(Reading time: 18 - 35 minutes)

 

குராமா " ஆமா டா... நித்யாவின் ஜொள்ளு தாங்களே " என்றான் ...

உடனே அர்ஜுன் " நான் சொல்லனும்னு நெனச்சேன் , அதுக்குள்ள நீயே சொல்லிட்டே "என்று ஹாய் 5 கொடுத்தான் ..

அர்ஜுனன் அப்படி சொன்னதும் நித்யா கொலைவெறியில் அவனை துரத்துவாள் என்று அனைவரும் காத்திருக்க, அவளோ

" ம்ம்ஹ்ம்ம்ம் நாங்க இப்போ கல்யாணம் பண்ணிக்கல " என்று அமைதியாய் சொன்னாள். கார்த்தி உட்பட அனைவரும் அவளை கேள்வியுடன் பார்த்தனர் ...

" ஏண்டி இப்படி சொல்லுற ? மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத.. நானே உன்னை கொன்னுடுவேன் "

" ஹே நீலாம்பரி செல்லம் கூல் கூல் .. கல்யாணம் தான் இப்போ பண்ணிக்கல நு சொன்னேன் .. மத்தப்படி நான் எதுவும் அபத்தமா சொன்னேனா ? லூசு "

" சரி அப்போ நீ இப்படி சொல்ல ரீசன் இருக்குமே அதென்ன சொல்லு மங்கி"

" சொல்றேன் பிரின்ஸ் " என்றவள் கார்த்தியின் அருகில் நின்றாள்.

" எனக்கும் கார்த்திக்கும் ஒரு லட்ச்சியம் இருக்கு.. அதை அட்லீஸ்ட் ஆரம்பிச்ச பிறகு நாங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்போம் " என்று அவனை பார்த்து கண் சிமிட்டினாள்.. முதலில் அவனுக்கு எதுவும் புரியவில்லை .. திடீரென்று ஏதோ பொறிதட்ட

" ஹே நிஜம்மாவா டா ? " என்றான்

" ம்ம்ம்ம்ம் " என்றாள் நித்யா .,...

" ஹே என்னனு சொல்ல போறிங்களா இல்லையா ? " என்றாள் சுபத்ரா...

" நான் சொல்றேன் மா .... எனக்கும் நித்யாவுக்கும் சொந்தமா ஒரு மியுசிக் பேண்ட் உருவாக்கனும்னு ஆசை ..அதுவும் சின்ன பசங்களை வெச்சு குறிப்பாக ..." என்றவனின் பார்வை ஒருமுறை நித்தியை பெருமையுடன் பார்த்தது ...

" அதுவும் மாற்றுத் திறனாளிகளை வைத்து .... "

" ..."

" எனக்கு இந்த ஐடியா ஏற்கனவே இருந்துச்சு ... ஒரு தடவை நித்தி கிட்ட இதைசொன்னபோதுதான் அவளுக்கும்  இதே ஐடியா இருக்குறது தெரியும் .. " என்று சொல்லி புன்னகைத்தான் .. அனைவருக்குமே அவர்களை பார்க்க ஆச்சரியாமாக இருந்தது .. அதுக்கு பிறகு என்ன ? பாராட்டு, பாசம் , பாடல் , கிண்டல் கலாட்டான்னு  அன்றைய இரவு அழகாய்  விடிந்தது ..

தெளிந்த நீரோடையாய், மகிழ்ச்சியும் நிம்மதியுமாய்  ஒரு வாரம் கடந்ததே தெரியவில்லை .,. தங்கள் பிள்ளைகளின்  மனம் அறிந்த பெற்றோர்கள்  அவர்களின் திருமண ஏற்பாடுகளை பற்றி முடிவெடுக்க துவங்கினர் .. அதை அறிந்த நம்ம ஜூனியர்ஸ் சும்மாவா இருப்பாங்க ? ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு ஒவ்வொரு மணித்துளியையும் காதலில் திளைத்து லயித்தனர் .....

எல்லாம்  நல்ல போயிட்டு தானே இருக்கு ? அப்பறம் என்ன? அப்படின்னு கேட்குற நேரம் ரகுராமுக்கு குட்டி ஹார்ட் அட்டேக்  கொடுக்க அங்கு வந்து சேர்ந்தாள் சுபத்ரா...

குராம், சந்திர பிரகாஷ் , சூர்யா பிரகாஷ் மூவரும் கம்பனி விஷயமாக பேசிகொண்டிருக்க அபிராமியும் சிவகாமியும்  சமையல் அறையிலிருந்தனர் .... அப்போ நம்ம கிருஷ்ணா - மீரா எங்க ? அதை அப்பறமா சொல்லுறேன் ......

" அப்பா "

" சொல்லு சுபா "

" நான் நாளையில் இருந்து ஆபீஸ் கு போறேன் "

அவளிடம் ஏற்கனவே பேசிவிட்டதால் சந்துருவும், சூர்யாவும்

" சரி டா போய்ட்டு வா " என்றனர் ...

