(Reading time: 44 - 88 minutes)

 

ரு வாரத்திற்கு முன்பு,

நம்ம ரகுராம் ஜானகியின் கையை உதறிவிட்டு நடந்த அந்நாள் இரவு,

கனத்த மனத்துடன் உறக்கம் வராமல் தவித்தனர் இருவரும் .. தன் செல்போனில் அவ்வபோது ஜானகியை படமெடுத்தது அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்தான் ரகுராம் ..

" காலையில அவ்வளவு பேசியும் உன் மனசுல மாற்றமில்லையே ஜானகி ..நான் அவ்வளவு மோசமானவனா ? ஆயிரம் தேசங்களுக்கு அதிபதி  ஆனாலும், மனம் கவர்ந்த பெண் மனதில் இடம் பிடிக்கவில்லைனா அதை விட பெரும் தோல்வி இருக்கிறதா ? நான் தோத்து போயிட்டேன் ஜானகி .. உன் காதல் விஷயத்தில் நான் தோத்துட்டேன் " என்றவன் எதிரிச்சையாய் ' வாட்ஸ் அப்பில் ' அவளின் பெயர் 'ஆன்லைனில்' இருப்பதை காட்ட, அவன் மனம் வாடியது ..இந்நேரம் ஏன் விழிசிருக்கா?? தூக்கம் வரலையா ? சகீ..................  என்று மனதினுள் நினைத்தவன் " வேண்டாம் நமக்கென்ன வந்தது ? இப்படி யோசிச்சு யோசிச்சுதான் இப்படி இருக்கோம் " என்று எண்ணிவிட்டு செல்போனை அணைத்துவிட்டு தலையணையில் முகம் புதைத்தான் ... ( ஐ ஐ .. அவ்வளவு சீக்கிரம் உங்களை தூங்க விட்டுடுவோமா ரகு ?? )

தூக்கம் வராது தவித்தவன் மீண்டும் அவளின் பெயரை பார்த்தான். 5 மினிட்ஸ் அகோ, என்று காட்டவும் சட்டென எரிச்சலானான் ...அவனின் உள்மனமோ " என்னடா வேணும் உனக்கு ? தூங்கலேன்னா  பீல் பண்ணுற... தூங்கினா கோபப்படுரே? " என கேள்வி கேட்டது ..

" நானே தூங்கலை உனக்கென்ன தூக்கம் ? " என்று முரண்டு பிடித்தவன், அவளை தூக்கம் கெடுக்க  ஒரு பாடலை அனுப்பிஅ வைத்தான் ..அதெநேரம் செல்போன் சிணுங்கவும், ரகுதான் என்று எதிர்பார்த்து முகம் மலர்ந்தவள் அவன் அனுப்பிய பாட்டை கேட்டு உருகி போனாள் .. அவள் அந்த பாடலை ஒலிபரப்ப, ரகுராமும் அதே பாடலைத்தான் கேட்டு கொண்டிருந்தான் ...

"சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

மௌளனமா மௌளனமா

அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

"

பாடலுடனே பயணித்தனர் இருவரும்.. ஜானகியை முதல்முறை பாரத்தை நினைத்து பார்த்தான் ரகுராம் .. ரகுராம் தன் காதலியை பற்றி முன்பொரு நாள் பேசியதை நினைத்து பார்த்தாள் ஜானகி

இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே

இல்லை நின்று கொல்லடி கண்ணே

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே

ஜன்னல் வழியாக வானைப்பார்த்தான் ரகுராம் .. காரிருள் சூழ்ந்து இருந்தது .. அவளின் கூந்தல்  அவனுக்கு ஞாபகம் வந்தது ... அவளோ இனி என் வாழ்வில் விடியலே இல்லையா என ஏங்கினாள்

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது

பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது

கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன

என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய் நியாயமா

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய் மௌனமா மளனமா

என்ன சொல்லப் போகிறாய்?

