(Reading time: 25 - 50 minutes)

" மாட்டேன் போ "

" ஹே பிசாசு ப்ளீஸ் டீ .. அட்லீஸ்ட் உன்கூட சண்டை போடவாவது எனக்கு எனர்ஜி வேணும்ல .. "

" து ... து .. இதெல்லாம் ஒரு பொழப்பா?  சரி சொல்லு .. டெல்லி மகாராஜா எப்போ இங்க வந்திங்க ? எப்படி இருக்க நீ ? கொஞ்சமாச்சும்  படிச்சியா ? இல்ல பொண்ணுங்களை சைட் அடிக்க போனியா நீ ? " என்று கேள்விகளை வரிசையாய் அடுக்கினாள்...

" யம்மா .. உன் இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல நான் 20 க்ளாஸ் ஜூஸ் குடிக்கணும் போல .. நான் நல்லா  இருக்கேன் .. அப்படி இப்படின்னு என்னையும் இந்த உலகம் இஞ்சினியர் நு ஒத்துகிச்சு .. ஸ்டடிஸ் கொஞ்சம் பிசி டா .. அதான் உன்கூட சரியா பேச முடில .. இனி எப்பவும் இங்கதான் .. சோ நோ கோவம் ப்ளீஸ் ? " என்று கெஞ்சினான்

" உன் மேல நான் எப்படி டா கோபப்படுவேன்.. எல்லாம் சும்மா சீன் தான் .. ஹஹஹஹஹ "

" உன் ஹீரோ எப்படி இருக்காரு .. உன் லவ் ஐ சொன்னியா இல்லையா ? எப்போ வராராம் ? "

" அச்சோ .. அதை சொல்லத்தான் எல்லாரையும் கூப்பிட்டேன் ... உன்னை பார்த்ததும் பேச்சு மாறிடுச்சு பாரு .... "

" என்ன விஷயம் டா ? "

" ஷக்தி மாமா இங்க வாரானே "

" ஹா ஹா ஹா "

" என்னடா சிரிக்கிற ? "

" இல்ல நீ அவருக்கு கொடுக்குற மரியாதையை நெனச்சு சிரிச்சேன் "

" அது என்னவோ எனக்கு இந்த ' நீங்க வாங்க போங்க ' நு பேசுறதுலாம் வராது டா "

" சரி விடு .. பொதுவா குரங்குகளுக்கு  எல்லாம் மனிஷம் பேசுற பாஷையே வராது.. பட் உனக்கு சூப்பரா வருதே .. சோ இதை நெனைச்சு பீல் பண்ணாதே "

அவன் சொன்ன விதத்தில் முதலில் ஆம் என்று தலை அசைத்தவள் அவன் தன்னை குரங்கு என்று சொன்னது  புரிய, அவனை அடிக்க வந்தாள்...

" ஹே டியுப் லைட்.. .. நீ மாறவே இல்லை .. சரி அதிருக்கட்டும் .. என்னுடைய மிகமுக்கியமான கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே ? மறந்துட்டியா இல்ல மறைக்குறியா ? "

" என்ன கேள்வி ? "

" உன் காதலை ஷக்தி கிட்ட சொல்லிட்டியா? "

அவளின் முகபாவனையே இல்லை என்பதை எடுத்துரைத்தது..

" இது பாரு மித்ரா .. நீ " என்று அவன் முடிப்பதற்குள் அங்கு வந்தாள் வைஷ்ணவி ,..

" என்ன அக்கா ? "

" உன் நண்பனை பார்த்ததும் எங்களை மறந்துட்டியே மித்ரா.... அப்பா, மாமா , அத்தை எல்லாரும் நீ ஏதோ சொல்ல வந்தியேன்னு வெயிட் பண்றாங்க"

" ஐயோ அக்கா இந்த மறதி மன்னி மறந்ததற்கு என்னை காரணம் ஆக்கிடாதிங்க " என்று சொன்ன அன்பு மித்ராவிடம் பரிசாக முறைப்பை பெற்று கொண்டான் ..

" சரி சரி ..சண்டை போடாமல் சீக்கிரம் வந்து சேருங்க "

" ம்ம்ம் நீங்க முன்னாடி போங்க அக்கா .. வந்திடுறோம் .. "

" ஏய் என்ன  இது மித்ரா ? "

" என்ன டா ? "

" நீ இன்னும் உன் அக்கா கிட்ட சரியாய் பேசறது இல்லையா ? "

" அதுவந்து  "

" என்ன வந்து போயி .. நீ ஷக்தி மேல உள்ள அன்பினால் ரொம்ப தப்பா யோசிக்கிற மித்ரூ.... "

" ஏன்  இப்படிலாம் பேசுற டா ? "

