(Reading time: 44 - 88 minutes)

 

ன்று மாலை துள்ளலுடன் வீட்டினுள் வந்த நித்யா தன் தந்தையின் கலையிழந்த முகத்தை பார்த்து குழப்பமானாள்... பொதுவாக எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் கூட அவர் துவண்டு போய் அவள் பார்த்ததே இல்லை .. அதுவும் மாலைநேரம் அவளுக்காக அவர் புன்னகையுடன் காத்திருப்பதும், அவள் அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு  சலுகையுடன் கொஞ்சிகொள்வதும் வழக்கமான ஒன்று .... அப்படி இருக்கும்போது அப்பாவுக்கு ???

" அப்பா "

" ஓ .,..வாம்மா "

" என்ன வாம்மா ? "

" இப்படித்தான் மகளை வரவேற்பிங்களா? "

" ..."

" என்னப்பா? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ? இந்த ஆகாஷ் எங்க ? "

ஆகாஷ் என்றதும் அவர் முகம் மீண்டும் வாடுவதை கவனித்தவள்,

" என்னாச்சு பா .. ஆகாஷ் என்ன பண்ணான்?"

" அது "

" சொல்லுங்க பா "

" நான் ஆகாஷை அடிச்சுட்டேன் மா "

" அப்பா ???? "

" ஆமா நித்து"

அவரின் பேச்சில் கடுகளவும் நம்பிக்கை வரவில்லை நித்யாவிற்கு... பிள்ளைகளை அடித்து வளர்ப்பதே சிறந்த வழி என்பதற்கு எதிர்மாறான தந்தை ராதாமோகன்.. அப்படி பட்டவரா தமையனை அடித்தார் ?

" ஆகாஷ் என்ன பண்ணான் ? "

" ...."

" எங்க அப்பாவை பத்தி எனக்கு நல்லா தெரியும் பா... காரணம் இல்லாமல் நீங்க கோபப்பட மாட்டிங்க .. சொல்லுங்க ஆகாஷ் என்ன பண்ணான் ? "

" அவன் எப்பவும் போல, இன்னைக்கும் கார்த்தி பத்தி பேசினான் "

" என்னன்னு "

" ஒருவேளை அவர்களுக்குள்  காதல் இருக்கலாமே பா .. அப்படி இருந்த என்ன தப்பு ? என்னத்தான் நீங்க  பெத்தவங்களா இருந்தாலும் சில விஷயங்கள் நீங்க  விட்டுகொடுத்து தான் போகலாமே பா  " என்றவரின் குரலில் மெல்ல இறங்கியது ....

" ஐயோ ஆகாஷ்?? எனக்காகத்தான் அடி வாங்கினியா ? அப்பா நான் எப்படி உங்ககிட்ட என் மனசை சொல்லுவேன் ? ஆகாஷ் சொன்னது  எந்த அளவுக்கு உங்க மனசை பாதிச்சு இருந்தா இப்படி அண்ணன் மேல கை நீட்டி இருப்பிங்க ? இதை எல்லாம் கடந்துதான் நான் காதலிக்கணுமா? அவனை அடிக்கிறதுக்கு பதிலா என்னை அடிச்சிருக்கலாமே பா... நீங்க  அவன் மீது காட்டிய கோபம் என் மீது நீங்க வெச்ச நம்பிக்கையின் அடையாளம்.. உங்க நம்பிக்கையையும் அன்பையும்  உடைச்சிட்டுதான் நான் காதலிக்கணுமா ? ..  வேணாம் பா .. வேணாம் .. நான் என் காதலை சொன்னா நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்க அப்பா .. ஆனா என் வலியை கார்த்தி புரிஞ்சுப்பான் .. நான் அவன்கிட்டயே பேசிக்கிறேன் .. எப்பவும் உங்க நித்து உங்க நித்துவாகவே இருக்கேன் " என்று மனதிற்குள் முடிவெடுத்தவள், தந்தையிடம் பதில் சொல்லாமல் ஆகாஷின் அறைக்கு சென்றாள்...

ஆகாஷ் எவ்வளவோ சொல்லியும் " எனக்கு துளியளவும் கார்த்தி மீது காதலே இல்லை " என்று பொய் உரைத்தாள்..அதன் பிறகு தனக்கே உரிய குறும்புத்தனத்தை வலுக்கட்டாயமாய் முகத்தில் நிறுத்தி அவனையும் சிரிக்க வைத்து, தந்தை -மகன் இருவருக்கும் சமாதனம் செய்து வைத்தாள்... அவள் மனம் மட்டும் காதல் தீயில் எரிந்துகொண்டிருந்தது...தொலைகாட்சியில் ஒலித்த அந்த பாடல் காட்ச்சியும் அவளின் தீயுக்கு நெய்யுற்றி வேடிக்கை பார்த்தது ..

ஆரிராரோ ஆரிராரோ

ஆனந்தம் தந்தாயே

தோள்களிலே தாங்கி என்னை

அன்பினில் வென்றாயே

நேசத்திலே உள்ள சுகம் வேறேதும் தாராதே

பாசத்திலே வாழ்ந்த மனம் வேறெங்கும் போகாதே

வேறெங்கும் போகாதே

தற்குமேல் கண்ணீரை அணைபோட்டு தடுக்க இயலாமல் தனதறைக்கு ஓடினாள் நித்யா .... உயிரை தேக்கி வைத்து தன் கார்த்தியிடம் கடைசியாய் பேசுவது இதுதான் என்று முடிவெடுத்தவள் அவனை போனில் அழைத்தாள்...

" ஹெலோ "

" நித்த்த்த்த்த்த்த்தி???  என்ன  மாமாவை விடுட்டு  வீடுக்கு போக முடிலையா? "

" .."

" ஹெலோ .... நித்தி ??"

" ம்ம்ம் ... ஆங்... இல்ல அப்படி இல்ல "

" ஏன் உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு ? "

" ஒன்னுமில்லையே "

" பொய் "

" ம்ம்ம் ஆமா பொய்தான்.."

" என்னாச்சு சொல்லு "

" கா............ "

" சொல்லுடா "

" கார்த்தி எனக்காக ஒன்னு செய்வியா ? "

" ம்ம்ம் காதலி முதல் தடவை கேட்குற, செய்யலேன்னா எப்படி ? சொல்லு "

" ... "

" சொல்லுமா ..."

"  நீ என்னைவிட்டு போய்டு கார்த்தி "

" வாட் ??? "

" எஸ் ..என் கண்ணுல படாதே ப்ளீஸ் "

" என்னாச்சுன்னு சொல்லு ? "

"..."

" சொல்லுன்னு சொன்னேன் .. "

நடந்ததை  கூறி முடித்தாள் நித்யா ..

" கார்த்தி "

" ம்ம்ம் "

" ... "

" என்ன சொல்லு ? "

" ..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.