(Reading time: 14 - 27 minutes)

 

து பார்த்துக்கலாம் கௌரி.  இந்த செலவெல்லாம் யோசிச்சுதானே கல்யாண ஏற்ப்பாடு பண்ண ஆரம்பிச்சுது.  அதுனால நாங்க தயாராத்தான் இருக்கோம்.  நீ கவலைப்படாதே.  ஜானு,  இப்போ தேவைப்படற அந்த  7 லட்சத்துல, பத்து மாமா 2 லட்சம் தரேன்னு சொல்லிட்டார்.  நான் வேண்டாம்ன்னு சொன்னதுக்கு கல்யாணம்ங்கறது ரெண்டாத்துக்கும்தான் ராமன்.  உங்காத்துப் பொண்ணை எங்காத்துக்குக் சந்தோஷமா கூட்டிண்டு போகப் போறோம்.  செலவு பாதிப் பாதி பண்ணலாம் அப்படின்னு சொன்னார்.  அப்புறம் நான் பேசிப் பேசி 2 லட்சம் வேணா வாங்கிக்கறேன்னு சொன்னேன். “

“இது எப்போன்னா நடந்தது?  நீங்க என்னண்ட சொல்லவே இல்லையே”, என்று ஜானகி அங்கலாய்க்க.

“இல்லை ஜானகி நேத்திக்குதான் திடீர்ன்னு சம்மந்தி ஆபீஸ்க்கு வந்து வெளில போய்ப் பேசலாம்ன்னு கூட்டிண்டு போய் சொன்னார்.  நானும் வேண்டாம்ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.  மனுஷன் முடியவே முடியாது.  வாங்கிண்டுதான் ஆகணும்ன்னு சொல்லிட்டார்”, என்று ராமன் சொல்ல.  இத்தனை நல்ல மனிதர்களை நாம் தவறாகப் பேசி விட்டோமே என்று மீண்டும் ஒரு முறை வேதனைப் பட்டாள் கௌரி. 

அதற்கு ஏற்றார்ப் போல் ஜானகியும்,  “பாரு கௌரி, எத்தனை அனுசரணையா இருக்கா.  நீயும் அங்கப் போனதுக்கப்பறம் அவாளை நன்னாப்  பார்த்துக்கணும்.  நீ பார்த்துக்கறியோ இல்லையோ, மாப்பிள்ளை  அவாத்துக்குப் பண்றதை குறை சொல்லாம,  முடிஞ்சவரை அவருக்குத் துணையா இருக்கணும்.”, என்று அறிவுறுத்தினாள்.

“சரி ஜானு, மத்த செலவுக்கு  நாம குபேரன் financeல போட்ட டெப்பாசிட் 4 லட்சம் இருக்கு.  அப்புறம் ஒரு லட்சம்தான்.  அது இனிமே வர சம்பளம் அது இதை வச்சு சமாளிச்சுக்கலாம்.  நான் நேத்திக்கு ஆபீஸ்ல இருந்து வர்றச்ச finance agencyல பேசிட்டு பணம் எடுக்க என்ன ப்ரோஸிஜர்ன்னு கேட்டுண்டு வந்தேன்.  அவா இப்போ எடுத்தா கிட்டத்தட்ட 80,000 தள்ளும்.  இன்னும் 2 மாசம் கழிச்சு எடுத்தா  முப்பதாயிரம்தான் போகும்ன்னு சொன்னா.  நானும் சரின்னு எடுக்கறதுக்கு என்ன form வேணுமோ அதை மட்டும் வாங்கிண்டு வந்துட்டேன்.  இன்னும் 2 மாசம் கழிச்சே எடுத்துக்கலாம்.   அடுத்த வாரத்துலேர்ந்து சத்திரம் பார்க்க ஆரம்பிக்கலாம்.  இப்போலாம் 6 மாசம் முன்னாடி பார்க்க ஆரம்பிச்சாலே சத்திரம் கிடைக்க மாட்டேங்கறது.  சத்திரம் கிடைச்சுட்டா மத்ததுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம்.” என்று சொல்லி முடித்தார் ராமன்.

“நீ சொல்றா மாதிரி கல்யாணம்ங்கறது  huge ஸ்பென்டிங்தான் கௌரி,  ஆனால் அதனால கிடைக்கற பலன் நிரந்தரம் ஆச்சே”, என்று ஹரி படு சீரியஸ்ஸாக பேச

“என்னடா நிரந்தர பலன் கண்டுட்ட நீ கல்யாணத்துல?” என்று கௌரி கேட்க

“நீ ஆத்தை விட்டுப் போறியே, உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாமே, அதுதான்.  அம்மாக்கு வேற இனி BP எல்லாம் குறைஞ்சுடும்.  சோ டாக்டர் செலவும் இல்லை.  எத்தனை  நன்மைகள் பாரு.  மத்த நன்மைகளை உத்தேசித்து முதல்ல கொஞ்சம் கஷ்டப்படலாம், தப்பில்லை.”, என்று வம்பிழுக்க ஆரம்பித்தான்.  

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.