(Reading time: 25 - 50 minutes)

 

" ச்ச அவன் பெயர் தெரியலையே ... மதி ரொம்ப லக்கின்னு சொன்னானே , அவன்தான் மதியா ? பெயரில் மட்டும்தான் மதி இருக்கு போல .. ஒரு சூப்பர் பொண்ணு லிப்ட் தரோமே, கண்ணாடி  வழியா பார்த்து சைட் அடிச்சோமா, கொஞ்சம் சீன் காட்டி இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணோமான்னு இல்லாமல் இப்போதான் டென்ஷன் பண்றான் " என்று நினைத்துகொண்டாள்..... (நிலா இப்போ உங்களுக்கு அவரை பிடிச்சிருக்கா பிடிக்கலையா ?அது போக போக தெரியும் )

" ஹை அப்பா "

" ஹாய் செல்லம் " என்றவர் காரில் பின்சீட்டில் அமர்ந்தார் .. ஏனோ அவளின் பார்வை அடிகடி பின் சீட்டில் பதிந்ததை அவரும் கவனித்து கொண்டுதான்  இருந்தார் ..

" நிலா "

" என்னப்பா ? "

" கின்னஸ் வேர்ல்ட் ரெகார்ட் ஏதும் ட்ரை பண்ணுறியா ? "

" என்னப்பா சொல்றிங்க ? "

" இல்ல பின்னாடி பார்த்துகிட்டே முன்னாடி  வண்டி ஓட்டுறியே அதான் டா " என்றார் நமட்டு சிரிப்புடன் .. தன் தந்தையின் குறும்பு பேச்சை கேட்டு அவள் உதட்டிலும் புன்னகை பூத்தது .. (ஐயோ இந்த அழகை ரசிக்க நம்ம அழகு பக்கத்துல இல்லாமல் போய்ட்டாரே )

"  உங்களுக்கு நான் பெண்ணா இருக்குறதே உலக சாதனை தான் அப்பா ..அதுவும் நம்ம பாக்கியம் ( பாக்யவதி, நிலாவின் தாயார்) சமைக்கிற சாப்பாட்டை சிரிச்சுகிட்டே சாப்பிடறது அதை விட பெரும் சாதனை "

" வாலு வாலு... அம்மா என்ன சமைச்சாலும் நல்ல புல் கட்டு கட்டிட்டு இங்க  என்கிட்ட கதை விடுறியா? "

" அதானே உங்க மனைவியை நீங்க விட்டு கொடுப்பிங்களா ? "

" அதுதான் கல்யாண லைப் நிலா ... சண்டையே போடமலாம் குடும்பம் நடத்த முடியாது .. சொல்ல போனா சும்மா சும்மா சண்டை போட்டு சேருற தம்பதியர்தான் இன்னும் சந்தோஷமா இருப்பாங்க "

அவர் சண்டை என்று சொன்னதும் நிலாவின் மனதில் மதியழகன் வந்து நின்றான் .. " இதென்னடா வம்பா போச்சு " என்று வாய் விட்டு சொன்னவளை கேள்வியாய் பார்த்தார் மனோ ..

" என்னடா ,....? "

" ஆ ..ஆங் ...ஒண்ணுமில்ல "

அதன்பின் ஏதோ யோசனையில் இருந்த தேன்நிலாவை எதுவும் கேட்காமல் தன் செல்போனை எடுத்த மனோ , அப்போதுதான் அந்த புத்தகத்தை பார்த்தார் .. அந்த புத்தகத்தின் அட்டையில் அழகான மயில் இறகுகள் மிக தத்ரூபமான ஓவியமாக தீட்டபட்டு இருந்தது ..

" அடடே .. இந்த புக் ரொம்ப அழகா இருக்கே நிலா "

" அதுவா பா .. இன்னைக்குதான் ஹாஸ்பிட்டல் போற வழியில் பார்த்து வாங்கினேன் .. நீங்கதானே நான் எழுதுற கவிதை எல்லாம் சூப்பரா இருக்குனு சொன்னிங்க ? அதான் அதை எல்லாம் தொகுத்து எழுதி என்னோடு வாழ்கை நடத்தப்போற அந்த  மனிதகுல மாணிக்கத்துக்கு  பரிசாகத் தரலாம்னு இருக்கேன் "

" திறந்து பார்க்கலாமா ? "

" காலியான புத்துகத்தை பார்க்க என்ன பில்ட் அப் நம்ம மனோவுக்கு " என்று மனதிற்குள் நினைத்தவள் மிக பவ்யமாய்

" அட என்னப்பா நமக்குள்ள என்ன சீக்ரட்? படிங்க " என்றாள் நமட்டு  சிரிப்புடன் ..

சிறிதுநிமிட மௌனத்திற்கு பிறகு

" கலக்கிட்ட டா .. பட் நீ ஒரு பொண்ணையா லவ் பண்ற ? " என்றார்

" பொண்ணா ? என்னப்பா உலருறிங்க ? "

" நானா ? செல்லம் நீதான் ஒரு பெண்ணுக்காக உருகி உருகி கவிதை எழுதி இருக்க " எனவும் சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினாள் தேன்நிலா...

" என்னடா ? "

" அந்த புக் ஐ இங்க கொடுங்க "

வெண்ணிலவே,

உன்னொளி வெறும் சூரியனின் பிம்பம்

என்று அறிவியல் சொன்னதை இன்று ஏற்கிறேன் !

உன் மொத்த ஒளியையும்

களவாடி விட்டு என்னவள்

பூமியில் பிறந்து விட்டாள்!

காற்றே,

நீயும் பெண்ணும் ஒன்றுதான்

என்று எவனோ அன்று பாடியதை இன்று ஏற்கிறேன் !

என்னவள் சில நேரம் தென்றலாய் வருடுகிறாள்

சில நேரம் சூராளியாய் இதயத்தை சுழற்றுகிறாள் !

பூக்களே,

உங்கள்  மென்மையும் பெண்மையும் ஒன்றென இனி சொல்லாதீர் !

ஒரு நாளில் வாடிவிடும் உங்கள் மென்மை

என் ஜீவன் வாழும்வரை போற்றவைக்கும் என்னவளின் பெண்மை !

மின்னலே ,

இனி நீயே அதிவேகமானவள் என சொல்ல முடியாது !

என்னவளின் விழிகளும்

காற்றில் பேசும் விரல்களும்

கோபத்தில் துடிக்கும் இதழ்களும்

உன்னை விட வேகமாய் மின்னுகின்றன !

- நிலவின் நிழல்

என்று எழுதியிருந்தது ... இது  இது நிச்சயம் அவன் தான் எழுதி இருப்பான் .. ஆனா எப்போ ?? அவளுக்கே தெரியவில்லை .. தன் தந்தை தன்னை கேள்வியை பார்ப்பதை உணர்ந்தவள் இப்போதைக்கு அவனை பற்றி பேச விரும்பவில்லை ..

" பேபி ஆர் யு ஆல்ரைட்? "

" எஸ் "

" இந்த கவிதை ?? "

" காருல பேய் இருக்கு பா .. அதுதான் எழுதி  இருக்கும் " என்று விழிகளை உருட்டியபடி பதில் தந்தாள்...

" நீயே எழுதிட்டு என்னை ஏமாத்துறியா...? வண்டிய எடும்மா நான் என் மனைவிய பார்க்கணும் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.