" வேறெப்படி பேசுறது ? இது பாரு .. காதலிக்கவும் அதை சொல்றதுக்கும் உன் மாமாவுக்கு எவ்வளவு  உரிமை இருக்கோ , அதே மாதிரி அதுக்கு எஸ் சொல்றதுக்கும் நோ சொல்றதுக்கு வைஷு அக்காவுக்கும் உரிமை இருக்கு "

" இருக்கட்டும் .. நான் எதுவும் சொல்லலியே .. நான் பாட்டுக்கு என் வேலையா பார்த்துட்டு தானே இருக்கேன் "

" நீ பேசறது உனக்கே தப்பாக தெரிலயா மித்ரூ ? "

" என்ன சொல்ல வர ? "

" முதலில் உன் மனசில் உள்ளதை புரிஞ்சுக்கோ .. ஷக்தியை தவிர வேற யாராவதை உன் மனசுல உன்னாலே நினைக்க முடியுமா ? "

" ..."

" அது முடியாது என்ற பட்சத்தில் அதை அவன்கிட்ட சொல்றது தான் நியாயம் .. "

"..."

" அன்னைக்கு நீயும் ஷக்திக்கு இதே அட்வைஸ் தானே தந்த ? காதலிச்சா  சொல்லிடணும்னு ? "

" அவன் நிலை வேற என் நிலை வேற அன்பு .. ! அவன் காதலை தெரிஞ்சும் நான் அவன்கிட்ட என் மனசுல உள்ளதை சொன்னா, அதை அவன் எப்படி எடுத்துப்பான் தெரியல.. ஒருவேளை ஷக்தி என்னை தப்பாக நெனைச்சிட்டான்னா? என்னால அதை தாங்கிக்கவே முடியாது டா .. அப்பறம் நான் ஏதாச்சும் பண்ணிப்பேன் "

" அப்படியே ரெண்டு போட்டேன்னா தெரியும் .. ஹேய் என்ன ? நீ என்ன சொன்னாலும் உனக்காக பீல் பண்ணி கெஞ்சிகிட்டு இருப்பேன்னு நெனைச்சியா ? நான் உனக்கு ப்ரண்ட் ... நீ சிரிக்கும்போது சிரிக்கிறது  மட்டும் நட்பு இல்ல .. துவண்டு இருக்கும்போது தட்டி கொடுக்கவும் , தப்பு பண்ணும்போது சுட்டிகாட்டவும்தான் நட்பு இருக்கு .. சரியா ? "

"..."

" எப்படி நீ இப்படி மாறிட்ட மித்ரூ? நான் பார்த்த தைரியமான பொண்ணா நீ ? உன்னால எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது ? ஒரு பிரச்சனை வந்தா அதை ஒரு கை பார்க்கணும் .. இப்படி வந்த வழி ஓட கூடாது .. இது பாரு நான் முடிவு பண்ணிட்டேன் .. ஷக்தி வந்ததும் உனக்கு 3 டேஸ் டைம் தரேன் .. அதுக்குள்ள நீயே உன் மனசை சொல்லிடு .. இல்லனா நான் சொல்லிடுவேன் .. இப்போ வா எல்லாரும் வெயிட் பண்றாங்க " என்றவன் அவளுக்கு காத்திருக்காமல் வெளிய வந்தான் ..

" ன்ன சொல்றா பா உன் ப்ரண்டு ? "

" ஒரு வழியா மோகினி பிசாசு இறங்கி வந்துடுச்சு அங்கிள் " என்று அவன் சொன்ன நேரம் அங்கு வந்தாள் மித்ரா...

" நான் மோகினி பிசாசா ? "

" பின்ன என்ன கொள்ளி வாய் பிசாசா ?? "

" அச்சோ  போதும் போதும் .. இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது .. மித்ரா என்ன விஷயம்னு சொல்லுடா ? " - திவ்யலக்ஷ்மி ..

" என் செல்ல அத்தை கேட்பதினால் சொல்கிறேன் .. அதாவது இன்னும் சரியாக இரண்டு மாதங்களில் நம்ம வீட்டின்  கதாநாயகன் ஷக்தி துபாயிலிருந்து வரார் .. வரார் .. வரார் " கண்களில் மின்னலுடன் அவள் மொழிந்த அடுத்த கணம் மொத்த குடும்பமும் அவளை சூழ்ந்து கொண்டனர் ..

" நிஜம்மாவா ? " , " எப்போ ? ", " உனக்கு எப்படி தெரியும் ? " ," விளையாடாதே " இப்படி அனைவரும் கேள்விகளுக்கும் பதில் சொன்னவளுக்கு அதிகமகிழ்ச்சி எழுந்தாலும் ஒரு பக்கம் ஷக்தி மீது ஆயாசமாய் இருந்தது ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.