(Reading time: 25 - 50 minutes)

 

ப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ

புன்னகை நிலவே நீ யாரோ

பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ

என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி

பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி

அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை

மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை

என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விசுந்தது தெரியவில்லை

எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை

அழகே உன்னௌ காணாமல் அன்னம் தண்ணீர் த்டமாட்டேன்

உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்

கடவுளை தொழ மாட்டேன்

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி

அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பெண்ணே உன்னை மறூமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா

பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையாலே கொல்வாயா

உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா

உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா

ஆமாம் என்றூ சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்

இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்

நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்..

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி

அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி

அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

கைப்பேசியை எடுத்த நிலாவின் எண்ணங்கள் மதியையே சுற்றி வந்தது .. " ச்ச நான் ஏன்  அவனையே நினைக்கிறேன் ...இத்தனைக்கும் அவன் கூட நான் சண்டை தானே போட்டேன் ..மோதலில் கூட காதல் வருமா ? " என்று கேட்டு கொண்டவள் பேஸ் புக்கில்  " ஸ்பார்க் எப் எம் " என்ற பேஜில் அவளின் அட்வைஸ் அழகனுக்கு மெசேஜ் அனுப்பினாள்...

Thenila Manoharan

Hi..! Do you think love can be start from war  ?

நேற்றுவரை இருந்த மதியழகனாய் இருந்தால் அவளின் கேள்விக்கு உடனே பதில் அனுப்பி இருப்பான் .. ஆனால் இன்றோ அவன் நிலவின் முன் மதி மயங்கிய அழகன் அல்லவா ? அவளின் பெயரை பார்த்ததுமே

" ஆஹா இது நம்ம ஹனி மாதிரி இருக்கே " என்று சந்தேகித்தான் .. அவளின்  விவரங்களை சென்று சேகரித்தவன் " அவள்தான் இவள் " என்று தெரிந்ததும் எப்படி பீல் பண்ணிருப்பாருன்னு நான் சொல்லாமலே உங்களுக்கு புரியுமே ..! சரி பதில் ??? இதோ

Spark  FM

ஹாய் .. ! காதலுக்காக போர்கள் உருவாகிய வரலாறு இருக்கும்போது, போரில் காதல் உருவாக கூடாதா ? All is fair in love and war, Sometimes Love can begin from  a war. Keep Smiling..Sweet dreams ;) :) – Azhagan

அவனின் பதிலில் ஏன் என்று தெரியாமலே புன்னகைத்தவள், எப்போதும் போல அவனின் குரலை கேட்டுகொண்டே உறங்கி போனாள்.

ங்கு நம்ம தேனு உறங்கிகொண்டிருக்க அவளின் வருங்கால நெருங்கிய தோழியோ தலையணையை ரகசியமாய் நனைத்து கொண்டு இருந்தாள்.. இரவு வரை அனைவரிடமும் இயல்பாய் இருப்பதைப்போல நடித்தவள் இன்று சீக்கிரமே உறக்கம் தழுவுகின்றது என்று கூறி தன்னறைக்கு சென்றாள்... நள்ளிரவு கடந்தும் அவள் கண்ணீருக்கு விடை இல்லை .. அவள் மனதை விட அவளின் கற்பனை குதிரை தான் கட்டுபாடு இல்லாமல் தறிகெட்டு ஓடியது...

வைஷ்ணவி அவனிடம் தன் காதலை சொல்வது, அவன் அதை ஏற்பது, அனைவரின் ஆசியில்  இருவரும் திருமணம் புரிவது இப்படி அவளே தடுத்தாலும் அவளின் எண்ணங்கள் வேகமாய் கற்பனையில் ஆழ்ந்தன ... எப்பொழுதும் இரவில் அவளிடம் செட்டிங் இல் உரையாடும் ஷக்தியோ அவளின் வரவுக்காக காத்திருந்தான்.... ஐ பொட்டில் அவனுக்கு மிகப்பிடித்த அந்த பாடல் ஒலித்தது ..

