(Reading time: 25 - 50 minutes)

 

" ஹெம் அஹெம்.. இந்த உண்மைய முதல்லையே சொல்லி  இருந்தா நான் சீக்கிரம்  வீட்டுக்கு போயிருப்பேன்ல .. இன்னும் 5 நிமிஷத்துல உங்களை பாக்கியம் கையில பிடிச்சு கொடுத்திடுறேன் அப்பா "

இங்கு தேன்நிலா மதியழகனின் நினைவிலே இருந்தாள்..வாங்க நம்ம மதி என்ன பண்ணுறார் பார்ப்போம் !

" ஹை ஷாந்து... ஸ்கூல் விட்டு வந்தாச்சா ? என்ன சொல்றாங்க உன் கேர்ல் ப்ரண்ட்ஸ் ? "

" ம்ம்ம்ம் அழகு கூட சேராதேன்னு சொன்னாங்க " என்று வேறு புறம் திரும்பி கொண்டான் ஷாந்தனு ..

" ஓஹோ மிஸ்டர் மெட்ராஸ் கோவமா இருக்கார் போல .. என்னாச்சு சார்ம் ??"

" ... "

" என்கிட்ட தான் பேசல .. அட்லீஸ்ட் இந்த டைரி மில்க் கிட்ட பேசலாமே "

" உன் சாக்லேட் எனக்கு வேணாம் .. நிலா சொன்னது உண்மைதான் "

நிலவா ? சட்டென மதியழகனின் கண்களில் மின்னல் மின்னியது ... " ஓஹோ நம்ம ஹனி தான் ஏதோ சொல்லிருக்கா போல.. மேடம் என்ன சொல்லி வெச்சாங்க தெரிலையே .. சரி சமாளிப்போம் "

" என்ன சைலண்ட் ஆகிட்ட "

" .. "

" சாக்லேட் சாப்டா எனக்கு பூச்சி பல்லு வரும் .. அப்போ என் கேர்ள் ப்ரண்ட்ஸ் எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பாங்க .. அதானே உன் ப்ளான் ... நல்லவேளை நிலா சொல்லிட்டா .. பார்த்தியா ... ஷி இஸ் குட் கேர்ள்..நீ நாட்டி "

" அடிப்பாவி .. பெரிய பையன்னா சண்டை போடலாம் ..இந்த குட்டி வாண்டுகிட்ட நான் என்னதான்டி பண்ண முடியும் ? இரு நீ சுட்ட தோசையை உனக்கே திருப்பி போட்டு சுடுறேன்" என மனதிற்குள் திட்டம் போட்டவன்.

" ஹா ஹா ஹா... நிலா கலக்கிட்ட டா.. நீ சூப்பர் மா ... நான்தான் தோற்று போயிட்டேன் .. ஹ்ம்ம் என் நேரம் .. ." என்று சத்தமாய் தனக்குள்ளேயே பேசுவது போல அவன் செய்த பாவனையில் ஷாந்தனுவும் அவன் புறம் திரும்பினான் ..

" அழகா"

" என்ன ? "

" என்ன தோற்று போயிட்ட "

" எல்லாம் உன்னாலத்தான்.. போ .. ஒரு புது ப்ரண்ட் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா ? "

" போச்சு போச்சு  எல்லாம் போச்சு .. நாளைக்கு அவ என்னை பார்த்து நல்ல கிண்டல் பண்ண போறா ... ஐயோ நிலா "

" ஹே உனக்கும்  தேன்நிலாவை தெரியுமா ? "

"  தெரியுமாவா ? அவ என் ப்ரண்டு.... ரொம்ப க்ளோஸ் ப்ரண்டு ... நேத்து  உன்னை பத்தி பேசிகிட்டு இருந்தோம் .. நான் ரொம்ப கெத்தா நாம சாக்லேட் ப்ரண்ட்ஸ் நு சொன்னேன் .. அப்போ தான் அவ என்கிட்ட பெட் கட்டினா .. ஷாந்தனுகூட நான் பெஸ்ட் ப்ரண்ட் ஆகி ஒரே நாள்ல அவன் சாக்லேட் சாப்பிடறதையும் நிருத்துறேன்னு "

" நானும் உன் மேல உள்ள நம்பிக்கையில் சரின்னு சொன்னேன் ..நீதான் இப்படி கவுத்துட்டியே " என்றவன் சோகமாய் அங்கிருந்து செல்ல முயல, ஷாந்தனு வலது கையில் சாக்லேட் பிடித்து கொண்டு இடது கையால் அவனை தடுத்தான் ..

" சாரி அழகு .. ப்ளீஸ் சாக்லேட் பிச்சு தா ... இனி நான் நிலா பேச்சை நம்ப மாட்டேன் ..ட்ரஸ்ட் மீ "

" ஐ அல்வய்ஸ் ட்ரஸ்ட் உ சார்ம் ...நீதான் இப்படி பண்ணிட்ட.. பட் தட்ஸ் ஓகே டா " என்று அவனை அணைத்து கொண்டு கள்ளத்தனமாய்  சிரித்தான் மதியழகன் ..

ன்றிரவு,

அவசர அவசரமாய் சாப்பிட்டு விட்டு தனதறைக்கு வந்தாள் தேன்நிலா.... " ச்ச இன்னைக்கு ரேடியோல அட்வைஸ் அழகன் பேச ஆரம்பிச்சிருப்பாரே .. மிஸ் பண்ணிட்டோமே " என்று சொல்லிகொண்டவள் ரேடியோவை உயிர்ப்பித்தாள்.

" புதுப்பொலிவோடு உங்க கிட்ட பேசி , இருக்குற கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் களவாட வந்துவிட்டேன் .. உங்கள் அபிமான ..அப்படின்னு நானே சொல்லிக்கிற தி ஒன் அண்ட் ஒன்லி அட்வைஸ் அழகன் ... இந்த ப்ரோக்ராம் வானிலா தேன்நிலா.... என்னடா ஷோ  பேரு மாத்திட்டேன்னு பார்க்குறிங்களா? மாற்றம் ஒன்றுதான் மாறாததுன்னு நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்காரு ..அதுனால என் பாஸ் கொஞ்ச நேரம் முன்னாடி கூப்பிட்டு இன்னும் எத்தனை நாளுக்கு இதே ப்ரோக்ராம் செய்ய போறீங்க அழகன் ? வாட் நெக்ஸ்ட் அப்படின்னு கேட்டுட்டாரு .. சோ ஒரு புது பொலிவுடன்.. நானும் எவ்வளவு நாள்தான் நல்லவானாகவே இருக்குறதுன்னு ஒரு காதல் ப்ரோக்ராம் பண்ண வந்துட்டேன் .. அழகனுக்கு காதலா ? அப்படின்னு கேட்குறது புரியுது

நேரம் யாரை விட்டுச்சு

காதல் வாசற்கதவை தட்டிச்சு

எனக்கும் காதல் வந்துருச்சு

வழக்கம் போல பேஸ் புக்  வாங்க .... காதலை பத்தி இருக்குற உங்க ஒபினியன் அண்ட் கேள்விகளை அள்ளி வழங்குங்க, ஏதோ என் ஏழாம் அறிவை யூஸ் பண்ணி நானும் பதில் சொல்றேன் .. இப்போ ஒரு சூப்பர் பாட்டு... இது நம்ம வானிலா தேன்நிலா ...................."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.