(Reading time: 44 - 88 minutes)

 

" ரு 2 டேஸ் ல நான் போனா போதும்தானே ? "

" கார்த்தி ??? "

" இது பாரு நித்தி , நீ எடுக்குற இந்த முடிவு என்னை பொருத்தவரை முட்டாள்தனம் தான் .. இது ஒன்னும் தீர்க்க முடியாத பிரச்சனை இல்ல ..பட் அதை நீ உணரனும் . என்னால உன்னை பேசி சமாதானப்படுத்த முடியும் ..ஆனா நீ அடுத்து ரெண்டு நாளுல மறுபடி அப்படித்தான் சொல்லுவே... இதுக்கு ஒரு முடிவு வரணும்னா இது எவ்வளவு தப்பான முடிவுன்னு நீ உணரனும் "

" ... "

" நாம ஒன்னும் சின்ன குழந்தை இல்ல .. உன்னை விட்டு நான் தூரமா போய்ட்டா என்னை உன் மனசுல இருந்து உன்னால தூக்கி எறிஞ்சிட முடியுமா ? "

" கார்த்தி "

" வேணாம் நீ பதில் பேசாத .. உன் பதிலை செயல்ல காட்டு ... என்னைக்கு நீயா கூப்டுறியோ அன்னைக்குதான் நான் உன் வாழ்க்கையில வருவேன் .. ஆனா எப்பவும்  நீ என் மனசுல இருக்குறதும் நான் உன் மனசுல இருக்குறதும் மாறாது.. "

" என்னை மன்னிச்சிரு கார்த்தி "

" நீ ஏன் மா மன்னிப்பு கேட்குற ? உன் அப்பா கொடுத்து வெச்சவர் இப்படி ஒரு பொண்ணு கிடைக்க .. பொறாமையா இருக்கு .. வருங்கலத்துல நம்ம பொண்ணும் அப்படிதான் இருப்பான்னு நெனைசுகுறேன்..கண்டிப்பா உன்மேல கோபம் வராது .. நீ உடம்ப பார்த்துக்கோ ...அசோகவனத்து  சீதை மாதிரி இல்லாமல் அலைபாயுதே ஷாலினி மாதிரி ஜாலியா இரு .. எனக்கு நம்பிக்கை இருக்கு நான் உன்கிட்ட வந்துடுவேன் ..நிச்சயம் வருவேன் "

அவன் சொனனது பலித்தது .. அந்த நாளும் வந்தது... இதோ அவளின் பழைய கார்த்தி அவள் கரம் பற்றி அவளருகில் அமர்ந்திருக்கிறானே !

" துக்கப்பறம் நான் உன்னை போன மாசம் பார்த்தேன் கார்த்தி"

" தெரியும் .. சொல்லபோனால் நான் அங்க வந்ததுக்கு காரணமே ஆகாஷ் தான் "

" ஆகாஷா? " என அனைவரும் கோரசாக கேட்க

" நானேதான் " என்றான் ஆகாஷ்

" ஹே  எப்படிடா ? " என்று ஆச்சர்யமாய் கேட்ட தன் தங்கையை பார்த்து புன்னகைத்தான் ஆகாஷ் ...

" நித்து , நீ என்னதான் நாள் முழுக்க குரங்கா இருந்தாலும், அர்த்த ராத்திரியில மோகினி பிசாசு மாதிரி நம்ம தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து நீயும் கார்த்தியும் காலேஜ்ல பாட்டு பாடிய வீடியோ எல்லாம் பார்த்து பார்த்து அழுறதும், சிரிக்கிறதும் எனக்கு தெரியும் .... கார்த்தி ஊட்டி விட்டு போகும்முன்னாடி என்கிட்ட பேசிட்டுதான் போனான் .. நாங்க டச் ல தான் இருந்தோம் "

"அடபாவிங்களா ? " என்ற ஜானகி , கார்த்தியின் பக்கம் திரும்பி

" பட் சிவா நீங்க அன்னைக்கு எங்களை சேர்த்து வெச்ச ப்ளான் அர்ஜுன் மாமா தந்ததுன்னு சொன்னிங்களே ???? "

" ஹாஹா சுருக்கமா சொல்லனும்னா, நான் ஒட்டியில் கார்த்தி.. சென்னையில் சிவா ஐ பி எஸ்.. சென்னை வந்த பிறகுதான் அர்ஜுனனும் நானும் ப்ரண்ட்ஸ் ஆனோம் "

