(Reading time: 25 - 50 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 04 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ன்பே அன்பே எல்லாம் அன்பே

உனக்காக வந்தேன் இங்கே

சிரித்தாலே போதும் என்றேன்

மழை காலம் கண்ணில் மட்டும்

வேண்டாம் என்பேன்

பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

Ithanai naalai engirunthai

அதிரடியாய் பைக்கை நிறுத்திவிட்டு வந்தவனின் செல்போன் அழகாய் சிணுங்கியது . கண்களில் சிரிப்புடன் முகில்மதியை நோக்கி வந்தான் அன்பெழிலன் .. பெயருக்கு ஏற்றார் போல அன்பு செலுத்துவதையே எழிலென கொண்டவன் ...

" வந்துவிட்டாயா ? இத்தனை நாள் எங்கிருந்தாய் ? இது நிஜம்தானா ? இன்னும் நான் உயிரோடுத்தான்  இருக்கிறேனா ? என்னால் சுவாசிக்க  முடிகிறதா ? " என அதிர்ச்சியில் இருந்தாள் முகில்மதி.... மித்ராவோ இத்தனை நாட்கள் தன்னை பார்க்க வராத ஆருயிர் நண்பனை கண்டதும் கோபமாய் திரும்பி நின்றுகொண்டாள்.. ஆமாங்க, நம்ம அன்பெழிலன் மித்ராவின் நண்பன்தான் ... சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல படிச்சு, ஒரே டீச்சர் கிட்ட அடி வாங்கி, ஒரு தட்டில் சாப்பிட்டு  கிட்டதட்ட தளபதி படத்துல வர்ற தேவா- சூர்யா மாதிரி இருந்தாங்க ..... ஆனா ஒரே ஒரு வித்தியாசம் அன்பெழிலனுக்கு  சிவில் இன்ஜினியரிங் ல தான் ஆர்வம் .. அதிலும் சில பல காரணத்தினால் மித்ராவை பிரிஞ்சு அவன் டெல்லியில் படிக்க வேண்டிய சூழ்நிலை .. அதில் முக்கியமான ஒரு காரணம் நம்ம முகில்மதிதான்... சரி வாங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம் ..

" அடடே வாப்பா  அன்பு எப்படி இருக்க ? " - தேவசிவன்

" அப்பா நீங்க ஒன்னும் அவனை கொஞ்ச வேணாம் .. அவனை முதல்ல போக சொல்லுங்க "

"அடியே .. என்ன பேச்சுடி பேசுற ? பாவம் புள்ள எவ்ளோ நாள் கழிச்சு நம்மளை எல்லாம் பார்க்க வந்துருக்கான் .. நீ என்னடான்னா மூஞ்சிய தூக்கி வெச்சுகிட்டு நிற்குற? தோசை கரண்டிய தூக்கவா ? " என்று மிரட்டினார் சித்ரா..

"  போ மா .. உனக்கு எப்போ பார்த்தாலும் அவன்தான் உசத்தி .. என்னைத்தான் பார்க்குறதுக்கு சார் கு நேரமில்லை .. நீதான் புள்ள புள்ள நு கொஞ்சுறியே உன்னை பார்க்க கூடவா அவனுக்கு வரணும்னு தோணல ? " என்றாள் இளையவள் ...

" சரி விடு மித்ரா...அதான் இப்போ வந்துட்டானே " என்று வைஷ்ணவியும் ஆதரிக்க

" நீங்களாச்சு அவனாச்சு .. நான் போறேன் " என்று வீட்டினுள் நுழைந்தாள் மித்ரா ... " அண்ணி நில்லுங்க ப்ளீஸ் " - என்றபடி முகில்மதியும் அவளை பின் தொடர்ந்தாள்....

" ஹப்பா .... இந்த மித்ரா இன்னும் மாறவே இல்ல அங்கிள்... மழை பெய்ஞ்சு ஓய்ஞ்ச  மாதிரி இருக்கு  " என்று பெரிதாய் சிரித்தான் அன்பெழிலன். ஷக்தியின் பெற்றோருக்கும்  அவனை தெரியும் என்பதால், பெரியவர்கள் அனைவரும் அவனிடம் நலம் விசாரித்து கொண்டு இருந்தனர் .. அனைவருக்கும் ஏற்றார்போல பதில் சொல்லி கொண்டிருந்தவனுக்கு எப்போதடா வீட்டினுள் சென்று முகில்மதியை பார்ப்போம் என்று இருந்தது .. மித்ரா தனதறைக்கு சென்றுவிட , முகில்மதி ஜன்னல் வழியாக அவனைத்தான் பார்த்து கொண்டு இருந்தாள்...

அவனது தோற்றம் மாறி இருந்தது .. அதை அவளுக்கு வர்ணிக்க தெரியவில்லை ... ஆனால் கம்பீரமாக இருக்கிறான் என்று மட்டும் நினைத்து கொண்டாள்... ஏதோ யோசனையில்  உழன்று கொண்டு இருந்தவள், வைஷ்ணவியின் குரல் கேட்டு திடுகிட்டு திரும்பினாள்....