Hum tere bin ab reh nahi sakte
Tere bina kya wajood mera
 
Tujhse juda gar ho 
jaayenge
Toh khud se hi ho jaayenge judaa

Kyunki tum hi ho
Ab tum hi ho
Zindagi ab tum hi ho
Chain bhi, mera dard bhi
meri aashiqui ab tum hi ho

ஷக்தி காத்திருப்பது அவளுக்கும்  தெரியும் .. இருப்பினும் அவனிடம் பேசத்தான் மனமில்லை .. உணர்வுகள் அனைத்தும் மறுத்து போனதுபோல உணர்ந்தவள் தன் செல்போனை தேட அவள் விரல் பட்டு  அந்த பாடல் ஒலித்தது

சாமிகிட்ட சொல்லிப்புடன்

உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்

ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு

மனசுகுள்ள பேசிக்கிட்டோம்

சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு

கனவுக்குள்ள பாதுக்கிட்டோம்...

ஒரு கோடி புள்ளி வச்ச

நான் போட்ட காதல் கோலம்

ஒரு பாதி முடியும் முன்னே

அழிச்சிட்டுது காலம் காலம்

இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து

வந்து உனக்காகக் காத்திருப்பேன்...

அப்பவும் சேராமல் இருவரும் பிரியனும்னா

பொறக்காமல் போயிடுவேன்....

" ச்ச " என்று செல்போனை தூர போட்டவள் அவர்களின் புகைப்படத்தை மீண்டும் கண்ணீரால் நனைத்தாள்...

இங்கு ஷக்தியின் உள்ளுணர்வோ ஏதோ சரி இல்லை என்று  உணர்த்தியது .. " என்னாச்சு அம்மு உனக்கு ? என்கிட்ட பேசாம உன்னால  இருக்க முடியாதே ? ப்ளீஸ் என் கிட்ட வந்துரு மிது .. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு " என்று முணுமுணுத்தவன் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான் ..

Shakthi Smart

Hey Attai ponnu .. intha message paarthathum enakku miss call kodu .. Need to talk . I have a problem.

Gud nyt

Swt Drms :)

அவனுக்கு தெரியும் தனக்கு ஏதும் பிரச்சனை என்றால் அவள் உடனே அழைப்பாள் என்று .. ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவன் அதே புகைப்படத்தை மார்போடு அணைத்துக்கொண்டு உறங்கி போனான்.. சங்கமித்ரா அழைப்பாளா ? அடுத்த எபிசொட் ல பார்ப்போம்.

ப்ரண்ட்ஸ், பொதுவா பெரும்பாலான கதையில் கதாநாயகர்கள் ஒரு மனிதகுல மாணிக்கமாகத்தான் இருப்பாங்க .. நானும் கூட வேறென்ன வேணும் நீ போதுமே கதையில் நம்ம எல்லா ஹீரோவும் ரொம்ப பெர்பெக்ட் நு காட்டி இருப்பேன்... ஆனா இதுதான் எதார்த்தாமான உலகமான்னு கேட்டா கொஞ்சம் கேள்விக்குறிதான் .... நாம யாருமே 100 சதவிகிதம்  பெர்பெக்ட் நு சொல்ல முடியாது .. ஆனா குறை நிறைகளை ஆராய்ந்து அதை ஏற்று , விட்டு கொடுத்து வாழுற வாழ்க்கை தான் அழகான வாழ்கை .. அதனால்தான் ஹீரோவாகவே இருந்தாலும் ஷக்தி, மித்ரா விஷயத்துல கொஞ்சம் சொதப்பல் பண்ணுற மாதிரி எழுதி இருக்கேன் . அது சிலருக்கு கடுப்பா இருக்கலாம் .. என்னடா இந்த ஹீரோ, மித்ரா உருகி உருகி லவ் பண்ணுது அதை புரிஞ்சுக்காம இருக்கறேன்னு .. கவலையே வேணாம்.. புரிஞ்சுப்பார் .. நிச்சயமா புரிஞ்சுப்பாரு....  இதை ஏன் இங்க சொல்றேன்னா, நம்ம ஹீரோ திட்டு வாங்குறதை பார்க்க கஷ்டமா இருக்கு .. அப்பறம் ஹீரோ சார் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் கை வெச்சுட்டாருன்னா? ஹா ஹா ஹா .. ஓகே சொல்ல வந்தது என்னன்னா , குறைகள் இருந்தாலும் அதை நிறையா மாற்றி அவங்க காதல் எப்படி சேரபோகுது என்பதுதான் கதையே .. சோ சக்தியோடு கொஞ்சம் பொறுத்து போங்க :) அடுத்த எபிசொட் பேசலாம் ..

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.