இரண்டு இதயங்களும் தங்களுக்காக துடிப்பதை நிறுத்தி அவர்களுக்காக துடித்தது .. அழுத விழிகள் சோர்ந்து போக அதற்கு மேல் இம்சிக்காமல் நித்திராதேவதையும் வந்து சேர்ந்தாள்.

ரண்டு நாட்களுக்கு பிறகு ,

 காலை,  ரகுவின் ஆபீஸ் அறையில் புயலாய் நுழைந்த ஜானகி, அங்கு மது அவனுடன் பேசி கொண்டு இருக்கவும் அமைதியாய்  நின்றாள்.

" குட் மோர்னிங் மிஸ் ஜானகி " என்று சிநேகமாய் புன்னகைத்தான் ரகுராம்.. அவன் அப்படி வாழ்த்தி விட்டதால் எல்லாம் சரியாகிவிட்டது என்று நம்ப ஜானகி என்ன குழந்தையா ? ஜானகி என்ற அழைப்பு இப்போது மிஸ் ஜானகி ஆனதை அவளும் கவனித்தாள். அவனைப்போல் போலி புன்னகை பூத்து " குட் மோர்னிங் பாஸ் ... குட் மோர்னிங் மது " என்று விட்டு வெளியே சென்றாள்..அவள் வெளியேறும் நேரம் இருவருமே கேள்வியாய் அவளை பார்க்க, " காபி கொண்டு வர போறேன் " என்றுவிட்டு நகர்ந்தாள். நியாயப்படி ரகுராம்தானே கோபபட வேண்டும் ? அவளின் கோபத்திற்கு என்ன காரணம்? அப்படின்னு அடுத்த எபிசொட் ல சொல்றேன்னு சொன்னா இப்போ கிச்சன்ல இருக்குற தக்காளி முட்டை எல்லாமே பறக்கும் என்ற காரணத்தினால் ஆயுதங்கள் கீழே போடுங்க ..நானே சொல்லிடுறேன் ...

எப்பொழுதுமே அவளை ஆபீசிற்கு கூட்டி வரும் ரகுராம், இரண்டு நாட்களாக டிரைவரை அவளின் வீட்டிற்கு அனுப்பினான்.. காரணம் கேட்டதற்கு, அவனுக்கு ஆபீசிற்கு அதிகாலையிலேயே போக வேண்டுமாம் ... அதேபோல் மாலையிலும் டிரைவர் தான் ! காரணம் அதிக வேலை பளுவாம் ( நம்பிட்டேன் பாஸ்) ... மேலும் அவர்களின் அறையில் மூன்றாவது உறுப்பினராக மதுவும் அங்கு சேர்ந்தாள்...காரணம் கேட்டதற்கு இந்த ஒரு வார ப்ராஜெக்ட் சீக்கிரம் முடிக்க அவனுக்கு அவள் உதவி அவசியமாம் .. இதை ஜானகியும் நம்பிவிடவில்லை.. தன்னை தவிர்ப்பதற்கு அவன் உண்டாக்கி கொண்ட காரணங்களே இவை .. அதற்கும் தானும் ஒரு காரணம் என்பதால் அவள் அமைதி காத்தாள்.. இருப்பினும் இந்த இரண்டு நாட்களில் அவளில் தோன்றும் மாற்றங்கள்? மதுவிடம் ரகுராம் பேசும்போது அவளுக்குள்ளே உண்டாகிய கோபம் ? இவை அனைத்தும் இலைமறை காயை இருந்த, கனிந்திருந்த அவளின் இதயத்தை காட்டியது .. தன் மனம் அவன் வசம் சென்றுவிட்டதை உணர்ந்திருந்தாள் ஜானகி .. இருப்பினும் என்ன பயன் ? என்ற ஆதங்கத்தில் இருந்தவளிடம், வாசலில் இருந்த வாணி

" என்ன மேடம் கேட்கவே பரிதாபமா இருக்கே " என்றாள்..

" ஏன் "

" என்னாச்சு சொல்லுங்க ? "

" நான் என்னத்தை சொல்லுங்க ? "

" சரி வரேன் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.