(Reading time: 25 - 50 minutes)

 

" னக்காகவே காத்திருப்பவர்களை விட்டு தனியே சென்று நீ மட்டும் என்ன சுகம் கண்டுவிட்டாய் ? " என்று பேதை மனம் கேள்வி கேட்டது .. அனைவரிடத்திலும் பார்வையை திருப்பியவள் வைஷ்ணவியை பார்த்து திடுக்கிட்டாள்... நிறைந்த புன்னகையுடன் மித்ராவை நோக்கி வந்தாள் வைஷ்ணவி .. அவள் ஏதோ சொல்ல விழைவதை கண்டு கொண்டாள் சங்கமித்ரா ..

" அக்கா "

" மித்ரா " என்றவள் இளையவளை அணைத்து கொண்டாள்...

" என்னக்கா ? "

" இப்போதான் சந்தோஷமா இருக்கு டீ ... எனக்கென்னமோ இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்னு தோணுது .. நம்ம குடும்பம் இனி பழைய மாதிரி கலகலப்பா இருக்கும் பாரேன் " என்று சிரித்தாள் ..

" ஆமா அண்ணி " என்று முகில்மதியும் இணைந்து கொண்டாள்....

" நான் ......... இப்போ வந்துடுறேன் " என்று அங்கிருந்து தன்னறைக்கு ஓடி சென்றாள் மித்ரா .. ...

தலையணைக்கு அடியில் வைத்திருந்த அந்த புகைப்படத்தை எடுத்தாள்...அவளும் ஷக்தியும் ஏதோ பேசிகொண்டிருக்கும்போது கதிர் எடுத்த படம் அது ...இருவரின் இதழ்கள் மட்டும் இன்றி கண்களும் சேர்ந்து மிக இயல்பாய் சிரிக்கும்படி  அமைந்திருந்தது அந்த படம் .. இந்த படத்துக்கு பின்னாடி ஒரு குட்டி ரகசியம் இருக்கே .. ஷக்தி துபாய் சென்ற புதிதில் மித்ராவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது யாருக்குமே சுலபமாய் இல்லை ..

சித்ராவின் கோபம், தேவசிவனின் அறிவுரை, லக்ஷ்மியின் கொஞ்சல், நாராயணின் சமாதனம், கதிர் மற்றும் மதியின் கெஞ்சல் இப்படி எதற்குமே அவள் மாறாமல் இருந்த நாட்களில் தான் , அந்த புகைப்படத்தை அவளுக்கு பரிசளித்தான் ...

அந்த படத்தை அவளிடம் தர சொன்னது ஷக்தி என்பது மித்ராவுக்கு தெரியாது .. அதேபோல அந்த படம் இன்னும் இரண்டு பேரிடம் இருந்ததையும் அவள் அறியாள். அந்த இரண்டு பேரு யாருன்னா, நம்ம கதிரும் ஷக்தியும்தான் !

கையிலிருந்த புகைப்படத்தை பார்த்து ஷக்தியிடம் மானசீகமாய் பேசினாள் மித்ரா .. " சிரி நல்லா சிரி ! நீ சேர்த்து வெச்ச உன் காதல் ஜெயிச்சிருச்சு ...நான்தான் தோற்று போயிட்டேன் .. சின்ன வயசுல இருந்தே உனக்காக அடிக்கடி விட்டு கொடுத்திருக்கேன் ..ஆனா அப்போலாம் என் ஷக்திக்கு நான் விட்டு கொடுத்தேன்னு கர்வமா இருக்கும்.. சந்தோஷமா இருக்கும் .. ஆனா இப்போ உன்னையே நான் விட்டு கொடுக்க போறேனே ஷக்தி " என்றவள் மீண்டும் தலையணையில் முகம் புதைத்து அழுதாள்....

" மித்ராம்மா " அவரின் குரல் கேட்டு நிமிர்ந்தாள் சங்கமித்ரா ..

" மாமா ...வாங்க மாமா " என்றவள் சட்டென கண்களை துடைத்துவிட்டு  அமர்ந்தாள்.. அருகில் வந்தவரோ எதுவும் பேசாமல் அவளை  பார்த்தார்..

" என்னாச்சு மித்ரா ..."

" ஒ.. ஒ ...ஒண்ணுமில்ல மாமா "

" பொய் "

" இல்ல மாமா "

" என்னை பார்த்து சொல்லு "

" ... "

" என் மருமக என் கிட்ட உண்மைய மறைக்கிற அளவுக்கு வளர்ந்துட்டாளா ? நான் தூக்கி வளர்த்த பொண்ணு  இப்படி கேவி கேவி அழுறதை பார்த்தும் என்னால எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போச்சே " என்றவரின் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது .....