" ஆனா, இனி நோ ஐ பி எஸ்... இப்படி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் லுக் லாம் உனக்கு ஒத்து வராது ... ஒழுங்கா வேலைய ரிசைன் பண்ணு ... எனக்கு பழைய ரோமியோ கார்த்தி தான் வேணும் "

" உத்தரவு லூசு பொண்ணே "

" டேய் என்னடா சரின்னு சொல்லுற ? " என்றான் ஆகாஷ் .. அவனை பார்த்து புன்னகைத்த கார்த்திக், நித்யாவை தோளோடு அணைத்து

" பாவம்டா என் நித்தி ரொம்ப கஷ்டபட்டுட்டா .. இனி அவ என்ன சொல்றாளோ அதுதான் எனக்கு வேதவாக்கு " என்றான்...

"அவசரபட்டுடியே நண்பா, இனி இந்த குரங்கு உன்னை குட்டிகரணம் போடா வைக்கும்  பாரு " என்றான் அர்ஜுனன்....

" பிரின்ஸ், என்னை குரங்கு குரங்குன்னு சொல்லி கடைசியா உங்களுக்குத்தான் குரங்கு சேஷ்டை செய்யுற குழந்தை பிறக்கும் பாருங்க " என்றாள்....

" ஹ்ம்ம் நான் ரெடிதான் .. எங்க மேடம் தான் இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகலையே " என்று சுபியை பார்த்து கண் சிமிட்ட

ரகுராம்

" அஹெம் அஹெம் மச்சான் நாங்களும் இங்க இருக்கோம் " என்றான்

" அதுக்காக நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது ரகு " என்று அர்ஜுன் பாவமாய் சொல்லவும் மீண்டும் சிரிப்பலை எழுந்தது .. வாய்விட்டு சிரித்த தன் தோழி ஜானகியை ரசித்து பார்த்தாள் சுபத்ரா .

அர்ஜுனன் ரகசிய குரலில்

" சுபி செல்லம் இதெல்லாம் ஓவர் " என்றான்

" என்ன அஜ்ஜு"

" உன் ஹீரோ நான் இங்க இருக்கும்போது நீ என்ன ஜானகியை பார்த்திட்டு இருக்க ? "

" சந்தோஷமா  இருக்கு அர்ஜுன் .. ஜானகியை இப்படி பார்க்க "

" .."

" அவளை முதன்முதலில் பார்த்தபோதே நான் என்ன முடிவெடுத்தேன் தெரியுமா ? "

" சொல்லுங்க தெரிஞ்சுக்குறேன் இளவரசியே "

" ஜானகி உதட்டுல இஉக்குர சிரிப்பு அவ கண்ணுல வரல  .... எப்படியாச்சும்  அவ கண்களையும்  சிரிக்க வைக்கனும்னு  நெனைச்சேன் .. "

" ஹ்ம்ம் இப்போ சிரிக்கிதா "

" ஹான் ? "

" அவ கண்ணுதான் "

" ஹ்ம்ம் ஆமா  ஜோரா சிரிக்கிறதே "

" ஐ லவ் யு கண்மணி"  என்று அவன் ரகசியமாய் கிசுகிசுக்க, கிருஷ்ணன்

" மச்சான் என்ன சொன்ன ? சரியா கேட்கலையே ! " என்று முன்பு அர்ஜுனன் சொன்னது போல சொல்லி காட்டினான் ..

உடனே அர்ஜுனன் " அதுவா மச்சான், என் வீட்டுல ஒன்னும் தெரியாத ஒரு அப்பாவி பொண்ணு இருந்தா, அவளை ஊட்டியில தொலைச்சிட்டேன் அதான் பார்த்தியான்னு கேட்டேன் " என்றபடி ஜானகியை பார்த்தான் ..

" ஓகே எனக்கு தூக்கம் வருது பொய் தூங்குங்க குட் நைட் " என்று எழுந்தாள் ஜானகி ..

" ஹே ..இந்த கதையே இல்லை ... " ( ஆமா அல்ரெடி உங்க கதையை நான் சொலலைன்னு பல பேரு கொலை வெறில இருக்காங்க .. )

" டேய் ரகு , அவதான் போறான்னா நீயும் எழுந்துடுவியா ? உன் கதையை கேட்க தானே நானும் நித்யாவும்  பாய் தலைகாணியை எல்லாம் கொண்டு வந்தோம் ? " என்றாள் சுபத்ரா ..

" அதானே " என்று அனைவரும் ஒத்துபாட, அதன் பிறகு அவர்களின் ப்ளாஷ் பேக் இனிதாய் ஆரம்பமானது ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.