கவனிக்கலையா?...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.