அவரின் குரலில் பாகாய் உருகியது அவள் மனம் .. " ச்ச நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் ? இப்போதானே ஷக்தியை சொன்னேன் ..அவன் இந்த உறவுகளை பிரிஞ்சு இருக்கானேன்னு ..இப்போ நான் மட்டும் என்ன பண்ணுறேன் .. பக்கத்துல இருந்தும் நான் அவங்களை கஷ்டப்படுத்துறேனே..அதுவும் என் மாமாவை நானே இப்படி பேச வைக்கலாமா .. ஷக்திகிட்ட சொன்னேனே நான் இருக்கேன் இங்க கவலை படாதேன்னு .. இப்போ நான் இப்படி பண்ணிடேனே "

" மாமா "

" சொல்லும்மா "

" உங்க கிட்ட ஒரு விஷயம் பேசி முடிவெடுக்கணும் "

" ம்ம்ம் சொல்லு மா "

( அதுக்கப்பறம் அவங்க என்ன பேசுனாங்கன்னு இப்போவே சொல்ற அளவுக்கு நான் சமத்து இல்லை என்பதால், அதை நான் இன்னொரு நாள் சொல்றேன் .. சரியா? நோ நோ அப்படிலாம் திட்ட கூடாது )

" இதுனாலத்தான் அழுதியா டா ? "

" ம்ம்ம்ம் "

" நல்ல பொண்ணுமா போ... நான் பயந்தே போயிட்டேன் .. "

" ..."

" நீ கவலை பாடுற மாதிரி எதுவும் நடக்காது டா .. அதுவும் நீ நம்ம வீட்டு தேவதை .. உன் மனசுப்படி எல்லாமே சந்தோஷமா தான் நடக்கும் பாரு.... "

" உள்ள வரலாமா ? " என்றபடி அங்கு வந்தாள் வைஷ்ணவி .. அங்கு நாராயணின் தோளில் இளையவள் சாய்ந்திருக்க , அவள் தலையை ஆதரவாய்  வருடி கொடுத்தவரை பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள் வைஷ்ணவி ....

" ம்ம்ம்  மாமாவும்  மருமகளும் கொஞ்சியாச்சா ?"

" எங்க அதுக்கு முன்னாடியேதான் நீ வந்துட்டியே " என்று இரு பொருளில் சொன்னாள் மித்ரா .. அவளின் கோபம் உணராத வைஷ்ணவியோ

" என் தங்கச்சிக்கு நான் போட்டியா இல்லாமல்  யாரு போட்டியாக இருப்பா ? " என்றாள்.....

" சரி சரி .. என் ரெண்டு மருமகள்களும் இப்போ சண்டை போடாமல் இருங்க" என்று இருவரையும் சமாதானப்படுத்தி  அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் லக்ஷ்மிநாராயணன்.

சென்னை,

" ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி ரிஉந்தாலெ " அழகாய் சிணுங்கியது நிலாவின் கைப்பேசி..

" ஹெலோ அப்பா "

" அம்மு .. வேலை முடிஞ்சதா ? "

" ம்ம்ம் இப்போதான் பா .. "

" சரி டா .. நா வந்து பிக் அப் பண்ணிக்கவா ? "

" இல்லப்பா.. எனக்கு  அவ்வளவு டயர்ட் ஆ இல்லை .. அண்ட் கார் இங்கதான் இருக்கு .. சோ நானே வந்துக்குறேன் "

" சரி டா.. நான் சிவா அங்கிள் வீட்டுல தான் இருக்கேன் .. போற வழியில் என்னையும் பிக் அப் பண்ணிக்கிறியா? " என்று கேட்டார் மனோ ..

"அதானே பார்த்தேன் .. என்னடா எங்கப்பா ரொம்ப சமத்தா பேசுறாரேன்னு .. ஏன் பா .. ஒருவேளை நான் சரி நீங்களே வாங்கன்னு சொல்லி இருந்தா கார் இல்லாமல் எப்படி வந்துருப்பிங்க ? "

" இதென்னடா பிரமாதம்... நேரா வீட்டுக்கு போயிட்டு கார் எடுத்துட்டு அப்பறமா ஹாஸ்பிட்டல் வந்திடுவேன் .. "

" ஐயோ அப்பா அதெப்படிதான் எதுக்குமே கவலை படாமல் எல்லாத்தையும் ஈசியா எடுத்துகுறிங்க  தெரில ! சரி நான் அங்க வரேன் . பட் ப்ளீஸ் பா .. எனக்கு தூக்கம் ஒன் தி வே..சோ ஹாரன்  அடிச்சதுமே வந்து சேருங்க " என்று தந்தையிடம் பேசிக்கொண்டே வந்தவள் தன் சீட்டில் அமர்ந்து போனை வைத்தாள்...அவளின் பார்வை தன்னிச்சையாகவே  பின் சீட்டை பார்த்தது .. கூடவே இலவச இணைப்பாய் மதியழகனின் நினைவுகள் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.