" ஹே மதி என்னாச்சு உனக்கு ? எவ்வளவு நேரம் கூப்பிடுறேன் ... அங்கென்ன பார்வை ? " என்று கேட்டவள் அவள் பார்வை சென்ற திசையை பார்க்க, அங்கு அவனை காணவில்லை .. என்னாச்சு இவளுக்கு ? இவ்வளவு நேரம் நன்றாகத்தானே இருந்தாள் என்று எண்ணியவள்  அக்கறையாய் மதியின் நெற்றியில் கை வைத்து காய்ச்சலாக இருக்குமோ என பார்த்தாள்...

" அண்ணி .. அது வந்து .. "

" சரி சரி ரிலாக்ஸ் .... போ போயி ரெஸ்ட் எடு " என்றுவிட்டு அங்கிருந்து சென்றாள் வைஷ்ணவி ..

" ஹப்பாடா தப்பித்தோம் " என்று பெருமூச்சு விட்டவளின் எதிரில் கை கட்டி நின்றான் அன்பெழிலன் ....

" நீ .. நீங்க... நீங்களா ? "

" நானேதான் "

" எப்போ நீங்க இங்க ? "

" நீ ஜன்னல் வழியா என்னை ஸ்கேன் பண்ணும்போதே வந்துட்டேன் "

ஏனோ அவனெதிரில் அவளால் சகஜமாய் நின்று பேச முடியவில்லை .. அதை கவனித்தவன்.

" ஏன் இப்படி நெலியுற முகிலா ? " என்றான் .. " முகிலா" ... எத்தனை நாட்கள் கடந்துவிட்டன , இந்த அழைப்பை கேட்காமல் .. மனதிற்குள் சிலிர்த்துகொண்டாள்..எனினும் வெளியில் பொய்யாய் நடித்தாள். யாரவது பார்த்து விடுவார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்தாள் முகில்மதி ..

" யாரும் இல்ல ... அப்படியே இருந்தாலும் நீ என்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேச கூடாதா ? " என்று கேட்டவனின் குரலில் ஏக்கம் இருந்தது ..

" நீங்க எப்படி இருக்கீங்க ? "

" ஹப்பாடா .. இப்போவாச்சும் உனக்கு கேட்கனும்னு தோணிச்சே .. இப்போதான் புதுசா பிறந்த மாதிரி இருக்கு முகிலா "

" ப்ளீஸ் என்னை அப்படி கூப்பிடாதிங்க ... நீங்க என் அண்ணியின் ப்ரண்ட் அவ்ளோதான் .. அதை மீறி நீங்க என்னை இப்படி கூப்பிடறது சரி இல்ல "

"...."

" இவ்வளவு நாள் கழிச்சு உங்களை பார்த்ததுல சந்தோசம் .. மூணு வருஷத்துக்கு  முன்னாடி நீங்க பண்ண உதவியை நான் மறக்கல.... ஆனா ......" அவள் பேசி முடிப்பதற்குள்

" மித்ரா எங்க முகில்மதி " என்று கேட்டான் அன்பெழிலன் .. அவன் குரலில் இருந்த இறுக்கமும் , அவன் முகில்மதி என்று அழைத்ததும் அவளுக்கு கஷ்டமாய் இருந்தது ..

" ரூம் ல இருக்காங்க" என்று இறங்கிய குரலில் அவள் சொல்ல

" தேங்க்ஸ் " என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான் அன்பெழிலன் .. அன்பை மட்டும் சுமந்து வந்த அவனின் இதயம் கொதித்தது .. " நிஜம்மாகவே இவளுக்கு என்னை பிடிக்கலையா ? " என்று வினவிகொண்டான்...

மித்ராவின் அறையில்,

மெத்தையில் சோகமாய் படுத்திருந்தாள் மித்ரா .. அவன் கதவை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவள், மீண்டும் முகத்தை  திருப்பி கொண்டாள் .. சோகமே உருவாய் நின்றவனுக்கோ அவளை சமாதானப்படுத்தும் எண்ணம் கூட இல்லாமல் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து கண் மூடினான் ..

" என்ன இந்த லூசு சைலண்டா இருக்கானே " என்று திரும்பியவள் தன் நண்பன் அப்படி அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து உருகிவிட்டாள்.. வேகமாய் சென்று அவனுக்கு பருகுவதற்கு ஜூஸ் எடுத்து வந்து அவன் முன் அமர்ந்தாள்...

" ஹே மிஸ்டர் லவ் .. என்னடா ஆச்சு ?? கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்து இருக்க ? எல்லாத்துலயும் ஜெயிக்கிற வெற்றியின் நாயகனாச்சே நீ ... இப்போ இப்படி சோர்ந்து போயி உட்கார்ந்து இருக்கியே ? "

கண்களை மூடி இருந்தவனோ " பெண்ணின் மனதை ஜெயிக்க முடியலையே " என்றான் சோகமாய் ..

" டேய் ..... என்னடா .. ஒரு வார்த்தை கூட சொல்லல ...இது எப்போதிலிருந்து  நடக்குது ? யாருடா அந்த அப்பாவி பொண்ணு ? " என்று உற்சாகமாய் கேட்கவும் உளறி விட்டோமே என்று மானசீகமாய் தலையில் தட்டி கொண்டான் அன்பு..

" ஹே லூசு ...  கொஞ்சம் டைலோக்ஸ் அள்ளி விட்டா அப்படியே நம்பிடுவியா ? சரி ஜூஸ் எனக்கு தானே ? உன் கையிலே வெச்சுகிட்டு நின்னா என்ன அர்த்தம் ? இங்க கொடு  "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.