ரகுராமா " அய்யயோ இவ ஆபீஸ் வந்தா , அப்போ ஜானகி ? நம்ம திட்டம் எல்லாம் போய்டுமே ? " என்று அதிர்ந்தான் .. ( ஆமா நம்ம ரகுராம் சாரும்  ஜானகிக்கு மறுநாள் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருந்தார் ..பட் டூ பேட் இப்போ என்ன பண்ண போறீங்க பாஸ் )

" நீ ...நீ ... நீ..... நீ எதுக்கு  நம்ம ஆபீஸ் கு வர்ற ? "

" நம்ம ஆபீஸ் ஆ ?  இந்த பேக்கு ஏன் உளறுறான் .. நான் அர்ஜுன் ஆபீஸ் கு தானே போறேன் ??? " என்று நினைத்தவள் தந்தையை பார்க்க அவர் கண்ணடித்தார்... அவரின் சமிக்ஞையில் புரிந்தவளாய் உடனே

" அதான் நீயே சொன்னியே ரகு .. நம்ம ஆபீஸ் நு .. ? நம்ம ஆபீஸ் நு நான் வராமல் வேற யாரு வருவா ? " என்று கேட்டாள் ...

" இல்ல சுபா நீ சின்ன பொண்ணு? "

" சின்ன பொண்ணா ? நானே படிச்சு  முடிச்சிட்டேனாக்கும் .. இனி நான் ஆபீஸ் போகலாம்தானே பெரியப்பா ? " என்று சூர்யாவை பார்த்தாள் ..

அவரும் " ஆமாடா " என்றார் ...

" அப்பா இப்போதானே பா உங்ககிட்ட சொன்னேன் ? " என்று பார்வையால் வினவியவனை பார்த்து சிரித்து விட்டு நம்ம சூர்யாவும் சந்துருவும் எஸ்கேப் ஆகிவிட , பாவமாய் அமர்ந்திருந்தான் ரகுராம் ..

" என்னாச்சு ரகு ? "

" ப்ச்ச் ... அப்போ நிஜம்மா நீ வரியா ? "

" ஆமாடா ... "

" சரி " என்றவன் அமைதியாய் தன்னறைக்கு சென்றான் .. நாளை நடக்கவிருப்பதை  ஒரு முறை ஒத்திகை பார்த்தவன், ஜானகி மேல சுபத்ராவிற்கு அதீத அன்பு இருப்பதினால் நிச்சயம் அவள் மறுக்க மாட்டாள் என்று நம்பி நிம்மதியானான்.. உடனே கைப்பேசியை எடுத்தவன் ஜானகியை அழைத்தான் ..

" ராம் ... "

" சகி "

" நானே உங்களுக்கு கூப்பிடனும்னு நெனச்சேன் ..."

" அப்படியா ? என்ன விஷயம் டா ? "

" உங்களுக்கு தெரியாதா ? "

" என்னடா ? "

" வர வர உங்க வாலுத்தனம் தாங்கல ராம்"

" அப்படி என்ன பண்ணேன் ... "

" ம்ம் நீங்க அனுப்பின பார்சல் கிடைச்சது ... "

" ஹே வாவ் .. உனக்கு அந்த புடவை பிடிச்சிருக்கா ? "

கருநீல நிறத்தில்  அழகான முத்துக்கள் கோர்க்கப்பட்டு, மிக நேர்த்தியாய் இருந்தது அவன் தந்த புடவை .. அதை கைகளில் ஆசையாய்  தொட்டு பார்த்து ரசித்து கொண்டிருந்தவளை பார்த்து அவன் கேட்கவும்

" பிடிச்சிருக்கவா ? விட்டா இப்போவே கட்டிப்பேன் ராம் " என்றாள்...

" இன்னைக்கு வேணாம் டா ... நாளைக்கு  கட்டிட்டு வா ... "

" நாளைக்கா ஏன் ராம் ? "

" நாளைக்கு ஆபீஸ் ல ஒரு மீட்டிங் இருக்கு டா "

" மீட்டிங் ஆஅ ? எனக்கு எதுவும் தெரியாதே ? என்ன மீட்டிங் ? ஏதும் ஹெல்ப் வேணுமா பா ? "

" ஹே போதும் செல்லம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ..  நீ ஆபீஸ் கு வா ... அப்பரம் சொல்றேன் ... "

" ம் ஏதோ சொல்றிங்க .. நானும் நம்புறேன் .. ஆமா கேட்கனும்னு நெனச்சேன் .. அங்க இருந்து நம்ம வீட்டுக்கு வர 15 நிமிஷம் தான் ஆகும் ..இந்த புடவையை நீங்களே உங்க கையால தந்திருக்கலாம் லே .. இதுக்கு போயி கொரியர் அனுப்புறிங்களே...அநியாயம் ராம் .. பானு அத்தை என்னை எப்படி ஓட்டுனாங்க தெரியுமா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.